Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கூட்டத்திலே கோயில்புறா...
கூட்டத்திலே கோயில்புறா...
கூட்டத்திலே கோயில்புறா...
Ebook120 pages1 hour

கூட்டத்திலே கோயில்புறா...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"ரேவதி வீட்ல இருக்கும் போது இப்ப எனக்கென்ன கல்யாணத்துக்கு அவசரம்? முதல்ல அவ கல்யாணம் முடியட்டும். அப்புறமா நான் செஞ்சுகறேன்!"
 "எனக்கு இப்பக் கல்யாணம் வேண்டாம்!"
 ரேவதி தன் நகங்களுக்கு சாயம் தீட்டியபடி குரல் கொடுத்தாள் உடனடியாக.
 "ஆமாண்டா ராஜா! ரேவதிக்கு இருபத்தி ஒண்ணுதான் ஆச்சு!"
 "இதுதான்மா சரியான வயசு. கிராஜுவேஷன் முடிச்ச உடனே அவளுக்கு பேங்க்ல வேலை கிடைச்சாச்சு! இப்பவே நல்ல வரனைப் பார்த்து முடிச்சிட்டா, பெட்டர்! என்னப்பா?"
 அப்பா வாய்க்குள் குட்காவை அடக்கியிருந்தார். அரைக்கண் மூடி பான்பராக் சுகத்தில் இருந்தார்.
 "உங்கப்பா எதுக்கு பதில் சொல்லியிருக்கார்?"
 ரேவதி நிமிர்ந்தாள்.
 "ராஜா உனக்கும் எனக்கும் ஏழு வயசு வித்யாசம். இப்பவே உனக்கு இருபத்தெட்டு. இனிமேலும் எனக்காக நீ லேட் பண்ண வேண்டாம். தங்கை இருக்கும்போது அண்ணன் கல்யாணம் செஞ்சுக்ககூடாதுங்கறது சட்டமா?"
 "அப்படியில்லைமா! ஆனாலும்...!"
 "நத்திங்டுயிங்! அம்மா... ராஜாவுக்கு வரன் பாரு! நம்ம வீட்டுக்கு அண்ணி உடனடியா வரணும்!"
 அப்பா வாய் கொப்பளித்துவிட்டு வந்தார்.
 "ஆமாம் ராஜா! ரேவதி சொல்லுவது தப்பில்லை. இன்னும் ரெண்டு மூணு வருஷம் போகட்டும். அப்புறமா அவளுக்கு வரன் பார்க்கலாம்!அப்பா காசில் மகாகெட்டி.
 மகள் பணத்தையே சேர்த்து அவளைக் கட்டிக் கொடுத்துவிடலாம் என்று நினைக்கும் ரகம்.
 "அப்பா எனக்காகத் தன் பணத்துல செலவு பண்ணப் போறதில்லை. அதான் அப்படி சொல்றார்!"
 ரேவதி போட்டு உடைத்தாள்
 "ஏண்டீ அப்படி பேசற? சரி அப்படியே இருக்கட்டுமே! அப்பா ரிடையராக இன்னும் மூணு வருஷம் இருக்கே! நானும் சம்பாதிக்கிறேன். உனக்குச் செய்யாம யாருக்குச் செய்யப் போறோம்?"
 அம்மா, அப்பாவைப் பாதுகாத்தாள்.
 "சரி சரி! டாப்பிக்கை விட்டு வெளியே போறியே! ராஜாவோட வரன் என்னாச்சு?"
 "இருடி! முதல்ல அவனைக் கேட்டுப்போம். நீ யாரையாவது காதலிக்கிறியா ராஜா?"
 "என்னம்மா நீ? அப்படி இருந்தா உங்ககிட்டயெல்லாம் சொல்லாமலா இருப்பேன்?"
 "இனிமே காதலிக்கப் போறியா?" ரேவதி மடக்கினாள்.
 "நிச்சயம் ஐடியா இல்லை!"
 "அப்படீன்னா ஹிண்டுல விளம்பரம் தந்துரட்டுமா ராஜா?" அப்பா குறுக்கிட்டார்.
 "வேண்டாங்க! தெரிஞ்சவங்ககிட்ட சொல்லி வச்சா போதாதா? நான், நீயின்னு போட்டி போட்டுட்டு வரமாட்டாங்களா? மாதர் சங்கத்துல நித்யாகிட்ட விவரம் சொன்னா, நாளைக்கே நாம கேட்டபடி அவதருவா!"
 "அப்படீன்னா சொல்லு!"
 "என்ன ராஜா... பாக்கட்டுமா?"
 அவன் பேசவில்லை.
 "உனக்கு கல்யாணம் செஞ்சுக இஷ்டம்தானே?"
 "இஷ்டமில்லைனு சொல்ல அவன் என்ன அலியாடீ?"அய்யே போதுமே! கொஞ்சம் அடக்கமா பேசுங்க! சொல்லு ராஜா!"
 "ரேவதிக்கு...!"
 "அவதான் இப்ப வேண்டாம்னு சொல்லிட்டாளே!"
 "சரிம்மா! எனக்கு சம்மதம்தான்!"
 "உனக்கு என்ன மாதிரி மனைவி வரணும்னு ஏதாவது எதிர்பார்ப்பு இருக்கா?"
 "அதெல்லாம் ஒண்ணும் இல்லைமா! பார்க்க லட்சணமா, குடும்பப்பாங்கா இருக்கணும்!"
 "அடக்கமா இருக்கணும். உங்கம்மா மாதிரி இருக்கக்கூடாது!"
 "ஏன்! எனக்கு அடக்கம் இல்லையா?" அம்மா சீற,
 "அடக்கம் தாண்டீ! நான் உனக்குள்ள அடக்கம்தானே!"
 "போதும் உங்க கேலி, கிண்டல். நான் இப்ப சீரியஸாப் பேசிட்டு இருக்கேன்!"
 "அம்மா உனக்குத் தெரியும். நீ பார்த்துப் பிடிச்சா, எனக்குப் பூரணசம்மதம்! அம்மா பெருமிதத்துடன் அப்பாவைப் பார்த்ததாள்
 "என்பிள்ளை என் சொல்லைத்தான் வேதமா நெனப்பான்!"
 "ஹூம்! ஆதிநாள்ள நான்கூட அம்மாக் கோண்டுதாண்டா ராஜா! உங்கம்மா கழுத்துல தாலி கட்டினதும் எடுத்த கூஜாதான். இப்பக்கூட வைக்க முடியலை கீழே!"
 ரேவதி உரக்கச் சிரித்தாள்.
 "போதுமே! அம்மாவைக் கேலி பண்ணாதிங்க! பாவம்!" ராஜா பரிந்து கொண்டு வந்தான்.
 "ராஜா உனக்கு வரப்போற மனைவிக்கு என்னல்லாம் தகுதிகள் இருக்கணும்?"
 "அம்மா நான் சொல்லட்டா?"
 ரேவதி அவசரப்பட்டாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateOct 18, 2023
ISBN9798223955573
கூட்டத்திலே கோயில்புறா...

Read more from Devibala

Related to கூட்டத்திலே கோயில்புறா...

Related ebooks

Reviews for கூட்டத்திலே கோயில்புறா...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கூட்டத்திலே கோயில்புறா... - Devibala

    1

    "ரேவதி வீட்ல இருக்கும் போது இப்ப எனக்கென்ன கல்யாணத்துக்கு அவசரம்? முதல்ல அவ கல்யாணம் முடியட்டும். அப்புறமா நான் செஞ்சுகறேன்!"

    எனக்கு இப்பக் கல்யாணம் வேண்டாம்!

    ரேவதி தன் நகங்களுக்கு சாயம் தீட்டியபடி குரல் கொடுத்தாள் உடனடியாக.

    ஆமாண்டா ராஜா! ரேவதிக்கு இருபத்தி ஒண்ணுதான் ஆச்சு!

    இதுதான்மா சரியான வயசு. கிராஜுவேஷன் முடிச்ச உடனே அவளுக்கு பேங்க்ல வேலை கிடைச்சாச்சு! இப்பவே நல்ல வரனைப் பார்த்து முடிச்சிட்டா, பெட்டர்! என்னப்பா?

    அப்பா வாய்க்குள் குட்காவை அடக்கியிருந்தார். அரைக்கண் மூடி பான்பராக் சுகத்தில் இருந்தார்.

    உங்கப்பா எதுக்கு பதில் சொல்லியிருக்கார்?

    ரேவதி நிமிர்ந்தாள்.

    ராஜா உனக்கும் எனக்கும் ஏழு வயசு வித்யாசம். இப்பவே உனக்கு இருபத்தெட்டு. இனிமேலும் எனக்காக நீ லேட் பண்ண வேண்டாம். தங்கை இருக்கும்போது அண்ணன் கல்யாணம் செஞ்சுக்ககூடாதுங்கறது சட்டமா?

    அப்படியில்லைமா! ஆனாலும்...!

    நத்திங்டுயிங்! அம்மா... ராஜாவுக்கு வரன் பாரு! நம்ம வீட்டுக்கு அண்ணி உடனடியா வரணும்!

    அப்பா வாய் கொப்பளித்துவிட்டு வந்தார்.

    ஆமாம் ராஜா! ரேவதி சொல்லுவது தப்பில்லை. இன்னும் ரெண்டு மூணு வருஷம் போகட்டும். அப்புறமா அவளுக்கு வரன் பார்க்கலாம்!

    அப்பா காசில் மகாகெட்டி.

    மகள் பணத்தையே சேர்த்து அவளைக் கட்டிக் கொடுத்துவிடலாம் என்று நினைக்கும் ரகம்.

    அப்பா எனக்காகத் தன் பணத்துல செலவு பண்ணப் போறதில்லை. அதான் அப்படி சொல்றார்!

    ரேவதி போட்டு உடைத்தாள்

    ஏண்டீ அப்படி பேசற? சரி அப்படியே இருக்கட்டுமே! அப்பா ரிடையராக இன்னும் மூணு வருஷம் இருக்கே! நானும் சம்பாதிக்கிறேன். உனக்குச் செய்யாம யாருக்குச் செய்யப் போறோம்?

    அம்மா, அப்பாவைப் பாதுகாத்தாள்.

    சரி சரி! டாப்பிக்கை விட்டு வெளியே போறியே! ராஜாவோட வரன் என்னாச்சு?

    இருடி! முதல்ல அவனைக் கேட்டுப்போம். நீ யாரையாவது காதலிக்கிறியா ராஜா?

    என்னம்மா நீ? அப்படி இருந்தா உங்ககிட்டயெல்லாம் சொல்லாமலா இருப்பேன்?

    இனிமே காதலிக்கப் போறியா? ரேவதி மடக்கினாள்.

    நிச்சயம் ஐடியா இல்லை!

    அப்படீன்னா ஹிண்டுல விளம்பரம் தந்துரட்டுமா ராஜா? அப்பா குறுக்கிட்டார்.

    வேண்டாங்க! தெரிஞ்சவங்ககிட்ட சொல்லி வச்சா போதாதா? நான், நீயின்னு போட்டி போட்டுட்டு வரமாட்டாங்களா? மாதர் சங்கத்துல நித்யாகிட்ட விவரம் சொன்னா, நாளைக்கே நாம கேட்டபடி அவதருவா!

    அப்படீன்னா சொல்லு!

    என்ன ராஜா... பாக்கட்டுமா?

    அவன் பேசவில்லை.

    உனக்கு கல்யாணம் செஞ்சுக இஷ்டம்தானே?

    இஷ்டமில்லைனு சொல்ல அவன் என்ன அலியாடீ?

    அய்யே போதுமே! கொஞ்சம் அடக்கமா பேசுங்க! சொல்லு ராஜா!

    ரேவதிக்கு...!

    அவதான் இப்ப வேண்டாம்னு சொல்லிட்டாளே!

    சரிம்மா! எனக்கு சம்மதம்தான்!

    உனக்கு என்ன மாதிரி மனைவி வரணும்னு ஏதாவது எதிர்பார்ப்பு இருக்கா?

    அதெல்லாம் ஒண்ணும் இல்லைமா! பார்க்க லட்சணமா, குடும்பப்பாங்கா இருக்கணும்!

    அடக்கமா இருக்கணும். உங்கம்மா மாதிரி இருக்கக்கூடாது!

    ஏன்! எனக்கு அடக்கம் இல்லையா? அம்மா சீற,

    அடக்கம் தாண்டீ! நான் உனக்குள்ள அடக்கம்தானே!

    போதும் உங்க கேலி, கிண்டல். நான் இப்ப சீரியஸாப் பேசிட்டு இருக்கேன்!

    "அம்மா உனக்குத் தெரியும். நீ பார்த்துப் பிடிச்சா, எனக்குப் பூரணசம்மதம்! அம்மா பெருமிதத்துடன் அப்பாவைப் பார்த்ததாள்

    என்பிள்ளை என் சொல்லைத்தான் வேதமா நெனப்பான்!

    ஹூம்! ஆதிநாள்ள நான்கூட அம்மாக் கோண்டுதாண்டா ராஜா! உங்கம்மா கழுத்துல தாலி கட்டினதும் எடுத்த கூஜாதான். இப்பக்கூட வைக்க முடியலை கீழே!

    ரேவதி உரக்கச் சிரித்தாள்.

    போதுமே! அம்மாவைக் கேலி பண்ணாதிங்க! பாவம்! ராஜா பரிந்து கொண்டு வந்தான்.

    ராஜா உனக்கு வரப்போற மனைவிக்கு என்னல்லாம் தகுதிகள் இருக்கணும்?

    அம்மா நான் சொல்லட்டா?

    ரேவதி அவசரப்பட்டாள்.

    சொல்லுடி!

    அண்ணி, வாய்க்கு ருசியா சமைக்கணும்! வீட்டைக் கண்ணாடி மாதிரி துடைச்சு துடைச்சு வச்சுக்கணும். நல்லா பாட்டுப் பாடணும்!

    படிச்ச, உத்யோகம் பாக்கற பொண்ணா இருக்கணும்!

    அப்பா குறுக்கிட்டார்.

    வேண்டாம்பா! உத்யோகம் பாக்கற பொண்ணு ராஜாவுக்கு வேண்டாம்!

    ஏன் ரேவதி?

    இந்த வீட்ல நாம நாலுபேரும் உத்யோகம் பாக்கறோம். பணத்துக்குப் பஞ்சமே இல்லை. ஆனா நல்ல வீட்டுச் சாப்பாடு ருசியா சாப்பிட்டு எத்தனை நாள் ஆகுது. வீடு போட்டது போட்டபடி கிடக்கு யாரையும் நான் குறை சொல்லலை. காலைல மணி எட்டடிச்சா கதவைப் பூட்டிட்டு திசைக்கு ஒருத்தரா பறக்கறோம். சாயங்காலம் ஆறு மணிக்கு மேல திரும்பவும். டயர்டா இருக்கு, எதையோ சாப்டுட்டு படுத்துர்றோம். பாதிநாள் ஓட்டல்ல!

    ஆமாங்க! அவ சொல்றதும் சரிதான். பணம் என்னவோ நிறைய வருது. ஆனா எதையோ தொலைச்சமாதிரி ஒரு உணர்வு!

    சரி! உனக்கு எத்தனை வருஷம் சர்வீஸ்?

    ஆறு வருஷம்!

    வாலண்டரி ரிடையர்மென்ட் வாங்கிட்டு வீட்டை நீ கவனிக்கக்கூடாதா?

    கவனிக்கலாம். மனசு வரலியே! ஆறு வருஷச் சம்பளம் கிட்டத்தட்ட மூணு லட்சம் விட்டுட்டு வீட்டுல ஒக்கார முடியுமா!

    சரி! ரேவதி விடட்டும்!

    போங்கப்பா! பேங்க் உத்யோகம் கிடைக்கறதே கஷ்டம், விடச் சொல்றீங்களா?

    அதானே! கல்யாண மார்க்கெட்ல வேலையில்லாத பொண்ணுக்கு என்னமதிப்பு?

    ராஜா ரேவதியின் அருகில் வந்தான்.

    என்ன ரேவதி நீ? வரப்போறவளுக்கு உத்யோகம் வேண்டாம்னு நீதான் சொன்னே! கல்யாண மார்க்கெட்ல, வேலையில்லாத பொண்ணுக்கு என்ன மதிப்புணு அம்மா கேக்கறாங்க. முரண்பாடா இல்லை?

    இல்லை ராஜா! தொண்ணூறு சதவீதம் வேலைக்குப் போற பொண்ணுதான் வேணும்னு கேக்கறாங்க. நாம வித்யாசப்பட்றம் உத்யோகம் வேண்டாம்னு சொல்ல போறோம்!

    ஏன்?!

    தபாரு ராஜா! அம்மா இனி வேலையை விட முடியாது. தோணாது! அம்மானு மட்டுமில்லை... வேலைக்குப் போய் சம்பளத்தைக் கையில வாங்கிட்டா, வேலையை விட எந்தப் பொண்ணும் சம்மதிக்க மாட்டா பண ருசி! வேலைக்கே போகாதவளா இருந்தா, அந்த ருசி தெரியாது பாரு!

    அம்மா ராஜாவின் அருகில் வந்தாள்.

    "ராஜா! நீ ஆபீசரா இருக்கே! மாசம் ஏறத்தாழ எட்டாயிரம் ரூபாவரைக்கும் உனக்கு வருது! நானும் அப்பாவும் சம்பாதிக்கறம். ரேவதி பணத்தை விடு!

    Enjoying the preview?
    Page 1 of 1