Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Veetla Vibareethanga
Veetla Vibareethanga
Veetla Vibareethanga
Ebook108 pages52 minutes

Veetla Vibareethanga

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இருபது வருடங்களுக்கு பின் தாய்மை அடைகிறாள் கண்மணி. இதை அறிந்த கண்மணியின் கணவர் செல்வத்தின் உடன் பிறந்த இரண்டு சகோதரர்களும், சகோதரியும் குழந்தை பிறந்தால் சொத்து தங்களது கை விட்டு சென்றுவிடும் என குழந்தையை கருவிலே அழிக்க முயற்சி செய்கின்றனர். இவர்களது முயற்சியை முறியடித்தது யார்?

இதனால் ஆத்திரமடைந்தவர்கள் இறுதியாக கையில் எடுத்த அஸ்திரம் என்ன?

Languageதமிழ்
Release dateDec 27, 2021
ISBN6580100607825
Veetla Vibareethanga

Read more from Devibala

Related to Veetla Vibareethanga

Related ebooks

Reviews for Veetla Vibareethanga

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Veetla Vibareethanga - Devibala

    https://www.pustaka.co.in

    வீட்ல விபரீதங்க

    Veetla Vibareethanga

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    1

    கைகளைத் துடைத்தபடி டாக்டர் வெளியே வந்தார். அவர் சிரிப்பில் ஒரு மலர்ச்சி இருந்தது.

    வாழ்த்துக்கள். உங்க மனைவிக்கு கர்ப்பம்தான். சிறுநீர் சேகரிச்சுத் தந்திருக்கு. கொஞ்ச நேரத்துல அதோட முடிவும் வந்திரும்.

    செல்வம் தடுமாறிப் போனார். அவரால் எழக்கூட முடியவில்லை. கண்கள் தளும்பி விட்டது.

    தேங்க்யூ டாக்டர்.

    சேலையை சரிசெய்தபடி கண்மணி எழுந்து வந்தாள்.

    நான் சில மருந்துகளை எழுதி தர்றேன். நல்ல உணவுகளா தரணும் படுக்கையைவிட்டு எழுந்திருக்கக்கூடாது. ரொம்ப ஜாக்கிரதையா கவனிக்கணும் ரொம்ப தாமதமா கர்ப்பம் தரிச்சதால எச்சரிக்கை அவசியம்.

    சரி டாக்டர். 100 ரூபாய் தாளை எடுத்து நீட்டினார் செல்வம். டாக்டர் எழுதித் தந்த மருந்துகளை வாங்கிக்கொண்டு வெளிப்பட்டார் மனைவியுடன்.

    இருவரும் காருக்கு வந்தார்கள்.

    எ... எனக்கு வெக்கமா இருக்குங்க.

    எதுக்கு?

    உங்களுக்கு இப்ப 42 வயசு. எனக்கு 38. இந்த வயசுல குழந்தையா? அதுவும் நமக்கு கல்யாணமாகி கிட்டத்தட்ட 20 வருஷம் கழிச்சு?

    ஏன் சந்தோஷமா இல்லையா?

    அய்யோ... அப்படி நான் சொல்லலை.

    நம்ம வாரிசு நான் உழைச்சு உழைச்சு கோடிக்கணக்கா சேர்த்து வச்ச சொத்துக்களுக்கு வாரிசு வந்தாச்சு. எனக்கு எத்தனை சந்தோஷமா இருக்கு தெரியுமா?

    உங்க ரெண்டு தம்பிகள், தங்கச்சி எல்லாரும் சந்தோஷத்துல துள்ளி குதிப்பாங்க.

    ஆமாம்.

    செல்வம் சீராக அந்த அயல்நாட்டு காரை செலுத்தத் தொடங்கினார். செல்வத்துக்கு அதிகம் படிப்பில்லை. பள்ளிப் படிப்பைக்கூட முழுமையா முடிக்கவில்லை. பழைய இரும்பு வியாபாரம் என்று எதையோ தொடங்கி, அதில் கொஞ்சமாக வளர்ந்து பிறகு ஆட்டோமொபைல் தொழிலில் தலை நுழைத்து படிப்படியாக அதில் வளர்ந்து 18 வயதில் உழைக்கத் தொடங்கிய செல்வம் தனது 22-வது வயதில் கண்மணியை மனைவியாக்கிக் கொண்டபோது ஓரளவு நல்ல நிலைக்கு வந்திருந்தார். அதன் பிறகு ஜவுளிக்கடை, பங்கு மார்க்கெட், லாரிகள் என்று அவர் கால் பதிக்காத எல்லைகளே பாக்கியில்லை, என்ற அளவுக்கு 30 வயதுக்குள் சொல்லும்படி உயர்ந்து விட்டார்.

    பிறகென்ன?

    பண மழைதான். எதில் காலை வைத்தாலும் லஷ்மி தேவி தேடி வந்து அவனை அரவணைத்துக் கொள்வது வழக்கமாகி விட்டது.

    அவரைவிட 4 வயது இளையவன் சண்முகம். அதற்கும் 3 வயது இளையவன் கபாலி. கடைசி தங்கை வடிவுக்கும், இவருக்கும் 10 வயது வித்தியாசம்.

    சிறு வயதில் பெற்றவர்களை இழந்துவிட்டதால் உடன்பிறந்த மூவரையும் ஆளாக்கும் பொறுப்பு இவருக்கு.

    தங்கையை ஒரு என்ஜினியருக்கு மணம் முடித்தார். அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள்.

    தம்பிகள் இருவருக்கும் தனித்தனி பிசினஸ் அமைத்துக் கொடுத்தார்.

    ஏதோ சுமாராக நடத்துகிறார்கள். மனைவி, குழந்தைகள் உண்டு. இப்போதும் பண உதவி செய்து கொண்டுதான் இருக்கிறார்.

    கார் பங்களா போர்டிகோவில் நுழைந்து சற்று தூரம் ஓடி கான்கிரீட் ஷெல்டரின் கீழே ஓயந்தது.

    அவர் இறங்கி, கண்மணியை மெல்லப் பிடித்து இறக்கினார்.

    விடுங்க. எனக்கு ஒண்ணுமில்லை. இப்பத்தான் கர்ப்பம் ஊர்ஜிதமே ஆகியிருக்கு.

    பரவாயில்லை. எச்சரிக்கையா இருந்தா நல்லது.

    அள்ளிக்கொண்டு போய் படுக்க வைத்துவிட்டு திரும்பினார். சண்முகமும், கபாலியும் நுழைந்து கொண்டிருந்தார்கள்.

    டாக்டர்கிட்ட போனியா அண்ணா?

    ஆமாம் தம்பி.

    அண்ணிக்கு திடீர்னு என்ன உடம்புக்கு?

    சந்தோஷ செய்திடா தம்பி. உங்க அண்ணிக்கு கர்ப்பம்னு டாக்டர் உறுதியா சொல்லிட்டார்.

    இருவர் முகமும் நொடியில் இருட்டைத் தொட்டு மீண்டது.

    அப்படியா எங்கே அண்ணி?

    நல்லா ஓய்வு எடுக்கணுமாம். படுத்துட்டா.

    அண்ணே... குட்டிப்பாப்பா வரப்போற சந்தோஷத்தை எப்படி கொண்டாடலாம்.

    சும்மாருங்கப்பா. 44 வயசுல குழந்தையா? வெக்கமா இருக்கு எனக்கே.

    எங்களுக்கெல்லாம் பூரிப்பா இருக்கு. தங்கச்சிக்கு உடனே போன் போடு.

    கபாலி ஓடினான்.

    செல்வத்துக்கு உற்சாகமாக இருந்தது.

    ‘என் உடன்பிறப்புகள்.’

    ‘எனக்கொரு நல்லது என்றால் எப்படித் துள்ளுகிறார்கள்.’

    சற்று நேரத்தில் தங்கை வடிவும், அவள் கணவனும் வந்து விட்டார்கள்.

    அண்ணி...

    என்னம்மா?

    ம்ஹீம்... எழுந்து உட்காரக்கூடாது நீ. என்னங்க நான் ஒருமாசம் இங்கே இருந்து அண்ணிக்கு கூடமாட உதவியா இருக்கேன். பசங்களை நீங்க பார்த்துக்குங்க."

    எதுக்கு வடிவு? எல்லாத்துக்கும் கூப்பிட்ட குரலுக்கு ஆள். எனக்கு என்ன வேலை இங்கே?

    உன்னை நம்ப முடியாது. உடம்பை அலட்டிப்பே. முதல் பிள்ளை. அதுவும் அவன் ரொம்பத் தாமதமா. ஜாக்ரதையா இருக்கணும் அண்ணி.

    வடிவைக் கட்டிக்கொண்டாள் கண்மணி.

    உனக்குத்தான் என் மேல எத்தனை பாசம்?

    இருக்காதா பின்ன? நீ எங்களுக்கெல்லாம் அண்ணி இல்லை. அம்மாவாச்சே. நான் சொல்லிட்டேன். மரியாதையா பொண்ணைப் பெத்துக்கோ. என் 7 வயசு ரெண்டாவது பிள்ளைக்கு நான் முன்பதிவு பண்ணியாச்சு. யாரும் போட்டிக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1