Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கஸ்தூரி மானே...
கஸ்தூரி மானே...
கஸ்தூரி மானே...
Ebook129 pages47 minutes

கஸ்தூரி மானே...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எத்தனை முயற்சித்தும் பிரச்சனைக்கான தீர்வு கிடைத்தபாடில்லை. வெகுநேரம் சிந்தித்ததின் பயனாக நெற்றிப்பொட்டில் விண்ணென்று தெறிக்க, ஆயாசமாய் நெற்றியை இறுகப் பற்றிக் கொண்டாள் கஸ்தூரி. கட்டிலில் அமர்ந்து தன் உடைமைகளை பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்த வசந்தன் அலட்சியமாய் கேட்டான். 

"இப்ப எதுக்கு இப்படி மண்டையை உடைச்சிட்டு இருக்க? தலைகீழா நின்னாலும் நடப்பதை மாற்ற முடியாது. பேசாம நான் சொல் மாதிரி செய்யுங்க." 

"என்னப்பா சொல்ற?" மகளருகே அமர்ந்திருந்த பரிமளா கேட்க தாயிடம் திரும்பினான். 

"பின்னே என்னம்மா? ஒன்னா ரெண்டா? முழுதாய் ஒன்பது லட்சம் எப்படி அடைப்பீங்க?" 

வெடுக்கென நிமிர்ந்தாள் கஸ்தூரி. எத்தனை சாமர்த்தியமான கேள்வி எப்படி அடைப்போம்? எப்படி அடைக்கலாம் என்று வாய்வார்த்தையாய் கூட தன்னை சம்பந்தப்படுத்தாமல் 'இது உங்க கடன்... எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை' என்பது போல் எத்தனை இலகுவாய் ஒதுங்கிக் கொள்கிறான்? கோபம் தலைக்கேற குரலை உயர்த்தினாள். 

"அண்ணே! இது ஒன்றும் நாங்க ஆடம்பரமாய் வாழவோ, ஊதாரித்தனமாய் செலவு செய்யவோ வாங்கின கடன் இல்ல. அப்பாவுக்காக... அப்பாவோட ஆபரேஷனுக்காக வாங்கின கடன்!" 

"அதைத்தானே நாங்களும் சொல்கிறோம். மாமாவுக்காக வாங்கின கடனை அடைக்க மாமாவோட கடையை விற்பதில் என்ன தப்பு?" -என்ற வசந்தனின் மனைவியை வெறுப்பாய் நோக்கினாள். 

"அண்ணி! அப்பா ஒன்றும் பிள்ளைகுட்டி இல்லாதவர் இல்ல. ஒன்றுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறோம்!" 

"அதற்கு?" 

"அப்பாவின் வைத்தியச் செலவுக்குக் கூட அவரோட கடையைத்தான் விற்கணுமா? ஏன்? நாங்கள்லாம் எதற்கு இருக்கிறோம்?" 

"கஸ்தூரி! இப்ப என்ன சொல்ல வர்ற?" 

"அண்ணா! இந்தக்கடை அப்பா ரொம்பக் கஷ்டப்பட்டு தொடங்கின கடை. நாளைக்கே அப்பா குணமாகி எழுந்தபிறகு பிழைப்பிற்கு என்ன செய்வது? இந்த மாதிரி கடை அமையுமா? அதைவிட கடையை விற்று விட்டோம் என்று தெரிந்தாலே அப்பாவின் உயிர் போய்விடும்." 

"நடக்கிற கதையை பேசு. பைபாஸ் சர்ஜரி பண்ணியதே நம் கண்துடைப்புக்காகத்தான். மற்றபடி அப்பாவால் பழையபடி நடமாட முடியாதுன்னு டாக்டர் சொன்னதை கேட்கலையா நீ?" 

"டாக்டர் என்ன கடவுளா? அப்பா சீக்கிரமே குணமாகிவிடுவாங்க. பழையபடி கடையை பார்த்துப்பாங்க. அந்தக் கடைதான் அப்பாவோட உயிர். அதை விற்க நான் அனுமதிக்கவே மாட்டேன்" கஸ்தூரி உறுதியான குரலில் மறுக்க, கோபமாக கணவனை ஏறிட்டாள் தாரணி. 

"நான் சொல்லல? நம்ம பேச்சை யாரும் கேட்கமாட்டாங்கன்னு. கடை உங்க தங்கை பேர்லதானே இருக்கு? அதை எப்படி அவ விற்கவிடுவாள்? நாம ஏன் சும்மா நேரத்தை வீணாக்கணும்? கிளம்புங்க!" 

"பொறும்மா! எங்கே கிளம்புறீங்க?" பரிமளா பதட்டமாய் எழுந்தாள்.

"ஊருக்கு போறோம். ஏற்கனவே ஒரு வாரம் லீவு போட்டாச்சு. நாளைக்கு வேலையில ஜாய்ன் பண்ணலன்னா சீட்டைக் கிழிச்சு வீட்டுக்கு அனுப்பிடுவாங்க" என்றவாறே அவள் பெட்டிப்படுக்கையோடு தயாராக, வசந்தனும் புறப்பட ஆயத்தமானான். 

"வசந்த்! என்னப்பா! இப்படி திடுதிடுப்புன்னு கிளம்பினால் எப்படி? அப்பாவை நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணனுமே!" 

"அதான் நீங்கள்லாம் இருக்கீங்களேம்மா பரத்தும் இருக்கான். பிறகென்ன?" 

"அவன்... சின்னப்பையன்ப்பா... அவன் எப்படி?" 

"ம்மா! காலேஜ் படிக்கிறவன் சின்னப்பையனா? எல்லாம் பார்த்துப்பான்! இதுக்கு மேலே லீவு போட்டால் சம்பளத்தில பிடிச்சிடுவாங்கம்மா. நாங்க கிளம்புறோம்." 

"அண்ணா! அப்போ கடனுக்கு என்ன பண்றது?" 

"நான்தான் சொல்லிட்டேனே! ஏற்கனவே நாங்க வீட்டுக்கு வாங்கின லோனே கட்டி முடிக்கல். இதில காரும் லோன் போட்டு வாங்கிட்டோம். மொத்தக்கடனும் அடைய எப்படியும் அஞ்சு... இல்ல ஆறு வருஷமாவது ஆயிடும். அதுவரை எங்கிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்காதீங்க. ஸாரி!" என்று கைகளை விரித்த மகனை திகைப்பாய் ஏறிட்டாள் பரிமளா. 

"எ...ன்...னப்பா இப்படிச் சொல்ற?" 

"வேற என்னம்மா செய்ய முடியும்?" 

"இன்னும் ஆஸ்பத்திரிக்கு பணம் கட்டணும்... குறைஞ்சது ஆறு மாதமாவது அப்பா முழு ஓய்வில இருக்கணும். மருத்து மாத்திரை... சாப்பாடு செலவு, பரத்துக்கு படிப்புச் செலவுன்னு எவ்வளவோ இருக்கே..." 

டஅதுக்குத்தான் கடையை வித்திடுங்கன்னு சொல்றோம்." வெடுக்கென கூறிய மருமகளை பரிதாபமாய் பார்த்தாள் பரிமளா. 

 

 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 7, 2023
ISBN9798223665403
கஸ்தூரி மானே...

Read more from Kalaivani Chokkalingam

Related to கஸ்தூரி மானே...

Related ebooks

Related categories

Reviews for கஸ்தூரி மானே...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கஸ்தூரி மானே... - Kalaivani Chokkalingam

    1

    எத்தனை முயற்சித்தும் பிரச்சனைக்கான தீர்வு கிடைத்தபாடில்லை. வெகுநேரம் சிந்தித்ததின் பயனாக நெற்றிப்பொட்டில் விண்ணென்று தெறிக்க, ஆயாசமாய் நெற்றியை இறுகப் பற்றிக் கொண்டாள் கஸ்தூரி. கட்டிலில் அமர்ந்து தன் உடைமைகளை பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்த வசந்தன் அலட்சியமாய் கேட்டான்.

    இப்ப எதுக்கு இப்படி மண்டையை உடைச்சிட்டு இருக்க? தலைகீழா நின்னாலும் நடப்பதை மாற்ற முடியாது. பேசாம நான் சொல் மாதிரி செய்யுங்க.

    என்னப்பா சொல்ற? மகளருகே அமர்ந்திருந்த பரிமளா கேட்க தாயிடம் திரும்பினான்.

    பின்னே என்னம்மா? ஒன்னா ரெண்டா? முழுதாய் ஒன்பது லட்சம் எப்படி அடைப்பீங்க?

    வெடுக்கென நிமிர்ந்தாள் கஸ்தூரி. எத்தனை சாமர்த்தியமான கேள்வி எப்படி அடைப்போம்? எப்படி அடைக்கலாம் என்று வாய்வார்த்தையாய் கூட தன்னை சம்பந்தப்படுத்தாமல் ‘இது உங்க கடன்... எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை’ என்பது போல் எத்தனை இலகுவாய் ஒதுங்கிக் கொள்கிறான்? கோபம் தலைக்கேற குரலை உயர்த்தினாள்.

    அண்ணே! இது ஒன்றும் நாங்க ஆடம்பரமாய் வாழவோ, ஊதாரித்தனமாய் செலவு செய்யவோ வாங்கின கடன் இல்ல. அப்பாவுக்காக... அப்பாவோட ஆபரேஷனுக்காக வாங்கின கடன்!

    அதைத்தானே நாங்களும் சொல்கிறோம். மாமாவுக்காக வாங்கின கடனை அடைக்க மாமாவோட கடையை விற்பதில் என்ன தப்பு? -என்ற வசந்தனின் மனைவியை வெறுப்பாய் நோக்கினாள்.

    அண்ணி! அப்பா ஒன்றும் பிள்ளைகுட்டி இல்லாதவர் இல்ல. ஒன்றுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறோம்!

    அதற்கு?

    அப்பாவின் வைத்தியச் செலவுக்குக் கூட அவரோட கடையைத்தான் விற்கணுமா? ஏன்? நாங்கள்லாம் எதற்கு இருக்கிறோம்?

    கஸ்தூரி! இப்ப என்ன சொல்ல வர்ற?

    அண்ணா! இந்தக்கடை அப்பா ரொம்பக் கஷ்டப்பட்டு தொடங்கின கடை. நாளைக்கே அப்பா குணமாகி எழுந்தபிறகு பிழைப்பிற்கு என்ன செய்வது? இந்த மாதிரி கடை அமையுமா? அதைவிட கடையை விற்று விட்டோம் என்று தெரிந்தாலே அப்பாவின் உயிர் போய்விடும்.

    நடக்கிற கதையை பேசு. பைபாஸ் சர்ஜரி பண்ணியதே நம் கண்துடைப்புக்காகத்தான். மற்றபடி அப்பாவால் பழையபடி நடமாட முடியாதுன்னு டாக்டர் சொன்னதை கேட்கலையா நீ?

    டாக்டர் என்ன கடவுளா? அப்பா சீக்கிரமே குணமாகிவிடுவாங்க. பழையபடி கடையை பார்த்துப்பாங்க. அந்தக் கடைதான் அப்பாவோட உயிர். அதை விற்க நான் அனுமதிக்கவே மாட்டேன் கஸ்தூரி உறுதியான குரலில் மறுக்க, கோபமாக கணவனை ஏறிட்டாள் தாரணி.

    நான் சொல்லல? நம்ம பேச்சை யாரும் கேட்கமாட்டாங்கன்னு. கடை உங்க தங்கை பேர்லதானே இருக்கு? அதை எப்படி அவ விற்கவிடுவாள்? நாம ஏன் சும்மா நேரத்தை வீணாக்கணும்? கிளம்புங்க!

    பொறும்மா! எங்கே கிளம்புறீங்க? பரிமளா பதட்டமாய் எழுந்தாள்.

    ஊருக்கு போறோம். ஏற்கனவே ஒரு வாரம் லீவு போட்டாச்சு. நாளைக்கு வேலையில ஜாய்ன் பண்ணலன்னா சீட்டைக் கிழிச்சு வீட்டுக்கு அனுப்பிடுவாங்க என்றவாறே அவள் பெட்டிப்படுக்கையோடு தயாராக, வசந்தனும் புறப்பட ஆயத்தமானான்.

    வசந்த்! என்னப்பா! இப்படி திடுதிடுப்புன்னு கிளம்பினால் எப்படி? அப்பாவை நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணனுமே!

    அதான் நீங்கள்லாம் இருக்கீங்களேம்மா பரத்தும் இருக்கான். பிறகென்ன?

    அவன்... சின்னப்பையன்ப்பா... அவன் எப்படி?

    ம்மா! காலேஜ் படிக்கிறவன் சின்னப்பையனா? எல்லாம் பார்த்துப்பான்! இதுக்கு மேலே லீவு போட்டால் சம்பளத்தில பிடிச்சிடுவாங்கம்மா. நாங்க கிளம்புறோம்.

    அண்ணா! அப்போ கடனுக்கு என்ன பண்றது?

    நான்தான் சொல்லிட்டேனே! ஏற்கனவே நாங்க வீட்டுக்கு வாங்கின லோனே கட்டி முடிக்கல். இதில காரும் லோன் போட்டு வாங்கிட்டோம். மொத்தக்கடனும் அடைய எப்படியும் அஞ்சு... இல்ல ஆறு வருஷமாவது ஆயிடும். அதுவரை எங்கிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்காதீங்க. ஸாரி! என்று கைகளை விரித்த மகனை திகைப்பாய் ஏறிட்டாள் பரிமளா.

    எ...ன்...னப்பா இப்படிச் சொல்ற?

    வேற என்னம்மா செய்ய முடியும்?

    இன்னும் ஆஸ்பத்திரிக்கு பணம் கட்டணும்... குறைஞ்சது ஆறு மாதமாவது அப்பா முழு ஓய்வில இருக்கணும். மருத்து மாத்திரை... சாப்பாடு செலவு, பரத்துக்கு படிப்புச் செலவுன்னு எவ்வளவோ இருக்கே...

    டஅதுக்குத்தான் கடையை வித்திடுங்கன்னு சொல்றோம்." வெடுக்கென கூறிய மருமகளை பரிதாபமாய் பார்த்தாள் பரிமளா.

    அதுதாம்மா எங்களுக்கு படியளக்கிற சாமி அதை வித்திட்டா எங்க கதி?

    "ஏன் அத்தே? நாங்க என்ன கடையை வித்திட்டு பணத்தை எங்களுக்கு தந்திடுங்கன்னா கேட்கிறோம்? அம்பது லட்சத்துக்கு கடையை கேட்கிறாங்கள்ல? பிறகென்ன? முதல்ல அதை வித்துட்டு கடனை அடைங்க. மிச்ச பணத்தில் பாதியை உங்க பேர்ல பேங்க்ல டெபாசிட் பண்ணிடுங்க. வர்ற வட்டி உங்க சாப்பாட்டுக்கும் மாமாவோட மருந்து செலவுக்கும் தாராளமாய் போதும்.

    மிச்ச பணத்தில் கஸ்தூரிக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி அனுப்புங்க. மாமா தெம்பாய் இருக்கும் போதே கல்யாணத்தை பண்ணிடுறது நல்லது தானே? அதுக்குப் பிறகு பரத்! அவனுக்குத்தான் இன்னும் நாலுமாதத்தில் படிப்பு முடியுதே! பிறகு அவனும் ஒரு வேலையைத் தேடிக்கட்டும்!"

    எப்படியும் மாமா குணமாகி எழுந்து கடையை நடத்த முடியாது. உங்க பிள்ளைகளும் வேலையைத்தான் தேடிப் போவாங்க! பிறகு இந்தக் கடையை வைத்து என்ன செய்யப்போறீங்க? பேசாம வித்திட்டா கடன் இல்லாம நிம்மதியாய் சாப்பிடலாமில்ல? அதோட கஸ்தூரியோட கல்யாண செலவுக்கும் யார்கிட்டேயும் கையேந்த வேண்டாம் பாருங்க! தாரணி நீளமாய் விவரிக்க, ஏளனமாய் சிரித்தாள் கஸ்தூரி.

    ஆக... இந்தக் குடும்பத்திற்காக நீங்க பத்து பைசா செலவு பண்ணப்போறதில்ல?

    கஸ்தூரி!

    ஏன்னா? அண்ணிதான் வெளியே இருந்து வந்தவங்க, ஆனா உன்னால எப்படின்ணா ஒரு மூன்றாம் மனுஷன் மாதிரி ஒதுங்கிப் போக முடியுது?

    ஏய்ய்...

    உன்னை இந்த அளவுக்கு படிக்க வைச்சு வேலை வாங்கித் தந்து, உனக்கு ஒரு கல்யாணத்தையும் பண்ணிவெச்சு நீ வீட்டுமனை வாங்க பணம் தந்து... இப்படி உனக்காக அப்பா எவ்வளவோ செய்தாங்களே? அதில் ஒன்று கூடவா உனக்கு நினைவில்லை?

    அத்தே! உங்க பொண்ணை ரொம்ப பேச வேண்டாம்னு சொல்லுங்க! என்ன? பெத்து வளர்த்ததுக்கு கணக்கு போட்டு காட்டுறீங்களா?

    ஐயோ இல்லம்மா! கஸ்தூரி! நீ கொஞ்சம் அமைதியாய் இரேம்மா!

    அம்மா! அவங்க கிளம்பணும்னு எப்பவோ முடிவு பண்ணிட்டாங்க. விடுங்கம்மா! கிளம்பட்டும்.

    அதான் வீட்டுக்கு எஜமானியே சொல்லிட்டாங்கள்ல? இன்னும் ஏன் நின்னுட்டு இருக்கீங்க? கிளம்புங்க!

    எப்பா வசந்த்! ஒரு ரெண்டு நாள் இருந்...

    ஸாரிம்மா! நான் நாளைக்கு வேலையில ஜாய்ன் பண்ணியாகணும். அப்பாகிட்ட சொல்லிடுங்க. கிளம்புறோம். என்றவன் தனக்கு முன்பே காரில் ஏறி அமர்ந்துவிட்ட மனைவியை பார்த்துக்கொண்டே வெளியேற, மகனை தடுக்கும் முயற்சியில் பரிமளா மகனின் பின்னே செல்ல, அதைக் காணப்பிடிக்காமல் சலிப்பாய் தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள் கஸ்தூரி.

    2

    மேலமாசி வீதியின் ஒரு சிறிய சந்துக்குள் இருந்தது அந்தக்கடை. கஸ்தூரி மெட்டல்ஸ் என்ற போர்டை தாங்கியிருந்தது இரண்டு மாடிக்கட்டிடம். கடையை விலைபேசி வந்திருந்த நபரிடம் அந்தக் கடையின் ஊழியரும் தன் தந்தையின் நண்பருமான வைத்தியநாதன் கடையை சுற்றிக் காட்டிக்கொண்டிருக்க, கலக்கமான முகத்தோடு ஓரமாய் நின்றிருந்தாள் கஸ்தூரி.

    சிறுவயதில் அப்பாவின் விரல்களைப் பற்றிக் கொண்டு இங்கே வந்ததுண்டு.

    Enjoying the preview?
    Page 1 of 1