Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Marma Novel Nanada
Marma Novel Nanada
Marma Novel Nanada
Ebook240 pages1 hour

Marma Novel Nanada

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புதிதாக வாங்கிய வீட்டிற்கு ஹரிஷ் தன் பெற்றோருடன் தாத்தாவோடு குடிபுகுகின்றான். அங்கே அமானுஷ்யம் இருப்பதாக அவனுக்குள் தோன்ற, ஒரு கட்டத்தில் அந்த இடத்தில் இருப்பது இன்விசிபிள் பெண் யாஷிதா என்று தெரியவருகிறது. அந்த பெண் உருவம் இல்லாமல் எப்படி மாயமாய் அவ்விடம் இருக்கின்றால்? எதனால் அப்படி ஓரு நிலை? பழைய நிலைக்கு மாறுவாளா? என்று நகைச்சுவை கலந்த பேண்டஸி முறையில் கதையை அறிவோம்.

Languageதமிழ்
Release dateFeb 3, 2024
ISBN6580169410691
Marma Novel Nanada

Read more from Praveena Thangaraj

Related to Marma Novel Nanada

Related ebooks

Related categories

Reviews for Marma Novel Nanada

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Marma Novel Nanada - Praveena Thangaraj

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மர்ம நாவல் நானடா

    Marma Novel Nanada

    Author:

    பிரவீணா தங்கராஜ்

    Praveena Thangaraj

    For more books

    https://www.pustaka.co.in/home/author/praveena-thangaraj

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 22

    அத்தியாயம் - 23

    அத்தியாயம் - 1

    அவன் இந்த உலகத்தில் இல்லை. ஏதோவொரு தனிவுலகில் சஞ்சரித்து கிடந்தான். சரியாக சொல்லப் போனால் இசையெனும் அரக்கனிடம் மாட்டிக் கொண்டிருந்தான்.

    அவனருகே இருந்தவர் மூன்று முறை மாயவுலகில் சஞ்சரித்தவனை கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்து அவர் தலையில் அடித்து கொண்டு அழைத்தார்.

    இனிமேலும் அந்த மாயத்தில் கட்டுண்டவனை உலுக்காவிட்டால் அவருக்கு தான் சிரமம் என்று கால்களுக்கு கீழே இருந்ததை அழுத்தினார்.

    இந்த அதிர்வு எல்லாம் அவன் பார்க்காததா?

    டெம்போவில் டிரைவரின் அருகே அமர்ந்து காதில் ப்ளூ டூத்தில் பாடல் கேட்டுக் கொண்டு, எதிரே தன்னை கடந்து செல்லும் நடைபாதை பெண்களை சைட் அடித்து பாடலை முனுமுனுத்தான் ஹரிஷ்.

    ஹரிஷ் வயது இருபத்தி ஐந்து. இந்த வேகாத வெயிலில், ஊர் சுற்றி திரிந்தாலும் பிஸ்கேட் கருகிய நிறத்திற்கு மாறாமல், நல்ல சந்தன நிறத்தில் இருந்தான்.

    படிப்பு அரியர் வைத்து அரியர் வைத்து, எப்படியோ பி.இ மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங் முடித்திருந்தான். வேலைக்கென்று இதுவரை போய் பழக்கமில்லாதவன். இன்டர்வியூவிலேயே வாய் கொழுப்பு ஜாஸ்தியாகி விரட்டப்பட்டவன்

    அவனருகே இருந்த டிரைவரோ தம்பி பன்னிரெண்டாவது தெருவா? பதினொன்னாவது தெருவானு சொல்லுப்பா? என்று மூன்றாவது முறையாக கேட்க,

    "ஹேய் பாக்கு வெத்தல

    மாத்தி முடிச்சு

    பையன் வந்தாச்சி.

    ஹேய் பூவத்தொடுத்து

    சேல மடிச்சு

    பொண்ணு வந்தாச்சி

    கண்டத பேசி…

    டைம் வேஸ்ட் பண்ணாத

    பையன் தங்கோம்

    மிஸ்சு பண்ணாத" என்று பாடியவனின் கையை தட்டினார்.

    முட்டை வடிவத்திலான ஏர்பட்ஸ் பெட்டி நழுவியது. அந்த ஏர்பட்ஸ் பாக்ஸ் மூடிடவும் பாடல் கேட்க தடங்கலாகி பாட்டு நிறுத்தம் பெற்றது. அவனது செவிக்கு இனிமை சேர்க்கும் அந்த மாயவுலகம் தடைப்பட்டது.

    அதன் காரணமாக ஹரிஷ் என்ன அண்ணா? என்று எரிந்து விழுந்தான்.

    பதினொன்னாவது தெருவா பன்னிரெண்டாவது தெருவா கேட்கறேன். தலையை தலையை ஆட்டி, பாடறேன் என்ற பெயர்ல கத்தறியே தவிர, நான் கத்தறதை காதுல வாங்கறியா. என்று அதிகாலை என்றாலும் கத்திரி வெயிலின் காரணமாக காலையிலேயே புழுக்கம் உணர்ந்து கத்தினார்.

    டிரைவருக்கு ஹரிஷ் ஏறியதிலிருந்து செய்த சேட்டைகள் அதிகமாக தெரிந்தது.

    பதிமூனாவது தெரு அண்ணா. வண்டில அடியெடுத்து வைக்காறப்பவே சொல்லிட்டு தான் ஏறினேன். அப்ப தலையை தலையை ஆட்டிட்டு இப்ப கேட்டா என்ன அர்த்தம். இதுல ஏர்பட்ஸை வேற தட்டிவிட்டுட்டிங்க. என்று அவர் மீது சாடினான். கீழே விழுந்தவை காலுக்கு அடியே இருக்க எடுத்தான்.

    "நல்லா சொன்ன போ. அப்பவே கேட்டேன். மூன்று முறை வண்டியை திருப்பணும்னு தான் தலைப்பாடா கேட்டேன். நீ என்னடானா ‘கண்டதை பேசி டைம் வேஸ்ட் பண்ணாத’னு பாடறேன்ற பேர்ல கத்தினியே தவிர, ஒழுங்கா சொன்னியா? இப்ப எனக்கு டைம் வேஸ்ட் பண்ண வச்சிட்ட, ஏதோ அதிகாலையில ரொம்ப குயிக்கா வர்றதாலயும், இப்ப ஸ்கூல் லீவு என்பதாலயும் போக்குவரத்து பரவாயில்லை.

    இல்லைனா இப்படி வண்டியை நினைச்ச நேரம் திருப்பறது கஷ்டம். இதுல காலையிலயே புழுக்கமா இருக்கு." என்று டிரைவர் எரித்து விழுந்தார் பன்னிரெண்டாவது தெருவிலிருந்து வண்டியை திரும்பி பதிமூன்றாவதற்கு விட்டார்.

    ஆமா... அப்படியே பெரிய கண்டெய்னரு... பெத்த பெரிய வண்டியை ஓட்டி திருப்பறவர். இந்த சின்ன வண்டிதை ரிவர்ஸில் எடுத்து திருப்ப இந்த அக்கப்போரா? இந்த பச்சை பில்டிங்ல நிறுத்துங்க என்று நெயாண்டி செய்தான்.

    டிரைவர் ஹரிஷை மேலும் கீழும் பார்த்து தம்பி என்ன வேலை பார்க்கறிங்க? என்று கேட்ட தோணியே ஹரிஷுக்கு புரிய ஆரம்பித்தது.

    சும்மா தான் இருக்கேன். இப்ப என்ன? வேலை போட்டு தரப்போறியா? என்று சண்டைக்கு சென்றான்.

    டிரைவரோ நக்கலாய் சிரித்து "அதான் வாய் கிழிய பேசறிங்க. உங்களை மாதிரி ஆளுக்கு வேலை போட்டு கொடுத்து என் உசுரு சீக்கிரம் போகவா?

    வண்டிலயிருந்து இறங்கி பொருளை இறக்கி வச்சிக்கோ. ஏதோ ஹெல்ப் பண்ணலாம்னு இருந்தேன். இந்த வாய் இருக்கறவனுக்கு இனி உதவறதா இல்லை. மணி பதினொன்று வரை தான் வாடகை பேசியிருக்கு." என்று நினைவுப்படுத்தி விட்டு டிரைவர் இருக்கையில் தோதுவாக சாய்ந்தமர்ந்தார்.

    அங்க என்னடா வெட்டியா பேசிட்டு இருக்க? என்று ஹரிஷ் தாத்தா சுப்ரமணியம் அதட்டவும், இறங்கி வந்தான்.

    கையில் வாக்கிங் ஸ்டிக், பல்செட் போட்டதால் அமைந்த சீரான பற்கள், தலை முழுக்க வெள்ளை முடி, தொலதொல கால்சட்டையும் இளைஞர்கள் அணியும் டீஷர்ட் பனியனுமாய் சுப்ரமணியம் வந்தார்.

    பெரும்பாலும் இவர் கொடுக்கும் செல்லம் தான் அவனை இந்தளவு தறுதலையாக மாற்றியது என்பது ஹரிஷை பெற்றெடுத்த, பாக்கியம் கொண்டவர்களின் கருத்து.

    தற்போது வீடு மாற்றம் கொண்டதால் ஹரிஷின் தந்தை தனஞ்செயன் மற்றும் அண்ணன் அஜித் இருவரும் பழைய வீட்டில் மிச்ச மீதி செட்டில் செய்து அந்த வீட்டை தூய்மைப்படுத்தி பழைய ஹவுஸ் ஓனரிடம் சாவியை திருப்பி தந்து ஒப்படைக்க காத்திருந்தனர்.

    அஜித்திற்கு தாய் தந்தையர் பார்த்து முடித்த மனைவி கனிகாவும், மகன் ஆரன் என்ற ஏழு வயது மகனும் உண்டு. அஜித்-கனிகா இருவரும் தனிக்குடும்பமாக தான் இருக்கின்றனர். இனி எப்படியோ?

    கனிகாவை பொறுத்தவரை மகன் ஆரனின் படிப்பும் கணவரின் வேலைக்கும், கூடுதலாய் தனக்கு தனிமையும் தேவைப்பட கூட்டு குடும்பத்திற்கு தலையசைப்பது கேள்வியே.

    ஆரனிற்கு கையெழுத்து சரியாக எழுத வராது. அதனால் விடுமுறை காலத்தில் ஹாண்ட்ரைட்டிங் கிளாஸிற்கு இரண்டு மணி அளவு காலையில் செல்வதால் ஆரன் கனிகா இருவரும் அவர்கள் வீட்டிலிருந்து சென்றுவிட்டு கிளாஸ் முடித்து நேராக இந்த வீட்டிற்கு வருவதாக உரைத்தனர்.

    அதனால் இங்கே புது வீட்டில் ஹரிஷ் தாய் காஞ்சனா மற்றும் தாத்தா சுப்ரமணியம் இருவர் மட்டுமே அதிகாலையில் பால்காய்ச்சினார்.

    குடும்பத்தோடு பால்காய்ச்சி கொண்டாட வேண்டியது.

    ஏனென்றால் இதுவரை இருந்தது எல்லாம் வாடகை வீடு. இது இவர்கள் சொந்தமாக வாங்கியது. என்ன புதுவீடு அல்ல பழைய வீடு.

    அந்தகாலத்தில் அடித்த வர்ணம் இன்னமும் பளபளப்பாக இருந்தது. ஏதோ அரண்மனையில் எல்லாம் காலத்திற்கு அழியாத வகையில் இயற்கை ரசாயணத்தை கலந்து அடித்ததாக இந்த வீடும் இருந்தது.

    கிறுக்கல்கள் அழுக்குகள் ஏதுமின்றி வீட்டை கழுவியதிலேயே மின்னியதால் பெயிண்ட் அடிக்கும் எண்ணம் தனஞ்செயனுக்கு இல்லை.

    அவருக்கு இந்த பழைய வீட்டை வாங்கவே விருப்பமில்லை. ஏதோ தந்தை கண் மூடும் முன் ‘சொந்தவீடு இல்லையே’ என்ற கவலைக்கும், இந்த வீடு சுப்ரமணியத்தின் தோழனின் பூர்வீக வீடு. அவர் படுத்த படுக்கையில் இருந்ததால் நண்பனை காண சென்றவர் சுப்ரமணியத்திடமே வாங்கிக் கொள்ள கூறி வற்புறுத்தி பாதி விலைக்கு கொடுத்தார்.

    காஞ்சனாவோ பெரியவனுக்கு திருமணம் முடிந்து குழந்தை உண்டு. சின்னவனுக்கு வேலை கிடைக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் சொந்த வீடு என்ற பெருமையாவது இருக்க மாமனாரோடு சேர்ந்து கணவரை இந்த வீட்டை வாங்க சம்மதிக்க வைத்தார்.

    ஹரிஷ் டெம்போவிலிருந்த பொருட்களை எல்லாம் இறக்கி வீட்டில் ஹாலில் அடுக்கி வைத்தான்.

    சோபா கட்டில் வரவும் டிரைவரை துணைக்கு கூப்பிட எண்ணினான்.

    ஏற்கனவே தாத்தா அன்னையிடம் டீ போட கூறி, அதனை தட்டில் வைத்து கொடுத்து டிரைவரை சமாதானமாக்கி தோழமை பிடித்துவிட்டார். அதனால் உங்களுக்காக பார்க்கறேன் தாத்தா என்று டிரைவர் சோபா, கட்டில், மெத்தை, டிரஸிங் டேபிள், உணவு மேஜை என்று பெரிய பொருட்களை எடுக்க ஹரிஷோடு வேண்டா வெறுப்பாய் உதவினார்.

    அனைத்தும் எடுத்து வைத்து பணத்தை கொடுத்து ஜில்லென்ற தர்பீஸ் சர்பத்தை காஞ்சனா கொடுக்க அதனை தொண்டையில் நனைத்தார் டிரைவர்.

    சொல்லறேன்னு தப்பா நினைக்காதிங்க தாத்தா... இப்ப இருக்கற பசங்க ஏதோ பொழுது போக்கை எல்லாம் பெரிய விஷயமா நினைச்சிடறாங்க. நமக்கு என்ன தேவையான விஷயமோ, அதுல விளையாட்டா இருக்காங்க. உங்க பேரனும் அந்த ரகத்துல ஒருத்தன். கொஞ்சம் பார்த்து புத்திமதி சொல்லுங்க வர்றேன் தாத்தா. வர்றேன் மா என்று வண்டியை வாடகைக்கு பேசிய பணத்தையும் மீறி பெற்றதால் மகிழ்ச்சியாக சென்றார்.

    அவர் சென்ற அடுத்த நொடி, ரோட்டுல போறவர்றவன் கூட குறை சொல்லற அளவுக்கு இருக்க. ஒரு மணி நேரம் இருக்குமா டா. அவர் உன்னோட பழைய வீட்லயிருந்து இங்க வந்து சேர்ந்தது. அவருக்கு தெரியுது. நீ பொறுப்புயில்லாம சுத்தறேன்னு. ஏன்டா அடுத்தவங்க சொல்லற மாதிரி இருக்க.? என்று காஞ்சனா பெற்ற மனதில் சின்ன மகனின் பொறுப்பற்ற குணத்தை எண்ணி கலங்கினார்.

    அதெல்லாம் இந்த காலத்துல பசங்க என்று ஆரம்பித்த சுப்ரமணியத்தை நீங்க சும்மாயிருங்க மாமா. என் பிள்ளை பொறுப்பா ஏதாவது செய்வான்னு நான் எதிர்பார்க்கறேன். அதனால திட்டறேன் ஒரு நொடியாவது அம்மா பீல் பண்ணறாங்கனு அவன் யோசிக்கட்டும். நீங்க ஏதாவது பேசி இடையில வராதிங்க. என்று தடுத்தார்.

    இதுவரை ஹரிஷோ காதில் ஏர்பட்ஸ் போட்டு பாட்டு கேட்டால் பேசுவது கேட்கவில்லையென்று ‘ரேடியோ சிட்டி எஃப் எம்’மை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு இருந்தவன் அதனை அணைத்துவிட்டு ஏம்மா தாத்தாவை திட்டற. என்னை திட்டு... அதுக்கு தானே இருக்கேன். அட்லீஸ்ட் இந்த வீட்ல ஆளாளுக்கு திட்டறதுக்காகவது நான் யூஸ் ஃபுல்ல இருக்கேன் என்று ஒரே வார்த்தையை கூறி அன்னையை வாயடைத்தான்.

    இதற்கு மேல் என்னவென்று காஞ்சனா மகனை ஏய்ப்பார். அதுவும் புதுவீட்டில். ‘அதுக்கு தான் இருக்கேன்’ என்ற வார்த்தையே காஞ்சனாவை வதைத்தது. இதற்கா ஆசையாக பெத்தெடுத்தது. அஜித்தை விட ஹரிஷை கூடுதலாய் பிடிக்கும். அப்படியிருக்க காஞ்சனா அமைதியாக அகன்றார்.

    ‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்’ என்பது போல ஹரிஷ் அன்னையை வென்றவனாய் தாத்தாவிடம் கண்சிமிட்டினான்.

    ஹரிஷோ இதற்கு முன்னும் ஹால் வரை வந்து, தாத்தாவோடு வீட்டை ஒன்றும் பாதியுமாக பார்த்து விட்டு நண்பர்களோடு நேரில் கிரிக்கேட் பார்க்க ‘நேரு விளையாட்டு அரங்கம்’ சென்றிருந்தான்.

    அதனால் அன்று அசுத்தமாய் காட்சியளித்த வீட்டை தற்போது பார்வையால் நிதானமாக அலசினான்.

    அப்படியொன்னும் பழைய வீடு என்று கூறிடாத வகையில் இருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டான். காஞ்சனா சமையல் கட்டிற்கு என்று அட்டைப்பெட்டியில் எழுதியது சரியாக சமையலறை வாசலில் இருக்க மடமடவென தனக்கு தோதுவாக அடுக்கினார்.

    ஹரிஷும் ஆண்மகனாக ஹாலில் சோபாவை தள்ளி, பீரோவை தள்ளி கட்டில் என்று ஒவ்வொன்றும் அந்த ஹால் மற்றும் அறையின் இருப்பிடத்திற்கு ஏற்றவாறு நகர்த்தினான்.

    ஜன்னலுக்கு திரைச்சீலையை சுப்ரமணியம் தாத்தா மாட்டிவிட்டார். சிறு சிறு புகைப்படங்கள் அலமாரியில் வைக்கும் பொம்மைகள் என்று அவரால் முடிந்தவையை செய்து உதவினார்.

    ஓரளவு கீழே ஒதுக்கி வைத்தாயிற்று. மீதியெல்லாம் காஞ்சனா தான் கைபார்த்து அடுக்க வேண்டியது. ஹரிஷோ தனது உடமைகளையும் அடுக்க பிரித்தான்.

    டேய்... இங்க எதுக்கு அடுக்கற? மேல ரூம் இருக்கு பார்த்தியா இல்லையா? என்று கேட்டார் சுப்ரமணிய தாத்தா.

    தாத்தா... அங்க ஹாலும் பால்கனி பாத்ரூம் தான் இருக்கு. நீங்க வேற? என்று சலித்தான்.

    இல்லைடா நீ சரியா பார்க்கலை. மேல போய் பாரு. என்று கூறிவிட ‘மேல ஒழுங்கா தானே பார்த்தோம்’ என்று படிக்கட்டில் தடதடவென்று ஏறினான்.

    மாடிக்கு சென்றதும் கதவு இருக்க ஆசையாய் திறந்தான். அங்கே வாஷிங் மெஷின் வைக்கும் அளவிற்கு இடமும், இதர கொஞ்சம் இடமும் இருந்தது.

    ‘இந்த தாத்தா இந்த எலிப்பொறியை தான் ரூமுனு பில்டப் தந்தாரா? ம்ம்... அன்னைக்கு அவசரத்துல இந்த டோர் கூட தெரியலை. பால்கனி மட்டும் தெரிந்தது. இட்ஸ் ஓகே இந்த இடத்துல பிட்னஸ் கருவியை வச்சிக்களாம்.’ என்றவன் பின்னோக்கி அடியை வைத்து அலமாரியில் சாய்ந்தான்.

    ஹரிஷ் அதுல சாயாத என்றதற்குள் தொபுக்கடீர் என்று அலமாரியாக இருந்த கதவு திறந்ததும் விழுந்தான்.

    இடுப்பை பிடித்தபடி கண்ண சுருக்கி வலியை பொறுத்து மெதுவாய் விழியை திறக்க அங்கே அந்த அலமாரிக்கு பின் அறையாக கட்டி வைத்ததை அறிந்தான்.

    ஏனோ அந்த அறை அந்த நொடியே பிடித்தமானது.என்னடா ரூம் பிடிச்சிருக்கா? என்று சுப்ரமணியம் அலமாரியை கதவு போலதிறந்து கேட்டார்.

    தாத்தா... இந்த ரூம் அருமையா இருக்கு. சீக்ரேட ரூமா தாத்தா? என்று கேட்க சுப்ரமணியமோ பார்த்தா எப்படி தெரியுது? என்றார்.

    அறைகளை நுணுக்கமாக நோட்டமிட்டவனுக்கு ஏதோ வித்தியாசமான உணர்வு தாக்க தொண்டையில் கையை வைத்து யாரோ அழுத்துவது போல தோன்ற மூச்சு விட சிரமபட்டவனாக மயங்கி சரிந்தான்.

    இதுவரை நன்றாக சேட்டையும் பேச்சுமாக இருந்தவனின் திடீர் மயக்கத்தில் சுப்ரமணிய தாத்தா பயந்து போய் அலறினார்.

    அத்தியாயம் - 2

    சுப்ரமணியத்தின் அலறல் கேட்டு அப்பொழுது தான் வந்த அஜித் மற்றும் தனஞ்செயன் மாடிபடி தாவி ஓடி வந்தார்கள்.

    அலமாரி போன்றதொரு அறையை தனஞ்செயன் நெற்றி சுருங்க பார்த்து, விழுந்து கிடக்கும் சின்ன மகனருகே வந்தார்.

    அஜித்தோ தம்பியை தோளில் கிடத்தி அங்கிருந்த ஹாலுக்கும் பால்கனிக்கும் நடுவே கிடத்தினான்.

    அதற்குள் சுப்ரமணியமோ ஆரன் தண்ணி எடுத்துட்டு வா என்று கூற, தனஞ்செயனோ அங்கிருந்த டேப் வாட்டரை எடுத்து முகத்தில் தெளித்தார்.

    ஆயிரம் திட்டி ஹரிஷை பேசும் தனஞ்செயனுக்கு, ஹரிஷை இப்படி கண்டதும் ஈரக்குலை நடுங்கிவிட்டது. என்னயிருந்தாலும் கடைக்குட்டி என்று தனி ப்ரியம் உண்டு.

    லேசாய் விழி திறந்தவன் கண்களை சுழற்றி யாரையோ தேடினான்.

    தண்ணி குடி டா என்று அஜித் ஆரனிடமிருந்து வாட்டர்

    Enjoying the preview?
    Page 1 of 1