Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oru Kurangu Ammavagirathu
Oru Kurangu Ammavagirathu
Oru Kurangu Ammavagirathu
Ebook227 pages4 hours

Oru Kurangu Ammavagirathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எந்த வயதிலும் ஒரு தாயை இழப்பது அதிர்ச்சிகரமானது, ஆனால் இந்த சிறுவனுக்கு அவனது தாயை இழந்தது அவனது இதயத்தில் உறைந்த ஒரு எண்ணம். ஒரு குரங்கு அதன் சொந்த வழியில் அவனது உணர்ச்சிகளை தெளிவுபடுத்தி, அவனுடைய அதிர்ச்சியிலிருந்து வெளியே வர வைக்கிறது. அதிர்ச்சியில் இருந்து அந்த சிறுவன் வெளிவந்தானா? வாசிப்போம்.

Languageதமிழ்
Release dateJun 28, 2023
ISBN6580125909864
Oru Kurangu Ammavagirathu

Read more from Kanthalakshmi Chandramouli

Related to Oru Kurangu Ammavagirathu

Related ebooks

Reviews for Oru Kurangu Ammavagirathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oru Kurangu Ammavagirathu - Kanthalakshmi Chandramouli

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஒரு குரங்கு அம்மாவாகிறது

    (சிறுகதைகள்)

    Oru Kurangu Ammavagirathu

    (Sirukathaigal)

    Author:

    காந்தலக்ஷ்மி சந்திரமெளலி

    Kanthalakshmi Chandramouli

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kanthalakshmi-chandramouli

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஒரு குரங்கு அம்மாவாகிறது

    2. நீ அங்கு சுகமா?

    3. தமிழுக்கு அமுதென்று பெயர்

    4. ஓசையற்ற கைத்தடி

    5. பாதபூஜை

    6. கண் தானம்

    7. அன்பே நீயும் அன்பே நானும்

    8. அம்மா என்றால் அன்பு

    9. சின்னஞ்சிறு பெண் போலே...

    10. அரசியலும் ஒரு சேலையும்

    11. குருவிக்கூடு

    12. அக்கரையும் இக்கரையும்

    13. தனிக்குடித்தனம்

    14. வருஷாப்தி

    15. அம்பிகையின் பதில்

    16. குலதெய்வமே உன்னைக் கொண்டாடினேன்

    17. பெயர்

    18. ஸ்ரீ ராமர் சன்னதியின் சுகம்

    19. ஒருவனே தேவன்

    20. பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால்...

    21. காய்ந்த மாடு

    22. அம்மாவும் மகள் தானே?

    23. வீடு

    24. பழுத்த இலை

    என் பார்வையில்...

    சிறுகதைகள் தன்னைத்தானே எழுதிக் கொள்கின்றன என்று நான் நம்புகிறேன்.

    ஒரு சிறுகதை எழுத்தாளராக நான் பார்ப்பது, கேட்பது, உணர்வது ஆகியவை மனதிற்குள் புகுந்து விடுகின்றன. இவை தான் கரு.

    திடீரென்று ஒருநாள் அவை சிறுகதைகளாக உருவெடுக்கின்றன. சில சமயம் உணர்வுகளில் வெளிப்படுகின்றன. சில நேரங்களில் இச்சமூகத்திற்கு கூறும் ஒரு தகவலாக உருவாகின்றன. பல சமயங்களில் நகைச்சுவையோடு கலந்து வாழைப்பழத்தில் ஊசி குத்துவது போன்று பாடமாக அமைகின்றன. மொத்தத்தில் எது எனக்குள் மாற்றத்தை ஏற்படுத்துகின்றதோ, அது கதையாக உருவாகின்றது. ‘சுருங்கச் சொல், விளங்கச் சொல்’ என்பது தான் சிறுகதையின் தாரக மந்திரம்.

    பல்வேறு பத்திரிகைகளில் குறிப்பாக கலைமகள், மஞ்சரி, லேடீஸ் ஸ்பெஷல், விஜயபாரதம் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    என் கதைகளை கணினியில் ஏற்றி, ‘நன்றாக உள்ளது, பத்திரிகைக்கு அனுப்புங்கள்’ என்று கூறுவது என் மைத்துனர் (என் கணவரின் கடைசி தம்பி) திரு. ஜி. ராமகிருஷ்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    சமீபகாலமாக என் கதைகளை ‘இ-புத்தகங்களாக’ வெளியிடும் pustaka.com குறிப்பாக திரு. ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றிகள்.

    என் கதைகளை படித்துவிட்டு பலர் தொடர்புகொள்ளும்பொழுது, என் பொறுப்புணர்ச்சி மேலும் கூடுகிறது. சிறப்பானவற்றை உணர்ந்து எழுத வேண்டும் எனும் ஊக்கமும் ஏற்படுகின்றது.

    நன்றியுடன்,

    காந்தலக்ஷ்மி சந்திரமௌலி

    1. ஒரு குரங்கு அம்மாவாகிறது

    குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று ஐந்தாம் கிளாஸ் சார், செல்வம் சொன்னார். உடனே கிளாஸில் பையன்கள் ‘உர் உர்’ என்று குரங்கு சத்தம் போட்டார்கள். பெண்கள் வாயை கையால் பொத்தி சிரித்தார்கள். பார்த்தசாரதி தைரியமாக, அப்படின்னா வால் எங்கே போச்சு சார்? என்று கேட்டான். கிளாசே ‘கொல்’ என்று சிரித்தது. செல்வம் சிரித்துக்கொண்டே, சாரதி இங்கே வா. உனக்கு வால் இருக்கிறதா பார்க்கலாம் என்றார். பெண்களுக்கு சிரித்து சிரித்து வயிறே புண்ணாகிவிட்டது. சாரதிக்கு வாலுடோய் என்று பசங்க கூச்சலிடும்போது, சாரதிக்கு அவமானமாக இருந்தது.

    வீட்டிற்கு வரும் வழியில் குரங்குகளை எல்லாம் பார்த்து பசங்க, டேய் சாரதி, இது உங்க தாத்தாடா. இது உங்க பாட்டி என்று கிண்டலடித்தார்கள். வீட்டிற்கு வந்தவுடன் பையை தூக்கி வீசினான். பாட்டி சத்தம் கேட்டு வந்து, என்னடா கண்ணா? ஏன் உம்னு இருக்கே என்று கேட்டுக்கொண்டே பாலை எடுத்துவந்தாள். பாட்டி நாமெல்லாம் குரங்கிலிருந்து வந்தோமா? என்று பாலை உறிஞ்சிக் குடித்தான். எனக்கு என்னடா தெரியும்? நான் இதே சோளிங்கபுரத்துல இருக்கிற குரங்குகளோட பொறந்து வளர்ந்தவ. அதுங்க பண்ற லூட்டிதான் தெரியும் என்று அவனிடம் டம்ளரை வாங்கி போடா, போய் காலை அலம்பிண்டு சந்தியாவந்தனம் பண்ணி, காயத்ரி சொல்லு என்று கட்டளையிட்டாள். மாட்டேன் போ என்று புஸ்தகத்தை எடுத்தான் சாரதி. டேய், போன வருஷம் உனக்கு பூணூலை போட்டுட்டு, உங்கம்மா கண்மூடினா. நீ பண்ணலைன்னா எல்லா பாவமும் உனக்கு வந்து சேரும் என்று பயமுறுத்தினாள்.

    அம்மா என்றவுடனே, சாரதிக்கு, அம்மாவின் அழகு முகம் கண்முன் தெரிந்தது. உடனே, அவளை பாடையில் படுக்க வைத்து, ரத்தச்சிவப்பு புடவையும், நெற்றியில் மிகப்பெரிய குங்குமமும், மிக அதிகமான மஞ்சள் பூசிய முகமும், மூடிய கண்ணும், வாடிய மாலையுமாக தூக்கிச்சென்றது ஞாபகம் வந்தது. எதுவும் பேசாமல் ஒரு நாலுமுழ வேஷ்டியை சுற்றிக்கொண்டு, சூரணம் இட்டு சந்தியாவந்தனம் செய்ய ஆரம்பித்தான்.

    அப்பா வந்துவிட்டார் என்று செருப்பு சத்தம் சொன்னது.

    ராஜகோபாலா எப்படா பத்மாவோட தெவசம்? என்று பாட்டி கேட்டாள். அடுத்த வாரம் வெள்ளிக்கிழமைன்னு வாத்தியார் சொன்னார். வருஷாப்தியில்லையா, மூணு நாள் காரியங்கள் இருக்கு. வாத்தியார் நாளைக்கு ‘லிஸ்ட்’ கொடுக்க வருவார். எல்லாம் அவரை கேட்டுண்டு ஏற்பாடு பண்ணலாம் அப்பா காபியை ருசித்து குடித்தார்.

    ஏம்பா, உன் மாமனார், மாமியாருக்கு சொல்ல வேண்டாமா? அவாளுக்கு ஒரே பொண்ணு. இந்த துக்கம் அவாளுக்கு ஆயுசுக்கும் போறுண்டா பெருமாளே பாட்டி கண்கலங்கினாள். ராஜகோபால் பெருமூச்சு விட்டார்.

    அப்பா, எங்கேம்மா?

    கீழே, சோளிங்கபுரத்துலே கோயில்ல யாரோ கதை சொல்றாளாம். அதான் இப்போ பஸ் போட்டுருக்காளே. அதைப் பிடிச்சுண்டு வந்துடறேன்னு போயிருக்கார். பெருமாளே லக்ஷ்மி நரசிம்மா, யோக ஆஞ்சநேயா எல்லாம் நல்லபடியா நடத்தி வைப்பா. வருஷாப்தி ஆனா தான் மலையேற முடியும். சாரதியை கூட்டிண்டு வரேன். பெருமாளே அனுக்ரஹம் செய்ப்பா என்று கைகூப்பி மலை இருக்கும் திக்கை நோக்கி வணங்கினாள்.

    இரவு சாப்பிடும் பொழுது அப்பாவை கேட்டான் சாரதி, அப்பா, குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் அப்படீன்னு எங்க சயின்ஸ் சார் சொல்றார் நிஜமாப்பா? ரசத்தை உறிஞ்சிக்கொண்டே, ஆமா சாரதி, நம்பளுக்கெல்லாம் பெரிய தாத்தா குரங்கு தான் என்றார். நம்பளோட வால் எங்கே போச்சுப்பா? என்று கேட்டான் சாரதி. குரங்கு வளர்ந்து மனிதனா ஆகிறச்சே வால் தேய்ந்து, முதுகு எலும்பா மாறிடுத்து, அதான் நாம் நேரா நிக்கறோம். குரங்கு நாலு காலுல நடக்கிறது என்று நிதானமாகச் சொன்னார். அப்பா சார்கிட்ட கேட்டா, என்னை குரங்குன்னு கிண்டல் பண்றாருப்பா. பசங்க எல்லாம் வால் எங்கேடான்னு கேட்டாப்பா. ‘கேர்ள்ஸ்’ என்னைப் பார்த்து சிரிக்கிறாப்பா என்று தன் பாரத்தை இறக்கிவைத்தான் சாரதி. குரங்குன்னா, கேவலமா சாரதி? ராமர் கஷ்டப்படறச்சே குரங்குகள் பட்டாளம் தானே ‘ஹெல்ப்’ பண்ணித்து. ஆஞ்சநேயர் தானே, லங்கைக்கு போய் சீதாப்பிராட்டியை பார்த்தார். குரங்குகள் எல்லாம் சேர்ந்து கல் எடுத்து பாலம் கட்டித்து இல்லையா? அப்ப ஏம்ப்பா எல்லோரும் குரங்கு பயன்னு திட்டறா?

    குரங்கோட மகிமை தெரியாதவா அப்படித்தான் சொல்லுவா. நாம சோளிங்கபுரத்துல இருக்கோம். இங்கே பெருமாளை நினைச்சு சின்னமலையிலே ஆஞ்சநேயர் யுகயுகமா தியானம் பண்றார். இங்க இருக்கிற ஒவ்வொரு குரங்கு மனசிலேயும் ராமர் இருக்கார். பெரியமலையிலே லக்ஷ்மி நரசிம்மர் ஆஞ்சநேயருக்கு ஆசீர்வாதம் பண்ணிண்டே இருக்கார். அப்படிப்பட்ட இடத்திலே நாம் இருக்கோம். யார் திட்டினா என்ன? நாம் குரங்குகளை திட்டப்படாது என்றார் ராஜகோபால்.

    அப்ப மலையேற வரவாளோட சாமானெல்லாம் குரங்கு ஏன் பிடுங்கறதுப்பா? மோர் சாதத்தை பிசைந்தான் சாரதி. அப்பா சிரித்தார். அதுவும் மனுஷா பண்ற தப்பு சாரதி மலையிலே இருக்கிற மரமெல்லாம் வெட்டறா. அதனால குரங்குகளுக்கு ஆகாரம் இல்லாம மனுஷாள்கிட்ட பிடுங்கறது என்று மோர் வாங்கி டம்ளரில் குடித்தார். அடுத்த கேள்வி கேட்க, வாய் திறந்த சாரதியை விரட்டினாள் பாட்டி. போறுண்டா குரங்கு புராணம். சீக்கிரம் சாப்பிட்டு முடி. எல்லாத்தையும் ஒழிச்சுப்போட்டு, டி.வி. பாக்கணும்.

    சாரதியின் அம்மாவை பெற்ற தாத்தா பாட்டி சென்னையிலிருந்து வந்துவிட்டார்கள். பாட்டிகள் இருவரும் அவ்வப்பொழுது அழுதார்கள். தெவசத்திற்கு என்ன சமையல் செய்வது என்று பேசினார்கள். தாத்தாக்கள் பெருமூச்செறிந்தார்கள். ஊர் சுற்றி பார்த்து வந்தார்கள். அப்பா எப்பவும் போல ஆபீசுக்கு போய் வந்தார்.

    மிகப்பெரிய மோட்டார் கம்பெனியில் வேலை. வீடு கொடுத்து எல்லா வசதியும் செய்திருந்தார்கள். சாரதி நான்கு நாட்களுக்கு லீவு லெட்டர் கொடுத்தான். இப்பொழுதெல்லாம் அடிக்கடி குரங்குகளை பார்த்துக் கொண்டிருந்தான். கையில் வாழைப்பழம் வைத்துக்கொண்டு கூப்பிட்டான். குட்டி குரங்கு அழகாக நடந்து வந்து அவனிடம் வாங்கிச்சென்றது. அம்மா குரங்கு தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தது.

    வீடு தெவசக் காரியங்களால் திமிலோகப்பட்டது. வடை, அப்பம், எள்ளுருண்டை, அதிரசம் வாசனை மூக்கைத் துளைத்தது. வாத்தியார்களின் மந்திரப்புகை அப்பாவின் கலங்கிய கண்களை பார்த்தான் சாரதி. பாட்டிகள் இருவரும் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். தாத்தாக்கள் அடிக்கடி கண்களை வேஷ்டி முனையால் துடைத்தார்கள்.

    காக்காக்கு பிண்டம் வெச்சுட்டு வாங்கோ என்று வாத்தியார் கட்டளையிட்டார். சாரதி இங்கே வா என்று அவனிடம் பஞ்சபாத்திர உத்திரணியும், தன் கையில் மூன்று சாத உருண்டை இருக்கிற தட்டையும், எடுத்து மாடி ஏறினார் ராஜகோபால். மொட்டை மாடியில் தண்ணீர் ஊத்துடா சாரதி என்று சொன்னார். தண்ணீர் விட்டு கழுவிய இடத்தில் மூன்று உருண்டைகளை வைத்து ஹர ஹரே கா... கா... கா என்று பெரிய குரலில் கத்தினார். நீயும் காக்காவை கூப்பிடுடா. அப்பாவை போலவே ஹர... ஹர... கா... கா... என்று கூப்பிட்டான்.

    எந்த காக்காவும் வரவில்லை. ஏன்ப்பா காக்காவை கூப்பிடணும்? சாரதி கேட்டான். உங்க அம்மா காக்கா ரூபத்திலே வருவாடா என்றார் அப்பா தளர்ந்த குரலில். சிறிது நேரம் சென்றது. சாரதி, நாம நின்னா காக்கா வராது. கொஞ்சம் தள்ளி நின்னு, கவனிச்சுப்பாரு காக்கா வந்து சாப்பிடும். வேறே ஏதாவது வந்தா விரட்டிடு, நான் கீழே போயிட்டு வரேன் என்று படியில் இறங்கினார்.

    அவர் இறங்க காத்திருப்பதுபோல, ஒரு பெண் குரங்கு தொங்கும் கனமான வயிறுடன் வந்து இவனை பார்த்துக்கொண்டே, ஒரு உருண்டையை எடுத்தது. அப்பா சொன்னது ஞாபகம் வந்தாலும், குரங்கை விரட்ட மனதில்லாமல் நின்றான். சத்தமில்லாமல் வந்து நின்ற மதராஸ் தாத்தா ‘ஓ’வென்று அலறினார். ஐயோ பிண்டத்தை குரங்கு திங்கறதே. என் பொண்ணு கரையேறுவாளா? சனியனே என்று அங்கிருந்த ஒரு கம்பை எடுத்து தரையில் அடித்து குரங்கை விரட்டினார்.

    சூலுற்ற அந்த குரங்கு, சாரதியை பார்த்துக்கொண்டே சென்றது. ஏன்டா சாரதி, குரங்கை விரட்ட வேண்டாமா என்று அவனை தரதர என்று இழுத்துக்கொண்டு கீழே இறங்கினார்.

    ஆளுக்கொரு கவலைப்பட்டார்கள். தாத்தாவும் பாட்டியும் சாரதியை திட்டினார்கள். என்ன மாப்பிள்ளை நீங்க கவனமாக இருக்க வேண்டாமா? என்று பாட்டி அழுதுகொண்டே கேட்டபொழுது, அப்பா தலைக்குனிந்து கண்ணீர் வழிய நின்றார்.

    எங்க அப்பாவை யாரும் திட்டாதேங்கோ எங்க அம்மா காக்கா ரூபத்தில இல்லை என்று சாரதி சொன்னான். வாயை மூடுடா கடங்காரா. பெரியவா பேசறச்சே நீ பேசாதே என்று பாட்டி திட்டினாள். இல்லை நான் சொல்றது நிஜம். அம்மா வயத்துல குட்டிப்பாப்பா இருக்கறச்சே தானே செத்து போனா, பிண்டத்தை சாப்பிட வந்த குரங்கு வயத்துக்குள்ள ஒரு குட்டி குரங்கு இருக்கு. எங்க சயின்ஸ் சார், அப்பா இரண்டு பேரும் சொன்னா, குரங்கிலிருந்து பிறந்தவன் தான் மனிதன். அதனால அம்மா தான் வந்திருக்கா. அதைப்போய் விரட்டிட்டேளே. அம்மா... ஆ... ஆ... என்று இதுவரை அழாத சாரதி, தன் அம்மாவை நினைத்து அழுதான்.

    ராஜகோபால் சாரதியை கட்டி அணைத்துக்கொண்டு அழுதார்.

    பெருமாளே மலையேற பலத்தைக் கொடு என்று முதல்படியில் கற்பூரம் கொளுத்தி பாட்டி கண்ணை மூடிக்கொண்டு வேண்டினாள்.

    அப்பா சாரதி கூப்பிட்டான்.

    என்னடா?

    எனக்கு பத்து ரூபா கொடு. வாழைப்பழம் வாங்கணும்?

    எதுக்கு?

    படிக்கட்டுக்கு அந்தண்டை, மலையில இருக்கிற எல்லா குரங்குகளுக்கும் கொடுக்கணும்.

    அப்பா சிரித்துக்கொண்டே கொடுத்தார். மரத்தடியில், அருவிக்கு அருகில் உட்கார்ந்து கொண்டான் சாரதி. பேண்ட் பாக்கெட்டிலும் பையிலும் ஒளித்து வைத்திருந்த தெவச பட்சணம், எள்ளுருண்டை, அப்பம், வடை, அதிரசம் எல்லாவற்றையும் எடுத்து தட்டில் வைத்தான். ஒவ்வொரு வாழைப்பழமாக உரித்து கொடுக்க ஆரம்பித்தான். குரங்குகள் மௌனமாக அவனைச்சுற்றி நின்று, வாங்கி தின்றன.

    அப்பா தன் கண்களை மறைக்கும் கண்ணீரை துடைத்துக்கொண்டே சாரதியை பார்த்தார்.

    2. நீ அங்கு சுகமா?

    டாக்ஸி சத்தம் கேட்டதும் தான் தாமதம். உற்சாகமானார்கள் ருக்மணியும் சாரதாவும்.

    வீட்டுக்குள் நுழைந்த சங்கரனின் முகத்தில் இதுதான் என்று சொல்லும் படியாக எந்த உணர்ச்சியும் இல்லை. அதைப்பார்த்த ருக்மணிக்கும் சாரதாவுக்கும் உற்சாகத்தின் அளவு சற்றுக் குறைந்துதான் போனது.

    ரேவதி எப்படியிருக்காடா? ஜபமாலையை எடுத்து வைத்துவிட்டு,

    Enjoying the preview?
    Page 1 of 1