Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oh My Butterfly
Oh My Butterfly
Oh My Butterfly
Ebook258 pages1 hour

Oh My Butterfly

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

டெல்லியில் தன்னை அடைத்து வைத்த இடத்திலிருந்து தப்பித்து தனது சொந்த ஊர் திருநெல்வேலிக்கு ரயில் பயணி மஹதி உதவியோடு வருகின்றாள் நாயகி ஆர்கலி. இங்கே அவள் தந்தை, தாய், மற்றும் கருவறையிலிருந்து கூடவே பிறந்த தங்கை ஆருத்ரா என்று யாவரும் வீட்டில் இல்லை. காணாமல் போனதற்கு காரணம் தன்வீர் என்பதும் அறிந்தவளே. விளைநிலங்களை அபகரித்து குளிர்பான தொழிலை துவங்க திட்டம் போட அதனை தடுத்த ஆர்கலி தந்தை. இதில் ஆர்கலி தன்வீரை அறைந்திட அதற்கான பழிவாங்கல் துவங்குகிறது.

நாயகன் வித்யுத் லாயராக இருக்க அவனிடம் அடைக்கலமாகி தன்வீரை பழிவாங்கி குடும்பத்தை கண்டறிந்து காப்பாறுவதே கதை.

Languageதமிழ்
Release dateOct 28, 2023
ISBN6580169410167
Oh My Butterfly

Read more from Praveena Thangaraj

Related to Oh My Butterfly

Related ebooks

Reviews for Oh My Butterfly

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oh My Butterfly - Praveena Thangaraj

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஓ மை பட்டர்பிளை

    (U R everthing 2 Me)

    Oh My Butterfly

    Author:

    பிரவீணா தங்கராஜ்

    Praveena Thangaraj

    For more books

    https://www.pustaka.co.in/home/author/praveena-thangaraj

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 22

    அத்தியாயம் - 23

    அத்தியாயம் - 24

    அத்தியாயம் - 25

    அத்தியாயம் - 1

    தன் தலை விண்ணென்ற வலி தர தாமரை முகம் சுணங்கி, கண்ணின் கருவிழிகள் உருள, நெற்றி சுருங்கி அனிச்சையாய் தலையை தொட்டுமெதுவாய் கண் விழித்தாள் ஆர்கலி.

    அவள் இருந்த இடம் ஓர் மருத்துவமனை. ஏசியறையில்தான் அனுமதிக்கப்பட்டதை உணர்ந்தாள்.

    தான் எப்படி இங்கு வந்தோம் என்று யோசித்தவள், இங்கு சேர்வதற்கு முன் தான் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்ததை காட்சியாய் ஓட்டி பார்த்தாள்.

    தன்னை அடைத்து வைத்த 46 வது அறையில் வேர்வை வடிய, சிகை கலைத்து ஓடி வந்தவள் ஒரு கட்டத்தில் தன்னை பிடிக்க வந்தவர்களின் கையில் அகப்படக் கூடாதென எதையும் யோசிக்காது அங்கிருந்து குதித்துவிட, ஆர்கலி உயிர் தரையில் வந்து வெடித்து இறக்க வேண்டியது. அவள் அதிர்ஷ்டமா? அல்லது அவளுக்கு பூமியில் இன்னமும் பணியிருக்க காலன் உயிரை பறிக்கவில்லையா? என்னவோ? அப்பொழுது தான் அந்த ஹோட்டலின் சொகுசு பெட் ஒன்று புத்தம் புதிதாக வந்திறங்க, அதில் விழுந்து புரண்டு தரையில் உருண்டாள். அதில் ஆங்காங்கே அடிப்பட்டு இரத்தம் சொட்ட மயங்கி சரிந்தாள்.

    அதுவரை நினைவு வர தான் உயிர் பிழைத்ததை எண்ணி எரிச்சல் அடைந்தாள்.

    பாத்ரூமில் யாரோ விசிலடித்தபடி உள்ளே இருக்கும் ஒசை கேட்டதும், தன் கையிலிருக்கும் ட்ரிப்ஸ் பிடுங்கி எறிந்து, சத்தமின்றி காலை கீழே வைத்தாள்.

    கதவை சத்தமின்றி வெளியே பூட்டினாள். வெளியே போக எட்டி பார்க்க, தன்னை அடைத்து வைத்த பொழுது காவலுக்கு இருந்த அதே தடியன் என்றதும் அறையை சுற்றி முற்றி பார்த்து ஜன்னலை திறந்தாள்.

    கொஞ்சம் கடினம் தான் ஆனால் மழை உள்ளே வராமல் பாதுகாத்த ஸ்லாபில் இறங்கி கீழே குதித்தால் நிச்சயம் வெளியே மருத்துவமனையை விட்டு ரோட்டை அடையலாம்.

    நொடியும் தாமதிக்காது இறங்கி ஸ்லாபில் குதித்தாள்.

    ஏற்கனவே கால் பிசகி இருக்கும்போல... தற்போது கூடுதல் வலி... சாதாரண வலி அல்ல அது. உயிர் போகும் வலி தான். இருந்தும் இங்கிருந்து தப்பிக்க எண்ணி உயிரையே துச்சமாக எண்ணியவளுக்கு இந்த வலி பெரிதாகப்படவில்லை போலும்.

    இத்தனை வலியை பொறுத்துக்கொண்டு உயிரையே பணயவைக்கும் அவளை பாதுகாக்க காவலுக்கு இரண்டு பேரா இருப்பார்கள். அந்த மருத்துவமனையில் வெளியே சிகரெட்டை ஊதி தள்ளிய ஒருவன் ஆர்கலியை கண்டு, சிகரெட்டை கீழே தூக்கி போட்டு அவளை பின் தொடர ஓடினான்.

    தன்னை ஒருவன் பார்த்து விட்டான் என்பதை அறிந்து ஆர்கலி தன் கால் வலியை பொருட்படுத்தாது ஓட துவங்கினாள்.

    சிகரெட் ஊதியவன் போனில் டேய் நாய்களா அங்க யாரை காவல் காத்துட்டு இருக்கிங்க. அந்த பொண்ணு இங்க தப்பிச்சு ஓடுது. என்று துரத்தியபடி கத்தினான்.

    எப்படியோ தப்பிச்சிட்டா அண்ணா இதோ வர்றோம் எந்தப் பக்கம் ஓடறா? என்று பயந்து கேட்க,

    ஹாஸ்பிடலுக்கு எதிரா டெல்லி மெயின் ரோட்டுக்கு போயிட்டா பிடிக்க முடியாது. சீக்கரம் வாங்க டா. என்று விடாது துரத்தியபடி, சோரி கர்னா சோரி கர்னா என்று இந்தியில் ‘திருடி திருடி பிடிங்க பிடிங்க’ என்று கத்தவும் எதிரே வந்த ஒருவன் மீது ஆர்கலி மோதவும் அவளை கைப்பற்றி நிறுத்த செய்தான்.

    ஒரு நொடிக்கும் குறைவாக அவனை கண்டவள் மூஜே சோர் கீ தாரே மட் தேக்கோ என்று ‘என்னை பார்த்தா திருடி மாதிரியான தெரியுது’ சொல்லவும் அவன் அவளை கவனிக்க ஆரம்பித்தான்.

    ஆர்கலி முகத்தில் தன்னை மறந்து அளவெடுத்து இருந்தவனின் கை நழுவி மெல்லிய பிடியாக இருக்க ஆர்கலி கையை உருவ அவன் மீண்டும் பிடிக்க, இம்முறை கையை உதறி அவன் கன்னத்தில் ‘பளார்’ரென அறைந்தாள்.

    ஒரு பெண்ணிடம் அடிவாங்கிய உணர்வில் நிகழ்விற்கு வந்தவன் அவள் ஓடுவதை அறிந்துக் குழம்பினான்.

    அவளை பார்த்தால் திருடியாக தோன்றவில்லை தவறு இவர்கள் பக்கமாக இருக்கலாம் என்று துரத்தியவனை பிடித்து நிறுத்த, அவனோ இரண்டாவது சந்துல ஓடறா ரோட் சிக்னல் ரீச்சாவதற்குள் பிடிங்க என்று சொல்ல, என்ன பிரச்சனை கேட்பதற்குள் அவனும் எதிரே நின்றவனை தட்டி விட்டு வேகமெடுத்து மறைந்தான்.

    கன்னத்தை பிடித்தபடி அவளை தேடுவோமா? வேண்டாமா? என்ற யோசனையில் அவன் போன் அடிக்க அதில் பேசியபடி இடத்தை திரும்பி திரும்பி பார்த்துச் சென்றான்.

    ஆர்கலியோ மெயின் ரோட் என்றால் தேட வரலாம் என்று அங்கிருந்த ஆட்டோவில் ஸ்டேஷன் போங்க என்று கேட்டு ஏறி அமர்ந்தாள்.

    ஸ்டேஷன் அருகே வந்ததும் தன் காதில் இருந்த தோடை கழட்டி கையில் கொடுத்து ஆப்கே பௌகத் பௌகத் தன்னியவாட் என்று மிக்க நன்றியை தெரிவித்து அந்த ஆட்டோக்காரனிடம் பதிலை கூட கேளாமல் ஓடினாள். அங்கே சென்னை செல்லும் ரயில் வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

    நெஞ்சு கூட்டில் கையை வைத்து யாரேனும் துரத்துக்கின்றனரா என்று தேடினாள். இல்லை என்றதும் பெருமூச்சை விடுத்து சாய்ந்தமர்ந்து தன்னினைவுகளை எண்ணியவள் சில காலம் முன் தன் குடும்பத்தில் பட்டாம்பூச்சியாக தானும் தங்கையும் வலம் வந்த நிகழ்வில் அவர்களை பார்க்க வேண்டுமென்ற ஆவல் அதிகரிக்க... அம்மா, அப்பா, தங்கை தன்னை தேடியிருப்பார்களோ என்று எண்ண எண்ண கண்ணீர் ஊற்று கன்னத்தில் கரைபுரள அழுதாள்.

    பதினெந்து நிமிட பயணம் அருகே இருந்த கல்லூரி பெண் கியா ஹூவா என்ன என்று கேட்க ஒன்றுமில்லை என்று தலை மட்டும் அசைத்து பதிலளித்தாள் ஆர்கலி.

    அந்த பெண் இந்தி அதிகளவு தெரியாத காரணத்தால் அதற்குமேல் கேட்கவில்லை. ஆனால் சப்பாத்தியை எடுத்து நீட்ட, ஆர்கலி மறுக்க இயலாது, பசி அவள் வயிற்றை பிழிய வாங்கினாள். அந்த பெண் குழம்பை தருவதற்குள் இரண்டை உண்டு முடித்தாள்.

    ஏதோ பிரச்சனைபோல என்று அந்த கல்லூரி வயது பெண் வேறெதும் கேட்கவில்லை. ஆர்கலி இருக்கும் நிலைக்கு அவளும் யாரிடமும் பகிரும் சக்தியின்றி இருந்தாள். அங்கிருந்து தப்பித்ததே பெரிய அதிசயம். அது ஆர்கலியின் எண்ணத்தின் மனவலிமையால் மட்டுமே முயன்றதாக இருக்கலாம்.

    அதீத அலைச்சலோ, அச்சமோ, மூன்று நாளாக பசி, உறக்கமின்றி இருந்ததாலோ என்னவோ கண்ணயர்ந்தாள்.

    அந்த கல்லூரி பெண் தன் ஷால்வையை ஆர்கலிக்கு மூடி விட அதன் கதகதப்பில் தன்னை குறுக்கிக் கொண்டு உறங்கினாள்.

    இங்கு வித்யுத் தனதுமேல் வந்து மோதியவளை எண்ணி அவளுக்கு என்னவாகியிருக்கும் எதற்கு அப்படி ஓடினாள்?

    சிகை கற்றைகள் வேர்வையில் நெற்றியில் ஒட்டி, அவள் தன்மீது பட்டாம்பூச்சியாக வந்து மோதி என்ன ஏது என்று யோசிப்பதற்குள் பறந்து சென்றதை இதோ இந்த நான்கு மணி நேரத்தில் நாலாயிரம் முறை எண்ணி பார்த்து விட்டான்.

    துரத்துபவரை எண்ணிய அவள் அச்சம் கண்டு, அவளை தேடி கண்டறிந்து எப்படி களைய எண்ணியவன் உள்ளம். பெயர் தெரியாது வேறெந்த டீடெய்லும் அறியாது எப்படி தேட என்று மனசாட்சி உண்மையை பறைச்சாற்றவும் குழம்பி தவித்தான்.

    ஒரு வாரம் சென்றால் ஒரு முறை பார்த்தவளை மறக்க வாய்ப்பு உண்டு. மேலும் தன்னிருப்பிடம் சென்றால் பணியை கவனிக்கவே நேரம் கூடலாம். பட்டாம்பூச்சியின் எண்ணங்கள் பறந்திட வாய்ப்பு உண்டென்று கடந்தான்.

    டிக்கெட் பரிசோதகர் வந்து ஆர்கலியை எழுப்ப, தன் கழுத்தில் இருந்த செயினை கழட்டி கொடுக்க அவரோ பயந்து இந்தியில் அதெல்லாம் வாங்க இயலாதென்று மறுக்க, தன்னிடம் பணம் இல்லை என்பதை ஆர்கலி கூற கொஞ்சம் புரியாத இந்தி, ஆர்கலி செய்கையால் பணம் இல்லாமல் டிக்கெட் எடுக்காமல் வந்து இருப்பதை எதிரே இருந்த அப்பெண்ணுக்கு தெளிவாக புரிய வைத்திட அவளோ தன் பணத்தை நீட்டி பரிசோதகரிடம் ஆர்கலிக்கு டிக்கெட் எடுத்து அவளிடம் நீட்டினாள்.

    அதன் பின் அவர் நகர, நீங்க தமிழா? என்றதும் ஆர்கலி ஆமா என்று முத்து போல வார்த்தை விடுத்தாள்.

    என் பெயர் மஹதி. என்று கையை நீட்டினாள்.

    நான் ஆர்கலி. என்று சிநேகமாக புன்னகை சிந்தினாலும் அக்கம் பக்கமே யாரோ பார்த்திடுவார்கள் என்ற எண்ணமே சுழயிருந்தாள்.

    ஆர்கலி? அப்படின்னா? என்று அர்த்தம் அறியும் பொருட்டும், கேட்டறியா பெயர் என்ற ஆர்வமும் ஏற்பட்டு மஹதி கேட்டாள்.

    ஆர்கலின்னா ஆர்பரிக்கும் கடல் என்று அர்த்தம் என்றவள் வெகு சாதாரணமாக அர்த்தம் கூறிவிட்டு அடுத்த பெட்டியை முன்பெட்டியையும் அளவிட்டாள்.

    ஏதாவது பிரச்சனையா? என்றாள் மஹதி.

    இல்லை. என்றவள் வாய் வார்த்தை அப்பட்டமான பொய் என்பது மஹதி அறிந்தாலும் பதில் கேள்வி கேட்டு குடையவில்லை.

    உங்க தூக்கம் கெட்டு போச்சு. இப்ப கண்டினியூ பண்ணி தூங்குங்க. தூங்கி எழுந்தா மச் பெட்டரா இருக்கும் மஹதி கூறவும் யோசிக்காமல் ஷால்வையை போற்றி உறங்க போனவள் இது எப்படி வந்தது என்பது போல குழம்பினாள்.

    என்னுடயது தான். நீங்க ஷிவரா இருந்த மாதிரி தோன்றியது அதான் போர்த்தி விட்டேன்.

    தேங்க்ஸ் மஹதி என்று உறங்க சென்றாள்.

    படுத்த சில மணித்துளியிலே உறங்கி போனாள். மஹதி புத்தகம் வாசிக்க படிக்கத் துவங்கினாள்.

    ஆர்கலி எழுந்தவள் தன்னை யாரும் பின் தொடரவில்லை என்பதை உறுதியாக அறிந்தபின் டிரெயின் கண்ணாடியை கண்டாள்.

    தன் முகமா இது. கழிவறை நோக்கி சென்றவள் அங்கே முகத்தை கழுவி கைகால் அலம்பி தன் சுடிதார் டாப்பிலே துடைத்தாள்.

    தன்னிருக்கை வந்து அமர மஹதி ஒரு டவலை நீட்டினாள்.

    கூடவே சீப்பை எடுத்து நீட்ட, ஆர்கலி தயங்கி டவலை வாங்கி துடைத்து நன்றி கூறி சீப்பை கொண்டு தலையை பின்னி முடித்தாள். எப்படியும் இரண்டு நாள் இதே இரயிலில் பயணம் செய்ய வேண்டுமே. இதே நிலை சகிக்காது.

    ரொம்ப நன்றி. எனக்கு என்ன சொல்லறது என்றே தெரியலை. பட் வாழ்க்கையில் மறக்க மாட்டேன். என்றாள் ஆர்கலி.

    இந்தாங்க தக்காளி சாதம். சாப்பிடுங்க. எப்படியும் சாப்பிடாமல் இருக்க முடியுமா என்று கையை நீட்டினாள் மஹதி.

    ஆர்கலி மனம் கொடுத்தே பழக்கப்பட்ட கை என்பதால் வாங்க யோசித்தது. காலையில் எப்படி வாங்கி உண்டோம் என்ற கேள்வி தற்போது வந்து தாக்கியது. தன்னிலை இப்படியா ஆக வேண்டும் என்று எண்ணம் தலை கவிழ்த்தது.

    சாரி வாங்கிக்கறதுல தப்பில்லை. இது ஒரு சூழ்நிலை தான். உங்களை பார்த்தா நல்லா வாழ்ந்த குடும்பம் என்பது நல்லவே தெரியுது. அப்ப வாங்கிட்டு இப்ப வாங்க தயங்குவதிலேயே தெரியுது. ஆனா ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி தானே. நீங்க நார்மல் லைப் வந்ததும் சரியாகிடும் என்று ஆர்கலி கையில் வைத்திட, நிமிர்ந்தவள் ஆம் என்பதாய் அசைத்து விட கண்ணீர் முத்துக்கள் மஹதி கையில் பட்டு தெறித்தது.

    நார்மல் வாழ்க்கை அது மீண்டும் கிடைக்குமா? என்ற பெரிய கேள்வி மனதை உலுக்க சாப்பிட்டாள்.

    வித்யுத்தால் சாப்பிட பின்னரும் காலையில் பார்த்தவளை எண்ணி யோசித்தான். அவ அந்த ஆட்களுடன் மாட்டி இருப்பாளா? அவளுக்கு என்ன ஆகியிருக்கும்? அவ தப்பித்து இருக்கணும். நான் எப்படி சும்மா விட்டேன். அவ அடிச்சதில் ஸ்டன் ஆனது தப்போ? மறுபடியும் அந்தப் பக்கமா போய் பார்க்கலாமா? என்றவன் எண்ணமோ பாடய் படுத்தறாளே... நெஞ்சில் கைவைத்து கேட்க அவளுக்கு ஒன்றுமில்லை என்பதாய் மனம் பதில் தரவும் நிம்மதியடைந்தான். வித்யுத்திற்கு இந்த மனம் கூறும் சொல் என்றும் நம்பிக்கை தரும். இன்றும் அதேபோல தன் மனதை நம்பினான்.

    அத்தியாயம் - 2

    மஹதி உறங்க தயாராக, எல்லாம் எடுத்து வைத்து நிமிர ஜன்னலில் பார்வை பதித்த ஆர்கலியை உலுக்கினாள்.

    சாரி... சுற்றி சுற்றி அதே நினைவலைகள். உங்க தூக்கத்தை கெடுத்துட்டு உட்கார்ந்து இருக்கேன் என்று படுக்க போக,

    அப்படியெல்லாம் இல்லை சிஸ். நீங்க ஏதோ கஷ்டத்துல இருக்கிங்க. அதான்... என்னாச்சு சிஸ்... கழுத்துல நகையை கழட்டி கொடுக்கறிங்க. புரியலை... காலையில் சாப்பாட்டை வெடுக்குன்னு வாங்கி கடகடன்னு குழம்பை எடுக்கறதுக்குள்ள சாப்பிட்டிங்க. மதியம் சாப்பாட்டை வாங்க தயங்கி நின்று வேதனைபட்டிங்க. ஏறியதில் இருந்து ஒரே அழுகை... கண்ணீர் என்று மஹதி நிஜமாகவே ஆர்கலியின் நடவடிக்கை புரியாது கேட்க செய்தாள்.

    சொன்னா நேரமெடுக்கும் மஹதி. உங்க தூக்கம் கெடும். ஏற்கனவே உங்க சாப்பாட்டை சரியா உங்களை சாப்பிட விடாம கெடுத்துட்டேன். இதுல தூக்கத்தை வேறயா? என்று விரக்தியாக பதில் தந்தாள்.

    நோ நோ... சம்திங் என்னவோ இருக்கு. இல்லைனா இப்படி புதிரா பிகேவ் பண்ணுவீங்களா? என்று சொல்லவும்,

    ஆமா மஹதி... புதிர் இருக்கு. என் வாழ்வில் இந்த ஒரு வாரத்தில் வித்தியாசமான அனுபவங்கள்தான். என்று தன்னை மறந்து பேசினாள்.

    நீங்க எந்தவூர்? சென்னையா...? நான் சென்னை... தொன்மை மொழி தமிழை ஆராய்ந்து கொண்டு இருக்கேன். டெல்லியில் என் ஆய்வை கொடுத்துட்டு ரிட்டன் வர்றேன். ப்ரீ டைம் கதை எழுதறேன். உங்களை பற்றி சொல்லுங்க. இன்ட்ரஸ்டிங்கா இருந்தா நாவலா எழுதிடலாம். என்று நிலைமையை சகஜமாக பேசவும், அதற்கு ஆர்கலி மனம் சற்றே இசைந்திருக்க வேண்டும். மெல்லிய முறுவல் இதழோரத்தில் சிந்தினாள்.

    "நான் ஆர்கலி... அக்ரிகல்சர் முடித்திருக்கேன். மண் வளத்தை பற்றி ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு செடி, கொடி, மரம் வகையை நட தெரியும்.

    அப்பா வினாயகம்... அம்மா நாச்சியா... ஒரே தங்கை ஆருத்ரா. நானும் ஆருத்ராவும் டிவின்ஸ். என்னை கண்ணாடியில் பார்க்கற மாதிரி இருப்பா. சின்ன வித்தியாசம் கூட இருக்காது. இல்லை... சின்ன வித்தியாசம் இருக்கு. என் இடது தோளில் சின்னதா மச்சம் இருக்கும். அம்மா சின்ன வயதில் அதை வைத்து தான் கண்டுபிடிப்பாங்க.

    திருநெல்வேலியில் ஒரு கிராமம். நல்ல வசதி... தோப்பு பண்ணை, வயக்காடு... இப்படி சந்தோஷமா பட்டாம் பூச்சியா ஜாலியா வாழ்ந்துட்டு இருந்தோம்.

    அப்பா ரிட்டேயர் டீச்சர். அம்மா வீட்டு இல்லத்தரசி தான் ஆனா அந்த காலத்து பியூசி. நல்ல விவரம்.

    பொதுவா வாத்தியார் பசங்க மக்குன்னு சொல்லுவாங்க. ஆனா நானும் ஆருத்ராவும் படிப்பில் எண்பதுக்கு கீழ எடுக்கவே மாட்டோம். அந்தளவு படிப்பில் நல்ல ஆர்வம், அம்மா கண்டிப்பு இருக்கும்.

    அப்பா பேரை எங்கையும் சிதைத்தது இல்லை. என்ன நான் தான் கொஞ்சம் திமிர் பிடிச்சவ. ஏதாவதுன்னா முகத்துக்கு நேரா எடுத்தெறிந்து பேசிடுவேன். இப்ப அதான் பிரச்சனை" என்று ஆர்கலி சொல்ல,

    நீங்க எப்படி இங்க வந்திங்க? மஹதி கன்னத்தில் கை வைத்து கதை கேட்கும் தோரணையில் இருந்திட கேட்டு விட்டாள்.

    விதி... அது தானே மனிதனின் தலையெழுத்தை மாற்றுது மஹதி. அப்படி தான் என் வாழ்விலும் மாற்றிடுச்சு. என்றவள் அவளுக்கு நடந்தவையை சொல்ல சொல்ல முதலில் அசுவாரசியமாக கேட்ட மஹதி பிறகு சீரியஸாக மாறிப்போனாள்.

    கடைசியில் டெல்லி வந்து இரண்டு நாட்கள் நடந்த களோபரத்தை சொல்லி முடிக்க மஹதிக்கு வார்த்தையே வரவில்லை.

    "ஆர்கலி... நீ சாதரண பெண் இல்லை. தைரியசாலி... அதனால மட்டுமே நீ தப்பிச்சு இருக்க, வேறயாராயிருந்தா கண்டிப்பா தப்பிச்சு வந்திருப்பாங்களா என்றதே முடியாத காரியம்.

    இப்ப என்ன செய்ய போற ஆர்கலி" என்று மஹதி கேட்டாள்.

    "வீட்டுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1