Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இனிய தென்றலே...
இனிய தென்றலே...
இனிய தென்றலே...
Ebook224 pages1 hour

இனிய தென்றலே...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து விட்டாள் தென்றல். மார்கழிப் பனி பற்களை கிடுகிடுக்க வைக்கும் குளிர். சிறு மழையைப் போல் சொட்டு சொட்டாக சொட்டிக் கொண்டிருந்த பனித்துளி, ஆனைக்கட்டி மலையின் கடுங்குளிர் காற்று இவை எதையும் கண்டு கொள்ளாமல் முதல் வேலையாய் குளித்தாள். "ஏன்டி தென்றல் என்னடி உடம்பு உனக்கு? தினமும் அதிகாலையிலேயே அதுவும் பச்சைத் தண்ணீரைத் தலைக்கு ஊத்திக்கிறியே ஜன்னி எதுவும் கண்டுக்கப் போகுது. எங்க வீட்டைப் பார். எங்க மாமியாரிடமிருந்து என் குழந்தைங்க வரை எல்லாருக்கும் வெந்நீர் வேண்டும் குளிக்க. சுடு தண்ணி வெச்சே எனக்கு மாசம் ரெண்டு சிலிண்டர் காலியாகிடும். நீ ஒருநாள் கூட சுடுதண்ணி வெச்சுக் குளிச்சு நான் பார்த்ததே இல்லையே.  உனக்கு குளிரவே குளிராதா" - என எப்போதும் வியப்பாள் அடுத்த வீட்டு விமலா. அவளுக்கு ஒரு புன்சிரிப்பை பதிலாய் உரைத்துவிட்டு, "விமலாக்கா எப்போதுமே பச்சைத் தண்ணீரில் குளிப்பதுதான் ஆரோக்கியம், சுறுசுறுப்பு, உற்சாகம். முதல்ல ஒரு கப் ஊத்தினதும், உடம்பு நடுங்கும்தான். அப்புறம் அந்தக் குளிரை நம உடம்பு ஏற்றுக் கொள்ளும். உடம்பில் ஒரு உற்சாகம் வந்துவிடும். வெந்நீரில் குளித்துவிட்டு என்றாவது ஒரு வெறும் நீரில் குளித்தால்தான் சளி பிடித்துக் கொள்ளும். எதையுமே பழகிக் கொண்டால் சிரமம் இல்லைதானே" - என்பாள். 

ஆனாலும் அவளது மனம் கேட்கும் 'நீ கூடத்தான் அனைத்தையும் மறக்கப் பழகிக் கொண்டாய். ஆனால் சிரமம் இல்லாமலா இருக்கிறாய்?' என்று. அதன் தலையில் தட்டி அடக்கி விட்டு அடுத்த வேலையில் இறங்கி விடுவாள். மனதை அதன் விருப்பத்திற்கு கட்டவிழ்த்து விடக் கூடாது. தன் கட்டுப்பாட்டிற்குள் அதை வைத்துக் கொள்ள வேண்டும் என்று உறுதியாய் இருப்பாள். 

மனம்தான் பலவற்றையும் சிந்தித்ததே தவிர கைகள் பரபரவென தன் வேலைகளைச் செய்து கொண்டுதான் இருந்தன. இட்லி பாத்திரத்தில் மாவை ஊற்றி அடுப்பிலேற்றினாள். மற்றொரு அடுப்பில் பருப்பை வேக வைத்தாள். முந்தைய நாள் இரவு அப்பாவிடம் பேசிக் கொண்டே நறுக்கி வைத்திருந்த காய்கறிகளை எடுத்தாள். ஈரத் துணியால் போர்த்தி வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் வாடி வதங்காமல் பிரெஷ்ஷாய் இருந்தது. அவற்றை அலசியெடுத்து பருப்புடன் போட்டு விட்டு தேங்காயை எடுத்துத் துருவ ஆரம்பித்தாள். 

இன்று சனிக்கிழமை கலாவும் உமாவும் ஆறு மணிக்கே வந்து விடுவதாகச் சொல்லி விட்டுத்தான் சென்றிருந் தார்கள். "அத்தனை சீக்கிரமாய் போவது ஆபத்தம்மா, பனி விலகாமல் பாதை தெரியாதம்மா. குளிர்ச்சிக்கு வழியெல்லாம் பூச்சு பொட்டு சுருண்டு கிடக்குமே" என்றார் அப்பா மேகநாதன். 

"அதையெல்லாம் பார்த்தால் முடியுமாப்பா. இது கொஞ்சம் பெரிய ஆர்டர். மொத்தமாய் நூறு பாக்கெட் கேட்டிருக்கிறார்கள். வில்வ இலை, துளசி இலை, முசுமுசுக்கை இலை எல்லாம் ஏற்கனவே பறிச்சு காய வைச்சு எடுத்தாச்சு. ஆனா ஆடாதொடை, வல்லாரை, மிளகுக் கொடி, மலை நெல்லி இலை எல்லாம் கண்டிப்பா வேணுமே. அதுக்கு காலையில போனாத்தான் இருட்டு முன் வீடு வந்து சேர முடியும். பனிக்கோ பூச்சிகளுக்கோ பார்க்க முடியாதப்பா. நாங்கள் ஒன்றும் வெறுங்காலோடு போகவில்லையே. நீங்கள் தயாரித்த தோல் பூட்ஸ்களோடு தான் போகிறோம். அதுவும் நாங்கள் மட்டுமா போகப் போகிறோம். சுள்ளி பொறுக்க, மூலிகை பறிக்க, கிழங்கு எடுக்க என எத்தனையோ கூட்டம் வருகிறதே அப்பா. அவர்களோடு போய்விட்டு பத்திரமாக வந்து விடுகிறோம். வீணாக வருத்தப்படாதீர்கள்" -- என தந்தையை சமாதானம் செய்து படுக்க வைத்திருந்தாள். அப்பா எழுந்திருப்பதற்குள் அவருக்குத் தேவையான சாப்பாட்டை எடுத்து வைத்துவிட்டுப் போக வேண்டும். விழித்துக் கொண்டால் மகளின் நிலை கண்டு கண்கலங்குவார். ஏதோ இன்றுதான் மகள் புதிதாய் மலைக் காட்டுக்குள் சென்று மூலிகை பறிக்கப் போவதைப் போல் அத்தனை வருத்தப்படுவார். 

 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 15, 2023
ISBN9798223199267
இனிய தென்றலே...

Read more from Kalaivani Chokkalingam

Related to இனிய தென்றலே...

Related ebooks

Reviews for இனிய தென்றலே...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இனிய தென்றலே... - Kalaivani Chokkalingam

    1

    அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து விட்டாள் தென்றல். மார்கழிப் பனி பற்களை கிடுகிடுக்க வைக்கும் குளிர். சிறு மழையைப் போல் சொட்டு சொட்டாக சொட்டிக் கொண்டிருந்த பனித்துளி, ஆனைக்கட்டி மலையின் கடுங்குளிர் காற்று இவை எதையும் கண்டு கொள்ளாமல் முதல் வேலையாய் குளித்தாள். ஏன்டி தென்றல் என்னடி உடம்பு உனக்கு? தினமும் அதிகாலையிலேயே அதுவும் பச்சைத் தண்ணீரைத் தலைக்கு ஊத்திக்கிறியே ஜன்னி எதுவும் கண்டுக்கப் போகுது. எங்க வீட்டைப் பார். எங்க மாமியாரிடமிருந்து என் குழந்தைங்க வரை எல்லாருக்கும் வெந்நீர் வேண்டும் குளிக்க. சுடு தண்ணி வெச்சே எனக்கு மாசம் ரெண்டு சிலிண்டர் காலியாகிடும். நீ ஒருநாள் கூட சுடுதண்ணி வெச்சுக் குளிச்சு நான் பார்த்ததே இல்லையே. உனக்கு குளிரவே குளிராதா - என எப்போதும் வியப்பாள் அடுத்த வீட்டு விமலா. அவளுக்கு ஒரு புன்சிரிப்பை பதிலாய் உரைத்துவிட்டு, விமலாக்கா எப்போதுமே பச்சைத் தண்ணீரில் குளிப்பதுதான் ஆரோக்கியம், சுறுசுறுப்பு, உற்சாகம். முதல்ல ஒரு கப் ஊத்தினதும், உடம்பு நடுங்கும்தான். அப்புறம் அந்தக் குளிரை நம உடம்பு ஏற்றுக் கொள்ளும். உடம்பில் ஒரு உற்சாகம் வந்துவிடும். வெந்நீரில் குளித்துவிட்டு என்றாவது ஒரு வெறும் நீரில் குளித்தால்தான் சளி பிடித்துக் கொள்ளும். எதையுமே பழகிக் கொண்டால் சிரமம் இல்லைதானே - என்பாள்.

    ஆனாலும் அவளது மனம் கேட்கும் ‘நீ கூடத்தான் அனைத்தையும் மறக்கப் பழகிக் கொண்டாய். ஆனால் சிரமம் இல்லாமலா இருக்கிறாய்?’ என்று. அதன் தலையில் தட்டி அடக்கி விட்டு அடுத்த வேலையில் இறங்கி விடுவாள். மனதை அதன் விருப்பத்திற்கு கட்டவிழ்த்து விடக் கூடாது. தன் கட்டுப்பாட்டிற்குள் அதை வைத்துக் கொள்ள வேண்டும் என்று உறுதியாய் இருப்பாள்.

    மனம்தான் பலவற்றையும் சிந்தித்ததே தவிர கைகள் பரபரவென தன் வேலைகளைச் செய்து கொண்டுதான் இருந்தன. இட்லி பாத்திரத்தில் மாவை ஊற்றி அடுப்பிலேற்றினாள். மற்றொரு அடுப்பில் பருப்பை வேக வைத்தாள். முந்தைய நாள் இரவு அப்பாவிடம் பேசிக் கொண்டே நறுக்கி வைத்திருந்த காய்கறிகளை எடுத்தாள். ஈரத் துணியால் போர்த்தி வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் வாடி வதங்காமல் பிரெஷ்ஷாய் இருந்தது. அவற்றை அலசியெடுத்து பருப்புடன் போட்டு விட்டு தேங்காயை எடுத்துத் துருவ ஆரம்பித்தாள்.

    இன்று சனிக்கிழமை கலாவும் உமாவும் ஆறு மணிக்கே வந்து விடுவதாகச் சொல்லி விட்டுத்தான் சென்றிருந் தார்கள். அத்தனை சீக்கிரமாய் போவது ஆபத்தம்மா, பனி விலகாமல் பாதை தெரியாதம்மா. குளிர்ச்சிக்கு வழியெல்லாம் பூச்சு பொட்டு சுருண்டு கிடக்குமே என்றார் அப்பா மேகநாதன்.

    அதையெல்லாம் பார்த்தால் முடியுமாப்பா. இது கொஞ்சம் பெரிய ஆர்டர். மொத்தமாய் நூறு பாக்கெட் கேட்டிருக்கிறார்கள். வில்வ இலை, துளசி இலை, முசுமுசுக்கை இலை எல்லாம் ஏற்கனவே பறிச்சு காய வைச்சு எடுத்தாச்சு. ஆனா ஆடாதொடை, வல்லாரை, மிளகுக் கொடி, மலை நெல்லி இலை எல்லாம் கண்டிப்பா வேணுமே. அதுக்கு காலையில போனாத்தான் இருட்டு முன் வீடு வந்து சேர முடியும். பனிக்கோ பூச்சிகளுக்கோ பார்க்க முடியாதப்பா. நாங்கள் ஒன்றும் வெறுங்காலோடு போகவில்லையே. நீங்கள் தயாரித்த தோல் பூட்ஸ்களோடு தான் போகிறோம். அதுவும் நாங்கள் மட்டுமா போகப் போகிறோம். சுள்ளி பொறுக்க, மூலிகை பறிக்க, கிழங்கு எடுக்க என எத்தனையோ கூட்டம் வருகிறதே அப்பா. அவர்களோடு போய்விட்டு பத்திரமாக வந்து விடுகிறோம். வீணாக வருத்தப்படாதீர்கள் -- என தந்தையை சமாதானம் செய்து படுக்க வைத்திருந்தாள். அப்பா எழுந்திருப்பதற்குள் அவருக்குத் தேவையான சாப்பாட்டை எடுத்து வைத்துவிட்டுப் போக வேண்டும். விழித்துக் கொண்டால் மகளின் நிலை கண்டு கண்கலங்குவார். ஏதோ இன்றுதான் மகள் புதிதாய் மலைக் காட்டுக்குள் சென்று மூலிகை பறிக்கப் போவதைப் போல் அத்தனை வருத்தப்படுவார்.

    அவளும் தான் நினைத்தாளா என்ன, கோவையில் சிறந்த கல்லூரி ஒன்றில் தாவரவியல் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது, இப்படி எல்லாம் நடக்கும் என்று? நினைக்கவில்லையே அவள். மூலிகை மருத்துவம் அப்பாவின் குலத் தொழில். பாட்டன் வழியாய் வந்த தொழில். பெரிதாய்ப் போகவில்லை என்றாலும் வயிற்றில் அடிக்காமல் கஞ்சி ஊற்றிக் கொண்டிருந்தது. எத்தனை தான் பெரிய பெரிய மருத்துவமனைகள் முளைத்தாலும் புதிய புதிய நோய்கள் புகுந்தாலும் ஆங்கில மருந்தை மட்டுமே நம்பாமல் இயற்கை வைத்தியம் மேல் இன்னும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதற்கு அப்பாவின் உழைப்பே சாட்சி. பக்கவிளைவை எண்ணியோ பணத்தை தண்ணீராய் செலவழிக்க இயலாதவர்களோ இல்லை மூலிகை மருந்தின் மீது உள்ள நம்பிக்கையாலோ அப்பா எப்போதுமே நான்கு ஆட்களோடுதான் இருந்து அவள் பார்த்திருக்கிறாள். அப்போது இருந்தது வாடகை வீடுதான் என்றபோதும் வீட்டின் முன் உள்ள தாழ்வாரத்தில் அப்பா தன் மூலிகை மருந்துகளைத் தயாரித்தும் விற்றும் கொண்டிருந்தார். எல்லாம் நன்றாய்தானே போய்க் கொண்டிருந்தது. அந்த வேண்டாத சம்பவங்கள் நடவாமல் போயிருந்தால்...

    நல்லதுதான். அப்படி நடந்ததால் தானே தன்னுடைய திறமையும் உழைப்பும் இன்று அனைவரையும் விழி தூக்கிப் பார்க்கச் செய்திருக்கிறது. சொந்த இடத்தில் நான்கு குடில்கள் அமைத்து இருபது பெண்களுக்கு வேலை கொடுக்க முடிந்தது. எத்தனையோ பேர் காரிலும் வண்டியிலுமாக மலையேறி வந்து தனது மூலிகைப் பொடிகளையும், மருந்து உருண்டைகளையும் வாங்கிச் செல்கிறார்களே. அவர்களுக்கு குணமாகி அடுத்தவரையும் அனுப்பி வைக்கிறார்கள் என்றால்... எல்லாம் முன்னேற்றம் தானே. இந்த முன்னேற்றத்தையும் சுலபமாக எட்டவில்லை தென்றல். முதலில் தனியே போய் மூலிகைகளையும் வேர்களையும் பறித்துக் கொண்டு வந்து அப்பா சொல்லும் அளவு பிரித்து நிழலில் உலர்த்தி அவற்றை பொடி செய்து அல்லது அரைத்து உருண்டைகளாக்கி சுத்தமாய் வாட வைத்து பாக்கெட்டுகளில் அடைத்து மலைமேல் வரும் ஒரே ஒரு பஸ்சில் ஏறி கீழே ஊர்களில் உள்ள கடைகளில் மணிக் கணக்கில் நின்று பேசி புரிய வைத்து, கடைசியாய் சரிம்மா. உன் நிலையும் பரிதாபமாகத் தான் இருக்கிறது. ஆனால் விற்காமல் காசு தரமாட்டேன். பாக்கெட்டை தொங்க விடுகிறேன். விற்றதும் காசு தருவேன் - என்ற நிபந்தனையுடன் தான் ஒரு சில கடைகளில் வாங்கினார்கள். வாரம் ஒரு முறை மீண்டும் வரும்போது சில கடைகளில் இவள் கொடுத்தது அத்தனையும் அப்படியே கிடந்து அவளைப் பார்க்கும். சில கடைகளில் ஒன்றிரண்டு குறைந்திருக்கும். அவ்வளவுதான். தென்றலின் முகம் வாடி விடும்.

    அதைப் பார்த்துவிட்டு தங்கசாமி அண்ணாச்சிதான் சொன்னார். இதோ பாரும்மா. சும்மா இப்படிப் போட்டா எப்படியம்மா விக்கும். உன் மருந்துகளுக்கு ஒரு பேர் வையம்மா. அந்தப் பேரை அச்சடித்து கவர் போடு, கவரிலே இந்த மருந்து எந்தெந்த நோய்க்குப் பயன்படும், எப்படிப் பயன்படுத்த வேண்டும்னு குறிப்பையும் அச்சடிச்சுக் கொடு. அப்புறம் இந்தப் பொடுகு மருந்து, முகப்பரு மருந்து எல்லாம் இருக்குன்னியே. அதையும் நான் சொன்ன மாதிரி செய்து கொடும்மா. ஏன்னா நம்ம கடைக்கு பொம்பளை ஆட்களும் நிறைய வர்றாங்கள்ல. அவங்ககிட்ட சொன்னா போதும். சீக்கிரமா உன் மருந்து பிரபலமாகிடும். ஆனா ஒண்ணு மருந்தை யாரும் குத்தம் சொல்லக் கூடாது. அப்புறம் என் கடை பேர் கெட்டுப் போகும் - என்றார் கண்டிப்பான குரலில்.

    அப்படி ஆரம்பமானதுதான் தென்றல் மூலிகை மருத்துவம். தென்றல் அழகு சாதனப் பொடிகள். எனக்குப் பிறகு ஒரு வாரிசு இல்லாமல் இந்தத் தொழில் அழிஞ்சிடு மோன்னு நினைச்சேம்மா. நீ அதுக்கு மறுஜென்மம் கொடுத்திருக்க. அதனால் உன் பேர்தான் வெக்கணும் என்று அப்பா ஒரே பிடியாய் பிடித்துக் கொண்டார். தங்கசாமி அண்ணாச்சியும் சும்மா சொல்லவில்லை. விளம்பரப் படுத்தினால் தான் பொருள் விற்பனை ஆகும், பிரபலமடையும் என்று தெரிந்தேதான் சொல்லியிருக்கிறார். அன்று அவர் செய்த உதவியால்தான் கொஞ்சமாய் நிமிர்ந்து எழ ஆரம்பித்தாள் தென்றல். முதலில் கலா பிறகு உமா என இளம் பெண்கள் வேலைக்குச் சேர வேலை சுலபமானது. சம்பளம் கொடுக்க வேண்டுமே. அதற்கும் சேர்த்தே உழைத்தாள் தென்றல். உழைப்பு மட்டுமே தன்னுடையது. மற்றபடி என்னென்ன எத்தனை விதம் கலக்க வேண்டும் எப்படி சேகரிக்க வேண்டும் பதப்படுத்த வேண்டும் என தெளிவாய் கூடவே இருந்து செய்து கொடுப்பார் மேகநாதன். பிறகு உள்ளூர் மட்டுமின்றி வெளியூரிலும் இருந்து ஆட்கள் தேடிவர தொழிலை விரிவுபடுத்திக் கொண்டார்கள். அனுபவமும் தான் விரும்பிப் படித்த தாவரவியல் படிப்பும் கைகொடுக்க மளமளவென வளர ஆரம்பித்தாள். இந்த நிலையில் அயல் நாட்டில் இருக்கும் மகனுடன் கடைசி காலத்தை கழிக்கப் போவதாகக் கூறிய சுப்பிரமணியம் மாமா தமது நிலத்தை விற்பதாகக் கூற அந்த இடத்தை வாங்கிக் கொண்டாள். மலைப்பகுதி என்பதால் அடிக்கடி ஏறி இறங்கி பயணம் செய்ய இயலாத நோயாளிகள் அது வயதானவர்கள் என்றால் மட்டும் தங்குவதற்காக மூன்று குடில்களை அமைத்தாள். மற்றபடி மருந்தைத் தயாரிக்க தனியாக சற்று பெரிதாய் ஒரு குடில். அனைத்தும் மூங்கில் மற்றும் தென்னை ஓலைகளால் அமைந்தவை. தங்கியிருக்கும் ஓட்டு வீடை மட்டும் மாற்றாமல் அப்படியே வைத்திருந்தாள். முதன் முதலாய் நொந்து நூலாய் வந்து குடியேறிய வீடு. அதை மாற்ற மனம் வரவில்லை , போதுமென்ற மனம்தான் சிறந்த மருந்து என்பார் அப்பா. அப்படித்தான் வாழ்ந்தும் கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் தங்கசாமி வந்து அவசரமாய் சென்னைக்கு போவதாகவும் சில குறிப்பிட்ட மருந்துகள் தேவை எனவும் மறுக்காமல் ஒப்புக் கொண்டாள். வேலை அதிகம்தான் என்றாலும் கேட்பவர் அண்ணாச்சி ஆயிற்றே. அவர் தந்த யோசனையால் அல்லவா தன்னால் இந்த அளவுக்கு முன்னேற முடிந்தது. காலத்தால் செய்த உதவி சிறிதெனினும் அதை மறக்கக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தாள்.

    தாளித்துக் கொட்டி சாம்பாரை ஊற்றினாள் தென்றல். சாம்பார் வெச்சா ஊரே மணக்கும். நாக்குல எச்சில் ஊறுதே என்றவாறு வந்தனர் அந்த இரு பெண்களும். தென்றலை யொத்த வயதுடைய பெண்கள்தான். எந்த அலங்காரமும் இல்லாத உண்மையான அழகு யாரையும் சுண்டியிழுக்காத இதமான அழகு. தலை நிறைய எண்ணெய் தேய்த்துக் கொண்டையாய் முடிந்திருந்த போதும் அழகாய்த்தான் இருந்தனர்.

    ஏய் வாங்கடி. ஆளுக்கு ரெண்டு இட்லி சாப்பிட்டுப் - போலாம் என்றவாறே தட்டை எடுத்தாள் தென்றல்.

    ஏய் வேணாம்ப்பா. இதோ தூக்குல சாப்பாடு எடுத்துட்டு வந்துட்டோம். நீயும் எடுத்துக்கோ. அங்கே போயி ஒரு ஒன்பது மணிக்கா சாப்பிடலாம். மணி இப்போ ஆறுதானே ஆச்சு? என்றாள் கலா.

    அச்சோ ஆறாச்சா. சீக்கிரம் போகலாம் வாங்க. அப்பா எழுந்துக்க முன்னால போயிடணும் - என்றவாறே சாப்பாடு, தண்ணி, கடலை மிட்டாய், எள்ளுருண்டை அடங்கிய பையை எடுத்துக் கொண்டாள் தென்றல். சின்னதாய் மூன்று கத்திகள் கைகளில் மாட்டிக் கொள்ளும் தோல் உறைகள், சில செடி வகைகள் விஷத் தன்மை உள்ளவை. தொட்டாலோ உரசினாலோ தோல் எல்லாம் தடிப்பாய் வீங்கிவிடும். சிலவற்றின் இலையில் முள் இருக்கும். பறிக்கும் போது கொக்கி போல் கைகளில் பதிந்து விடும் என்று அப்பா சொல்லி இந்தக் கையுறைகளை வாங்கித் தந்திருந்தார். மூவருமாய் மாட்டிக் கொள்ள கொஞ்சம் தடிமனான அந்த முழங்கால் அளவுள்ள லெதர் ஷூக்களையும் தூசி தட்டி போட்டுக் கொண்டனர். கலா உணவு அடங்கிய பையை இடுப்பில் வைத்துக் கொள்ள மூங்கில் கம்புகளையும் ஆளுக்கொன்றாய் கத்திகளையும் எடுத்துக் கொண்டு கிளம்பி வெளியே வர வராண்டாவில் படுத்திருந்த மேகநாதன் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து சூரிய நமஸ்காரம் பண்ணிக் கொண்டிருந்தார். வாயில் விரல் வைத்தவாறே தென்றல் மற்றவர்களை மெதுவாய் வரச் சொல்லி ஜாடை காட்ட, என்னம்மா, பட்டாளச் சிப்பாய்களா கிளம்பிட்டீங்களா? என்றவாறே திரும்பினார் மேகநாதன்.

    தலை முழுக்க நரைத்திருக்க மெல்லிய உடம்பை ஸ்வெட்டரால் மூடியிருந்தார். பார்வையில் கனிவும் வருத்தமும் குடி கொண்டிருக்க மகளைப் பார்த்தார். அப்பா நேற்றே சொன்னேனில்லப்பா. அப்புறம் என்ன வருத்தம் முகத்திலே - என கடிந்துக் கொண்டாள் மகள். இல்லம்மா, வயசுப்புள்ளைகள மலையேற விட்டுட்டு வீட்ல அடைஞ்சு கிடக்க எந்த அப்பன் மனசு சங்கடப்பட மாட்டான். அந்த ஆண்டவன் இப்படி முடமாக்கி விட்டானே - கண் கலங்கியவரை அதட்டினாள் தென்றல். மனுஷங்க செய்யிற தப்புக்கு ஏம்பா ஆண்டவன் மேல் பழியப் போடுறீங்க. இப்படியெல்லாம் பேசக் கூடாதுன்னு சொல்லி எனக்கே அலுத்துப் போச்சுப்பா. காலையில் உற்சாகமா கிளம்பும் போது இப்படி அழுது சங்கடப்படுத்தாதீங்கப்பா. நீங்க அழுகிறதால உங்க கால் சரியாகி மலையேறிப் போய் மூலிகை பறிச்சிட்டு வர முடியுமா? முடியாதில்ல. முடியாதுனு முடிவானப்புறம் ஏன் அழுது கண்ணீரை வீணாக்க வேண்டும். தேவையில்லாம கண்ல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரக் கூடாதுப்பா. அது மனசை கலங்க வெச்சிடும். வைராக்கியத்தை உடைச்சிடும். தன்னம்பிக்கையைப் பாழாக்கிடும். நம்மளைப் கோழையாக்கிடும்பா. நான் கோழையா இருக்க விரும்பல. தயவு செய்து இனியொரு முறை அழாதீங்கப்பா.

    மகளின் இறுகிப் போன முகமும் குரலும் மனதை - வருத்த, ‘சரிம்மா... நான் இனிமே அழலை. ஒண்ணும் பேசவில்லை. சரி விடிஞ்சிடுச்சு. பாத்து பத்திரமா போயிட்டு சீக்கிரம் வந்திடுங்கம்மா. நீங்க வர்ற வரைக்கும் அப்பாவுக்கு இருப்புக் கொள்ளாது - என்றார் வாட்டமாய்.

    மூவரில் சற்று இளையவளாய் தோன்றிய உமா, அப்பா நீங்க ஏம்பா பயப்படுறீங்க. தென்றல் இருக்கிறது பத்து ஆம்பிளைங்களுக்குச் சமம்ப்பா. அந்த தைரியத்துல தானே எங்க அம்மா அப்பா எங்களையும் அனுப்புறாங்க. ஏழு வருஷமா ஏறி இறங்குற மலைதானேப்பா. அதுவும் எங்களோட வீடுதான். நீங்க பயப்படாம சாப்பிட்டு பாட்டு கேட்டுட்டு இருங்க. நாங்க போயிட்டு வந்திடுறோம் - என்றாள்.

    அடி ராஜாத்தி. நல்லவேளை ஞாபகப்படுத்திட்ட அந்த ரேடியோவை போட்டுவிட்டுட்டு கிளம்புங்கம்மா என்றார். அவரது படுக்கையை விட்டு சற்று தள்ளியிருந்த ஸ்விட்சை உமா போட்டுவிட, ‘ஹல்லோ வணக்கம். வந்தனம் நமஸ்கார். நீங்க கேட்டுகிட்டு இருக்கிறது நம்ம ஹலோ எப்.எம். இந்த இனிய காலைத் தென்றலை உங்களுக்காக வழங்க வந்திருக்கும் நான் உங்கள் உங்கள் வருண்" - இனிமையாய் பேசிய அந்தக் குரலின் பெயரைக் கேட்டதும் முன்னே நடந்து கொண்டிருந்த தென்றல் சட்டென நின்றாள். நெஞ்சுக் கூட்டிற்குள் சுரீரென்று நரம்பொன்றை சுண்டியெடுத்தாற்போல் வலித்தது. தன்னையும் மீறி

    Enjoying the preview?
    Page 1 of 1