Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sillunu Oru Kaadhal
Sillunu Oru Kaadhal
Sillunu Oru Kaadhal
Ebook168 pages1 hour

Sillunu Oru Kaadhal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பல்வேறு நிலையின் வெளிப்பாடுகளின் தொகுப்பே இந்நூல். இந்நூலின் ஒவ்வொரு கதைகள் மூலமாகவும், நாம் ஒவ்வொரு பாடத்தைக் கற்றுக் கொண்டு, அதன்படி நாமும் நம் வாழ்வை சீரமைத்துக் கொள்ள வாசிப்போம்.

Languageதமிழ்
Release dateFeb 4, 2023
ISBN6580137109355
Sillunu Oru Kaadhal

Read more from R. Sumathi

Related to Sillunu Oru Kaadhal

Related ebooks

Reviews for Sillunu Oru Kaadhal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sillunu Oru Kaadhal - R. Sumathi

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    சில்லுன்னு ஒரு காதல்

    சிறுகதைகள்

    Sillunu Oru Kaadhal

    Sirukadhaigal

    Author :

    ஆர். சுமதி

    R. Sumathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-sumathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    எளநி

    கல் சிலேட்டு

    காதல் சொல்ல வந்தேன்

    அலைகள் ஓய்வதில்லை.

    பூச்சாண்டி

    சாரதா

    சவுக்கடி

    வசூல் ராஜா

    களவாணி

    சில்லுன்னு ஒரு காதல்.

    தவமாய் தவமிருந்து

    கருணை பிறந்த நாள்.

    விரலுக்கேத்த வீக்கம்

    எதற்கும் ஒரு காலம் உண்டு.

    பாடம்

    வலி

    மைதானம்

    எளநி

    சாக்கு மூட்டையிலிருந்த இளநீர் காய்களை எடுத்து தள்ளுவண்டியில் அடுக்கிக் கொண்டிருந்தார் வேலாயுதம். பக்கத்துப் பழக்கடைக்காரும் தன் தள்ளுவண்டியில் பழங்களைத் துடைத்து அடுக்கியவாறே பேச்சுக் கொடுத்தார்.

    என்னப்பா…பையன் ஒழுங்கா பள்ளிக் கூடம் போறானா? புடிக்கிறானா?

    நந்தாவை அவர் ஞாபப்படுத்தியதும் வேலாயுதத்திற்கு சுரு சுருவென கோபம் வந்தது. அவனை நினைக்க நினைக்க உடலில் சர்க்கரையும் கொழுப்பும் ஏறி கிரு கிருவென தலை சுற்றவதைப் போலிருந்தது.

    நந்தாவைப் பற்றி பக்கத்து தள்ளுவண்டிக்கார நண்பரிடம் அவ்வப்போது அவர் புலம்புவதால் இந்தக் கேள்வி வந்தது.

    இவருக்குத்தான் பதில் சொல்லப் பிடிக்கவில்லை. காலையில் கூட பிழைப்பிற்கு கிளம்புவதற்கு முன்பு ஒரே சண்டை. நந்தாவிற்கு படிப்பு சரியல்லை. ஒழுங்காய் பள்ளிக் கூடம் போவதில்லை. கூட்டாளிகளும் சரியல்லை. சிகரெட் குடி கஞ்சா என்று கெட்டப் பழக்கங்கள் இருக்கலாம் என அம்மாக்காரி சந்தேகப்பட்டு இவர் காதில் ஓத இவர் சட்டையைப் பிடிக்க அவன் எதிர்த்துப் பேச வீடே ரெண்டானது.

    என்னப்பா… கேட்கறேன். புதிலைக் காணோம் பழக்கடைக்காரர் பதிலை எதிர்ப்பார்க்க…

    இளநீர் வெட்டும் அரிவாளை எடுத்து அதன் கூர்மையை சரிப்பார்க்க ஒரு இளநீரை சீவிப்பார்த்தவாறே சொன்னார் வேலாயுதம்.

    ஒண்ணும் சொல்லிக்கற மாதிரியில்லப்பா. சரியா ஸ்கூல் போறதில்லையாம். வீட்ல வச்சிருக்கற காசை எடுத்துக்கிட்டு ஃபிரண்ட்ஸ_ங்களோட சுத்தப் போறதும் வீட்டுக்கு வந்தா வம்பு வளக்கறதுமா இருக்கான். தலைக்கு உசந்த பிள்ளையை கைநீட்ட முடியலை. நாமதான்… இப்படி இந்தமாதிரி தள்ளுவண்டியில வெய்யிலு மழைன்னு சிரமப்படறோம்ன்னா… நம்ம புள்ளையாவது நல்லா படிச்சு ஒரு வேலைக்குப் போனா நல்லாயிருக்குமேன்னு நினைச்சா… இருக்கறதும் போகட்டும்னு கெட்டுப் போறேன்ங்கறது. நாம என்ன செய்ய? புத்தி சொல்லித்தான் பார்க்கலாம். கேட்டாத்தானே? கோபத்துல கையை ஓங்கினா திருப்பி கையை ஓங்கிடுவான் போலிருக்கு. என்னமோ தலையெழுத்து என்னவோ அப்படியே நடக்கட்டும்.

    அப்படி விட்டுட்டா எப்படி? அவனுக்கும் தானா உணர நேரம் வரணும்தானே

    தானா உணர நேரம் வரும்போது வயசு இருக்கனுமில்ல. முப்பது வயசுல தானா உணர்ந்தா… படிக்கற காலமும் வயசும் திரும்ப வருமா? அப்ப போயி எந்த பள்ளிக் கூடத்துல படிக்க முடியும்? நாம இந்த மெடிக்கல் காலேஜ் வாசல்ல கடைப் போட்டிருக்கோம். வெள்ளைக் கோட்டுப் போட்டுக்கிட்டுப் போற டாக்டருக்குப் படிக்கிற புள்ளைங்களைப் பார்க்கும் போது அந்த கூட்டத்துல ஒருத்தனா நம்ம புள்ளையும் வெள்ளைக் கோட்டு போட்டுக்;கிட்டுப் போகாதான்னு ஆசைவருது. ஆசை வந்து என்னா புண்ணியம்? உயிரைக் கொடுத்து உழைச்சு கொட்ட நானும் அவனோட ஆத்தாளும் ரெடியாயிருக்கோம். அவன் படிக்கனுமே…

    நான் ஒண்ணு சொன்னா கேட்பியா?

    ம்… சொல்லு

    உன் பையனை ஒரு ரெண்டு நாளைக்கு இந்த எளனிக் கடையில கொண்டு வந்து வை

    இதைக் கேட்டு முகம் மாறினார்

    அவனை எளனி கடையில வைக்கவா இவ்வளவ சிரமப்பட்டு படிக்க வைக்கிறேன்.

    நாம சிரமப்பட்டு நம்ம புள்ளைங்களைப் படிக்க வச்சா மட்டும் போதாது. நாம எவ்வளவு சிரமப்படறோம்னு அவங்க கண்ணாலப் பார்க்கனும். ஒரு நாள் அவனை இங்க வரவழைச்சு உன் கண் முன்னாடி ஒரு ஸ்டூலைப் போட்டு உட்கார வை. நீ வேகாத வெயில்ல எளினி சீவி சீவி விக்கறதைப் பார்க்கட்டும். புத்தி தானா வரும்

    அதெல்லாம் வராது. அப்பன் படற சிரமத்தை கண்ணாலப் பார்த்துத்தான் ஒரு புள்ளைத் தெரிஞ்சுக்கனுமா? சலித்துக் கொண்டார் வேலாயுதம்.

    அதற்குள் அந்த மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான மருத்துவமனையில் நோயாளியாக இரு;ப்பவர்களுக்காக இளநீர் வாங்க இரண்டு மூன்று பேர் வர தற்காலிகமாகப் பேச்சை நிறுத்திவிட்டு இருவருமே வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினர்.

    அடுத்தடுத்து வியாபாரம் சூடுபிடிக்க பரபரப்பாக செயல்பட்ட வேலாயுதம் அப்பா… என்ற அழைப்பிற்கு நிமிர்ந்தார்.

    நந்தா நின்றிருந்தான். பள்ளி சீருடையில் இருந்த அவனைப் பார்த்ததும் அவன் பள்ளியிலிருந்து பாதியிலேயே வந்திருப்பது புரிந்தது.

    என்ன? என்றார் கண்ணாலேயே. வியாபார நேரத்தில் பேசி நேரத்தை விரயம் செய்ய அவர் விரும்பவில்லை. தவிர காலையில் வீட்டில் அவனுடன் மல்லுக்கட்டியது வேறு மனம் முழுவதும் எரிச்சலை மண்டிக்கிடக்க வைத்திருந்தது.

    ஒரு நூறு ருபா வேணும்

    தெரியும் அவருக்கு.அவன் இப்படி எப்பவாவது கடைப்பக்கம் வந்தால் அது காசுக் கேட்கத்தான். மற்றபடி விடுமுறை நாட்களில் அம்மா அப்பாவுக்கு சோறு கொண்டுப் போய் கொடுத்துட்டு வாடா என்ற சொன்னால் கூட அப்பன் பட்டினிக்கிடந்து செத்தாலும் சாகட்டும் என இருப்பானேத் தவிர கடைப்பக்கம் வரமாட்டான்.

    எதுக்கு? வாடிக்கையாளருக்கு இளநீரை எடுத்து வெட்டிய அவருடைய கைகளில் மகன் மீதிருந்த ஆத்திரமும் தெரிந்தது.

    நோட்டு வாங்கனும். புழைய நோட்டு தீர்ந்துடுச்சு. நோட்டு இல்லைன்னா க்ளாஸ_க்குள்ள வர வேண்டாம்னு கணக்கு வாத்தியார் சொல்லிட்டார். அதான் ஒரு பீரியட் பர்மிசன் போட்டுட்டு வந்திருக்கேன்.

    இதுபோன்ற அவனுடையப் பேச்சை ஆரம்பத்தில் நம்பியவர்தான். ஆனால் இப்பொழுது நம்பிக்கையில்லை. சினிமாவுக்கோ சிகரெட்டுக்கோ…என்ன எழவுக்கோதான்… இந்த பணம்.

    ஆனாலும் முடியாது என்றோ… மேற்கொண்டு விசாரணை செய்யவோ அவருக்கு விருப்பம் இல்லை. விசாரணையில் இறங்கினால் காலையில் வீட்டில் ஏற்பட்ட ரகளைதான் இப்பொழுது வீதியில் ஏற்படும். ஒரு நூறு ரூபாய் காசுக்காக வியாபாரத்தைக் கெடுத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை.

    நூறு ரூபாய் தாளை எடுத்து நீட்டிவிட்டு வியாபாரத்தை கவனிக்கத் தொடங்கினார்.

    கூட்டம் குறையத் தொடங்கி யாரும் இல்லாத நேரத்தில் பழக்கடைக்கார் மறுபடியம் அவரிடம் பேச்சுக் கொடுத்தார்.

    உன் மவன் வந்த மாதிரி தெரிஞ்சது

    ஆமா…வந்தான். காசு வேணுமாம். ஏதோ நோட்டு வாங்கனும்னு பொய் வேற. சினிமாவுக்கோ சீட்டாடவோ! எவன் கண்டான்?

    நொந்துக் கொண்டார். உடலில் ஏற்பட்ட சோர்வோ மனதில் ஏற்பட்ட சோர்வோ அடுத்து வந்த நாட்களில் அவரை படுக்கையில் கிடத்தியது.

    இரண்டு நாட்கள் கழித்து நந்தா தன் வழக்கமான நாடகத்தை ஆரம்பித்தான்.

    அம்மா… எனக்கு ஐநூறு ரூபா பணம் வேணும். அம்மாவின் கழுத்தை நெரிக்காதக் குறையாகக் கேட்டான்.

    ஏன்டா… உனக்கு அறிவு கிறிவு ஏதாவது இருக்கா? ரெண்டுநாளா உங்கப்பன் உடம்புக்கு முடியாம படுத்துக் கிடக்கிறதைப் பார்த்துக்கிட்டுத்தானே இருக்கே. பத்து காசு இல்லாம அந்த மனுசனை ஆசுப்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப் போக முடியாம நான் அக்கம் பக்கம் எல்லார்க்கிட்டேயும் காசுக்கு கெஞ்சிக்கிட்டிருக்கேன். நீ…என்னடான்னா… திமிரா உனக்கு?

    ஆனாலும் அவன் விடவில்லை. இதப்பார்… எனக்கு என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது. காசு வேணும். ரவுடியைப் போல் மிரட்டினான்.

    சுருண்டுக்கிடந்த வேலாயுதத்திற்கு பக்கத்து பழக்கடைக்காரர் சொன்னது ஞாபகம் வந்தது. எழுந்து உட்கார்ந்தார். இருமலுடன் மகனை அழைத்தார்.

    இந்தாடா… இங்க வா

    வுந்து தெனவெட்டாக இடுப்பில் கைவைத்து நின்றான்.

    அதானேப் பார்த்தேன். எங்காவது காசு ஒளிச்சு வச்சிருப்பியே. கொடு என்றான். தன்னுடைய ரவுடித்தனத்திற்கு அப்பா பயந்துவிட்டார் என்று தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.

    என்கிட்ட காசு இருந்தா நான் ஏன்டா… இப்படி சுருண்டுக்கிடக்கறேன். இன்னேரம் ஆசுபத்திரிக்குப் போயிருக்க மாட்டேனா? உனக்குப் பணம்தானே வேணும். ரெண்டு நாளா தள்ளுவண்டி வாசல்லதான் நிக்குது. யாவாரத்துக்குப் போகலை. நீ அதை தள்ளிக்கிட்டுப் போய் காலேஜ் வாசல்ல வச்சு யாவாரம் பண்ணு. ஐநூறு ரூவா கிடைச்சதும் கொண்டாந்து வாசல்ல நிறுத்திட்டு நீ எங்க போகனுமோ போ. இதைவிட்டா வேற வழி இல்லை. நீ என்னை வெட்டிப் போட்டாக் கூட என்கிட்ட காசு இல்லை.

    உண்மை நிலவரம் அதுதான் என்பது தெரிந்துப் போனதில் அடாவடி பண்ணி எதுவும் ஆகப் போவதில்லை என்பது புரிந்தது. அப்பா தந்த ஐடியாவும் பிடித்திருந்தது.

    சரி என வாசலுக்கு வந்தான். இரண்டு நாளாக வியாபாரத்துக்குப் போகாத வண்டியிடம் சென்றான். சுற்றிக் கட்டியிருந்த தார்ப்பாயை எடுத்துப் போட்டுவிட்டு வண்டியைத் தள்ளிக் கொண்டு சென்றான்.

    வேலாயுதம் ஜன்னல் வழியாக அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தார்.

    ‘பழக்கடைக்கார் சொன்னதைப் போல் வியாபாரம் செய்யும் போது தன் தந்தை இப்படித்தானே சிரமம்படுகிறார் என்று உணர்ந்து திருந்துவானா? இல்லை

    Enjoying the preview?
    Page 1 of 1