Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kolai Express
Kolai Express
Kolai Express
Ebook120 pages44 minutes

Kolai Express

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புண்ணிய ஸ்தலமான காசியின் ஒரு பகுதியான வாரணாசியில் ரயில் ஒன்று புறக்கணிக்கப்பட்டதை போல் தனியாக நின்றுகொண்டிருக்கிறது.

எழில்நம்பி.

அவர்தான் அந்த ரயிலை காண்ட்ராக்டுக்கு எடுத்து காசியில் வெற்றிகரமாக தனது மகன் பாரி கல்யாணத்தை நடத்தி முடித்திருந்தார்.

அது சென்னையை நோக்கி கிளம்புவதற்கு ஆயத்தமாகி கொண்டிருக்கிறது.

அந்த ரயிலில் தான் எதிர்பாராத கொலைகளும், சுவாரசியமான சில திருப்பங்களும், பல மர்ம முடிச்சுகளுக்கான பதிலும் கிடைக்கவிருக்கிறது.

அதை கொலைகான ஆணிவேர் என்ன? அதை சங்கர்லால் எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதை நாம் நாவலின் உள்ளே சென்று காண்போம்.

Languageதமிழ்
Release dateNov 6, 2020
ISBN6580138505884
Kolai Express

Read more from Lena Tamilvanan

Related to Kolai Express

Related ebooks

Reviews for Kolai Express

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kolai Express - Lena Tamilvanan

    http://www.pustaka.co.in

    கொலை எக்ஸ்பிரஸ்

    Kolai Express

    Author:

    லேனா தமிழ்வாணன்

    Lena Tamilvanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    காசி, புண்ணியமிக்க இந்த ஊருக்கும் சுத்தத்திற்கும் ரொம்பத் தூரம் என்பது பிரசித்திபெற்ற விஷயம். அதை நான் வேறு விவரித்துக் கொண்டிருப்பானேன்? போக்கிடமற்ற சில மனிதப் பிறவிகள்; ஜடா முடிகளுடனும், காவி உடையுடனும் விதவிதமாய்ச் சாமியார்கள்; பிள்ளை வரம்பெற வந்தவர்கள்; எண்ணற்ற இளசுகள், தள்ளாமைகள் எல்லோருமே அன்று சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தார்கள். 'கியா’க்களோடு 'அவுனு'க்கள், 'கேட்டோ'க்கள் 'எங்கே'க்கள் என்று பல மொழிகளும் கலந்து ஒலித்துக் கொண்டிருந்தன.

    விடிகாலைப் பொழுது பரபரப்பாக நகர்ந்து கொண்டிருந்தது. கங்கை ஆற்றின் கரையில் குளிரையும், மிதந்தபடி நகரும் ஓரிரு உயிரற்ற உடல்களையும் பொருட்படுத்தாமல் நெருக்கமாய் ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லாமல் பலர் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

    கொஞ்ச தூரம் நகர்வோம்.

    வாரணாசி இரயில் நிலையத்தால் புறக்கணிக்கப்பட்டு விட்டதைப் போல ஒரு சின்னஞ்சிறு இரயில் வலக்கோடியில் சிக்னலுக்காகக் காத்துக் கொண்டிருந்தது. அமைதியான அந்த நேரத்தில் அந்த இரயிலின் மூன்று கம்பார்ட்மெண்டுகள் மட்டும் சிறிது கலகலப்பாக இருந்தன.

    இரயில் இன்ஜினை ஒட்டிய கம்பார்ட்மெண்டில், மாவரைக்கும் சத்தமும், காய்கறி நறுக்கிக்கொண்டு பெரிதாய் இருமிக் கொண்டிருந்த சீரனின் குரலும் எல்லாவற்றையும் மிஞ்சிக் கேட்டன.

    மாவரைக்கும் சத்தம் நின்றுவிட்டது போல் தோன்றியது சீரனுக்கு. கண்ணை இடுக்கியபடி மாவரைத்த அருளைப் பார்த்தான். அவன் ஆள்காட்டி விரலாலும் கட்டை விரலாலும் அந்த மாவைப் பதம் பார்ப்பதை உணர்ந்த சீரன், டேய் அருள்! அதுக்குள்ள அரைப்பட்டிருக்குமா என்ன? இன்னும் நைஸா ஆட்டு. வடை அப்பத்தான் நல்லா வரும். நல்லா வல்லைன்னா அந்த மனுஷனுக்குப் பதில் சொல்ல முடியாது.

    அதே கம்பார்ட்மெண்ட் சமையற்கட்டில் வேலை செய்து கொண்டிருந்த வயதான வேலுவும், எடுபிடிப் பையனும் சீரனையே பார்த்தார்கள்.

    ஆவட்டும், ஆவட்டும் இட்லியை ஊத்துங்க. ஒருத்தரா ரெண்டு பேரா? 77 பேர் சாப்பிட்டாகணும். டேய்! உன்னை நாலு மணிக்கே எந்திரிக்கச் சொன்னேன்ல? மணி ஆறாகப்போவுது! சோம்பேறி ராஸ்கல்! நீயெல்லாம் சமையலுக்கு உதவியா இருப்பேன்னு நம்பி உன்னைக் காசிக்குக் கூட்டிக்கிட்டு வந்தேன் பாரு, என் புத்திய... பல்லைக் கடித்தான் தலைமைச் சமையல்காரன் சீரன்.

    எடுபிடிப் பையனின் முகம் மாறியது.

    குனிந்து வெங்காயத்தை வேகமாக நறுக்க ஆரம்பித்தான்.

    ‘அந்த மனுஷனுக்குப் பதில் சொல்ல முடியாது’ என்று சீரன் குறிப்பிட்ட அந்த மனுஷன் யார்?

    எழில் நம்பி.

    பார்வைக்கு ஐம்பதாகத் தெரிபவர். வெள்ளையா செம்பட்டையா என்று முடிவுக்கு வரமுடியாத தலைமுடி. கூர்மையான மூக்கு. வகிடு இல்லாமல் ஒட்டுமொத்தமாகத் தூக்கி வாரியிருந்தார் தலையை. சென்னையிலும் இலங்கையிலும் சில உருப்படியான சொத்துகளுக்கு உரிமையாளர். எந்த நாட்டுக்கு எந்த நேரத்தில் என்ன தேவை என்று அவருக்குச் சரியாக மூக்கில் வியர்க்கும். அவற்றை உடனே அனுப்பி ஐந்தாறு இலக்கமாகச் சம்பாதிப்பதில் பலே ஆள்.

    மேல் பர்த்தில் படுத்திருந்த தன் மனைவியை,

    இன்பவல்லி! இன்பவல்லி! எழுந்திரு. விடிஞ்சு போச்சு. நம்ம என்னவோ மெட்ராசுல கல்யாணம் பண்ண மாதிரியும் ஓடியாடி அலைஞ்சு களைச்சுப்போன மாதிரியும் தான் தூங்குறே! எழுந்திரு சமையல்கட்டுல போய் வேலையெல்லாம் ஆகுதா பாரு.

    எழுந்திருக்க முடியாமல் அசதியுடன் தலையைத் தூக்கி ஜன்னல் வழியே பார்த்தாள் இன்பவல்லி. பாத்ரூம் வாடை கலந்த பினாயில் வாடை அவள் மூக்கைத் துளைத்தது. பனிப்படலம் வாரணாசி இரயில் நிலையத்தை வெள்ளை மஸ்லின் துணியால் மறைத்தது போல் தெளிவில்லாமல் காட்டியது. அவளுக்கு 45 வயதிருக்கும். மிகச் சரியான தமிழ்நாட்டு அம்மாவின் தோற்றம் அவளுக்கு.

    போதும், காலங்காத்தாலேயே உங்க கேலிய ஆரம்பிச்சுடுவீங்களே! என்னவோ எங்கம்மா கண்ணை மூடும்போது, இன்பம், நம்ம பாரி கல்யாணத்தைக் காசியில் நடத்தணும். அதை நான் அங்க வைச்சுப் பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். முடியலே. அவன் கல்யாணத்தை மட்டுமாவது அங்க நடத்திடுன்னாங்க, அவுங்க கடைசி ஆசையை நிறைவேத்தணும்னு இங்க வந்திருக்கோம். உங்களுக்கு அது அடியோடு பிடிக்கல. மெட்ராஸ்ல இரயில் ஏற்பாடு பண்ணிக் கிளம்புன நேரமா கேலியும் கிண்டலும் தான் என்று சொல்லியபடி பல் விளக்கும் உபகரணங்களை எடுக்க வேனிட்டி பேகில் விரல்களை விட்டு அலசினாள்.

    ஏய் இன்பவல்லி! தெரியாமதான் கேட்கிறேன். அந்த கிழம்... அதான் என் மாமியாரு சாகிற நேரத்தில் வாதம் வந்து வாய் திறக்க முடியாம, சாகாம பைத்தியகாரத்தனமா நம்ம மகன் பாரி கல்யாணத்தைக் காசியில் தான் நடக்கணும்னு சொல்லிடுச்சு, இதையே நமக்கிருக்கிற வசதிக்கு மெட்ராஸ்ல நடத்தியிருந்தா என்னமா இருந்திருக்கும்! ம்ம்! ஏக்கப் பெருமூச்சு காற்றில் கலந்தது.

    எங்க வம்சத்தையே உங்களுக்குப் பிடிக்காதே! வீணா எங்கம்மாவை இழுக்காதீங்க. உங்க திருப்திக்கு மெட்ராஸ்ல ரிசப்ஷன் வச்சுக்கப் போறீங்கள்ல? அப்புறம் என்ன? அதுல கூட்டத்தைக் கூட்டி உங்க செல்வாக்கை ஊர் முழுக்கக் காண்பியுங்க. யாரு வேண்டான்னா?

    சரி சரி, நீ பல்லை விளக்கிட்டு, நம்ம பாரியை எழுப்பி விடு. சம்பந்திகளுக்கு காப்பி வந்துடுச்சான்னு கேளு. ஒருத்தரா ரெண்டு பேரா? ஒரு கம்பார்ட்மெண்ட் முழுக்க சொந்தக்காரங்க - வேண்டியவங்கள்னு ஏகப்பட்ட பேரை நம்ம பொறுப்பில கூட்டியாந்திருக்கோம். எல்லாரையும் குறையில்லாம கவனி. நேத்து ராத்திரியே சமையல்கட்டுக்குப் பக்கத்துல உள்ள பாத்ரூம் பைப்பில வாஷர் போய்த் தண்ணியெல்லாம் கொட்டிக்கிட்டே இருந்துச்சு. ஸ்டேஷன் மாஸ்டர்கிட்டே சொன்னேன். அது என்ன ஆச்சுன்னு போய்ப்பாரு. இல்லேன்னா சண்முகவேலுகிட்ட சொல்லிக் கவனிக்கச் சொல்லு. தனி இரயில் பிடிச்சு எல்லாரையும் கூட்டிக்கினு வந்தது பெரிசில்ல. குறையில்லாம கவனிச்சு, கொண்டுபோய் இறக்கிவிடணும்.

    "நீங்கப்பாட்டுக்கு மூச்சுவிடாம உங்க பி.ஏ. சண்முகவேலுகிட்ட வேலையை அடுக்கிற மாதிரி எங்கிட்ட அடுக்காதீங்க. பாரியை

    Enjoying the preview?
    Page 1 of 1