Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

எழுதுகிறேன் ஒரு கடிதம்..!
எழுதுகிறேன் ஒரு கடிதம்..!
எழுதுகிறேன் ஒரு கடிதம்..!
Ebook139 pages52 minutes

எழுதுகிறேன் ஒரு கடிதம்..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முழுவதுமாய் இருள் விலகாத காலைப்பொழுதில் சென்னை மாநகரத்தை வந்து சேர்ந்தது அந்த தனியார் பேருந்து. உள்ளே விளக்குகள் அனைத்தும் உயிர்பெற, இருக்கையில் கண்மூடி அமர்ந்திருந்த நகுலன் கண்களைத் திறந்தான். இரவெல்லாம் உறங்காத கண்கள் செவ்வானமாய் சிவந்திருக்க, தலையைத் திருப்பி வெளியே பார்த்தான்.
 கோயம்பேடு பேருந்து நிறுத்தம் வெளிச்சத்தோடும் ஜன வெள்ளத்தோடும் தென்பட, இருக்கையை விட்டு எழுந்து மேலே வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டான்.
 அரைகுறை தூக்கத்தில் இருந்தவர்கள் அவரவர் உடைமைகளை எடுத்துக்கொண்டு முண்டியடித்துக் கொண்டு இறங்க, எவ்வித பதட்டமும் இன்றி நிதானமாய் அவர்களைப் பின் தொடர்ந்து இறங்கினான்.
 "நகுல்! இதோ...இங்கே"
 சித்ராங்கதனின் குரல் வந்த திசையில் திரும்ப, கையசைத்தவாறே அவனை நெருங்கியவன், நகுலனிடமிருந்து பையை வாங்கிக் கொண்டே, உற்சாகமாய் தோளைத் தட்டினான்.
 "வாடா மாப்பிள்ளை! வெல்கம் டூ சென்னை!"
 "ம்! எப்படி இருக்கே சித்து?"
 "எனக்கென்னடா சூப்பரா இருக்கேன். ஊர்ல அம்மா அப்பா... தங்கச்சிங்க..."
 "எல்லாரும் நல்லா இருக்காங்க!"
 "என்னடா ரொம்ப டயர்டா இருக்க? பஸ்ல தூங்கலயா?"
 "ம்ப்ச்! தூக்கம் வரலசரி வா! ஒரு டீ சாப்பிட்டு கிளம்பலாம். ரூம்ல போய் நல்லா தூங்கலாம். எனக்கும் இன்னிக்கு லீவுதான். சாயந்திரமா உன் மாமா வீட்டுக்கு போகலாம்" – என்று டீக்கடையை நோக்கி சித்ராங்கதன் நடக்க, நகுலனின் நடை தடைப்பட்டது.
 "மாமா வீட்டுக்கா? எதுக்கு?"
 "என்னடா இப்படிக் கேட்கிற? இவ்வளவு தூரம் வந்திட்டு உன் மாமாவை பார்க்காமல் போனால் உன் அம்மா திட்ட மாட்டாங்க?"
 "நான் மாமாவைப் பார்க்கவும் விரும்பல. திரும்பவும் ஊருக்கும் போகப்போறதில்ல." நகுலன் கசப்பாய்ச் சொல்ல, லேசாய் திடுக்கிட்டான் சித்ராங்கதன்.
 "மாப்பிள்ளை! நீ என்ன சொல்ற?"
 "நான் உங்கூடவே தங்கியிருந்து ஏதாவது வேலை தேடிக்கிறேன் சித்து. அதுவரைக்கும் எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு! வேலை கிடைச்சதும் என் பங்கு வாடகையை நான் தந்திடுறேன்"
 "டேய்! உனக்கு என்னடா தலையெழுத்து? எங்களுக்குத்தான் ஊர்ல சொத்து சுகம்னு எதுவும் இல்ல. இங்கே வந்து ஒண்டுக் குடித்தினத்தில் தங்கியிருந்து நாயாய் உழைச்சி பாதிய ஊர்ல உள்ள குடும்பத்துக்கு அனுப்பிட்டு மிச்சம் மீதியை வெச்சு வயித்தைக் கழுவிட்டு இருக்கோம்! உனக்கென்னடா...வீடு வாசல்... அப்பாவோட நகைக்கடை… ஜவுளிக்கடைன்னு எல்லாமே இருக்கே! கல்லாவில் உட்கார்ந்து காசை எண்ணிப் போடுவியா...? அதை விட்டுட்டு..."
 "எல்லாம் இருக்கு சித்து! ஆனா... எனக்கு எதுவுமே இல்ல."
 "நகுல்?"
 "ப்ளீஸ் சித்து! இதுக்கு மேலே என்னை எதுவும் கேட்காதே! உனக்கு சிரமம்னா என்னை ஏதாவது ஒரு மேன்ஷன்ல இறக்கி விட்டுடு! நான்..."ஏய்…ஏய்! நான் இருக்கும் போது நீ ஏன்டா எங்கேயோ போய் தங்கணும்? நான் எதுவும் கேட்கல. வா" - என்றவன் காலை நேர மெல்லிசையோடு இயங்கிக் கொண்டிருந்த தேநீர்கடையை அடைந்ததும் நின்றான்.
 "நகுல்! டீயா காபியா?"
 "காபி!"
 "அண்ணே! ரெண்டு காபி! நகுல்! உளுந்தவடை போட்டுட்டு இருக்காங்க. சூடாய் ரெண்டு சாப்பிடுறியா?'
 "வேணாம் சித்து! காபி மட்டும் போதும்" - என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் வேடிக்கை பார்க்கத் துவங்கிவிட, சித்ராங்கதன் குழப்பமாய் பணத்தைக் கொடுத்துவிட்டு காப்பிக் கோப்பையோடு நண்பனை நெருங்கினான்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 7, 2023
ISBN9798223183037
எழுதுகிறேன் ஒரு கடிதம்..!

Read more from Kalaivani Chokkalingam

Related to எழுதுகிறேன் ஒரு கடிதம்..!

Related ebooks

Related categories

Reviews for எழுதுகிறேன் ஒரு கடிதம்..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    எழுதுகிறேன் ஒரு கடிதம்..! - Kalaivani Chokkalingam

    1

    முழுவதுமாய் இருள் விலகாத காலைப்பொழுதில் சென்னை மாநகரத்தை வந்து சேர்ந்தது அந்த தனியார் பேருந்து. உள்ளே விளக்குகள் அனைத்தும் உயிர்பெற, இருக்கையில் கண்மூடி அமர்ந்திருந்த நகுலன் கண்களைத் திறந்தான். இரவெல்லாம் உறங்காத கண்கள் செவ்வானமாய் சிவந்திருக்க, தலையைத் திருப்பி வெளியே பார்த்தான்.

    கோயம்பேடு பேருந்து நிறுத்தம் வெளிச்சத்தோடும் ஜன வெள்ளத்தோடும் தென்பட, இருக்கையை விட்டு எழுந்து மேலே வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டான்.

    அரைகுறை தூக்கத்தில் இருந்தவர்கள் அவரவர் உடைமைகளை எடுத்துக்கொண்டு முண்டியடித்துக் கொண்டு இறங்க, எவ்வித பதட்டமும் இன்றி நிதானமாய் அவர்களைப் பின் தொடர்ந்து இறங்கினான்.

    நகுல்! இதோ...இங்கே

    சித்ராங்கதனின் குரல் வந்த திசையில் திரும்ப, கையசைத்தவாறே அவனை நெருங்கியவன், நகுலனிடமிருந்து பையை வாங்கிக் கொண்டே, உற்சாகமாய் தோளைத் தட்டினான்.

    வாடா மாப்பிள்ளை! வெல்கம் டூ சென்னை!

    ம்! எப்படி இருக்கே சித்து?

    எனக்கென்னடா சூப்பரா இருக்கேன். ஊர்ல அம்மா அப்பா... தங்கச்சிங்க...

    எல்லாரும் நல்லா இருக்காங்க!

    என்னடா ரொம்ப டயர்டா இருக்க? பஸ்ல தூங்கலயா?

    ம்ப்ச்! தூக்கம் வரல

    சரி வா! ஒரு டீ சாப்பிட்டு கிளம்பலாம். ரூம்ல போய் நல்லா தூங்கலாம். எனக்கும் இன்னிக்கு லீவுதான். சாயந்திரமா உன் மாமா வீட்டுக்கு போகலாம் – என்று டீக்கடையை நோக்கி சித்ராங்கதன் நடக்க, நகுலனின் நடை தடைப்பட்டது.

    மாமா வீட்டுக்கா? எதுக்கு?

    என்னடா இப்படிக் கேட்கிற? இவ்வளவு தூரம் வந்திட்டு உன் மாமாவை பார்க்காமல் போனால் உன் அம்மா திட்ட மாட்டாங்க?

    நான் மாமாவைப் பார்க்கவும் விரும்பல. திரும்பவும் ஊருக்கும் போகப்போறதில்ல. நகுலன் கசப்பாய்ச் சொல்ல, லேசாய் திடுக்கிட்டான் சித்ராங்கதன்.

    மாப்பிள்ளை! நீ என்ன சொல்ற?

    நான் உங்கூடவே தங்கியிருந்து ஏதாவது வேலை தேடிக்கிறேன் சித்து. அதுவரைக்கும் எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு! வேலை கிடைச்சதும் என் பங்கு வாடகையை நான் தந்திடுறேன்

    டேய்! உனக்கு என்னடா தலையெழுத்து? எங்களுக்குத்தான் ஊர்ல சொத்து சுகம்னு எதுவும் இல்ல. இங்கே வந்து ஒண்டுக் குடித்தினத்தில் தங்கியிருந்து நாயாய் உழைச்சி பாதிய ஊர்ல உள்ள குடும்பத்துக்கு அனுப்பிட்டு மிச்சம் மீதியை வெச்சு வயித்தைக் கழுவிட்டு இருக்கோம்! உனக்கென்னடா...வீடு வாசல்... அப்பாவோட நகைக்கடை… ஜவுளிக்கடைன்னு எல்லாமே இருக்கே! கல்லாவில் உட்கார்ந்து காசை எண்ணிப் போடுவியா...? அதை விட்டுட்டு...

    எல்லாம் இருக்கு சித்து! ஆனா... எனக்கு எதுவுமே இல்ல.

    நகுல்?

    ப்ளீஸ் சித்து! இதுக்கு மேலே என்னை எதுவும் கேட்காதே! உனக்கு சிரமம்னா என்னை ஏதாவது ஒரு மேன்ஷன்ல இறக்கி விட்டுடு! நான்...

    ஏய்…ஏய்! நான் இருக்கும் போது நீ ஏன்டா எங்கேயோ போய் தங்கணும்? நான் எதுவும் கேட்கல. வா - என்றவன் காலை நேர மெல்லிசையோடு இயங்கிக் கொண்டிருந்த தேநீர்கடையை அடைந்ததும் நின்றான்.

    நகுல்! டீயா காபியா?

    காபி!

    "அண்ணே! ரெண்டு காபி! நகுல்! உளுந்தவடை போட்டுட்டு இருக்காங்க. சூடாய் ரெண்டு சாப்பிடுறியா?’

    வேணாம் சித்து! காபி மட்டும் போதும் - என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் வேடிக்கை பார்க்கத் துவங்கிவிட, சித்ராங்கதன் குழப்பமாய் பணத்தைக் கொடுத்துவிட்டு காப்பிக் கோப்பையோடு நண்பனை நெருங்கினான்.

    இந்தா! காபி சாப்பிடு!

    தேங்க்ஸ்‌!

    டேய்! என்னடா இது காயம்? சித்ராங்கதன் பதற,

    அலட்சியமாய் தன் இடதுகை மணிக்கட்டைப் பார்த்தான். வெள்ளை நிற பாண்டேஜ் கட்டு அவனது ரணத்தை நினைவுபடுத்த சலிப்பாய் உச்ச் கொட்டினான்.

    ம்ப்ச்! ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்!

    ஆக்ஸிடெண்ட்டா? அதெப்படிடா கையில மட்டும் படும்? டாக்டர் கட்டு போட்ட மாதிரி தெரியுது?

    விடு! சின்னக் காயம் தான்!

    பார்த்தால் அப்படித் தெரியலையேடா! கையைக் கிழிச்சிகிட்டியா என்ன?

    இப்பத்தானே என்னை எதுவும் கேட்காதேன்னு சொன்னேன்?

    சரி! கேட்கலை! ஆனா... காயம் பெரிசா தெரியுதேடா?

    இதைவிட பெரிய காயமெல்லாம் இங்கே இருக்கு. இதென்ன ஜூஜூபி அலட்சியமாய் சொன்னவாறே காபியைக் குடித்து முடித்தவனிடம் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை சித்ராங்கதன். இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் நின்ற தன் வாகனத்தை எடுத்துக் கொண்டு வந்து, நகுலனை ஏற்றிக் கொண்டு புறப்பட்டான்.

    பொழுது நன்றாய் புலர்ந்துவிட, சாலையில் கடந்த வாகனங்கள், சாலையோர வியாபாரிகளின் நடைபாதை உறக்கம், வியர்க்க விறுவிறுக்க கைகளை வீசிக்கொண்டே நடைபயிற்சி செய்யும் மனிதர்கள்... காய்கறி வியாபாரம், காதைப்பிளக்கும் வாகன இரைச்சல் அனைத்தையும் கடந்து பூந்தமல்லி செல்லும் சாலையை அடைந்தது வாகனம். இப்போதும் நகுலன் மௌனமாகவே வர சித்ராங்கதன் குரல் கொடுத்தான்.

    மாப்பிள்ளை! உன் போன் என்னாச்சு? நைட் ரெண்டு வாட்டி போன் பண்ணினேன் கிடைக்கவே இல்லை. சார்ஜ் இல்லையா?

    சிம்மே இல்லை!

    என்ன?

    பஸ் ஏறினதை உங்கிட்ட சொல்லிட்டு சிம்மை கழட்டி தூர வீசிட்டேன்.

    ஏய் என்னடா சொல்ற?

    பழைய உறவுகள் எதுவும் வேணாம் சித்து. நாளைக்கு ஒரு புது சிம் வாங்கித் தந்திடு.

    என்னடா இது? அம்மாகிட்டயாவது சொல்லிட்டு வந்தியா இல்லையா?

    2

    "ம்! உங்க புள்ள இன்னியோட செத்துட்டான். இனிமே உங்க கண்ல படமாட்டான். எங்கேயும் தேடி அலையவேண்டாம். எம்பொணம் ஏதாவது ஒரு ஜி.ஹெச்.ல அநாதை பொணமாய் அடையாளம் தெரியாமல் கிடக்கும். விருப்பப்பட்டால் காரியம் பண்ணிடுங்கன்னு ரெக்கார்ட் பண்ணி வெச்சிட்டு வந்திட்டேன்" குரலில் எவ்வித பிசிறும் இன்றி நகுலன் சொல்லிக் கொண்டே போக, பிரேக் இட்டு வண்டியை நிறுத்தித் திகைப்பாய் பின்னால் திரும்பிப் பார்த்தான் சித்ராங்கதன்.

    எ...ன்னடா சொல்ற?

    போதும் சித்து! எல்லாமே வெறுத்துப் போச்சு! யாரும் எதுவும் வேண்டாம்னுதான் வந்திட்டேன்.

    தப்புடா! அம்மா அப்பாவுக்கு நீ ஒத்த ஆண் வாரிசுடா!

    அதை அவங்க யோசிக்கலையே... என்னை விட... என் விருப்பத்தைவிட... என் வாழ்க்கையை விட அவங்களுக்கு பணமும் கௌரவமும்தான் முக்கியமாப்போச்சு. அதான் அதையே கட்டிகிட்டு அழுங்கன்னு சொல்லிட்டு வந்திட்டேன்.

    அப்படியென்னடா கோபம் நீ... யாரையாவது விரும்புனியா நகுல்? - நண்பனின் கண்களை ஊடுருவியவாறே கேட்டான் சித்ராங்கதன். ஆனால் வெறுமையாய் காட்சியளித்த கண்களில் அவனால் எதையும் கண்டு கொள்ள முடியவில்லை.

    சொல்லு நகுல்! உன்னோட லவ்வை வீட்ல ஏத்துக்கலையா? யாருடா அந்தப் பொண்ணு? எங்கே இருக்கா?

    சித்து! நான் இங்கே வந்ததே எல்லாத்தையும் மறக்கணும்னுதான். எதையாவது கேட்டு நீயும் என்னை அனுப்பிடாதே!

    நகுல்?

    "நான் இங்கே வந்தது யாருக்கும் தெரியாது. ஒரு வேலை யாராவது உன்கிட்ட போன் பண்ணிக் கேட்டால் எதையும் சொல்லிடாதே! இது எம்மேலே சத்தியம்!’

    டேய் டேய்!

    வண்டியெடு சித்து! முதல்ல குளிக்கணும் என்றதும் அதற்கு மேல் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இருபது நிமிட பயணத்தில் சற்று குறுகலான சந்துக்குள் நுழைந்து நடுத்தரமான வீட்டின் முன் நிறுத்தினான் சித்ராங்கதன்.

    வா! இதுதான் நம்ம வசந்தமாளிகை!

    என்ன சித்து! வீடுங்க எல்லாம் இவ்வளவு நெரிசலாய் இருக்கு?

    நாலாயிரம் ரூபாய் வாடகைக்கு இந்த ஏரியாவில்தான் வீடு கிடைக்கும். வா! நம்ம போர்ஷன் மாடியில. இதுல ஹவுஸ் ஓனர் இருக்காங்க - என்றவாறு பெயிண்ட் உதிர்ந்து போன அழுக்கடைந்த படிக்கட்டுகளில் ஏறினான் சித்ராங்கதன். அவனைப் பின் தொடர்ந்தவாறே கேட்டான்.

    வீடு பூட்டியிருக்கே! ஹவுஸ் ஓனர் இல்லையா?

    வயசானவங்கடா! வருஷத்தில் பாதிநாள் வெளிநாட்டுல பிள்ளைங்க வீட்டுக்கு போயிடுவாங்க! அப்புறம் கொரோனா டைம்ல பிளைட் எல்லாம் நிறுத்திட்டாங்களா... அதனால் அங்கேயே இருந்திட்டாங்க. அவங்க பையன் மட்டும் சில சமயம் வந்திட்டு போவாரு

    அப்போ வாடகை?

    அதெல்லாம் அக்கவுண்ட்ல போட்டு விட்டுடுவோம். ம். இது தான் நம்ம சமஸ்தானம் என்றவாறு வெறுமனே சாத்தியிருந்த கதவைத் தள்ள,

    Enjoying the preview?
    Page 1 of 1