Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Engal Veettu Maadiyile
Engal Veettu Maadiyile
Engal Veettu Maadiyile
Ebook142 pages50 minutes

Engal Veettu Maadiyile

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறு வயதிலிருந்தே கதை, கட்டுரைகளில் நாட்டம் கொண்ட எழுத்தாளர் காந்தலக்ஷ்மி சந்திமெளலி. முதலில் ஆங்கிலத்தில் எழுதத் தொவங்கினார். உலக நாடுகள் பலவற்றிற்கு சென்றுள்ள இவர் தமிழில் சிறுகதைகள் எழுத துவங்கினார். "தினமணி - ஞாயிறு மணி, லேடீஸ் ஸ்பெஷல், கலைமகள், அமதசுரபி, கோகுலம் கதிர் என்று பல நேர்காணல்களுக்கான வாய்ப்புகள் பெற்ற பொழுது சாதனையாளர்களின் வாழ்க்கையை நேரடியாக காணும் வாய்ப்பு பெற்றேன்" என்கிறார். சிறுவர் இலக்கியம், நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் என்று பல்வேறு களங்களில் தடம் பதித்துள்ள இவர் நந்தா தீபம், சிறுவர் இலக்கிய ரத்னா, சிறந்த எழுத்தாளார், எழுத்துச்சுடர், அருள் வளர் நங்கை என்று பல விருதுகளை பெற்றுள்ளார்.

ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு பல நூல்களை மொழி பெயர்த்துள்ளார். ஆங்கிலத்திலும் சில நூல்கள் எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125903968
Engal Veettu Maadiyile

Read more from Kanthalakshmi Chandramouli

Related to Engal Veettu Maadiyile

Related ebooks

Reviews for Engal Veettu Maadiyile

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Engal Veettu Maadiyile - Kanthalakshmi Chandramouli

    http://www.pustaka.co.in

    எங்கள் வீட்டு மாடியிலே

    Engal Veettu Maadiyile

    Author:

    காந்தலக்ஷ்மி சந்திமெளலி

    Kanthalakshmi Chandramouli

    For more books

    http://pustaka.co.in/home/author/kanthalakshmi-chandramouli

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அப்பாவின் மீசை

    2. தம்பிப்பாப்பா

    3. மறதிக் குடும்பம்

    4. இரண்டு மடங்கு ஆனந்தம்

    5. மாக்கோலம்

    6. பாடம் படித்து என்ன பயன்?

    7. பக்கம் எவரும் வரமாட்டார்

    8. தஞ்சாவூர் வேப்பமரம்

    9. வாடகை சைக்கிள்

    10. பட்டணத்து உணவுச்சாலை

    11. தேரும் தெருவும்

    12. வரதர் யானை

    13. எங்கள் வீட்டு மாடியிலே

    14. கொடி உயர்த்தி வணங்குவோம்

    15. கார்கில் தீபங்கள்

    16. சரித்திரத்தில் பொறி பறந்த நேரம்

    17. இந்தியாவால் முடியும்

    18. பாடங்கள்

    19. கடிதம் எழுதுவது எப்படி?

    20. விழிப்பாய் இரு தம்பி

    21. சின்ன விஷயம்தான்

    22. உதவிகள் செய்யுங்கள்

    23. புகழ் சேரட்டும்

    24. விளையாட்டென்றால் ஓடாதே!

    25. நூற்றாண்டில் போற்றுவோம்

    26. வெள்ளை உள்ளம்

    27. பெயர் தெரியாத தேசபக்தன்

    என்னுரை

    'சிறுவர் இலக்கியம்' - இது என்னை ஒரு தனி உலகிற்கு அழைத்துச் செல்லும், அதில் நானும் ஒரு குழந்தையாக மாறிவிடும் அதிசயத்தைப் பலமுறை அனுபவித்து இருக்கிறேன்.

    கவிமாமணி இளையவனின் குழந்தை இலக்கியக் கவிதைகளைப் படிக்கையில், முதலில் அதை ரசித்தேன்.

    பிறகு அதில் புதைந்து இருக்கும் முத்துக்களை இனம் கண்டேன், சிறுவர்களின் உலகிற்குள் நுழைந்து அதை நாம் ரசித்து, சிரித்து மகிழும்படியான கவிதைகள்.

    யோசிக்கத் துவங்கினேன். இது வெறும் ரசிக்கும் கவிதைகள் மட்டுமல்ல, வாழும் கலையையும் உள்ளடக்கி உள்ளது என்று புரியத் துவங்கியது.

    இன்றைய சிறுவர்-சிறுமியர்களின் மனநிலைப் பிரச்சனை, படிப்பு, முதல் ராங்க், சகலகலாவல்லித் திறமை, திணிக்கப்படும் கல்லூரிப் படிப்புகள் - அதனால் வெடிக்கும் இளைய சமுதாயத்தினரின் ரெளத்ரம் என்று ஒவ்வொன்றாக மனதில் தோன்ற, இந்தக் கவிதைகள் அந்தக்கால வாழ்க்கையை இக்காலத்திற்கு ஏற்பப் பல அறிவுரைகளை உள்ளடக்கியுள்ளது என்று எனக்கு புரியத் துவங்கியது.

    என் மகள் ஓர் இளவயதுத் தாய். என் பேத்தியை வளர்ப்பதில் உள்ள அவஸ்தைகளை என்னிடம் பகிர்ந்து கொள்வாள். நான் அவளிடம் கூறிய பல அறிவுரைகள் இக்கவிதைகளுடன் பெரிதும் ஒத்துப் போக, இதை ஏன் மற்ற தாய்மார்களுக்கு கூறக்கூடாது. அவர்களும் புரிந்து கொண்டால் வளர்க்கும் முறை சுலபமாகுமே என்று தோன்றியது.

    மறைந்து வரும் கலாச்சார பண்புகள், மறந்துவிட்ட இந்திய வாழ்க்கை முறை ஆகியவற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம், ஏராளம்...

    நம் மூத்தோர்கள் வாழ்ந்த முறையை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் நம் குழந்தைகளுக்கு அதை எடுத்துக் கூறுவதிலும், அதுபோன்றே வாழ்ந்து காட்டுவதிலும் தவறியதால்தான் இன்றைய தலைமுறை சற்றே குழம்புகிறது.

    குழம்பிய மனநிலையில் அவர்கள் வளர்க்கும் தலை முறையைப் பற்றிய கவலை என்னைச் சூழ. கவிமாமணி இளைவனின் கவிதைகளை முழுவதும் படித்தேன்.

    யோசிக்கையில் அன்றைய சிறுவர் உலகமும், இன்றைய சிறுவர் உலகமும் ஒன்றுதான் என்று புரிந்தது.

    ஆனால் அன்றைய பெற்றோர்களும் இன்றைய பெற்றோர்களும் ஒன்றாக யோசிக்கின்றார்களா?

    கவிதைகளின் ஒவ்வொரு வார்த்தையையும் உணர்ந்து, புரிந்து, ரசித்து எழுதி முடித்தபிறகு, நிமிர்ந்து பார்த்தால் என் எதிரில் உள்ள கண்ணாடி என்னைப் பிரதிபலித்தது.

    அடடா. சீக்கிரமாக வளர்ந்து விட்டோமே, சிறுமியாக இருந்திருக்கலாமே எனும் ஏக்கம் என்னைச் சூழ்ந்தது.

    என்னைச் சுற்றியுள்ள சிறுவர், சிறுமியர்களைக் காண்கையில், அவர்களோடு பேசுகையில் அவர்களின் குறும்புகளை ரசிக்கையில் கவிமாமணி இளையவன் அவர்களின் சிறுவர் இலக்கியக் கவிதைகள் என் மனதில் வர என்னையறியாமல் மனம் ரோஜாப் பூவாக மலர்கின்றது.

    கவிதைகளைத் திரட்டி என்னிடம் அளித்த திரு. தீபக்குமார் மற்றும் அவர் குடும்பத்தினர், திருமதி. மஞ்சுளா என்று அனைவருக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

    - காந்தலஷ்மி சந்திரமௌலி

    நன்றியுரை

    கவிமாமணி இளையவன்

    அநேகமாக 1951-ம் ஆண்டாக இருக்கலாம், தஞ்சாவூர் கொங்கனேசுவரர் ஆரம்பப் பள்ளியில் நான் முதல் வகுப்பு மாணவன். ஒருநாள், பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்ட முதல் வகுப்புத் தமிழ்ப்பாடப் புத்தகத்தை எனது சகோதரர் வாங்கி வந்து கொடுத்தார், முழுப் புத்தகத்தையும் படிக்க ஆரம்பித்தேன். அப்புத்தகத்தில் 'தீபாவளி' என்று ஒரு பாடல், அதைச் சத்தமாகப் படித்தேன். இரண்டு மூன்று முறை படித்தேன். எனக்குப் பாடமாகி விட்டது. குழந்தைக் கவிஞர் எழுதிய அந்தப் பாடல்தான், பிற்காலத்தில் சிறுவர் பாடல்களைத் தேடிப் பிடித்துப் படிக்கவும், நானே எழுதவும் தூண்டுகோலாய் அமைந்தது.

    1960 முதல் சிறுவர் பாடல்களை எழுதிக் குவித்தேன். ஆர்வி அவர்கள் ஆசிரியராக இருந்த கண்ணன் இதழ் எனது முதல் கவிதையை வெளியிட்டது. தொடர்ந்து பல கவிதைகள் கண்ணனில் வெளிவந்தன. ஆரம்பத்தில் வாண்டுமாமாவும், பின்னர் குழந்தைக் கவிஞர் மற்றும் ரேவதி ஆகியோரும் ஆசிரியராக இருந்த 'கோகுலம்' இதழிலும் நிறையச் சிறுவர் பாடல்களை எழுதினேன்.

    1975-க்குப் பிறகு கலைமாமணி விக்கிரமன் ஆசிரியராக இருந்த அமுதசுரபியில் சிறுவர் பாடல்கள் தொடராகவே எழுதினேன். பிள்ளைத் தமிழ் என்ற சிறுவர் பகுதிக்கும் பொறுப்பாளராக இருந்தேன். 1981-ல் கே.ஆர்.வாசுதேவன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. முதன்முதலில், பல வண்ணப் படங்களுடன் முழுநீளச் சிறுவர்கதைப் பாடல் தொடர் ரத்னபாலாவில் வெளிவந்தது. இரண்டு ஆண்டுகள் சிறுவர் பண்ணைப் பகுதிக்கும் பொறுப்பாளராக இருந்தேன்.

    சிறுவர் பாடல் சந்தங்களில் திரு. லெமன் அவர்களின் உத்தியை நான் பின்பற்றினேன். இவர்கள் அனைவருமே சிறுவர் இலக்கியத் துறையில் எனது நன்றிக்குரியவர்கள்.

    'எங்கள் வீட்டு மாடியிலே' என்ற தலைப்பிலான இந்த நூலில், எனது பல கவிதைகளை எடுத்துக்காட்டி திருமதி, காந்தலட்சுமி சந்திர மெளலி அவர்கள் எனக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள், கூட்டுக் குடும்பத்தில் பல நாட்கள் வாழ்ந்த எனக்கு, குடும்ப நிகழ்ச்சிகளையும் குடும்ப உறுப்பினர்களையும் கவிதைக்குள் கொண்டு வருவது கடினமாக இல்லை. வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய கவிதைகளை, நூலாசிரியர் மனதில் வைத்து, அருமையான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறார். எழுத்தாளர் சமூகத்தில் மலிந்து கிடக்கும் சுயநலத்தில் நான் பல பாதிப்புகளுக்கு உள்ளானவன், முதன் முதலாகச் சமகால எழுத்தாளரைப் பாராட்டி, நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்ட திருமதி. காந்தலட்சுமி அவர்களின் பெரிய மனதையும், பெருந்தன்மையையும் நான் போற்றுகிறேன்.

    இந்நூல் உருவாவதற்காகப் பல முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்ட தீபம் எஸ்.திருமலை அவர்களுக்கும், என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்த சகோதரர் மாயூரன் அவர்களுக்கும் எனது நன்றி.

    அன்புடன்.

    இளையவன்.

    குடும்பப் பற்று

    1. அப்பாவின் மீசை

    ‘குடும்பம்' என்பது மனிதனுக்குக் கிடைக்கும் பெரும் பொக்கிஷம். அது அன்றைய கூட்டுக் குடும்பமானாலும் சரி, இன்றைய சிறு குடும்பமானாலும் சரி.

    அதை கோயிலாக்குவதும், தரை மட்டமாக்குவதும் மனிதன்தானே!

    குடும்பத்தில் மகிழ்ச்சி, குதூகலம் இவற்றை எப்படிப் பேணுவது.

    வாருங்கள் உங்களோடு இணைந்து நானும் கற்றுக் கொள்கிறேன்.

    ‘குடும்பம் ஒரு கோயில்', நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் இப்படி குடும்பம் எனும்

    Enjoying the preview?
    Page 1 of 1