Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

எங்கெங்கும் உன் வண்ணம்
எங்கெங்கும் உன் வண்ணம்
எங்கெங்கும் உன் வண்ணம்
Ebook141 pages49 minutes

எங்கெங்கும் உன் வண்ணம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிருதிவ் வீட்டிற்கு வந்தபோது அனைவரும் தயாராக இருந்தனர்.
 "வா.. வா... உனக்காகத்தான் வெயிட் பண்ணிக்கிட்டிருக்கோம். சீக்கிரம் வா...'' என்றனர் கோரஸாக.
 ''அம்மா... எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா? எல்லாத்தையும் போட்டுட்டு ஓடி வர்றேன். என்னமோ எனக்கு பொண்ணு பார்க்கப் போறமாதிரி. அண்ணனுக்கு பொண்ணு பார்க்கறதுக்கு நான் எதுக்கு? நீங்க போய் பார்த்தாப் போதாதா?''
 ''அதெப்படி? இந்த வீட்ல வந்து வாழப் போற மருமகளை எல்லாரும்தான் போய் பார்க்கணும். நான்தான் நீ வந்தே ஆகணும்னு சொன்னேன்" என அக்கா காயத்ரி சிரித்தாள்.
 ''எல்லாம் உன் வேலைதானா? உன்னை உள்ளூர்ல கட்டிக் கொடுத்ததே தப்பாப் போச்சு. இந்த வீட்ல எல்லா முடிவையும் நீதான் எடுப்பியா?''
 "டேய்... கல்யாணம் பண்ணிக் கொடுத்தா என்னடா...? எப்பவும் இந்த வீட்டுக்கு மூத்த பொண்ணு நான்தான். நான் சொல்றதைத்தான் நீங்க ரெண்டு பேரும் கேட்கணும். நான் பார்த்துப் பிடிச்சிருக்குன்னு சொன்னாத்தான் எந்தப் பொண்ணையுமே கட்டணும்.''
 ''ஆமா! உன்னைவிட அந்தப் பொண்ணு அழகாயிருந்தா நீ பொறாமையில வேண்டாம்னு சொன்னாலும் சொல்லுவே."
 ''அப்பா பாருங்கப்பா...'' காயத்ரி அப்பாவிடம் திரும்ப,
 "டேய்.... சும்மாயிருக்க மாட்டே. டயமாகுது. எல்லாரும் கார்ல ஏறுங்க.''
 ''அட... நான் ட்ரெஸ் பண்ணிக்க வேண்டாமா?" பிருதிவ் சொல்ல, ''டேய். இந்த ட்ரெஸ்ஸே நல்லாத் தான்டா இருக்கு. பொண்ணு பார்க்கப் போறது எனக்குத் தான் உனக்கில்லை'' என்றான் அண்ணன் ஹரிஇருக்கட்டுமே! எங்கே நான் பளிச்சுன்னு ட்ரெஸ் பண்ணிக்கிட்டு வந்தா பொண்ணு என்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லிடுமோன்னு உனக்கு பயம். அதானே.''
 ''கடவுளே...'' தலையில் அடித்துக் கொண்ட ஹரி பார்ப்பதற்கு பிருதிவை விடவே உயரம். திருத்தமான முகம். எந்த ஆணையும் கொஞ்சம் வருத்தப்பட வைக்கும் உடல் தோற்றம். கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் தேவைக்கு அதிகமாக சம்பளம் வாங்கும் உத்தியோகம்
 மகன்கள் இருவரும் கைநிறைய சம்பளத்தில் நல்ல உத்தியோகத்தில் இருப்பதில் அப்பா சந்தானத்திற்கும், அம்மா சரஸ்வதிக்கும் மனம் நிறைய ஆனந்தம். மூத்த மகள் கண்ணுக்கு எதிரேயே குழந்தை குட்டிகளுடன் வாழ்வதில் நிறைவு.
 எல்லா மகிழ்ச்சியையும் அதிகப்படுத்துவதைப் போல் ஹரிக்கு வரன் வந்தது. பெண் வீட்டாருக்கு சொந்தமாக நகைக்கடை வியாபாரம். நகரில் புகழ்பெற்ற கடை, அடிக்கடி தொலைக்காட்சியில் விளம்பரத்தில் தலை காட்டும் அந்தக் கடையின் நகைகள் அதை அணிந்திருக்கும் நடிகைகளைவிட அழகாக இருக்கும்.
 சந்தானத்திற்கு பரம்பரை சொத்து எதுவும் இல்லை என்றாலும் அவரும் பணக்காரராக தன்னை உயர்த்திக் கொண்டதற்கு கால நேரம் பாராமல் பாடுபட்ட உழைப்பும் காலத்திற்கு ஏற்ற தொழில் செய்வதும் அதில் பல உத்திகளைக் கையாள்வதும்தான்.
 ஆனாலும் பெண்ணின் தந்தை ராஜ்மோகனை ஒப்பிடும்போது அவருடைய பணத்திற்கு முன்பு இவருடைய பணம் பத்துக் காசிற்கு சமம். சந்தானம் பிள்ளைகளுக்கு படிப்பைவிட பணம் சேர்க்கும் நோக்கத்தைவிட பண்பையும் ஒழுக்கத்தையுமே முதலாவதாகவும் முக்கியமானதாகவும் போதித்ததால் கிடைத்ததுதான் இந்தப் பெரிய இடத்து வரன்.
 ஹரியைப் பற்றி கேள்விப்பட்டு தன் மகளைக் கொடுக்க முன் வந்திருந்தார் ராஜ்மோகன்.
 ''எனக்கென்னமோ இவ்வளவு பெரிய இடத்து சம்பந்தம் தேவையான்னு தோணுது.''
 காரில் போகும் போது பிருதிவ் சொன்னான்."பார்த்தியா... பொறாமையை?" காயத்ரி முறைத்தாள்.
 ''பொறாமையா? எனக்கா? அதுக்கெல்லாம் வேற ஆளைப் பாரு."
 ''பின்னே எதுக்கு சொல்றே?''
 "ரொம்பப் பெரிய இடம். அண்ணனை அவங்க பக்கம் இழுத்துட்டுப் போய்டுவாங்க. பார்த்துக்கிட்டே இரு.''
 "போகட்டுமே! சின்னவன்கிட்ட இருந்துட்டுப்போறோம்."
 ''இவன்கிட்டேயா? அவனை நம்பினாலும் நம்புங்க. இவனை நம்பாதீங்க"
 "எனக்கு கூட அதான் தோணுது" அப்பா சொன்னார்.
 "என்ன? இவன் பார்த்துக்க மாட்டான்னு தானே?''
 ''அது இல்லை. இந்த மாதிரி பெரிய இடத்துல பொண்ணு கட்டப்போறது?''
 ''அப்பா பொண்ணு பிடிக்கலைன்னு சொல்லிடுங்க" பிருதிவ் முந்திக் கொண்டு சொல்ல,
 ''சும்மாயிரு. அபசகுனமா பேசிக்கிட்டு. பெரிய இடத்துப் பொண்ணுன்னா உடனே மத்தவங்களை மதிக்காதுன்னு அர்த்தமா? ஹரியோட நல்ல குணங்களைக் கேள்விப்பட்டு பொண்ணைப் பெத்தவரே வலிய சம்பந்தம் பேச வந்திருக்கார்ன்னா பாரேன்." அம்மா பெருமையாகச் சொல்ல,
 "ஹரியோட குணம் அப்படி, எல்லாரையும் அப்படிச் தேடி வருவாங்களா என்ன?'' காயத்ரி மறுபடியும் பிருதிவிடம் வம்பு இழுத்தாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 3, 2024
ISBN9798223468332
எங்கெங்கும் உன் வண்ணம்

Read more from R.Sumathi

Related to எங்கெங்கும் உன் வண்ணம்

Related ebooks

Reviews for எங்கெங்கும் உன் வண்ணம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    எங்கெங்கும் உன் வண்ணம் - R.Sumathi

    1

    பிருதிவின் செல்போன் சிணுங்கிய அதே நிமிடம் கையில் கோப்புடன் உள்ளே நுழைந்தாள் ஓவியா.

    அவளை எதிர் இருக்கையில் அமரும்படி சைகை செய்தவாறே செல்லை எடுத்து பேசத்தொடங்கினான் பிருதிவ்.

    என்னம்மா... என்ன விஷயம்? எத்தனை தடவை ஆபீஸ் நேரத்துல போன் பண்ண வேண்டாம்னு சொல்லியிருக்கேன் கேட்கவே மாட்டீங்களா? சரி... சரி சொல்லுங்க குரலில் எரிச்சல் காட்டிய பிருதிவை ஆச்சரியமாகப் பார்த்தாள் ஓவியா.

    பிருதிவ் முகத்தில் எரிச்சலையும் கடுப்பையும் இப்பொழுதுதான் பார்க்கிறாள். அவனுடைய கலகலப்பான பேச்சு அழகான அவன் முகத்திற்கு எப்பொழுதும் அழகைக் கூட்டும்.

    சிலபேர் வெளியில் கலகலப்பாகப் பழகுவார்கள். வீட்டிற்குப் போனால் கரடியாகக் கத்துவார்கள். அந்த ரகம் போலிருக்கிறது.

    மெல்லிய சிரிப்பு மனதிற்குள் பரவ, கொண்டு வந்த கோப்பைப் புரட்டும் சாக்கில் அகத்தில் பரவிய சிரிப்பை முகத்தில் படரவிடாமல் சமாளித்தாள். காது மட்டும் அவன் பேசுவதையே கூர்ந்து கவனித்தது.

    ‘‘நாலுமணிக்கெல்லாம் வீட்டுக்கு வரணுமா? எதுக்கு? பொண்ணு பார்க்கப் போறோமா? ப்ச்! என்னம்மா இது? பொண்ணு பார்க்கற விஷயத்தையெல்லாம் உங்களோட வச்சுக்கங்க. என்னால வர முடியாது...’’ சொன்னவாறே பிருதிவ் விழிகளை எதிரே அமர்ந்திருந்த ஓவியாவின் மீது படர விட்டான்.

    மெல்லிய சிரிப்பு படர்ந்திருந்த அவள் முகத்தில் திடீர் இருள் தென்படுவதைப் போல் தோன்றியது.

    சட்டென்று விழிகளை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள். அதே நேரம் தன் விழிகளை வேறெங்கோ திருப்பிக் கொண்டவன். அடுத்த வரியை அம்மாவிடம் பேசும் போது மீண்டும் பார்வையை வேண்டுமென்றே அவள் முகத்தில் பதித்தான்.

    ‘‘அம்மா... நீங்க பார்த்து முடிவு செய்தா சரிதான். என்னைப் போய் இதுக்கெல்லாம் கூப்பிட்டுக்கிட்டு. அண்ணன், அக்கா இருக்கும் போது நான் எதுக்கு...’’

    ஓவியாவின் முகம் இன்னும் மாறிவிட்டது. அவளுடைய உதடுகள் மென்மையாகத் துடித்ததை அவன் நுணுக்கமாக ஆராய்ந்தான்.

    "பொண்ணு பார்த்துட்டு வரும்போது போட்டோ வாங்கிட்டு வாங்க. பார்த்துக்கறேன். சரி... சரி...’’ என செல்லை அணைத்துவிட்டு நிமிர்ந்தான்.

    ஓவியா கழுத்தோரம் வியர்த்திருந்ததைக் கைக்குட்டையால் மெல்ல ஒற்றிக் கொண்டாள்.

    "என்ன... ஏ.ஸி.யிலும் உங்களுக்கு இப்படி வேர்க்குது? அவளை மெல்லச் சீண்டினான்.

    "ம்.. அதெல்லாம் ஒண்ணுமில்லை’’ என்று சமாளித்தவள், ‘‘வீட்ல பொண்ணு பார்க்கப் போறாங்களா?’ என்றாள் மெல்ல.

    ‘‘ஆமா! ஏழு கழுதை வயசாயிட்டு. இன்னும் சும்மாயிருப்பாங்களா? அதான் கல்யாண ஏற்பாடு பண்றாங்க"

    ‘‘அம்மா அப்பா பார்த்து முடிவு பண்ணினா சரின்னு சொல்றீங்களே! உங்களுக்கு பெண்ணைப் பார்க்கணும் ஆசையிருக்காதா?’’

    "இந்தப் பெண் பார்க்கற விஷயமே எனக்குப் பிடிக்காது. அதுக்கும் மேல இந்த அரேஞ்டு மேரேஜ்ல எனக்கு நம்பிக்கையே இல்லை.’’

    ஏன் அப்படிச் சொல்றீங்க? அவள் ஆர்வமாக அவனுடைய முகம் பார்த்தாள்.

    "உதாரணத்துக்கு உங்களையே சொல்றேனே! இந்த ஆபீசுக்கு முதன் முதலா வேலைக்கு வந்தப்ப எவ்வளவு படபடப்பா பதற்றமா இருந்தீங்க. எப்படி வேலை பழகறது? மத்தவங்கக்கிட்ட எப்படிப் பழகறது? யார்கிட்ட எப்படிப் பேசறதுன்னு எப்படியெல்லாம் தடுமாற்றம் இருந்தது! நீங்க சகஜ நிலைக்கு வர பலமாதங்கள் பிடிச்சது இல்லையா? வேலை விஷயமே இப்படின்னா வாழ்க்கை? வாழ்க்கைங்கற ஆத்துல மெல்ல இறங்கி நிதானமா அமைதியா நீந்த முயற்சி செய்தா போதும்... நீச்சல் தெரியயாதவன் கூட அதோட நீக்கு போக்குக்கு தகுந்த மாதிரி நீச்சல் கத்துக்க முடியும். நீந்த முடியும். ஆனா நீச்சல் கலையில பயிற்சி பெற்ற நிபுணன்கூட வாழ்க்கைங்கற ஆத்துல எதிர்பாராத கணத்துல தள்ளி விடப்பட்டா திக்கு முக்காடி நீந்தத் தெரியாம முழுகிப் போய்டுவான். அரேஞ்டு மேரேஜ்ங்கறது எதிர்பாராத கணத்துல நம்மை ஆத்துல தள்ளி விடற ஒரு செயல் மாதிரின்னு நான் நினைக்கிறேன். நம்மோட வாழ்க்கைத் துணைங்கறது, தென்றல் மாதிரி இயல்பா வந்து நம்மோட இணையணும். அதோட மணம் குணம் இதையெல்லாம் இயல்பா உணர்ந்து ஏத்துக்கணும். திட்டமிட்டு தேர்ந்தெடுத்து கல்யாணம் பண்ணிக்கறதுங்கறது திடீர்னு போய் வாங்கிட்டு வந்து பொருத்திக் காத்து வாங்கற ஏ.ஸி. மாதிரி. என்னைப் பொருத்தவரைக்கும் ஒரு பெண்ணோட பழகி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு கொஞ்சம் காதல் கொஞ்சம் காமம் ஆனா நிறைய நட்போட வாழணும். அதுதான் சரியான வாழ்க்கையா நினைக்கிறேன்.’’

    அவளுடைய முகத்தில் பட்டாம்பூச்சி பறப்பதை இப்பொழுது கவனித்தான்.

    ‘‘அப்போ ஒரு பொண்ணைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கறீங்க இல்லையா?"

    ‘‘எஸ்...’’

    ‘‘அப்புறம் எதுக்கு அம்மா அப்பாக்கிட்டே ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி நீங்க பார்த்து முடிச்சா சரின்னு நடிக்கறீங்க? உங்க கொள்கையைச் சொல்லிடலாமே!’’

    "என்னன்னு சொல்றது?’’

    "அம்மா... நான் எனக்குப் பிடிச்சமாதிரி ஒரு பெண்ணை காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு...’’

    "எத்தனையோ தடவை சொல்லிட்டேன். உன் மூஞ்சியையெல்லாம் எவ காதலிப்பான்னு எல்லாரும் சிரிக்கறாங்க.’’

    ஓவியா தாடையில் கையைத் தாங்கி அவனைப் பார்த்தாள்.

    ‘‘ஏன் இந்த மூஞ்சிக்கென்ன?’’

    ‘‘இதைவிட மோசமான மூஞ்சியையெல்லாம் நிறைய பேர் காதலிச்சிருக்காங்கன்னு சொல்ல வர்றீங்களா?’’

    ஒவியா கலகலவென சிரித்தாள்.

    அவளுடைய சிரிப்பழகில் லயித்துப் போனவன், சட்டென்று இருக்கையில் சாய்ந்து பெருமூச்சு விட்டான்.

    ‘‘பார்த்த உடனே காதலிக்கறது, பார்க்காமலேயே காதலிக்கறது இதையெல்லாம் பார்க்கும்போது காதல் சாதாரண விஷயமாத் தெரியுது. பத்து வருஷமா காதலிச்சுட்டு சேர முடியாம போறவங்களைப் பார்த்தா காதல் ஏதோ பெரிய விஷயமாத் தெரியுது. வீட்லேயும் ‘இவதான் என் காதலின்னு’ யாரையாவது கொண்டு வந்து காட்டுவேன்னு எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போய்ட்டாங்க"

    ‘‘அதனாலதான் அவங்களே பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்களா?’’

    ‘‘ஆமாம்... எனக்கும் காதலுக்கும் ரொம்ப தூரம்னு முடிவு பண்ணி அவங்க இஷ்டத்துக்கே விட்டுட்டேன். கழுதையோ குதிரையோ ஏதோ ஒண்ணைக் கட்டிவச்சா கட்டிக்கிட்டு குடும்பம் நடத்தலாம்னு முடிவுக்கு வந்துட்டேன்.’’

    "ஏன்... உங்களுக்கு யார்மேலயுமே காதல் வரலையா?’’ அவள் மென்மையாக ரகசியக் குரலில் கேட்டாள்.

    ‘‘வந்தா... நான் ஏன் இங்கே உட்கார்ந்திருக்கேன். ஆபீசுக்கு லீவு போட்டுட்டு இந்நேரம் பீச் பார்க்குன்னு சுத்திக்கிட்டிருப்பேன். அதுக்கெல்லாம் ஒரு அதிர்ஷ்டம் வேணும். ம்... நடக்காததைப் பத்தி ஏன் யோசிக்கணும். சரி அதை விடுங்க. பைலைக் கொடுங்க" என்று அவன் அத்துடன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அலுவலக விஷயத்திற்குத் தாவினான்.

    பைலில் இருந்த விஷயம் தொடர்பாக அவன் கேட்ட கேள்விகளுக்கு அவளால் சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை. மனதில் எதையோ யோசித்துக் கொண்டிருப்பதைப் போல் அவள் ஒன்று கிடக்க ஒன்று சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் முன்னுக்குப் பின்னாக பேச அவன் அவளைக் கூர்ந்து கவனித்தான்.

    ‘‘என்னாச்சு? எப்பவும் வேலையில கரெக்டாயிருக்கற நீங்க இப்போ தடுமாற்றமா பேசறமாதிரி இருக்கு"

    ‘‘அதெல்லாம் ஒண்ணுமில்லை. திடீர்னு என்னமோ தலை வலிக்கிற மாதிரி... நான் இந்த பைலைப் பத்தி அப்புறம் பேசறேன்" சட்டென்று அவனிடமிருந்த கோப்பை வாங்கிக் கொண்டு வெளியேறி விட்டாள். அவள் சென்றதும் தன் இருகைகளையும் கோர்த்து தாடையில் தாங்கிக் கொண்டான்.

    ‘ஓவியா... என்னைக் காதலிக்கிறாய் தானே? ஆனால் மறைக்கிறாய். நீ மூடி மறைக்கும் காதலைத் தேடாமலேயே கண்டுபிடித்து விட்டேன். இரு... உன்னை நான்கு மணிக்கு இன்னும் அலற வைக்கிறேன்.’

    மனதிற்குள் சிரித்துக் கொண்டவன் சரியாக நான்கு மணிக்கு அவளைத் தன் இருப்பிடத்திற்கு அழைத்தான்.

    அவன் அழைத்ததுமே தென்றல் திரை விலக்கி நுழைந்ததைப் போல் நுழைந்தாள்.

    "சொல்லுங்க பிருதிவ்.

    Enjoying the preview?
    Page 1 of 1