Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தாம்பத்ய சர்க்கஸ்!
தாம்பத்ய சர்க்கஸ்!
தாம்பத்ய சர்க்கஸ்!
Ebook186 pages2 hours

தாம்பத்ய சர்க்கஸ்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"இன்னிக்கு சாப்பாடு உண்டா? இல்லையா?" 

கேட்டபடி விஸ்வநாதன் சமையல் கட்டுக்குள் எட்டிப் பார்த்தார்! 

அவர் மனைவி விசாலம் அடுக்களை சுவரில் சாய்ந்தபடி மடங்கி உட்கார்ந்திருந்தாள். 

"விசாலம்! ஏன் உட்காந்திட்டே? என்ன பண்ணுது உனக்கு?" 

"முடியலை! இப்படி இருக்கறதை விட சாகலாம்!" 

"ஏன்? காலைல யாராவது ஏதாவது பேசினாங்களா?" 

"எல்லாரும் மருமகள்கிட்ட கொடுமை அனுபவிப்பாங்கன்னு பேரு! நாம மககிட்ட அனுபவிக்கிறோம். வெளியே சொன்னா, யாராவது நம்புவாங்களா?" 

அவர் பேசவில்லை! 

"காலைல நாலரைக்கு எழுந்து வழக்கம் போல சமையல் பண்ணியிருக்கேன்!" 

"சரி!" 

"ஆபீஸ்ல ரெண்டு மூணு பேருக்கு வேணும்னு இருக்கிற எல்லாத்தையும் பேக் பண்ணி எடுத்துட்டுப் போயாச்சு! நம்ம ரெண்டு பேருக்கு சமைக்கணும் திரும்பவும். முடியலீங்க!" 

"நீ செய்ய வேண்டாம். நான் ஓட்டல்ல போய் வாங்கிட்டு வர்றேன்!" 

"வேண்டாங்க! அனாவசிய செலவு! நான் ஒரு ரசம் பண்ணி, சாதம் வடிச்சிர்றேன். நமக்கொரு மகன் இல்லாதது. எத்தனை பெரிய ஊனம்!" 

அவர் பேசவில்லை! 

"இவ ஒரே மகள்னு செல்லமா வளர்த்துட்டோம்! இருக்கற பணத்தை யெல்லாம் போட்டு பிரம்மாண்டமா கல்யாணமும் செஞ்சு குடுத்தோம்! இப்ப என்னாச்சு? நம்ம கையில பணமும் இல்லை! கௌரியோட ஆதரவுல வாழ வேண்டிய கட்டாயம் வந்திருக்கு பாருங்க!" 

விஸ்வநாதன் போய் உட்கார்ந்து விட்டார். 

அவர் தனியாரில் உத்யோகத்தில் இருந்தவர். சுமார் உத்யோகம்தான். அவரது அம்மா, தங்கைகள் என குடும்ப பாரம் நிறைய இருந்தது. விசாலம் வாழ வந்த பிறகு எல்லாருக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டுதான் போனாள். 

முதலில் ஒரு குழந்தை குறைப் பிரசவத்தில் இறந்தது. 

அடுத்தது பிறந்து இரண்டு வயதில் நிமோனியா வந்து போனது! 

விசாலம் நொறுங்கிப் போய்விட்டாள். 

அதன்பிறகு ஐந்து வருட இடைவெளி. 

கௌரி பிறந்தாள். 

முதல் இரண்டு குழந்தைகள் தவறி விட்டதால், கௌரியை பொத்திப் பொத்தி வளர்த்தார்கள். 

அளவுக்கு மீறிய செல்லம்! 

கொஞ்ச நாட்களில் குடும்பத்தில் பெரியவர்களும் விலகிவிட, தனிக்குடும்பம் என்றாகி விட்டது. 

கௌரிக்குப் பிறகு பிரசவம் கூடாது என டாக்டர் சொல்லி விட்டதால், இது ஒரு குழந்தைதான் என்றாகிவிட்டது. 

இரண்டு குழந்தைகள் தவறி, பிறகும் ஐந்து வருடங்கள் கழித்துப் பிறந்ததால் கௌரி பிறக்கும் போதே விஸ்வநாதனுக்கு நாப்பது வயசு! 

ஒரு பீதி வந்து விட்டது. 

'இந்தப் பெண்ணை நல்லபடியா வளர்க்க வேண்டுமே, என்ற பயம்! 

அது அவளுக்கு இன்னும் கூடுதல் சலுகை கிடைக்க காரணமாகி விட்டது. 

அழகு, புத்திசாலித்தனம், திமிர், அகம்பாவம் என்று சகல கலவைகளையும் சேர்த்துக் கொண்டு கௌரி வளர்ந்தாள். 

அவள் பட்டதாரியாகும் போதே விஸ்வநாதன் ரிடையர் ஆகிவிட்டார் அறுபது வயசு! 

அதன் பிறகும் கொஞ்சம் டெக்னிகல் க்வாலிஃபிகேஷன் சேர்த்துக் கொண்டாள் கௌரி! 

இருபத்தியொரு வயதில் நல்ல உத்யோகம் கிடைத்து விட்டது. அவளுக்குக் கல்யாணம் செய்து விட வேண்டும். இல்லையானால் பணம் கரைந்து விடும் என்று விஸ்வநாதன் தவித்தார். 

கௌரி தட்டிக் கழித்துக் கொண்டே வந்தாள். 

இறுதியில் காதல் விவரத்தைச் சொன்னாள். 

விஸ்வநாதன் அதை விசாரிக்க அதே ஜாதிப் பையன்! 

ஆனால் கௌரியை விட சுமார் உத்யோகம்தான். சம்பளம் கூட அவளை விட ஐநூறு ரூபாய் குறைச்சல்தான். 

எதிர்கால நம்பிக்கைகளும் அதிகமில்லை! 

"இந்தப் பையன் தான் வேணுமா கௌரி? உன் தகுதிக்கு இதை விட பெட்டரா பார்க்கலாமே?" 

"இல்லைப்பா! எனக்கு அவரைப் புடிச்சிருக்கு!" 

பளிச்சென சொல்லி விட்டாள். 

அதற்குமேல் விஸ்வநாதன் மறுக்க வில்லை! அந்தப் பையன் பக்கம் லேசான எதிர்ப்பு இருந்தது. 

ஆனால் எடுபடவில்லை!

கல்யாணம் முடிந்து விட்டது. 

புகுந்த வீட்டில் போய் கௌரி அதிக நாள் வாழவில்லை! டாமினேஷன். 

இவனைப் பிரித்து தனிக் குடித்தனத்துக்கு அழைத்து வந்து விட்டாள்! 

அவன் மனிதர்கள் யாரையும் நெருங்க விடவில்லை! 

 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateNov 28, 2023
ISBN9798223352808
தாம்பத்ய சர்க்கஸ்!

Read more from Devibala

Related to தாம்பத்ய சர்க்கஸ்!

Related ebooks

Reviews for தாம்பத்ய சர்க்கஸ்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தாம்பத்ய சர்க்கஸ்! - Devibala

    1

    "என்னங்க! குழந்தையை எழுப்புங்க! டயமாச்சு! அதைக் குளிப்பாட்டி, சாதம் ஊட்டி ரெடி பண்ணியாகணும்!"

    நாகராஜ் பெட்ரூமூக்குள் நுழைந்தான்.

    மூன்று வயது வருண் நல்ல உறக்கத்தில் இருந்தது. மார்கழி மாதக் குளிர் வேறு. போர்வையால் கழுத்து வரை பொதியப்பட்டு, முகம் மட்டும் சின்ன லட்டு போல அழகாக இருந்தது.

    ரசித்தபடி நின்றான்.

    என்னங்க! லாவண்யா ஓடி வந்தாள்.

    என்னம்மா?

    என்ன பண்ணிட்டு இருக்கிங்க? குழந்தையை எழுப்பச் சொன்னேன் நான் உங்களை!

    பாவம்டி! நல்ல தூக்கத்துல இருக்கு! இப்ப எழுப்பினா, அது அழும். மனசுக்கு சங்கடமா இருக்கு!

    இப்பவே மணி ஏழு! அதை ரெடி பண்றதுக்கு ஒன் அவர் நிச்சயமா வேணும். அப்புறம் க்ரச்ல ஹேண்ட் ஓவர் பண்ணிட்டு, நாம ஆஃபீசுக்குப் போக ஒன்பதரை ஆயிடும்! இதுல ட்ராஃபிக் வேற! சீக்கிரம்!

    நாகராஜ் குழந்தையை மெல்ல முத்தமிட்டான். மெதுவாக உலுக்கி எழுப்பத் தொடங்கினான்.

    நாகராஜ் - லாவண்யாவுக்கு கல்யாணமாகி ஐந்து வருடங்கள் முடிந்தாகி விட்டது.

    இது முதல் குழந்தை!

    அரவங்காட்டில் (ஊட்டிக்குப் பக்கத்தில்) கார்டைட் ஃபேக்டரியில் வேலை செய்கிறான் நாகராஜ். லாவண்யாவும் அங்கே தான் வேலை பார்க்கிறாள்.

    அது குளிர் பிரதேசம் என்பதால் உடம்புக்குச் சேராது என்று நாகராஜ் அம்மா வருவதேயில்லை! தம்பியிடம்தான் இருக்கிறாள். நாகராஜுக்கு அப்பா இல்லை அக்கா, தம்பி, தங்கை எல்லாரும் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில்!

    லாவண்யாவுக்கு அம்மா இல்லை!

    அதனால் அவள் பக்கமிருந்தும் யாரும் வர முடியாது!

    கல்யாணம் முடிந்த மறுநாளிலிருந்தே தனிக் குடித்தனம்தான்!

    குழந்தை பிறக்கும்வரை இரண்டு பேர் மட்டுமே இருந்ததால் தனிக்குடித்தனம் உற்சாகமாகத்தான் இருந்தது.

    ஊட்டி வேறு!

    சந்தோஷத்துக்கு கேட்கவா வேண்டும்!

    ஆனால் பிரசவம் முடிந்து, குழந்தையோடு வீட்டுக்கு வந்த பிறகுதான் பிரச்சனையின் தீவிரம் தெரிய ஆரம்பித்தது.

    ஆறுமாதங்களுக்கு லாவண்யா லீவு போட்டாள்.

    வீட்டில் வேலைக்காரியெல்லாம் வைத்துக் கொண்டு சமாளித்தாள்.

    அதன் பிறகு வேலையில் சேர்ந்தாக வேண்டிய கட்டாயம். லீவு இல்லை!

    இனி எடுத்தால் சம்பளம் கட் ஆகும்!

    அதனால் இருவருமாக குழந்தையைப் பற்றி பேசத் தொடங்கி விட்டார்கள்.

    என்ன செய்யலாம் லாவண்யா?

    அதான் யோசிக்கிறேன்!

    நீ ரிசைன் பண்ணிடு! வேற வழியில்லை

    சான்ஸே இல்லை. நான் யோசிக்கறேன்னு சொன்னது க்ரச்ல விடலாமா? இல்லை ஒரு ஆளைப் போட்டு வீட்லயே குழந்தையை பார்த்துக்க ஏற்பாடு செய்யலாமாங்கறதுதான்!

    நீ இருக்கிற மாதிரி ஆகுமா லாவண்யா?

    ஆகாதுதான்பா! ஆனால் நான் எப்படி இருக்க முடியும்? ரெண்டு பேர் சம்பாதிச்சே சமயத்துல முழி பிதுங்குது! உங்க ஒரு சம்பளத்துல எப்படி முடியும்? ரெண்டாவது, சென்ட்ரல் கவர்மெண்ட் ஜாப், விடறதுக்கு பைத்தியமா? சமாளிக்கலாம் விடுங்க!

    முதலில் ஆளைப் போட்டார்கள் வீட்டோடு இருக்கும்படி, நல்ல சம்பளமும் பேசினார்கள். தவிர மூன்று வேளை சாப்பாடு-காபி என எல்லாம். ஒரு வேலைக்காரி போல நடத்தாமல் கௌரவமாக நடத்தினார்கள்.

    அப்படியும் இருப்பு கொள்ளவில்லை!

    ஊருக்குப் போகிறேன் பேர்வழி என்று அடிக்கடி லீவு...

    கொஞ்சம் திருட்டும் இருப்பதாகத் தெரிய வந்தது.

    நீக்கி விட்டாள் லாவண்யா!

    அதன் பிறகு நாலு ஆட்கள் மாறி விட்டார்கள்.

    ஏதோ ஒரு காரணம்!

    ஆட்கள் மாறும் போது, குழந்தையின் மனநிலையும் மாறும் என்ற பயம் இருந்தது.

    இறுதியாகப் பேசி முடிவெடுத்து க்ரச்தான் பெஸ்ட் எனத் தீர்மானித்தார்கள்!

    அதைத் தேடும் படலம்! அவர்கள் குடியிருந்தது கூனூரில்!

    வெலிங்டனில் மார்க்கெட்டுக்குப் பக்கத்தில் ஒரு க்ரச் இருந்தது.

    நாகராஜ் ஸ்கூட்டர் வைத்திருந்தான்.

    தினசரி அதில் தான் இருவரும் ஆஃபீசுக்கு வருவார்கள்.

    வழியில் குழந்தையை விட்டு விட்டு பேக்டரிக்குப் போக வேண்டியது....

    திரும்பும்போது ஐந்தரை மணிக்கு குழந்தையை எடுத்துக் கொண்டு வர வேண்டியது!

    ஒரு வயது முதலே குழந்தை க்ரச்சில்தான் வளருகிறது.

    அது ஸ்கூல் அட்டாச்ட் க்ரச் அதனால் பள்ளிக் கூடத்திலும் அங்கேயே ரெண்டரை வயதில் சேர்க்கச் சொல்லி விட்டார்கள்!

    குழந்தை ஆரம்பத்தில் ரகளை செய்தாலும், இதுதான் நமக்கு சாசுவதம் என்ற முடிவுக்கு வந்ததும், தானே அழுகையை நிறுத்திக் கொண்டது!

    நாகராஜும் லாவண்யாவுக்கு சமத்துக்கு சமம் வீட்டில் வேலைகளைச் செய்வான்!

    அப்படியும் வாழ்க்கை ஒரு மாதிரி எந்திரமயமாகிவிட்டது.

    வீட்டுப் பெரியவர்கள் யாரும் இல்லையே என்ற ஏக்கமே வந்து விட்டது.

    பெரியவர்கள் இருந்தால், எத்தனை பொறுப்பாக குடும்பத்தைப் பார்த்துக் கொள்வார்கள் என்று தோன்றி வீட்டில் சகல வசதிகளும் இருந்தது.

    வசதிகளைக் குறைத்துக் கொள்ளவும் முடியவில்லை!

    கார்டைட் பேக்டரியில் டெக்னிகல் பகுதியில் நாகராஜ் இருந்தான். அவன் ரசாயன பட்டதாரி! அதனால் அசிஸ்டென்ட் ஃபோர்மேனாக கன்காட்டன் செக்ஷனில் இருந்தான். லாவண்யா வெளியே அட்மின் ஸ்டெனோவாக வொர்க்ஸ் ஆஃபீசில் இருந்தாள்.

    அன்றைக்கு ஆபீஸ் முடிந்து வந்ததும்,

    லாவண்யா! ஜனவரி பொறந்து புது லீவும் வந்தாச்சு! ஏற்கனவே ஏர்ன்ட் லீவு இருக்கு. எங்கேயாவது போகலாமா?

    "ஆமாம்! நான் கூட நெனச்சேன். நம்ம எல்.டீ.சியும் வீணாகுது! ஒரு ஆல்-இண்டியா டூர் போட்டுட்டு, போயிட்டு வரலாமா?

    நார்த்துக்கா?

    ஆமா.. டெல்லியெல்லாம் போனா, தாஜ்மஹால் பாக்கலாம். அப்படியே ஹரித்வார் எல்லாம் போகலாம் இல்லையா?

    வேண்டாம்! குளிர் அலுத்தாச்சு! டெல்லியெல்லாம் போனா மறுபடியும் குளிரும்! மேலும் இந்தி வேற! இருக்கற நாளெல்லாம் அவஸ்தையா இருக்கும்!

    எனக்கு இந்தி தெரியுமே!

    சரிம்மா! மனசு ஒட்டாது நார்த்ல! நாம வளர்ந்த விதம் அப்படி! மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம்னு போகலாம்!

    அங்கேயெல்லாம் நமக்கு சொந்தக்காரங்க யாருமில்லை!

    சொந்தக்காரங்க எதுக்கு?

    தங்கிக்கத்தான்!

    அவசியமே இல்லை! நிறைய வாங்கிட்டுப் போவோம்! அப்புறம் இவன் போடற புளித் தண்ணியைக் குடிச்சிட்டு, நாளைக்கு பேச்சும் வரும்! எதுக்கு? ஜாலியா லாட்ஜ்ல தங்கிட்டு, இஷ்டம் போல இருக்கலாம்!

    நிறைய செலவாகும்!

    ஆகட்டும்மா! இப்ப பேங்க்ல பணம் இருக்கில்லையா?

    இல்லைனா, டெபாஸிட்டை உடை!

    அய்யோ!

    என்ன அய்யோ? வாழத்தான் பூமிக்கு வந்திருக்கோம். ரொம்ப எதிர் காலத்திட்டம் போட்டு, நிகழ்காலத்தை தொலைக்க வேண்டாம்! நாமளும் எங்கதான் போறோம்?

    சரி!

    பதினைஞ்சு நாள்னு வச்சுப்பமா?

    வேண்டாங்க. அது அதிகம். அவ்ளோ லீவையும் வேஸ்ட் பண்ண வேண்டாம். பத்து நாள்னு வைங்க!

    போக வர ரயில்லயே ரெண்டு நாள் போயிடும்!

    சரி 12 நாள்னு வைங்க! டூ வீக்ஸ் லீவுக்கு அப்ளை பண்ணலாம். எவ்ளோ செலவாகும்னு ஒரு பட்ஜெட் போடுங்க பர்ச்சேஸ் இதுல சேர்க்காம நம்ம போர்டிங் லாட்ஜிங் மட்டும்!

    ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபான்னு வை லாவண்யா!

    மிடில் க்ளாஸ்ல பொறந்துட்டு இவ்ளோ செலவு பண்றது நியாயமா? பத்து நாள்ல பத்தாயிரம். தவிர பர்ச்சேஸ்! பதினஞ்சு ரூபாய்க்கு வந்துடுமே!

    வரட்டும்டி! ஏன் புலம்பற? எனக்கு இங்கியே இருந்து போரடிச்சாச்சு. போய்த்தான் ஆகணும்!

    சுத்திட்டு வந்தப்புறம் ஒரு வாட்டி எல்லாருக்கும் உடம்புக்கு வரும். கண்ட தண்ணி, சீதோஷ்ணம்னு குழந்தையை முதல்ல தாக்கும்! அப்புறம் வரப்போற மருத்துவச் செலவு.. குழந்தைக்கு க்ரச்ல ‘டச்’ விட்ரும்! திரும்பவும் பழக்கணும்! போய்த்தான் ஆகணுமான்னு யோசனை பண்ணுங்க! நம்ம இயல்பான வாழ்க்கை பாதிக்குமில்லையா?

    பாதிக்கட்டும்! ஸ்டீரியோ டைப் வாழ்க்கை பைத்தியம் புடிக்குது லாவண்யா! புரிந்ததா!

    சரி நீங்க பிடிவாதம் புடிச்சா மாத்திக்க மாட்டிங்க! போகலாம்!

    பயணத்துக்கான ஏற்பாடுகளைத் தொடங்கினார்கள்.

    2

    "இன்னிக்கு சாப்பாடு உண்டா? இல்லையா?"

    கேட்டபடி விஸ்வநாதன் சமையல் கட்டுக்குள் எட்டிப் பார்த்தார்!

    அவர் மனைவி விசாலம் அடுக்களை சுவரில் சாய்ந்தபடி மடங்கி உட்கார்ந்திருந்தாள்.

    விசாலம்! ஏன் உட்காந்திட்டே? என்ன பண்ணுது உனக்கு?

    முடியலை! இப்படி இருக்கறதை விட சாகலாம்!

    ஏன்? காலைல யாராவது ஏதாவது பேசினாங்களா?

    எல்லாரும் மருமகள்கிட்ட கொடுமை அனுபவிப்பாங்கன்னு பேரு! நாம மககிட்ட அனுபவிக்கிறோம். வெளியே சொன்னா, யாராவது நம்புவாங்களா?

    அவர் பேசவில்லை!

    காலைல நாலரைக்கு எழுந்து வழக்கம் போல சமையல் பண்ணியிருக்கேன்!

    சரி!

    ஆபீஸ்ல ரெண்டு மூணு பேருக்கு வேணும்னு இருக்கிற எல்லாத்தையும் பேக் பண்ணி எடுத்துட்டுப் போயாச்சு! நம்ம ரெண்டு பேருக்கு சமைக்கணும் திரும்பவும். முடியலீங்க!

    நீ செய்ய வேண்டாம். நான் ஓட்டல்ல போய் வாங்கிட்டு வர்றேன்!

    வேண்டாங்க! அனாவசிய செலவு! நான் ஒரு ரசம் பண்ணி, சாதம் வடிச்சிர்றேன். நமக்கொரு மகன் இல்லாதது. எத்தனை பெரிய ஊனம்!

    அவர் பேசவில்லை!

    இவ ஒரே மகள்னு செல்லமா வளர்த்துட்டோம்! இருக்கற பணத்தை யெல்லாம் போட்டு பிரம்மாண்டமா கல்யாணமும் செஞ்சு குடுத்தோம்! இப்ப என்னாச்சு? நம்ம கையில பணமும் இல்லை! கௌரியோட ஆதரவுல வாழ வேண்டிய கட்டாயம் வந்திருக்கு பாருங்க!

    விஸ்வநாதன் போய் உட்கார்ந்து விட்டார்.

    அவர் தனியாரில் உத்யோகத்தில் இருந்தவர். சுமார் உத்யோகம்தான். அவரது அம்மா, தங்கைகள் என குடும்ப பாரம் நிறைய இருந்தது. விசாலம் வாழ வந்த பிறகு எல்லாருக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டுதான் போனாள்.

    முதலில் ஒரு குழந்தை குறைப் பிரசவத்தில் இறந்தது.

    அடுத்தது பிறந்து இரண்டு வயதில் நிமோனியா வந்து போனது!

    விசாலம் நொறுங்கிப் போய்விட்டாள்.

    அதன்பிறகு ஐந்து வருட இடைவெளி.

    கௌரி பிறந்தாள்.

    முதல் இரண்டு குழந்தைகள் தவறி

    Enjoying the preview?
    Page 1 of 1