Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தொடுவானைத் தொட்டுவிடு!
தொடுவானைத் தொட்டுவிடு!
தொடுவானைத் தொட்டுவிடு!
Ebook136 pages33 minutes

தொடுவானைத் தொட்டுவிடு!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஹாஸ்டலுக்கு வந்த பிறகு சுருஷ்டி அமைதியாக ஒரு மரத்தடியைத் தேடி வந்து அமர்ந்துவிட்டாள்.
 மனம் குழப்பத்தில் சிக்கித் தவித்தது.
 'தவறு செய்துவிட்டேனோ? காதலித்தது பெரும் தவறு. எந்த தைரியத்தில் காதலித்தேன்?'
 'பல வருடங்களாக தாய் தகப்பனை விட்டு ஒரு பெண் பிரிந்திருக்கிறாள் என்றால் யாருக்குத்தான் அதிர்ச்சியாக இருக்காது?'
 'அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் இத்தனை நாட்கள் பழகியவன் ஏன் என்று காரணம் கேட்டிருக்கலாமே! எதுவுமே கேட்காமல் முகத்திலடித்த மாதிரி எழுந்து போய்விட்டானே! எப்படிக் கேட்பான்? இத்தனை வருடங்கள் பழகியவள் எதையுமே சொல்லாமல் மறைத்து விட்டாளே என்ற கோபம் இருக்காதா?'
 'என்ன காரணமாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டுமே! பல வருடங்களாக தாய் தந்தையரைப் பிரிந்து தனியாக வாழும் பெண்ணை எப்படி ஏற்றுக் கொள்வது? ச்சீ... என ஓடிவிட்டானா?'
 'அப்படியானால் சுரேஷ் இனிமேல் என்னைத் தேடி வரமாட்டானா? என்னிடம் பேசமாட்டானா? என்னைக் காதலிக்க மாட்டானா? என்னை ஏற்றுக் கொள்ள மாட்டானா? எப்படி ஏற்றுக் கொள்வான்?'
 'காரணம் கேட்கவே பிடிக்காதவன் எப்படி என்னை ஏற்றுக் கொள்வான்? கல்யாணம் செய்து கொள்வான்? சுரேஷின் குடும்பம் மிகவும் கட்டுப்பாடான குடும்பம். அப்பா போலீஸ் ஆபீஸர். அம்மா கல்லூரிப் பேராசிரியை. தாய் தந்தையைப் பிரிந்து வாழும் ஒரு கன்னிப்பெண்ணைத் தன் பிள்ளைக்கு யார் கல்யாணம் செய்து வைக்க முன் வருவார்கள்?எல்லாம் தெரிந்தும் காதலித்தது என் தவறுதானே? அப்பா..! அம்மா..! என்னை நினைத்துப் பார்ப்பீர்களா? எப்படி உங்களால் இப்படி இருக்க முடிகிறது! இந்த உலகத்தில் நம் மகள் எங்கே இருக்கிறாளோ? எப்படி இருக்கிறாளோ? என்றெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க மாட்டீர்களா?'
 'அவ்வளவு இறுக்கமான மனமோ உங்களுக்கு?'
 'உலகத்திலேயே உன்னதமான உறவு தாய் தந்தை உறவு என்கிறார்களே...!
 உங்களைப் போன்ற தாய் தந்தையரை எந்த விதத்தில் சேர்ப்பது?'
 'எந்த தைரியத்தில் என்னை இந்த உலகத்தில் தனியாக விட்டீர்கள்? அதுவும் ஒரு பெண் பிள்ளையை?'
 'திருமணம் செய்து கொடுத்துவிட்டால் கூட கடைசிவரை அந்தப் பெண்ணின் சுகதுக்கத்தில் தனக்குப் பங்கு உண்டு என்றுதானே ஒரு தந்தை நினைப்பார்?'
 'ஆனால் அப்பா.. என் விஷயத்தில் நீங்கள் நடந்து கொண்டது எந்த விதத்தில் நியாயம்?'
 'எந்தத் தவறும் செய்யாத என்னைத் தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம்?'
 நெஞ்சம் விம்மியது. கண்கள் கலங்கி வழிந்தன. விழிகள் எங்கோ வெறித்தன.
 "ஏய்... சுருஷ்டி... எல்லாரும் டிபன் சாப்பிட வந்தாச்சு. நீ தனியா இங்க உட்கார்ந்துக்கிட்டு என்ன பண்றே?" ஹாஸ்டல் வார்டன் தன் அறைவாசலில் நின்று குரல் கொடுத்தார்.
 சுய நினைவிற்கு வந்தவளாக சுருஷ்டி எழுந்து உள்ளே சென்றாள்.
 இரவு உறக்கம் போனது. பழைய நினைவுகளில் மனம் உழலத் தொடங்கியதில் தலைவலியும் சேர்ந்து கொண்டது.
 மறுநாள் காலையில் அவளால் அலுவலகம் போகமுடியவில்லை. லீவு சொல்லிவிட்டு இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டாள்.
 ருத்துஜா அவளுடைய அறைத் தோழி. அவள் படுத்திருப்பதைப் பார்த்து திடுக்கிட்டாள்.
 "என்னாச்சு?" என அக்கறையுடன் விசாரித்தாள்"ஒண்ணுமில்லை.  உடம்பு சரியில்லை." என சமாளித்தாள். 
 "உடம்புக்கு என்ன? ஃபீவரா...?"
 "இல்லை. தலைவலி."
 "கிளம்பு ஹாஸ்பிடலுக்குப் போவோம்."
 "தலைவலிக்குப் போய் எதுக்கு ஹாஸ்பிடலுக்கு! நீ ஆபிஸ் கிளம்பு. மாத்திரை போட்டா சரியாயிடும்." 
 "மாத்திரை இருக்கா?"
 "இருக்கு."
 "சரி" என கிளம்பிப் போனாள் ருத்துஜா. ஆனால் மாலை அலுவலகத்திலிருந்து திரும்பி வந்தவள் அதே நிலையிலேயே கிடந்த சுருஷ்டியைப் பார்த்து திடுக்கிட்டாள்.
 அவளை எழுந்து உட்கார வைத்தபோது அழுது அழுது வீங்கிய அவளுடைய முகத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள்

 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223516156
தொடுவானைத் தொட்டுவிடு!

Read more from R.Sumathi

Related to தொடுவானைத் தொட்டுவிடு!

Related ebooks

Related categories

Reviews for தொடுவானைத் தொட்டுவிடு!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தொடுவானைத் தொட்டுவிடு! - R.Sumathi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    வெகுநேரமாக சுருஷ்டியின் செல்போன் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

    அவள் எடுக்கவே இல்லை. அவளுக்குத் தெரியும். சுரேஷ்தான் அழைக்கிறான்.

    எடுத்தால் என்ன பேசுவானென்பது தெரியுமாதலால் எடுக்காமலிருந்தாள்.

    அவளைக் கடந்து சென்ற மாலதி "என்ன... செல் கூப்பிட்டுக்கிட்டேயிருக்கு.

    நீ பாட்டுக்கு வேலை பார்க்குறே? உன் ஆள்தான் போலிருக்கு. பேசேன்டி. கோபிச்சுக்கப் போறாரு..." என்று சொல்லிவிட்டுப் போனாள்.

    அவள் சென்றதும் செல்போனைக் கையிலெடுத்தாள். ‘ஆன்’ செய்து காதில் வைத்தாள்.

    சுருஷ்டி! என்ன ஆச்சு உனக்கு? போனை எடுக்கவே மாட்டேங்கறே...

    ஆபிஸ்ல ஆடிட்டிங் நடக்குது. ஜி.எம். ரூம்ல பிஸியா இருந்தேன்.

    இதையேதான் நாலு நாளா சொல்றே. இன்னைக்கு நீ எதை சொல்லியும் தப்பிக்க முடியாது. சரியா அஞ்சு மணிக்கெல்லாம் நாம வழக்கமா சந்திக்கிற இடத்துக்கு வந்துடு. நீ மட்டும் வராட்டா அப்புறம் நீ போன் பண்ணினாக் கூட நான் எடுக்க மாட்டேன். நாம எங்கேயுமே சந்திக்க முடியாது. சொல்லிவிட்டு சட்டென்று தொடர்பைத் துண்டித்து விட்டான்.

    சுருஷ்டிக்கு அதன்பிறகு வேலையே ஓடவில்லை. அமைதியாக அமர்ந்துவிட்டாள். அந்த அமைதியில் பெரும் இறுக்கம் இருந்தது. மெல்லிய படபடப்பு உடலெங்கும் ஓடியது.

    சுரேஷ் சொல்வது உண்மைதான். ஒரு வாரமாக அவன் போன் செய்யும் போதெல்லாம் அவள் ஆடிட்டிங் அது இதுவென இப்படித்தான் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி அவனை சந்திப்பதைத் தவிர்த்தாள்.

    அவளுக்கு மட்டும் அவனை சந்திக்க விருப்பமில்லையா என்ன?

    இந்த நிமிடமே அவனைப் பார்க்க மாட்டோமா என்ற ஏக்கம் அவளை ஆக்ரமித்துக் கொண்டிருப்பது உண்மைதானே? ஒவ்வொரு நிமிடமும் அவனையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற துடிப்பு உள்ளுக்குள் ஓடிக் கொண்டேயிருப்பது உண்மைதானே?

    ஆனால் அவனை சந்திக்கப் பயமாயிருக்கிறதே!

    காதல் மட்டுமே பேசிக் கொண்டிருந்த நாட்கள் மிகவும் களிப்பாக இருந்தது.

    தெளிந்த நீரோடையைப் போல் - தெள்ளு தமிழ் தென்றலைப் போல் நகர்ந்த நாட்கள் இப்பொழுது சந்திப்பதற்கே பயமாக இருந்தது.

    காதல் மட்டுமே இப்பொழுது பேசப்படும் விஷயமாக இல்லை.

    கல்யாணத்தைப் பற்றிய பேச்சு ஆரம்பிக்கப்பட்டுவிட்டதால் நாட்கள் களிப்பாக இல்லை. கனவாக இல்லை. சுரேஷ் கல்யாணத்தைப்பற்றிப் பேசும்போதெல்லாம் மனசுக்குள் ‘திக்திக்’ உண்டானது.

    எதையெதையோ சொல்லி சமாளித்தாள்.

    இப்பொழுது என்ன செய்வது? எத்தனை நாட்கள் சமாளிக்க முடியும்?

    உண்மையை ஒரு நாள் எதிர்கொண்டுதானே ஆகவேண்டும்?

    ஐந்து மணி ஆனதுமே ஒருவித பயம் பந்தாக அடிவயிற்றில் சூழ்ந்துகொண்டு குட்டிப்புயலாக சுழலத் தொடங்கியது.

    ஐந்து மணிக்கு மேல்தான் கிளம்பினாள். அவளும் சுரேஷும் வழக்கமாக சந்திக்கும் இடம் கடற்கரை.

    அவள் வந்தபோது ஓடி வந்து தழுவிக் கொண்ட கடற்கரைக் காற்று மனதில் கிளுகிளுப்பை உண்டாக்கவில்லை.

    படகு ஓரம் சாய்ந்து நின்றபடி கைகட்டிக் கொண்டு அவள் வரும்பாதையில் விழிகளைப் பதித்து நின்றிருந்த சுரேஷைப் பார்த்தபோது வயிற்றில் சுழன்ற குட்டிப் புயல் பெரும் புயலாக மாறி அவளைத் தடுமாற வைத்தது!

    அவளைக் கண்டதுமே சுரேஷின் முகம் பூவாக மலர்ந்தது.

    முன்னால் வந்து கையைப்பற்றிக் கொண்டான். என்ன பயந்துட்டியா? இனிமே நாம சந்திக்க முடியாதுன்னு நான் மிரட்டினதும் தலைதெறிக்க ஓடி வந்துட்டியா? பைத்தியம்! உன்னை சந்திக்காம இருக்க முடியுமா? என அவளுடைய தலையில் தட்டினான்.

    வா.. அப்படி உட்காரலாம் என அழைத்துச் சென்று ஓரிடத்தில் அமர்த்தினான்.

    அலுவலக விஷயங்களை அக்கறையின்றி ஒப்புக்குப் பேசினான். ஆடிட்டிங் பற்றிக் கேட்டான்.

    எல்லாக் கேள்விக்கும் பதில் சொன்னாள். எப்பொழுது அந்தக் கேள்வியைக் கேட்பானோ என்று பயந்தாள்.

    சில நிமிடங்கள் கழித்து அவன் கேட்டான்.

    சுருஷ்டி, நான் முன்னாடியே சொன்னதுதான். கல்யாணத்துக்கு வீட்ல நச்சரிக்கத் தொடங்கிட்டாங்க. நான் நம்ம காதலை சொல்லிட்டேன். உன்னைப் பெண் பார்க்க எப்ப வர்றதுன்னு தேதியும் குறிச்சுட்டாங்க. நீதான் உங்க வீட்ல காதலை ஏத்துக்க மாட்டாங்கன்னு, சொல்லப் பயந்துகிட்டேயிருக்கே. நீ சொல்லலைன்னா பரவாயில்லை. நான் போய் சொல்றேன். நான் பேசற விதம்... நடந்துக்கற விதம்... இதையெல்லாம் பார்த்து உங்கப்பா என்னை மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்னு சொல்லி உடனே பொண்ணு கொடுக்க சம்மதிச்சுடுவாரு. நீ முதல்ல உன் அட்ரஸைக் கொடு. நான் போய் பேசறேன். இப்பவே கிளம்பறேன்.

    அவள் மௌனமாயிருந்தாள். தலைகுனிந்திருந்தாள்.

    "என்ன

    Enjoying the preview?
    Page 1 of 1