Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Franceil Prasanna
Franceil Prasanna
Franceil Prasanna
Ebook83 pages29 minutes

Franceil Prasanna

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலக புகழ் பெற்ற ஒரு கலைஞனையும் அவர் மகளையும் பகடைக்காயாக பயன்படுத்தி சில சதி வேலைகளை செய்ய முயல்கிறது ஒரு நாசக்கார கும்பல்.

அதை பிரசன்னா கண்டுபிடித்து அந்த கலைஞனையும் அவர் மகளையும் காப்பாத்தினாரா? அவர் ஏன் பிரான்ஸ் சென்றார்? ஆந்த நாசக்கார கும்பலின் கதி என்னவானது என்பதை நாம் நாவலில் விரிவாகக் காணலாம்.

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580100606535
Franceil Prasanna

Read more from Devibala

Related to Franceil Prasanna

Related ebooks

Related categories

Reviews for Franceil Prasanna

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Franceil Prasanna - Devibala

    https://www.pustaka.co.in

    பிரான்சில் பிரசன்னா

    Franceil Prasanna

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    இதுக்கு கண்டிப்பா நீங்க ஒத்துக்கணும் மிஸ்டர் சர்மா!

    இல்லை நான் என்ன சொல்றேன்னா?

    எதுவும் சொல்ல வேண்டாம். சரியா இருபதே நாட்கள் தான். திரும்பிரலாம். உங்க புகழ் உலகம் முழுக்க பரவியிருக்கு. இதெல்லாம் ஒரு வாய்ப்புதானே?

    அதுக்கில்லை. என் டாட்டர் இந்த நாட்கள்ள வீட்ல தனியா இருப்பாளே! அவளை விட்டுட்டு வர மனசு சமாதானப்படலை அதான்!

    ப்பூ இவ்ளோ தானா? அவங்களும் வரட்டுமே! சேர்த்தே பாஸ்போர்ட்டும், விசாவும் ஏற்பாடு செஞ்சிர்றம். என்ன?

    அவளைக் கேட்டு நான் சொல்றேனே! எதுக்கும் ஈவினிங் டெலிபோன்ல என்னை கன்ஃபர்ம் பண்ணிட்டு, பயணத்துக்கு ஏற்பாடு செஞ்சாப் போதும். என்ன?

    நீங்க வர்றீங்க!

    மாலை நாலரைக்கு சுஜாதா வந்தாள்.

    இப்படி வாம்மா!

    என்ன டாடீ?

    உன் காலேஜுக்கு மூணுவாரம் லீவு போட முடியுமா?

    வாவ்! அவ்ளோ எதுக்கு டாடீ?

    முடியுமா?

    கஷ்டம் டாடி. ப்ராடிகல்ஸ் போயிட்டா பிக்கப் பண்ண முடியாது ஏன்?

    நம்ம விநாயக் கல்சுரல் அகாடமி செக்ரட்டரி வந்தார். என்னோட கதாகாலசேபம் மூணுவார காலம் பிரான்சுல நடத்தணுமாம். எல்லா ஏற்பாடுகளும் செஞ்சாச்சாம். நீயும் வந்துட்டா நல்லது. உன்னைத் தனியா விட்டுட்டு நான் எப்படி போவேன்?

    ஹௌ ப்யூட்டிஃபுல். பாரின் சான்ஸ் விடாதீங்க டாடீ. கண்டிப்பா ஒப்புக்கணும்!

    நீ?

    என்னால முடியாது. படிப்பு வீணாயிரும். நான் இன்னொரு முறை வர்றன்!

    நீ தனியா இருப்பியேம்மா!

    யாராவது வந்து பிடிச்சிட்டுப் போயிரப் போறாங்களா? போங்க டாடீ. யாராவது கூடப் படிக்கற பெண்ணை வந்து இருக்கச் சொல்றேன்!

    அப்படீங்கறியா?

    ஆமாம் டாடீ!

    நான் தைரியமாப் போகலாமா?

    நிச்சயம் போகலாம்!

    'சரி' என்று அரைகுறை மனதுடன் ஒப்புக்கொண்ட கணேச சர்மாவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஏறத்தாழ ஐம்பதைத் தொட்டு விட்ட கணேச சர்மா ஆரம்ப காலத்தில் உத்யோகம் பார்த்தவர். கதகாலசேபத்தில் ஆர்வம் கொண்டு, கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தவர், தானும் முயன்றால் என்ன என்று தோன்ற, அப்போது முளைத்த ஆர்வம் தான்.

    இன்று -

    புராணங்களும், இதிகாசங்களும் மழையாகக் கொட்டுகிறது. தினசரி ஒரு புக்கிங். மளமளவென அந்தஸ்து ஏறி விட்டது. இந்தியாவின் மைய அரசு வரை அவரது புகழ் பரவி விட்டது. ஒரே மகள் சுஜாதா. பிறந்ததும் தாயை இழந்த பெண். அழகான பதினெட்டு வயது நந்தவனம். கல்லூரியில் மருத்துவம் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி.

    சர்மா தன் ஒப்புதலைத் தெரிவிக்க

    அந்த வாரக் கடைசியில், பயணம் ஆரம்பமாகி விட்டது. ஏர்பிரான்ஸ் விமானத்தில் அவரை அனுப்பி விட்டு சுஜாதா வீடு திரும்பிய போது, வாசலில் அந்த நர்மதா வந்து நின்றது.

    ஹாய் ஹரி!

    அப்பாவை அனுப்பியாச்சா?

    ஏன் வெளில நிக்கற? உள்ள வா ஹரி!

    ஹெல்மெட்டை அவிழ்த்தபடி ஹரி உள்ளே நுழைந்தான். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நாலாம் ஆண்டு படிக்கும் மாணவன் ஹரி.

    நீதான் சமையலா?

    ஏன்? எனக்குத் தெரியாதா? ராத்திரி சாப்பாட்டுக்கு இருந்துட்டுப் போறியா?

    அப்புறமா இருந்துருவேன்!

    இரேன். பயமா என்ன?

    நான் வர்றேன் சுஜா. நிறைய வேலை இருக்கு. ஸீயூ எகெய்ன்!

    Enjoying the preview?
    Page 1 of 1