Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Meendum Sankarlal
Meendum Sankarlal
Meendum Sankarlal
Ebook230 pages1 hour

Meendum Sankarlal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பேராசிரியர் ஆற்றலரசு மெட்டலாஜி என்னும் உலோகப் படிப்பில் கரைகண்டவர். அவர் ஒரு விஞ்ஞானி. அவரது மகள் பூங்கொடி அழகி. அவளது காதலன் செம்மேனி.

ஆற்றலரசு உலகையே திரும்பி பார்க்க வைக்கும் ஒரு சோதனையை நடத்திகொண்டிருக்கிறார். அதற்கு உதவுபவன் அவரது தங்கை மகன் இளம் விஞ்ஞானி கோவேந்தன்.

அவர் கண்டுபிடிக்க போகும் சோதனையின் நன்மைகள் என்ன? அதை நடக்கவிடாமல் தடுக்க பார்க்கும் எதிராளிகள் யார்? கோவேந்தனால் அவர் சோதனைக்கு ஏற்பட போகும் ஆபத்துகள் என்ன என்ன? பூங்கொடி செம்மேனி என்ன ஆனார்கள். இதற்கிடையில் கதைக்குள் சங்கர்லால் எப்படி வந்தார்? இது போன்ற பல விறுவிறுப்பான சம்பவங்களும், சங்கர்லால் எவ்வாறு தீர்வு கண்டுபிடிக்க போகிறார் என்பதையும் நாவலுக்குள் சென்று பார்ப்போம்.

Languageதமிழ்
Release dateNov 6, 2020
ISBN6580138505885
Meendum Sankarlal

Read more from Lena Tamilvanan

Related to Meendum Sankarlal

Related ebooks

Reviews for Meendum Sankarlal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Meendum Sankarlal - Lena Tamilvanan

    http://www.pustaka.co.in

    மீண்டும் சங்கர்லால்

    Meendum Sankarlal

    Author:

    லேனா தமிழ்வாணன்

    Lena Tamilvanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/lena-tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    பார்த்தறியாத வினோதக் கண்ணாடிக் குடுவைகள். விதவிதமான டெஸ்ட் டியூபுகள். ஒன்று வறுமையில் அடிபட்ட குழந்தையாய் உடல் மெலிந்து தலை பெருத்து நின்றது. கேள்விப்பட்டிராத மருந்துக் கலவைகள் புடைசூழ, பேராசிரியர் ஆற்றலரசும், கோவேந்தனும் எதையோ ஆராய்ந்து என்னவோ குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

    பேராசிரியர் ஆற்றலரசு?

    ஆமாம். பெயருக்கு ஏற்றாற்போல் ஆற்றல் மிக்கவர். மெட்டலாஜி என்னும் உலோகப் படிப்பில் கரைகண்டவர். உலோகத்துறையில் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகள் என்று ஒரு பட்டியல் தயாரிக்கப்படுமானால் தவறாது அதில் இடம் பெறுபவர்.

    தோற்றம்?

    அதைச் சொல்லிவிட்டால்தானே ஓவியர் ராமுவிற்கு வரையச் சௌகரியமாய் இருக்கும்?

    கிழவர் என்றாலும் பட்டத்தைப் பெற இன்னும் பத்து வருஷங்களைப் பாக்கி வைத்திருந்தார். ஐந்து திருநீற்றுப் பட்டைகள் கொள்ளுமளவிற்கு அகலமான நெற்றி. மேதாவித்தனம் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. காதின் இருபுறமும் மொத்தத் தலைமுடியும் நாங்களே தாங்கி நிற்கிறோம் என்ற மிதப்புடன் தூண்கள் போல் நின்ற கிருதாக்கள்.

    இதோ, கோவேந்தன் ஏதோ பேசப் போகிறான். என் வருணனையை நிறுத்திக் கொள்ளுகிறேன்.

    மாமா, அடுத்தக்கட்டச் சோதனைக்குக் கொஞ்சம் தங்கம் தேவைப்படுகிறது. நாளை மறக்காமல் வாங்கித் தந்துவிடுங்கள் மாமா.

    வாக்கியத்துக்கு வாக்கியம் மாமாவைப் போட்டு நான் உங்களது தங்கையின் மகன் என்பதை நினைவூட்டிக் கொண்டிருந்தான் கோவேந்தன்.

    நல்லவேளை, ஞாபகப்படுத்தினாய். ஆனால் இந்த மாதிரி வேலைகளையெல்லாம் என்னிடத்தில் ஒப்படைத்துவிட்டுக் கழற்றிக்கொள்ள எண்ணாதே. இந்தா, உன் அத்தையின் அலமாரிச் சாவி. உன் அத்தை அணிந்து வந்த அந்தப் பூ டாலர் நெக்லஸை நாளையே நினைவாகச் சோதனைச் சாலைக்குக் கொண்டு வந்துவிடு.

    வேண்டாம் மாமா. அது அத்தை ஞாபகமாய் இருக்கட்டும். நாம் சேட் நந்தலாலிடம் சொல்லி பிஸ்கட்டாய் வாங்கி உபயோகப்படுத்திக் கொள்வோம் மாமா.

    நோ செண்டிமென்ட்ஸ் கோவேந்தன். எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்யை வெளியில் வாங்குவதாவது. பூங்கொடி ஏதும் சொல்வாளே என்ற தயக்கமா? அவளுக்குத் தெரியாமல் வேலை நடக்கட்டும். பின்னால் அவளைச் சமாதானம் செய்து கொள்ளலாம்.

    சரி மாமா. நான் பார்த்துக் கொள்கிறேன்.

    சோதனைச் சாலையிலிருந்து இருவரும் வெளிப்பட்டார்கள். கோவேந்தன் இழுத்துச் சாத்திக் கிடங்கைப் பூட்டினான். ஆற்றலரசு காரைக் கிளப்ப, போலியான பவ்யத்துடன் காரில் ஐக்கியமானான். இடதுபுறம் அமர்ந்து ஓட்டக்கூடிய அந்தக் கார் சென்னையை நோக்கி விரைந்தது.

    அப்படியானால் இது என்ன இடம்? கல்பாக்கம். மாமல்லபுரத்திலிருந்து வடக்கே கொஞ்ச தூரம்.

    அலைகள் கரையைப் போட்டு அடித்துவிட்டுத் தானே ஓலமிட்டது தெளிவாகக் கேட்டது.

    நகரப் போர்வையின் எல்லையை எட்டிக் கொண்டிருந்தார்கள்.

    கொஞ்சத் தொலைவில் கார்கள் முருங்கை மரத்துக் கம்பளிப் பூச்சிகளாய் அடையடையாய்ச் சாலையைச் சுத்தமாக அடைத்துக்கொண்டு நின்றிருந்தன.

    அரசாங்கம் முதல் அதிகாரிகள் வரை இருவர் வாயிலும் புகுந்து புறப்பட்டார்கள்.

    கோவேந்தன் கொஞ்சம் பதட்டமானான். இருதயத் துடிப்பு அவனையுமறியாமல் வேகமெடுத்தது. ஏன் காரணமில்லாமல்? இல்லையில்லை. காரணம் இருக்கிறது.

    என்னவாயிருக்கும் மாமா?

    பேராசிரியர் மவுனச் சாமியாராய் அடம்பிடித்தார்.

    அவன் கேட்டுக் கொண்டிருந்தபோதே அவர்களுக்கு முன்னாலிருந்த கார் ஒன்று, இருந்த இடைவெளியைச் சாதகமாக்கிக் கொண்டு சற்று விலகிப் பின்னோக்கி விரைய ஆரம்பித்தது.

    ஒன்று, அந்தக் கார்க்காரர் ஏதோ அவசரத்தில் இருக்க வேண்டும். அல்லது ஏதோ குற்றம் செய்திருக்க வேண்டும் என்று எண்ணினான் கோவேந்தன்.

    அவன் காரில் கண்களைப் பதித்து அது போகும் விதத்தையே பார்த்துக் கொண்டிருந்தபோதே அந்தக் காரின் வேகம் குறைந்தது. பிரேக்கை அழுத்தியதன் அறிகுறியாகக் காரின் பின்னால் சிவப்பு விளக்குகள் எரிந்தன.

    அந்தச் சிவப்பு விளக்கின் மங்கலான ஒளியில் சில காக்கி உடைகள் திடீரெனத் தெரிந்தன.

    பேராசிரியர் சட்டென்று திரும்பிப் பார்த்துவிட்டு மவுன விரதத்தைக் கலைக்கும் வகையில் சொன்னார்: பின்னால் ஒரு போலீஸ் கூட்டமே இருக்கிறது. பின்னால் போக முயற்சி செய்பவர்களை மடக்குவது மட்டுமே அதன் வேலை.

    கோவேந்தன் முகத்தில் கலவரம் விரைந்து குடியேறியது.

    அவனது முகமாற்றத்தைக் கண்ட ஆற்றலரசு, என்ன கோவேந்தன்? ஏன் ஒரு மாதிரியாக ஆகிவிட்டாய்?

    இல்லை மாமா. காலையில் நம் சோதனைச் சாலைக்காக வாங்கிய இரசாயனங்கள், உலோகங்கள் ஆகியவற்றைக் கிடங்கில் இறக்கிவைக்க மறந்துவிட்டேன்.

    பேராசிரியர் சற்றே அதிர்ச்சி அடைந்தவராய்க் கேட்டார்: என்ன, மறந்துவிட்டாயா?

    ஆமாம்.

    நீ இப்படித்தான் முட்டாள்தனமாக எதையாவது செய்து வைத்து விடுகிறாய். முயற்சி வெற்றி பெறும் வரை நம்முடைய கடமைகள் யாருக்குமே எந்த வகையிலும் தெரிந்துவிடக் கூடாது என்பதில் நான் எத்தனை கவனமாய் இருக்கிறேன்? உனக்குக் கொஞ்சங்கூட அந்தப் பொறுப்பு இன்னமும் வரவில்லையே?

    வார்த்தைகளைக் கோபம் என்னும் திராவகத்தில் முக்கியெடுத்துக் கோவேந்தன் காதில் வீசினார்.

    கோவேந்தனின் முகம் எலி முகமெனச் சிறுத்தது.

    பேராசிரியரின் காரின் முறை வந்தது.

    எக்ஸ்கியூஸ் மீ சார். உங்கள் காரைச் சோதனையிட வேண்டும்.

    நூறு தடவை இதே மாதிரி ஒப்புவித்தவர் போல் மிகவும் செயற்கையாய்ச் சொன்னார் ஓர் இன்ஸ்பெக்டர்.

    ‘இந்தப் போலீஸ்காரர்களே இப்படித்தான். சைக்கிளில் போனால் ஒரு மரியாதை. காரில் போனால் ஒரு மரியாதை.'

    - இது கோவேந்தனின் மனதில் எழுந்த அனுபவச் சிந்தனை.

    முகத்தைக் கேள்விக் குறியாய் மாற்றினார் பேராசிரியர் ஆற்றலரசு.

    புரிந்துகொண்ட புத்திசாலி இன்ஸ்பெக்டர், டாக்ஸேஷன், லைசென்ஸ், கார் திருட்டு, மதுவிலக்குக் குற்றங்கள், கடத்தல் இப்படிப் பல வகையான குற்றங்களைக் கண்டுபிடிக்க இன்று நகரத்தின் எல்லா எல்லைகளிலும் ஸ்குவாட் போடப்பட்டிருக்கிறது.

    - 101வது முறையாய் இரண்டாவது பாகத்தை ஒப்பித்தார் இன்ஸ்பெக்டர். டிக் கீ அண்ட் லைசென்ஸ் பிளீஸ்

    எங்கு போனாலும் லைசென்ஸ் எடுத்துப் போகும் பழக்கம் என்னிடம் இல்லை. நீங்கள் சார்ஜ் ஷீட் கொடுங்கள். ஸ்டேஷனில் கொண்டுவந்து லைசென்ஸைக் காண்பிக்கிறேன். இந்தா கோவேந்தன்! டிக்கியைத் திறந்து காண்பி.

    சாவியைக் கொடுத்தார்.

    கோவேந்தன் தயங்கியபோது -

    'பரவாயில்லை திறந்து காண்பி. சமாளிப்போம்' என்று கண்களால் சொன்னார் பேராசிரியர்.

    கோவேந்தன் டிக்கைத் திறந்து உயர்த்திய மாதிரியே

    இன்ஸ்பெக்டரும் தன் புருவங்களை உயர்த்தினார்.

    என்ன இதெல்லாம்?

    ஏதோ பிடிப்புக் கிடைத்துவிட்ட பெருமிதத்தை அடக்கிக்கொண்டு இன்ஸ்பெக்டர் சற்றே அதட்ட -

    கோவேந்தனின் தொண்டை, தயங்கியபடி எச்சிலை உள்ளே தள்ளிவிட்டு வேலை செய்ய ஆரம்பித்தது.

    எனக்குத் தெரியாது. மாமாவைக் கேளுங்கள்.

    ஆற்றலரசு தலையை வெளியில் நீட்டி, நான் ஒரு சயன்டிஸ்ட். என் ஆராய்ச்சி தொடர்பாக இவற்றை வாங்கி வைத்திருக்கிறேன். இந்தாருங்கள் விசிட்டிங் கார்டு.

    இன்ஸ்பெக்டர் சற்றே நம்பாதவராய்.

    503! இதற்கு ஒரு பட்டியலைப் பிரதியுடன் எடுத்து அதில் பேராசிரியரின் கையெழுத்தை வாங்கிக்கொள்.

    காரியங்கள் மளமளவென்று நடக்க இன்ஸ்பெக்டர் பிடியிலிருந்து விலகிய கார் வில்லிலிருந்து கிளம்பிய அம்பாய்ப் பறக்க, சாலை வளைவுகளில் ஐயோ எங்களை விட்டு விடுங்கள் என்பது போல் டயர்கள் அழுதன.

    பிரம்மனே பார்த்துப் பெருமைப்படும்படியான அழகு அவளுக்குச் சொந்தம். பெயர் பூங்கொடி. ஆண்களின் கற்பனை எண்ணங்களை வளைத்துக் கோணலாக்கிவிடக் கூடிய உடல் வளைவுகள் அவளுக்கு. அவள் அண்ணாசாலையில் உள்ள கடையில் உள்ளாடை சமாச்சாரங்களை வாங்கிக்கொண்டு காரை நோக்கி, இலக்கணத்தை வகுக்கும் வகையில் நடந்து கொண்டிருந்தாள். அவள் பார்வையில் படமாட்டோமா என்று கோண நடை நடந்தார்கள் பலர். அந்தக் கணத்திற்கு அவளைச் சிலர் தங்கள் மனைவியாய் எண்ணிக் கொண்டார்கள். பொல்லாத உலகம் இது!

    அவள் காரை நெருங்கியவுடன் அலட்சியமாய் சாவியைப் போட்டுத் திறந்தாள். பொருள்களைச் சலிப்புடன் காரின் பின் சீட்டில் வீசினாள். அவை அநாதைகளாய்ப் போய் விழுந்தன. எங்கிருந்தோ ஒரு பொடியன் ஓடிவந்து இவ்வளவு நேரம் தான் காரைப் பார்த்துக் கொண்டதாக ஒரு பச்சைப் பொய்யைச் சொல்லி முப்பத்திரண்டைக் காட்ட பத்துப் பைசாவைக் கொடுத்துவிட்டுக் காரைக் கிளப்பினாள்.

    பயனீர் ஸ்டீரியோ காரில் - காதில் ததும் ததுமென அலற, ஒற்றைக் கையால் ஸ்டீரிங்கைப் பிடித்தபடி இதயத்தில் செம்மேனியின் நினைவுகளை நிரப்பிக் கொண்டு வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தாள் பூங்கொடி.

    போனியெம்காரர்கள், எ உமன் கேன் சேஞ்ச் எ மேன் என்றார்கள். உண்மைதான் என்று எண்ணிக்கொண்டாள் பூங்கொடி

    ‘செம்மேனி என் மேல் கொள்ளையாய் அன்பு வைத்திருக்கிறார். கல்லூரி நண்பராயிருந்த அவர் வாழ்க்கைத் துணைவராய் ஆகப்போகிறார். என்னைவிட சந்தோஷப்பட இருக்கிறவர்கள் வேறு யாருமே இல்லை. அம்மா இல்லாக் குறையை வைத்துச் செல்லமாய் வளர்ந்துவிட்ட என்னால் அப்பாவை எப்படியும் சரிக்கட்டி விடமுடியும்.'

    சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இதோ, இவளது வீடு வந்துவிட்டது.

    முதலில் பூங்கொடியின் கவனத்தைக் கவர்ந்தது நேபாளக்காரனின் பழகிப்போன சல்யூட்.

    அடுத்து?

    மாடியில் அம்மாவின் அறையிலிருந்து வந்த விளக்கு வெளிச்சம்.

    அம்மாவின் அறையைத் திறக்க வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லையே!

    அந்தக் கணத்தில் –

    பால்நிறக் கண்ணாடியில் விழுந்த அந்த நிழலுருவம் –

    அவளுக்குப் புதிதல்ல.

    பழக்கமானதுதான்.

    கோவேந்தன்?

    ஆமாம்! சந்தேகமேயில்லை.

    அவரேதான்!

    இறந்து போன தன் அம்மாவின் அறையில் இவருக்கு என்ன வேலை? சிந்தனைக் கணைகள் ஒன்றன்பின் ஒன்றாய் விர் விர்ரென்று பாய -

    போர்டிகோவின் வயிற்றுக்குள் கார் நுழைந்தது.

    கண்கள் தேடின.

    அப்பாவின் காரைக் காணவில்லை.

    அப்பாவும் இல்லாத நேரத்தில் இவருக்கு ஏது அறைச் சாவி?

    அப்பா காருக்குச் சற்று இடம்விட்டு நிறுத்தினாள்.

    ஆர்வம் தாங்காமல் விறுவிறுவென்று மாடிப்படிகளில் ஏறினாள்.

    அம்மாவின் அறையை அடைந்தபோது கோவேந்தன் பூட்டிக் கொண்டிருந்தான்.

    விறுவிறுவெனப் பூங்கொடி வருவதைக் கண்டதும் பூனையாய் விழித்தான். கையிலே இரு நகைப்பெட்டிகள். அளவெடுத்துப் பதித்த மாதிரி முகத்தில் வியர்வை முத்துக்கள். ஆனாலும் மாமா ஆற்றலரசு தந்திருந்த தைரியத்தில்,

    என்ன பூங்கொடி ஏன் இப்படி நேரம் கழித்து வருகிறாய்?

    திசையைத் திருப்பாதீர்கள். அதைக் கேட்க உங்களுக்கு உரிமையில்லை. அம்மாவின் நெக்லஸ் பெட்டிகளைக் கையில் வைத்திருப்பதன் காரணம் எனக்குத் தெரியவேண்டும்.

    - அதிகாரக் கொடியைச் சற்றே உயர்த்தினாள்.

    சோதனைக்கு நாளைக்குத் தேவைப்படுகிறது.

    அப்பாவைக் கேட்டீர்களா - திரும்ப வருமா?

    மாமாதான் சாவியைக் கொடுத்து எடுத்துக்கொள்ளச் சொன்னார். ஆனால் திரும்ப வரும் என்று சொல்ல முடியாது. பாதரசத்தில் போடப் போகிறேன். பாதரசமும் தங்கமும் நீயும் நானும் மாதிரி. இரண்டறக் கலந்துவிடும்.

    வீணாகக் கற்பனை செய்யாதீர்கள். உங்களை எனக்குக் கட்டோடு பிடிக்கவில்லை.

    நான் உன் அத்தை மகனடி!

    அதற்காகத்தான் உன்னை வீட்டினுள் விட்டு வைத்திருக்கிறோம்.

    - மரியாதை படியிறங்கியது.

    இது தற்காலிகம் என்று எண்ணுகிறாயா? அதுதான் இல்லை. உன் கையைக் கோர்த்துக்கொண்டு நிரந்தரமாக இங்கேயே தங்கிவிடப் போகிறேன்.

    வார்த்தைகளில் சூடேறியதோடு, சொன்ன மாதிரியே கையைப் பிடித்தான். அணைக்கப் போனான்.

    சீ! விடு கையை! நீ காண்பது வீண் கனவு

    இல்லை! நடக்கப் போகும் நனவு!

    அதையும் பார்த்துவிடலாம்.

    சொல்லிவிட்டுக் கையை விடுவித்துக்கொண்டு பதிலுக்குக் காத்திராமல் நகர்ந்தாள்.

    கறுவிக்கொண்டாள். இவனை அப்பாவிடம் சொல்லி அடக்கி வைக்க வேண்டும். அல்லது செம்மேனியிடம் சொல்லி மிரட்டி வைக்க வேண்டும். ஆனால், அது சரிப்பட்டு வருமா? அப்பாவும் சரி, செம்மேனியும் சரி உணர்ச்சிவசப்படுபவர்கள். கோபக்காரர்கள். அதுவும் இவனது

    Enjoying the preview?
    Page 1 of 1