Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paavai Vilakkin Olichitharalgal
Paavai Vilakkin Olichitharalgal
Paavai Vilakkin Olichitharalgal
Ebook173 pages1 hour

Paavai Vilakkin Olichitharalgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1964-இல் மதுரையில் பிறந்து வளர்ந்தவள். அவரது தந்தையார், காலம்சென்ற திரு.பேரை.சுப்ரமணியன், (South Central Railways, Secunderabad) எழுத்தாளர். 1960-இல், ஆனந்த விகடன், கல்கி, கலைமகள், குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் நிறைய சிறுகதைகள், எழுதிப் பல பரிசுகள் பெற்றவர். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகிய பல நாடகங்களின் கதாசிரியர். அவரது தாய்.திருமதி.சரஸ்வதி சுப்ரமணியம், அவரை எழுதச் சொல்லி ஆசி வழங்கியவர்.

1988-ல் இவரது சிறுகதைகள் பெண்மணி, மங்கை, மங்கையர் மலர், போன்ற மகளிர் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது.

2009 லிருந்து இணையத்தில் எழுத ஆரம்பித்து,. கட்டுரைகள், கவிதைகள், ஹைகூ கவிதைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், தொடர்கதைகள் ஆகிய படைப்புகள் இணைய தளத்தின் முன்னணி வார இதழ்களான திண்ணை, வல்லமை, வெற்றிநடை, மூன்றாம்கோணம்,சிறுகதைகள்.காம் போன்ற வலை தளங்களிலும், குங்குமம் தோழி ஆகிய தமிழ் பத்திரிகைகளிலும் பிரசுரமாகி வருகிறது.

Languageதமிழ்
Release dateMay 26, 2017
ISBN6580120002264
Paavai Vilakkin Olichitharalgal

Read more from Jayasree Shanker

Related to Paavai Vilakkin Olichitharalgal

Related ebooks

Reviews for Paavai Vilakkin Olichitharalgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paavai Vilakkin Olichitharalgal - Jayasree Shanker

    http://www.pustaka.co.in

    பாவை விளக்கின் ஒளிச்சிதறல்கள்

    Paavai Vilakkin Olichitharalgal

    Author:

    ஜெயஸ்ரீ ஷங்கர்

    Jayasree Shanker

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jayasree-shanker

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    தொட்டில்

    பெற்ற கடன் அடைக்கும் பிள்ளைகள்..!

    இன்று போய் நாளை வா...!

    தேரில் ஏறும் முன்னம்...!

    பாதை மறந்த பருந்து…!

    தன்னைச் சுடும்....!

    அவள் வாழ்வு...அவ்வளவுதான் !

    விஸ்வநாதன் வேலை வேண்டாம்.....!

    கலியுகத் தாயின் கீதா உபதேசம்..!

    தொட்டில்

    வாசல்ல பரங்கிப்பூல்லாம் நட்டு வெச்சு கோலமெல்லாம் ரொம்ப அம்சமாப் போட்டிருக்கீகம்மா , என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள் பணிப்பெண் லெட்சுமி. 

    இன்னிக்கு பாருங்கம்மா, எம்புட்டு குளிருதுன்னு என்றவள், நடுங்கியபடியே இழுத்துப் போர்த்திய புடவை முந்தானையை மேலும் வேகமாக இழுத்து விட்டுக்கொண்டவளின் குரலிலும் லேசான நடுக்கம் தெரிந்தது அகிலாவுக்கு. 

    இன்னிலேர்ந்து மார்கழி மாசம் ஆரம்பிச்சிருச்சுல்ல …அதான் கோலமும்…குளிரும்..என்ற அகிலா தலையில் முடிந்திருந்த ஈரத்துண்டை அவிழ்த்தபடியே , ‘இரு லெட்சுமி காப்பி போட்டிட்டுருக்கேன், குளிருக்கு சூடா காப்பி குடிச்சிட்டு பெறகு பாத்திரம் தேய்க்கலாம் என்று சமையலறைக்குள் நுழைந்தாள். 

    ‘இன்னிக்கு ‘கற்பகம் மருத்துவமனை’க்குப் போயாகணுமே, போனவாரமே, இன்றைய தினத்துக்கு பெயரையும் பதிந்தாயிற்று. அவர் எழுந்ததும் எப்படியாச்சும் பேசி, சமாளிச்சு அழைச்சிட்டுப் போயிறணும்’, என்று எண்ணியவள் , ‘ஷெல்’பிலிருந்த தம்ளரை எடுக்கப் போக, அங்கிருந்த இன்னொரு தம்ளர் கைதட்டிக் கீழே விழுந்து ‘ரிங் ரிங் ரிங் ரிங்’ என்ற சத்தத்துடன் வட்டம் போட்டது. 

    அதை வேகமாகக் குனிந்து எடுத்த லெட்சுமி, அம்மா….ஐயா முளிச்சுக்கிடப் போறாரு என்றாள் பதற்றமான குரலில். 

    மென்மையாகச் சிரித்த அகிலா, இன்னிக்கி சீக்கிரம் முழிச்சா நல்லது தான் என்றவளாக, இந்தா என்று ஆவிபறக்கும் காப்பி தம்ளரை அவளிடம் நீட்ட, 

    காப்பி கை மாறியது. 

    பூஜையறையிலிருந்து வந்த சைக்கிள் பிராண்ட் ஊதுபத்தி மணத்தை, நரசுஸ் காப்பியின் வாசனை ஜெயித்துக் கொண்டிருந்தது. 

    மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம் .என்று டீவி யில் மேடை ‘களை’ கட்டிக்கொண்டிருந்தது. 

    காப்பியோடு வந்து சோபாவில் சாய்ந்தவளின் மனம், பாட்டில் லயிக்காமல் வேறு சிந்தனையில் வயப்பட்டு, ‘தை பிறந்தால் வழி பிறக்கும்னு’ ன்னு கல்யாணம் மட்டும் தை மாசம் கரெக்டாஆயிருச்சு, அதுக்குப் பின்னாலே பதினைந்து ‘தை மாதங்கள்’ வந்துட்டு போயிடுச்சு, அடுத்த வழி பிறக்கக் காணோம்….வழக்கம் போலவே மனசுக்குள் சலிப்புத் தட்டியது அவளுக்கு. 

    அங்கிருந்த டீபாயிலிருந்து , அவர்களது மருத்துவ ஃபைலை கையிலெடுக்க, அது அவளது மனத்தைப் போல கனத்து, அவர்களது ‘விதியை’ எந்நேரமும் விளம்பரப்படுத்த தயாராக இருந்தது.. கண்ணெதிரே, ஃபோட்டாவில் ராகவனோடு சிரித்துக் கொண்டிருந்தாள் அகிலா. 

    அவளது எண்ணங்கள் நழுவத் தொடங்கியது. 

    கல்யாணமாகி முதல் இரண்டு வருடங்கள் முடிந்த நிலையில், ஆபீசில்,அக்கம் பக்கத்தில், என்று தெரிந்தவர்கள் என்று யாரைப் பார்த்தாலும் ‘கல்யாண சாப்பாடு’ தான் போடாமால் ஏமாத்திட்டீங்க, ‘சீமந்தச் சாப்பாடு எப்போ..?’ சீக்கிரமா விசேஷத்தை சொல்லுங்க’ என்ற ஒரே கேள்வியைத் தான் உரிமையோடு கேட்டார்கள். 

    அப்பொழுதெல்லாம் வெட்கத்தில் சிரித்து மழுப்புவாள் அகிலா. 

    இன்னும் சிறிது வருடங்கள் சென்ற நிலையில், இவர்களைப் பார்த்த மாத்திரத்தில், அவர்களின் பார்வையில் ஒருவித வருத்தம் கலந்த விசாரிப்பு இருந்தது. காலங்கள் செல்லச் செல்ல, அவர்களே எதுவும் கேட்காமல் மௌனமாக நகர்ந்து கொண்டார்கள். மேலும் அவர்கள் பெண்களின் ‘சீமந்த நிகழ்வின் போது துணைப் பெண்ணாக வரச்சொல்லி அழைத்தார்கள். பிறகு அதுவும் மறுக்கப்பட்டு, அழைக்கப் படுவதையே தவிர்த்த போது தான், அகிலா வேதனையின் உச்சத்திற்குச் சென்று யார் எடுத்துச் சொல்லியும் கேளாமல், தனது வங்கி வேலையை ராஜினாமா செய்தவள் வீட்டுக்குள் முடங்கிப் போனாள். 

    இருபது வருடத்திற்கு முன்பு அகிலாவும், ராகவனும் தான், அந்த வங்கியில் அதிகமாக பேசப்பட்ட காதல் ஜோடி. இருவர் வீட்டிலும் மறுக்கப்பட்ட காதலுக்கு ஆதரவு காட்டி, ‘காவல் நிலையம்’ வரை சென்று அங்கேயே கல்யாணத்தை முடித்து வெற்றி பெற்றதாக மகிழ்ந்ததும் அந்த வங்கி நண்பர்களே.

    வாழ்க்கையில் வந்து சேர வேண்டிய வசதிகள் ஒவ்வொன்றாக வந்த பின்பும், அவர்கள் விரும்பியது கிடைக்கப் பெறாத போது தான், அதுவே, விஸ்வரூபப் பிரச்சனையானது. 

    தங்களைத் துரத்தும் கவலையிலிருந்து விலகி ஓட வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த போதெல்லாம், பணி நிமித்தம் கிடைத்த ஊர் மாற்றமும் கை கொடுத்தது. சூழ்நிலையின் மாற்றம், இருவரின் மனத்திற்கும் மருந்தானது.

    "அம்மா, நான் கெளம்பறேன்…இனிமேட்டு போயி சோறாக்கி பசங்கள பள்ளியோடம் அனுப்போணும்….அதுங்க ரெண்டும் பாம்பும் கீரியுமா சீறிக்கிட்டு நிக்கப் போவுது. எல்லாம் என் தலையெளுத்து.கட்டினது புட்டியோட புரளும்..அதோட குட்டிங்க கட்டிக்கிட்டு புரளும், புலம்பியபடியே லெட்சுமி அவசரமாக சென்றாள்.

    சுயநினைவுக்கு வந்த அகிலா , நேரமானதை உணர்ந்து கொண்டு எழுகிறாள்.

    கண்ணாடியின் முன்பு தனது காதோர நரைமுடிக்கு ‘டை’ அடித்துக் கொண்டிருந்த கணவர் ராகவன் , ‘என்ன அகிலா…இன்னிக்கு காலங்கார்த்தாலயே மூட் அவுட்டா..?" என்கிறார். 

    இன்னிக்கி நீங்க பேங்குக்கு லீவு போடுறீங்க…என்று இழுத்தவள், தனது கோரிக்கையைச் சொல்லி முடித்தாள்.

    இந்த வயசுல இனி தேவையா? அதான் நாமளும் பார்க்காத வைத்தியமில்லை, ஜாதகம், ஜோசியம், பரிகாரம், கோயில் குளம்னு பார்த்துப் பார்த்து ஓய்ஞ்சு போயாச்சே. வழியே இல்லைன்னு ஆனபிறகு, விட்டுத் தள்ளு அகிலா. நம்ப குழந்தையும் எங்கியோ வெளியூர்ல படிச்சுக்கிட்டு இருக்குன்னு நெனைச்சு மனசைத் தேத்திக்கோ. இப்போல்லாம் குழந்தைகள் இருக்கறவங்களே தனியாத் தான் இருக்கும்படியா ஆகுது. 

    ப்ளீஸ்ங்க.இந்த ஒரு தரம் மட்டும் கடைசியா ‘ட்ரை’ பண்ணிப் பார்த்திடலாமே. இது வேற மாதிரியாம் . இந்த டாக்டர் ரொம்ப கைராசியாம். அங்கே போனா நம்ம பிரச்சனை கண்டிப்பாத் தீர்ந்து போயிரும். விளம்பரத்தைப் பார்த்து நம்ப பெயரையும் இன்னிக்கு வரதா பதிஞ்சு வெச்சிருக்கேன். அந்தக் கடவுள் நம்மைக் கைவிட மாட்டாங்க , கடைசியா ஒரு தடவைங்க, ஒரு குழந்தையைப் போலக் கெஞ்சினாள் கேட்டாள் அகிலா.

    வேண்டா வெறுப்பாக ‘ம்’ என்றவர், சரி நீயும் கிளம்பு, என்றார். 

    முகத்தில் மின்னலடிக்க, துள்ளலுடன் உள்ளே சென்றாள் அகிலா.. அவளது நடையில் தான் பெரிதாக எதையோ சாதித்து விட்ட திருப்தி இருந்தது.

    அடுத்த சிலமணி நேரத்தில் அவர்களது கார் காம்பவுண்டு கேட்டை விட்டு வெளியேறியது. அகிலாவின் மனத்தில் இருக்கும் எதிர்பார்ப்பு அவளது முகத்தில் பிரதிபலிக்க, அன்றைய நாளிதழை விரித்து படிக்கத் தொடங்கினாள்.  எதுவுமே பேசாமல், வேறு சிந்தனையில் காரை ஒட்டிக் கொண்டிருந்தார் ராகவன். ‘எல்லாம் அப்பா…அம்மா போட்ட சாபமாக் கூட இருக்கலாம். காதல் தான் பிரதானம்னு நினைச்சு பெத்தவாளை உதாசீனம் பண்ணிண்டு, எதிர்ப்பை ஜெயிக்கிற வேகத்தில் , நண்பர்கள் சொன்னதை வேதவாக்கா எடுத்துண்டு , போலீஸ் ஸ்டேஷன்ல போய் நின்னு…வில்லங்கமா ஒரு கல்யாணம் செஞ்சுண்டு….ச்சே…..அதான்….அதோடே அப்படியே நின்னுடுத்து …’

    சிறிது நேர அமைதிக்குப் பிறகு,

    இந்தச் செய்தியைப் பாருங்க….ஒரு பசு மாடு மூணு கன்றுகள் போட்டிருக்காம். ஆச்சரியமாயில்லை…என்று கண்களை விரித்தாள் அகிலா. அத்தோட, சில இடங்கள்லே, பசு மாட்டுக்கு ஊசியைப் போட்டு ஒரே பிரசவத்துல ரெண்டு, மூணு கன்றுகளைக் கூடப் போடறா மாதிரி பண்ணுவாங்களாம். ச்சே..இவங்கல்லாம் .என்ன மனுஷங்க.. சுயநலக்காரங்க…பசுமாடுங்க பாவம்ல என்று திரும்பி ராகவனைப் பார்த்து செய்தித்தாளை காட்டிய அகிலா, அவரது முகத்தின் இறுக்கத்தை உணர்ந்து அதை மடக்கி வைக்கிறாள்.

    சிக்னலின் சிவப்பு விளக்குக்கு அடங்கி நின்றது கார். அதற்காகவே காத்திருந்த ஒரு சிறுவன் கைகளில் சில தொட்டில் பொம்மைகளோடு இவர்களை நோக்கி ஓடி வருகிறான். அம்மா…அம்மா……கார்ல வாங்கி மாட்டுங்கம்மா…என்றபடி அந்த பொம்மைகளை வைத்து ஜன்னல் கண்ணாடியில் தட்டித் தட்டி கண்களால் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

    வாங்குங்களேன்….என்றவள் தனது கைப்பையை எடுக்கப்போக.,

    வேண்டாம்….என்றவர் குரலில் தீர்மானத்தோடு சிக்னலை பார்க்கலானார்.

    அந்தச் சிறுவனின் முகத்தைப் பார்க்கும் திராணியற்று அவளும் சிக்னலை வெறித்தாள்.

    கணவனின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவளாக, ‘அந்தச் சின்ன வயசிலே நமக்குள்ளே இருந்த வேகம், எங்கே, சாதி, அந்தஸ்துன்னு காரணம் காட்டி, நம்பள பிரிச்சுடுவாங்களோன்னு பயந்து போய்தானே அப்படி ஒரு காரியத்தை செஞ்சுட்டோம். நீங்களே சொல்லிருக்கீங்க, உங்க வீட்டுல காய்கறிக்குக் கூட ‘பேதம்’ பார்ப்பாங்கன்னு. பெறகென்ன.? கல்யாணத்தை முடிச்சுட்டு போனா சரியாகிடும்னு, ஆசீர்வாதம் வாங்க வீட்டுக்குப் போனா, அங்கென்னாச்சு..? ரெண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1