Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

உன்னை நானறிவேன்…
உன்னை நானறிவேன்…
உன்னை நானறிவேன்…
Ebook186 pages1 hour

உன்னை நானறிவேன்…

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிண்டி. அந்தக் கல்லூரி மாணவியர் விடுதி நள்ளிரவைத் தாண்டியும் உறங்காமல் விழித்திருந்தது. அனைத்து அறைகளும் வெளிச்சமாய்த் தெரிய அனைத்திலும் உள்ள மாணவியர் பேச்சும் சிரிப்புமாய்த் தங்களது உடைமைகளைச் சேகரித்து அடுக்கிக் கொண்டிருந்தனர். 

பேச்சும் கலகலப்புமாய் இருந்தபோதும் அவற்றையும் மீறி அனைவரின் முகத்திலும் ஒரு வேதனை இழையோடியது. ஒரு சிலரின் கண்களில் நீர் தேங்கி நின்றது. சொல்லமுடியாத வேதனையோடு பேச முடியாமல் சிலர் அமைதியாய்ப் பெட்டியை அடுக்கிக் கொண்டிருந்தனர். 

இருக்காதா? ஆறு வருடங்களாய் ஒன்றாகவே சாப்பிட்டு உறங்கி வாழ்ந்த இடமாயிற்றே. இன்றோடு அந்தப் பந்தம் முடிவடைகிறது. நாளை முதல் அவரவர் ஊரைப் பார்த்துப் போக வேண்டியதுதான். ஒவ்வொருவர் வசதிப்படி மேலே படிக்கலாம். இல்லை, வேலைக்குப் போகலாம். 

இல்லையென்றால் படித்தது போதும் என்று திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடலாம். எப்படிப் பார்த்தாலும் இனி ஒன்றாக இதேபோல் கூடி வாழ முடியாது. பேசிக் களிக்க முடியாது. ஒருவருக்கொருவர் இன்பத்தையோ துன்பத்தையோ பகிர்ந்து கொள்ள முடியாது. 

தொலைபேசி, கடிதம் மூலம் நட்பைத் தொடர்ந்து கொள்ளலாம் என்றாலும், காலப்போக்கில் அதுவும் குறைந்து நாளடைவில் நின்றே விடலாம். குடும்பம், குழந்தைகள் என்றானபின் மற்றவைகளுக்கு ஏது நேரம்? பல்வேறு சிந்தனைகளும் வருத்த அந்தத் தோழியர் கூட்டம் மட்டும் வெகு அமைதியாய் இருந்தது. 

அங்கிருந்த அனைவரின் முகத்திலும் ஒரு பணக்காரத் தோற்றம் தெரிய, அவர்களில் இருந்து தனித்துத் தெரிந்தாள் நீலவேணி. அவள் கைகளில் அந்தச் சிறிய ஸ்படிக லிங்கம் இருக்க, அதை ஆசையாய் வருடினாள். 

சென்ற முறை பொருட்காட்சிக்குச் சென்றபோது தோழி உமா, அவள் நினைவாக வாங்கித் தந்தது. அந்த நேரம் ஊரிலிருந்து பணம் வரத் தாமதமானதால் நீலவேணியால் உமாவிற்கு எதுவும் வாங்கித் தர முடியாமல் போனது. நேற்றுப் பரிட்சை முடிந்தபிறகு கடைகடையாய் ஏறி ஒரு அழகான பிள்ளையார் பொம்மை வாங்கி வைத்திருந்தாள். 

இன்று கொடுத்துவிட வேண்டும். பிறகு மறந்துவிடும். கையிலிருந்த ஸ்படிக லிங்கத்தைப் பக்தியோடு கண்களில் ஒற்றிக்கொண்டு பெட்டிக்குள் பத்திரப்படுத்தினாள். கைப்பையைத் திறந்து அந்தப் பரிசுப் பொட்டலத்தை எடுத்தாள். 

உமா தனது புத்தகங்களை அட்டைப் பெட்டியில் அடுக்கிக் கட்டிக் கொண்டிருக்க, அவளிடம் அதை நீட்டினாள் நீலவேணி. 

"உமா! இந்தாடி, என்னால முடிஞ்ச சின்ன கிஃப்ட். வாங்கிக்கோ..." 

"கிஃப்ட்டா? எனக்கு எதுக்குப்பா?" 

"நாம பிரியப் போறோமில்ல... என் நினைவா வெச்சிக்க. இதைப் பார்க்கும் போதெல்லாம் என் நினைவு உனக்கு வருமில்ல...?" 

"ஏய், இதைப் பார்த்தாத்தான் உன் ஞாபகம் வருமா... யார் சொன்னது? உன்னைப் பார்க்காம எப்படி இருக்கப் போறேனோ... அதை நினைச்சுத்தான் எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு..." 

"உன் கவலையெல்லாம் இன்னும் ஒரு மாசம்தான். அடுத்த மாசம்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறியே! அப்புறம் உனக்கு எப்படி எங்க நினைப்பு வருமாம். உன் நினைப்பெல்லாம் உன் ஹஸ்பண்ட் மேலதானே இருக்கும்!" என்றவாறு அருகில் வந்தாள் ரஞ்சனி. 

அவள் கையில் ஷாம்பூ பாட்டில், சோப்பு டப்பா, பேஸ்ட், பிரஷ், சில ஹேர்பின்ஸ் எல்லாம் இருந்தன. 

"ஏய் ஜெய்! இந்தா உன்னோட பிரஷ். பாத்ரூம்ல இருந்தது. யாரும் எதையும் மிஸ் பண்ணிடாதீங்க. இந்தா விஜி! உன்னோட ஷாம்பூ பாட்டில்..." எனத் தோழிகளிடம் கொடுத்தாள். 

தோழிகளில் ரஞ்சனிக்கு எப்பவுமே பொறுப்பு அதிகம்தான். ஒரு பொருளையும் வீணாக்கமாட்டாள். அடுத்தவர் பொருள்களை யூஸ் பண்ணவும் மாட்டாள். யாரிடமும் எதற்கும் கையேந்தவும் மாட்டாள். தோழியர் நன்றியோடு தங்கள் பொருள்களை வாங்கிக் கொள்ள, உமா அவளை முறைத்தாள். 

"ஏய்! இப்ப ஏன்டி என் கல்யாணப் பேச்சை எடுக்கிறே?" 

"உண்மையைத்தானே சொன்னேன். நிச்சயமே நடந்து முடிஞ்சாச்சு. தேதியும் முடிவாகிப் போச்சு. பிறகென்ன? ஜாலியா லைஃப்ல செட்டிலாகிட வேண்டியதுதானே!" 

"நீ என்னடி பண்ணப்போறே... எப்போ கல்யாணம்?" 

"அதுக்கு இன்னும் நிறையக் காலம் ஆகும்ப்பா. எனக்கு ரெண்டு அக்கா இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்காங்க. அவங்க கல்யாணத்திற்குன்னு எதுவும் சேர்த்து வைக்காம என்னைச் செலவழிச்சுப் படிக்க வெச்சிருக்காங்க… ஸோ... உடனடியா ஒரு வேலை பார்த்துச் சம்பாதிச்சு எங்க அக்காக்களுக்கு மேரேஜ் பண்ணிட்டு அம்மா, அப்பாவுக்குக் கொஞ்சம் சேமிப்பு சேர்த்து வெச்சிட்டு அதுக்கப்புறம்தான் என் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கணும்." 

"அப்போ எத்தனை வயசுல கல்யாணம் பண்ணுவே?" என்றாள் விஜி. 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 7, 2023
ISBN9798223456193
உன்னை நானறிவேன்…

Read more from Kalaivani Chokkalingam

Related to உன்னை நானறிவேன்…

Related ebooks

Related categories

Reviews for உன்னை நானறிவேன்…

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    உன்னை நானறிவேன்… - Kalaivani Chokkalingam

    1

    கிண்டி. அந்தக் கல்லூரி மாணவியர் விடுதி நள்ளிரவைத் தாண்டியும் உறங்காமல் விழித்திருந்தது. அனைத்து அறைகளும் வெளிச்சமாய்த் தெரிய அனைத்திலும் உள்ள மாணவியர் பேச்சும் சிரிப்புமாய்த் தங்களது உடைமைகளைச் சேகரித்து அடுக்கிக் கொண்டிருந்தனர்.

    பேச்சும் கலகலப்புமாய் இருந்தபோதும் அவற்றையும் மீறி அனைவரின் முகத்திலும் ஒரு வேதனை இழையோடியது. ஒரு சிலரின் கண்களில் நீர் தேங்கி நின்றது. சொல்லமுடியாத வேதனையோடு பேச முடியாமல் சிலர் அமைதியாய்ப் பெட்டியை அடுக்கிக் கொண்டிருந்தனர்.

    இருக்காதா? ஆறு வருடங்களாய் ஒன்றாகவே சாப்பிட்டு உறங்கி வாழ்ந்த இடமாயிற்றே. இன்றோடு அந்தப் பந்தம் முடிவடைகிறது. நாளை முதல் அவரவர் ஊரைப் பார்த்துப் போக வேண்டியதுதான். ஒவ்வொருவர் வசதிப்படி மேலே படிக்கலாம். இல்லை, வேலைக்குப் போகலாம்.

    இல்லையென்றால் படித்தது போதும் என்று திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடலாம். எப்படிப் பார்த்தாலும் இனி ஒன்றாக இதேபோல் கூடி வாழ முடியாது. பேசிக் களிக்க முடியாது. ஒருவருக்கொருவர் இன்பத்தையோ துன்பத்தையோ பகிர்ந்து கொள்ள முடியாது.

    தொலைபேசி, கடிதம் மூலம் நட்பைத் தொடர்ந்து கொள்ளலாம் என்றாலும், காலப்போக்கில் அதுவும் குறைந்து நாளடைவில் நின்றே விடலாம். குடும்பம், குழந்தைகள் என்றானபின் மற்றவைகளுக்கு ஏது நேரம்? பல்வேறு சிந்தனைகளும் வருத்த அந்தத் தோழியர் கூட்டம் மட்டும் வெகு அமைதியாய் இருந்தது.

    அங்கிருந்த அனைவரின் முகத்திலும் ஒரு பணக்காரத் தோற்றம் தெரிய, அவர்களில் இருந்து தனித்துத் தெரிந்தாள் நீலவேணி. அவள் கைகளில் அந்தச் சிறிய ஸ்படிக லிங்கம் இருக்க, அதை ஆசையாய் வருடினாள்.

    சென்ற முறை பொருட்காட்சிக்குச் சென்றபோது தோழி உமா, அவள் நினைவாக வாங்கித் தந்தது. அந்த நேரம் ஊரிலிருந்து பணம் வரத் தாமதமானதால் நீலவேணியால் உமாவிற்கு எதுவும் வாங்கித் தர முடியாமல் போனது. நேற்றுப் பரிட்சை முடிந்தபிறகு கடைகடையாய் ஏறி ஒரு அழகான பிள்ளையார் பொம்மை வாங்கி வைத்திருந்தாள்.

    இன்று கொடுத்துவிட வேண்டும். பிறகு மறந்துவிடும். கையிலிருந்த ஸ்படிக லிங்கத்தைப் பக்தியோடு கண்களில் ஒற்றிக்கொண்டு பெட்டிக்குள் பத்திரப்படுத்தினாள். கைப்பையைத் திறந்து அந்தப் பரிசுப் பொட்டலத்தை எடுத்தாள்.

    உமா தனது புத்தகங்களை அட்டைப் பெட்டியில் அடுக்கிக் கட்டிக் கொண்டிருக்க, அவளிடம் அதை நீட்டினாள் நீலவேணி.

    உமா! இந்தாடி, என்னால முடிஞ்ச சின்ன கிஃப்ட். வாங்கிக்கோ...

    கிஃப்ட்டா? எனக்கு எதுக்குப்பா?

    நாம பிரியப் போறோமில்ல... என் நினைவா வெச்சிக்க. இதைப் பார்க்கும் போதெல்லாம் என் நினைவு உனக்கு வருமில்ல...?

    ஏய், இதைப் பார்த்தாத்தான் உன் ஞாபகம் வருமா... யார் சொன்னது? உன்னைப் பார்க்காம எப்படி இருக்கப் போறேனோ... அதை நினைச்சுத்தான் எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு...

    உன் கவலையெல்லாம் இன்னும் ஒரு மாசம்தான். அடுத்த மாசம்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறியே! அப்புறம் உனக்கு எப்படி எங்க நினைப்பு வருமாம். உன் நினைப்பெல்லாம் உன் ஹஸ்பண்ட் மேலதானே இருக்கும்! என்றவாறு அருகில் வந்தாள் ரஞ்சனி.

    அவள் கையில் ஷாம்பூ பாட்டில், சோப்பு டப்பா, பேஸ்ட், பிரஷ், சில ஹேர்பின்ஸ் எல்லாம் இருந்தன.

    ஏய் ஜெய்! இந்தா உன்னோட பிரஷ். பாத்ரூம்ல இருந்தது. யாரும் எதையும் மிஸ் பண்ணிடாதீங்க. இந்தா விஜி! உன்னோட ஷாம்பூ பாட்டில்... எனத் தோழிகளிடம் கொடுத்தாள்.

    தோழிகளில் ரஞ்சனிக்கு எப்பவுமே பொறுப்பு அதிகம்தான். ஒரு பொருளையும் வீணாக்கமாட்டாள். அடுத்தவர் பொருள்களை யூஸ் பண்ணவும் மாட்டாள். யாரிடமும் எதற்கும் கையேந்தவும் மாட்டாள். தோழியர் நன்றியோடு தங்கள் பொருள்களை வாங்கிக் கொள்ள, உமா அவளை முறைத்தாள்.

    ஏய்! இப்ப ஏன்டி என் கல்யாணப் பேச்சை எடுக்கிறே?

    உண்மையைத்தானே சொன்னேன். நிச்சயமே நடந்து முடிஞ்சாச்சு. தேதியும் முடிவாகிப் போச்சு. பிறகென்ன? ஜாலியா லைஃப்ல செட்டிலாகிட வேண்டியதுதானே!

    நீ என்னடி பண்ணப்போறே... எப்போ கல்யாணம்?

    அதுக்கு இன்னும் நிறையக் காலம் ஆகும்ப்பா. எனக்கு ரெண்டு அக்கா இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்காங்க. அவங்க கல்யாணத்திற்குன்னு எதுவும் சேர்த்து வைக்காம என்னைச் செலவழிச்சுப் படிக்க வெச்சிருக்காங்க… ஸோ... உடனடியா ஒரு வேலை பார்த்துச் சம்பாதிச்சு எங்க அக்காக்களுக்கு மேரேஜ் பண்ணிட்டு அம்மா, அப்பாவுக்குக் கொஞ்சம் சேமிப்பு சேர்த்து வெச்சிட்டு அதுக்கப்புறம்தான் என் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கணும்.

    அப்போ எத்தனை வயசுல கல்யாணம் பண்ணுவே? என்றாள் விஜி.

    எத்தனை வயசு ஆனா என்னப்பா? நம்மைவிட மூத்தவரா மாப்பிள்ளை கிடைச்சாப் போதும். எத்தனை மாப்பிள்ளைங்க நாற்பது வயசு வரை கல்யாணம் பண்ணாம இருக்காங்க. அதுல ஏதாவது ஒண்ணைப் பார்த்துக் கட்டிக்க வேண்டியதுதான்! ரஞ்சனி இயல்பாய்ச் சொல்ல, நீலவேணி மறுத்தாள்.

    அப்படியெல்லாம் சொல்லாதே ரஞ்சு. உன் அழக்கும் பொறுமைக்கும் உன் குணத்துக்கும் ராஜகுமாரன் மாதிரி மாப்பிள்ளை கிடைப்பார் பாரேன்...!

    அப்படியா சொல்றே நீலு. எதுக்கும் அப்படி ஒரு ராஜகுமாரன் ஒரு நாலஞ்சு வருஷம் கழிச்சே கிடைக்கட்டும். அதுவரை என் பார்வையில் விழ வேண்டாம்.

    சரி, மத்தவங்க கதை இருக்கட்டும். நீலு! நீ சொல்லு. இனிமே என்ன பண்ணப்போறே? நாங்கள்லாம் சிட்டியில இருக்கோம். எப்படியும் ஏதாவது வேலையில சேர்ந்திடுவோம். நீ வில்லேஜுக்குப் போறியே... அங்கே போய் என்ன பண்ணுவ? என்றாள் ஜெயந்தி.

    போன வருஷமே எங்க ஊருக்குப் பக்கத்தில காலேஜ் வந்திருச்சுப்பா. எங்க அம்மா எனக்கு வேலைக்குச் சொல்லி வெச்சிட்டாங்க. அதனால பிரச்சனை இல்லை. ரிசல்ட் வந்து சர்டிபிகேட் கிடைச்சதும் வேலையில ஜாய்ன்ட் பண்ணிடுவேன், என்றாள் கண்கள் மின்ன.

    ம்... நீ லக்கிதான். கல்லூரியே இல்லாத ஊர்ல பொறந்து வளர்ந்து சென்னையில் வந்து படிச்சு, இப்போ உங்க ஊரிலேயே காலேஜ் லெக்சரரா ஆகப் போற. இது பெரிய விஷயம்தான்.

    உமா இடையில் புகுந்தாள்.

    இது என்னடி பெரிய விஷயம். நாமெல்லாம் நம்ம பேருக்குப் பின்னால ஒரு டிகிரி போடணுமேன்னு படிச்சோம். ஆனா நீலு அப்படியில்லையே... அவளுடைய கனவு, லட்சியம் எல்லாமே படிப்பு மட்டும்தானே!

    ஆமா! அதான் எப்பவுமே காலேஜ் ஃபர்ஸ்ட்டா இருக்கா. பாவம்! சதா இவ பின்னாடியே அலைஞ்சு படிப்பைக் கோட்டை விட்டுட்டான். விஜி சொன்னதும் நீலவேணியின் முகம் கறுத்தது.

    நானா அவனை என் பின்னால் அலையச் சொன்னேன். படிக்க வேண்டிய வயதில் படிக்காமல் பெண்களின் பின்னால் அலைந்தால் இப்படித்தான் நிற்க வேண்டும்.

    ஆனாலும் சதா நல்லவன் நீலு. நீ கொஞ்சம் இறங்கி வந்திருக்கலாம்.

    ஜெய்! ஸ்டாப் இட். படிக்கிற வயதில் இப்படி மனதை அலையவிட்டால் நம் தரம் இறங்கிப் போய்விடும். என்மீது நம்பிக்கை வைத்து ஐந்நூறு கிலோ மீட்டர் தூரம் அனுப்பிப் படிக்க வைத்த என் பெற்றோர்களை ஏமாற்றச் சொல்கிறாயா? இதற்காகவா என்னைப் படிக்க வைத்தார்கள்? நீலவேணியின் முகம் கோபத்தால் சிவந்தது.

    உமா இடையில் வந்து தோழியைப் பரிவாய் அணைத்துக் கொண்டாள்.

    நீலு! இவள் பேச்சைக் கேட்டு நீ ஏன் டென்ஷன் ஆகிறாய்? இவள் எப்போதும் இப்படித்தான். தேவையற்ற பேச்சுகளைப் பேசி நம் நேரத்தை வீணாக்குவாள். பார், மணி நான்கு. உனக்கு ஆறு மணிக்கு டிரெயின் என்றாயே. லக்கேஜை ப்ரிப்பேர் பண்ணு...

    நீலவேணியின் முகம் இளகியது.

    சரிப்பா! இந்த கிஃப்ட்டைப் பிரிச்சுப் பார்! எனக் கையிலிருந்த பரிசுப் பொருளை நீட்டினாள்.

    விடமாட்டியே... சரி, தா! என்றவாறு வாங்கி ஆர்வமாய்ப் பிரித்தவள், வாயைப் பிளந்தாள்.

    அவளுக்கு மிகவும் பிடித்த பிள்ளையார். அழகாய், அம்சமாய் அமர்ந்திருந்தார். தோழியைச் சந்தோஷமாகக் கட்டிக் கொண்டாள் உமா.

    தேங்க்ஸ்டி. எப்படி செலக்ட் பண்ண? ரொம்ப சூப்பரா இருக்கு.

    நிஜமாவே பிடிச்சிருக்கா உமா? உனக்குப் பிள்ளையாருன்னா ரொம்பப் பிடிக்குமே. அதான் வாங்கினேன்.

    ரொம்பத் தேங்க்ஸ்டி. நான் இவரைப் பத்திரமா வெச்சுப்பேன்.

    சிரித்துக்கொண்டே பெட்டியை மூடினாள் நீலவேணி.

    உமா! நான் போய்க் குளிச்சிட்டு வந்திடுறேன். அப்பத்தான் புறப்படச் சரியா இருக்கும்.

    ம்... ம்... போ. நானும் கிளம்பறேன். நாம கிளம்பியதும் காருக்குப் போன் பண்ணுவோம். நான் வந்து உன்னை ரயிலேத்தி விடுறேன்.

    உனக்கு ஏன்டி சிரமம். நான் ஆட்டோ பிடிச்சுப் போயிடுறேன்.

    மூச்! அந்தப் பேச்சே இருக்கக்கூடாது. ட்ரெயின் கிளம்புற வரைக்கும் உன்கூடப் பேசிட்டு இருக்கலாம்னு ஆசையா வர்றேன். இப்படி எதையாவது பேசிக் கோபத்தை உண்டுபண்ணிடாதே... போ... போய்க் குளி.

    நீ எப்போ வீட்டுக்குப் போகப்போற?

    எனக்கென்னடி! இதோ இருக்கிற அரக்கோணம் தானே... வீட்டுக்குப் போன் பண்ணினா அண்ணன் காரை எடுத்திட்டு வந்திடுவான். உன்னை அனுப்பியதும் நானும் கிளம்ப வேண்டியதுதான்.

    சரிப்பா. நான் குளிச்சிட்டு வர்றேன்... மாற்றுவதற்குத் தேவையான உடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள் நீலவேணி.

    இந்த விடுதியில் குளிக்கும் கடைசிக் குளியல். சொந்த ஊரில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு மேலே படிக்க வேண்டும் என்று அடம்பிடித்ததில்... அம்மா அறிந்தவர் தெரிந்தவர் மூலம் சென்னையில் வந்து சேர்த்தாள். ஊரில் அம்மாவைத் தெரியாத ஆட்களே கிடையாது. அவளுடைய பணி அத்தகையது. ஊரில் ஒருவர் நுழைந்து கிருஷ்ணவேணி வீடு எது என்றால் சிறு குழந்தைகள் கூடக் கை காட்டிவிடும். அத்தனை பிரபலம் அம்மா!

    முதன்முறையாய் இந்த விடுதியில் வந்து விட்டுவிட்டு, "நம் குலத்தொழில் நம்மோடு போகட்டும், கண்ணம்மா. ஊர் ஊரா போய் நான் படும் பாடு போதும். நீயாவது படித்து நல்ல உத்தியோகத்தில் சேர வேண்டும். கிருஷ்ணவேணி மகளா நீ!’ என்று கேட்கும்படி உயர வேண்டும்.

    அப்பத்தான் உனக்கேற்றபடி அந்தஸ்தான மாப்பிள்ளை கிடைக்கும். என் காலம்தான் இப்படியே போராட்டமாப் போச்சு. இனி உன் படிப்புலதான் நம்ம எதிர்காலமே இருக்கு. இவ்ளோ தொலைவுல வந்து சேர்த்திருக்கிறேன். மானம், மரியாதை குறைஞ்சிடாம பார்த்துக்கம்மா. கருத்தா படிம்மா. நீ என்ன படிக்கணுமோ படி. படிச்சு முடிச்சதும், யார் கால்ல விழுந்தாவது உன்னை வேலையில் சேர்த்திடுவேன்..." என்றுதான் இங்கே வந்து விட்டாள் அம்மா.

    முதலில் ஒரு டிகிரி முடித்துவிட்டு பி.எட்., படிப்பை முடித்து ஆசிரியைப் பணியில் சேர்ந்துவிடலாம் என்றுதான் பி.எஸ்ஸி.யில் சேர்ந்தாள் நீலவேணி. ஆனால் படிப்பின் மீதிருந்த ஆர்வம், மேலும் படிக்கத் தூண்ட, அடுத்து எம்.எஸ்ஸி., எம்.ஃபில்., வரை படிக்கத் தூண்டியது.

    இதில் அவளது கல்வித் திறமையைக் கண்டு கல்லூரியே அவளது படிப்புச் செலவில் பாதியை ஏற்றுக்கொள்ள, அதையே பயன்படுத்திச் சிறப்பாய்ப் படித்தாள் நீலவேணி. படித்து முடித்ததும் தங்கள் கல்லூரியிலேயே பணியிடம் தருவதாகக் கல்லூரி நிர்வாகம் சொன்னபோது பணிவாய் மறுத்துவிட்டாள்.

    தன் அன்னைக்கு ஒரே பெண் அவள். இத்தனை வருடம் பிரிந்து இருந்ததே அதிகம். இதற்கு மேலும் பிரியக்கூடாது. ஊரில் உள்ள

    Enjoying the preview?
    Page 1 of 1