Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Malarum Ullam Part 2
Malarum Ullam Part 2
Malarum Ullam Part 2
Ebook200 pages48 minutes

Malarum Ullam Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

AL. Valliappa is well known poet who specialised in children rhymes, bed-time stories and songs. Raysel presents Kalathuli on Azha. Valliappa.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123102772
Malarum Ullam Part 2

Read more from Kulandai Kavignar Al. Valliappa

Related to Malarum Ullam Part 2

Related ebooks

Reviews for Malarum Ullam Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Malarum Ullam Part 2 - Kulandai Kavignar AL. Valliappa

    http://www.pustaka.co.in

    மலரும் உள்ளம் - இரண்டாம் தொகுதி

    Malarum Ullam - Part 2

    Author:

    குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா

    Kulandai Kavignar AL. Valliappa
    For more books

    http://www.pustaka.co.in/home/author/kulandai-kavignar-al-valliappa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கலைமகள் வணக்கம்

    காணிக்கை

    அணிந்துரை

    ஆசிரியர் முன்னுரை

    முதல் பகுதி

    தொந்திக் கணபதி,

    மாம்பழம்

    மரம் ஏறலாம்

    பசுவே

    வண்டி வருகுது

    அதோ பாராய்!

    துட்டுத் தந்தால் லட்டு

    நத்தையம்மா

    எங்களுடைய அப்பா

    யானை வருது

    மியாவ் மியாவ் பூனையார்

    அந்த மிருகம்

    ஆப்பிள்

    இன்பமாக உண்ணலாம்

    வீடு எங்கே?

    வாழை மரம்

    இரண்டாம் பகுதி

    மரப்பாச்சி மாப்பிள்ளை

    அப்பா தந்த புத்தகம்

    பறவைக் கப்பல்

    கப்பல் ஏறுவேன்

    வெள்ளைக் கன்றுக்குட்டி

    தோசை நல்ல தோசை

    நானே ராஜா

    பொம்மைக் கல்யாணம்

    திராட்சைப் பழம்

    ஞாயிற்றுக்கிழமை பிறந்த பிள்ளை

    தவளையாரே

    அணிற் பிள்ளை

    முத்து எழுத்து

    அழகு நிலா

    பள்ளிக்கூடப் பை

    எங்கள் மொழி

    மூன்றம் பகுதி

    மலர்கள்

    வானவில்

    நானாக இருந்தால்...?

    வீடு கட்டுவோம்

    நீயும நானும் கேட்கலாம்

    வெள்ளை முயல்

    காற்று எங்கே

    தம்பி

    மழை

    அதிசயம் ஆலமரம்

    என் குதிரை

    முக்கனிகள்

    இரண்டு சக்கர வண்டி

    போலீஸ்காரர்

    கொடி வணக்கம்

    காந்தி சொல்

    நான்காம் பகுதி

    பூனைக் குட்டிகள்

    குதிகரைச் சவாரி

    ரொட்டி வாங்கிடுவாய்

    வித்தைக் குரங்கு

    எங்கள் நேருஜி

    கவிமணித் தாத்தா

    என்னிடம் இருந்தால்…?

    இறகு

    அதிசய வீடு

    சிறு விளக்கு

    சுகந்திரத் திருநாள்

    தோட்டம்

    வித்தைக்காரன்

    தீபாவளி

    ஆடும் மயில்

    பார்த்துப் போ தம்பி

    தம்பியும் தும்பியும்

    கார்த்திகைத் தீபம்

    நான் குழந்தையானால்

    ஐந்தாம் பகுதி

    எங்கள் பள்ளி

    பிறைச்சந்திரன்

    முப்பெரும் புலவர்

    கதை சொல்லும் அண்ணன்

    ஒளவை

    பலன்

    தங்கையின் நடனம்

    எங்கள் தாத்தா

    ஆண்டு பிறந்தது

    அழைக்கும் ரோஜா

    குழந்தைகள் நூல் நிலையம்

    காந்தியும் கதரும்

    செஞ்சிலுவைச் சங்கம்

    காந்தி வழி

    ஏழைச் சிறுவன்

    கதைப்பாடல்கள்

    ஆமையாரின் அவசரம்

    பையனும் பச்சைக்கிளியும்

    உமியும் அரிசியும்

    எலியும் பூனையும்

    என்ன வேண்டும்

    என்ன நடக்குமோ?

    ஏமாற்றம்

    கிளியின் நன்றி

    கடலின் ஆழம்...?

    கடைசி நாள்

    குட்டி பென்சில்

    தாத்தாவின் கோபம்

    மனித வேட்டை

    பரீட்சை முடிவு

    மன்னனும் வேதாந்தியும்

    காவல்காரர்

    நேருஜியும் தேளும்

    சுய விளம்பரம்

    அழியாச்செல்வம்

    தேர் கொடுத்தவர்

    சிறிய வீடு

    மயிலுக்குப் போர்வை

    குதிரை கொடுத்தது!

    உருவப்படம்

    வேடிக்கைப் பாடல்கள்

    இது பாட்டு

    இல்லையே

    நேரு தந்த யானை

    வினோத விடைகள்

    மாப்பிள்ளையும் பெண்ணும்

    இருபது பேர்கள்

    சக்கரம் இல்லா வண்டியிலே…!

    படிப் பார்!

    தொப்பென்று வீழ்ந்தான்!

    பட் பட்!

    பால்காரரே

    ஒருமுழ மூக்கு

    குழந்தைக் கவிஞரின் படைப்பும் பணியும்

    அறிஞர்களின் வாழ்த்தும் கருத்தும்

    கலைமகள் வணக்கம்

    கலையெலாம் பெற்ற தாயே,

    கற்பவர் போற்றும் தாயே,

    உலகிலே நிலைத்த செல்வம்

    உன்னருட் செல்வ மன்றோ?

    பல்கலை பயில வேண்டிப்

    பணிவுடன் வேண்டுகின்றேன்:

    மலரினில் விளங்கும் நீஎன்

    மனத்திலும் விளங்கு வாயே!

    ***

    காணிக்கை

    சின்னஞ் சிறுவருக்குத

    தேன்கவிகள் தந்தவராம்,

    என்போல் இளைஞர்களை

    இத்துறைக்கே ஈர்த்தவராம்,

    என்றன்மனக் கோவிலிலே

    எந்நாளும் உறைபவராம்,

    அன்புக் கவிமணிக்கே

    ஆசையுடன் படைக்கின்றேன்.

    சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் அவர்களின்

    ***

    அணிந்துரை

    ‘மலரும் உள்ளம்’ இரண்டாம் தொகுதி ஒரு நாள் என் கைக்கு வந்தது. காரணம் அறியாமல் படிக்கத் தொடங்கிக் குழந்தை போல் மகிழ்ந்து கொண்டிருந்தேன். திரு. அழ. வள்ளியப்பாவின் கடிதம் என் கைக்கு வந்தது. அதில் அணிந்துரை வேண்டும் என்று குறித்திருந்தார். எனக்கு வியப்பாக இருந்தது. தொடர்ந்து பல ஆண்டுகளாகக் குழந்தை இலக்கிய உலகத்தில் நன்கு அறிமுகமாகிப் புகழுடன் விளங்கி வரும் கவிஞர், ஏன் இப்படி அணிந்துரை கேட்கிறார் என்று எண்ணினேன். நாடறிந்த இவருக்கு ஓர் உரையும் தேவை இல்லை. எனினும், நானும் இந்த நூலைப் படித்தேன் என்பதற்குச் சான்றாக இதனை எழுதுகிறேன்.

    பெரியவர்களின் இலக்கியத்தைக் குழந்தைகள் படிக்க முடியாது. ஆனால், குழந்தைகள் இலக்கியத்தைப் பெரியவர்களும் படிக்க முடியும். என்ன காரணம்? அந்தக் குழந்தை மனம், பெரியவர்களான பிறகும் விட்டு நீங்குவது இல்லை. விரும்பிய போதெல்லாம் அது, திரும்பி வருகிறது. உடல் மூத்து விட்டால், அதற்கு இளமை திரும்ப வருவதில்லை. ஆனால், உள்ளத்திற்கு மூப்பின் அனுபவம் நிரம்பிய போதிலும், இளமை உணர்ச்சிகள் திரும்பத் திரும்ப வருகின்றன.

    குழந்தை உலகம், கவலை குறைந்த உலகம். இயற்கையோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு அங்கு மிகுதி. ‘நத்தையம்மா’ என்ற பாட்டில், நத்தையோடு பேசும் குழந்தை அந்த உண்மையைப் புலப்படுத்துகிறது.

    அத்தை குளிக்கத் தண்ணீர்க் குடம்

    கொண்டு போகிறேன்

    என்று நத்தை சொல்வதும்,

    எத்தனை நாள் ஆகும் அத்தை

    வீடு செல்லவே?

    என்று குழந்தை கேட்பதும்,

    பத்தே நாள்தான்; வேணு மானால்

    பார்த்துக் கொண்டிரு

    என்று நத்தை விடையளிப்பதும் மகிழ்ச்சி தரும் கற்பனையாகும். இப்படிப்பட்ட சின்னஞ்சிறு பொருள்களிலும் கரவு இல்லாமல் கலந்து உணரும் உள்ளம் கவிஞர்க்கும் குழந்தைகளுக்கும் வாய்த்த செல்வமாகும்.

    இயற்கைப் பொருள்களை மட்டும் அல்லாமல், செயற்கைப் பொருள்களையும் குழந்தைகள் காணும் காட்சியே தனிப்பட்டதாகும். விமானத்தைப் பற்றிக் குழந்தை கூறுவதைக்.

    மனிதர் தம்மைத் தூக்கிக் கொண்டு

    வானத்திலே பறக்குது;

    வயிற்றுக் குள்ளே பத்திரமாய்

    வைத்துக் கொண்டே செல்லுது.

    விமானங்களும், மோட்டார்களும், கப்பல்களும் பெருகிய இந்தக் காலத்திலும், குழந்தைகளுக்கு யானையிடத்தில், தீராத ஆசை உண்டு. யானை வாங்கி அதன் மேல் ஏறி எல்லா இடங்களிலும் சுற்றிவர வேண்டும் என்று கூறுகிறது குழந்தை.

    வளரும் குழந்தை தன்னைச் சுற்றியுள்ள பெரியவர்களைப் பார்த்து, எதிர்காலத்தில் டாக்டராக, வாத்தியாராக, வக்கீலாக, நடிகனாக, சிப்பாயாக, போலீசாக ஆக வேண்டும் என்று கனவு காண்பதை ‘நானாக இருந்தால்….? என்னும் பாடல் உணர்த்துகிறது.

    ‘வீடு கட்டுவோம்' என்ற பாட்டு, இக்காலத்து

    Enjoying the preview?
    Page 1 of 1