Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கண்ணகி - '96'
கண்ணகி - '96'
கண்ணகி - '96'
Ebook119 pages59 minutes

கண்ணகி - '96'

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நந்த கோபால் இருக்காருங்களா?"
 காலை ஆறரை மணிக்கு கதவைத் தட்டினார்கள் அந்த இரண்டு பேர்.
 கதவைத் திறந்தது நந்துவின் மனைவி சுமித்ரா.
 "இருக்கார் உள்ள வாங்க!"
 அவர்கள் இருவரும் பவ்யமாக ஹாலில் வந்து உட்கார, சுமித்ரா உள்ளே வந்தாள். நந்து எழுதிக் கொண்டிருந்தான்.
 "உங்களைப் பார்க்க யாரோ ரெண்டு பேர்...!"
 "வர்றேன்!'"
 லுங்கி, பனியனுடன் உட்கார்ந்து பரபரப்பாக எழுதிக் கொண்டிருந்தான் நந்து. பேனா மூடி வைத்து விட்டு, ஒரு டவலை மேலே போர்த்தியபடி ஹாலுக்கு வந்தான்.
 "வணக்கம்!"
 அவர்கள் இருவரும் எழுந்து நின்றார்கள்.
 "வணக்கம். ஒக்காருங்க!"
 "நாங்க நியூட்டன் வீடியோஸ்லேருந்து வர்றம்!"
 "அப்படியா?"
 "சமீபத்துல 'ஹிட்' ஆன உங்க நாவல் 'சகுந்தலா' எங்களை ரொம்ப பாதிச்சிருக்கு எங்களை மட்டுமில்ல... அகில இந்திய ரீதில அது ஒரு கலக்குக் கலக்கியிருக்கு." நந்து பேசாமல் உட்கார்ந்திருந்தான்

"அதை டி.வி சீரியலாப் பண்ணலாம்னு ஒரு அபிப்ராயம் வச்சிருக்கோம். அதான் உங்களைப் பார்க்க வந்தம்!"
 நந்து, மெல்லச் சிரித்தான்.
 "ஏற்கனவே ரெண்டு பேர் 'சகுந்தலா' தொடர்பா என்னை 'அப்ரோச்' பண்ணியாச்சு!"
 "அப்படியா? தந்தாச்சா கதையை?"
 "இல்லை! நான் அந்தக் கதையைத் தரணும்னா ரெண்டு மூணு நிபந்தனைகள் இருக்கு"
 "என்ன அது?"
 "ஸகிரிப்ட் நான்தான் பண்ணுவேன். அந்தக் கதைக்குனு சில ஆர்ட்டிஸ்ட் என் மனசுல வச்சிருக்கேன். அவங்களைத்தான் போடணும். டைரக்டரும் நான் எதிர்பாக்கறவரா இருக்கணும்."
 "யாரெல்லாம் அது? சொல்லுங்க!"
 "அப்பத்தான் எதிர்பாக்கற விஷூவல் ரிசல்ட் கிடைக்கும் சகுந்தலாவுக்கு!"
 "சொல்லுங்க! சரிப்பட்டா பார்க்கலாம்!"
 "இருதயராஜ்- பிலிம் இன்ஸ்டிட்யுட்லேருந்து வந்த டைரக்டர் நல்லா பண்றார். அனுபமா கதாநாயகியா நடிக்கணும்."
 வந்தவர்கள் சின்னக்குரலில் என்னவோ பேசிக் கொண்டார்க இவனைப் பார்த்துச் சிரித்தார்கள்.
 "சார்! அனுபமா நாலஞ்சு படம் ஹிட் குடுத்துட்டாங்க. டேட் கிடைக்கறது கஷ்டம் கேட்டுப்பார்க்கறம். இருதயராஜும் பிஸியா இருக்கார்! மேலும் ரெண்டு பேருக்கும் சம்பளம் அதிகம். டி.வி சீரியலுக்கு கட்டுபடியாகுமானு தெரியில!"
 "அப்படீன்னா விட்டுருங்க!"
 "இல்லை சார். நாங்க இந்தக் கதையை விடறதா இல்லை! சரி பேசிப் பாக்கறோம். உங்க விருப்பப்படி அவங்க ரெண்டு பேர் தேதியையும் வாங்கறோம்."
 கைப்பை திறந்து ரொக்கமாக பணம் எடுத்தார்கள்

"இதுல பத்தாயிரம் இருக்கு. முன்பணமா வச்சுக்குங்க!"
 "இருக்கட்டும். எதுவும் முடிக்காம, நான் பணம் வாங்கறதில்லை!"
 "நாங்க வந்ததுக்கு ஒரு டோக்கன் சார். கதையை ப்ளாக் பண்ணிக்கலாம் இல்லையா?"
 "ஸாரி! அதுக்கு அவசரப்படாதீங்க. மற்ற விஷயங்கள் முடியட்டும், பாக்கலாம்!" அவர்களிடம் சன்னமாக ஏமாற்றம் தெரிந்தது. காட்டிக் கொள்ளாமல் புறப்பட்டுப் போனார்கள்.
 பல் தேய்த்து முகம் கழுவிக் கொண்டு அம்மா அப்போதுதான் ஹாலுக்கு வந்தாள். அப்பா மொட்டை மாடியில் காலை நாளிதழை மேய்ந்து கொண்டிருந்தார்.
 அவரும் இறங்கி வந்தார்.
 "வீட்டைத் தேடி பணம் வரும் போது ஏண்டா தம்பி வேண்டாம்னு சொல்ற?"
 "தபாருடா! ஆர்ட்டிஸ்ட், டைரக்டர் இன்னார்தான் வேணும்னு நீ நிபந்தனை போடறது சரிப்படுமா?"
 "ஏன்பா? 'சகுந்தலா'வை எழுதினது நான். என் கற்பனையில் இன்னார் பண்ணினாத்தான் சரிபடும்னு இருக்கு. திரையில அதை சரியாக் கொண்டு வர வேண்டாமா?" சுமித்ரா வெளிப்பட்டாள்.
 "உங்களுக்கு சினிமா ஃபீல்டுல எந்த அனுபவமும் இல்லை. அதனால நிபந்தனைகள் போடறது கஷ்டம்தான். வந்ததை வாங்கி வச்சிட்டு கதையைக் குடுத்துடுங்க!"
 "கதையை அப்படி விக்க நான் தயாரா இல்லை!"
 சுமித்ரா ஒன்றும் சொல்லாமலே சமையல்கட்டுக்குள் நுழைந்து விட்டாள். நந்து எழுதப் போய் விட்டான்.
 அம்மா குளிக்கப் போக, அப்பா விட்ட இடத்திலிருந்து பத்திரிகையை படிக்கத் தொடங்கினார்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateOct 14, 2023
ISBN9798223620723
கண்ணகி - '96'

Read more from Devibala

Related to கண்ணகி - '96'

Related ebooks

Related categories

Reviews for கண்ணகி - '96'

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கண்ணகி - '96' - Devibala

    ̫*ebook_preview_excerpt.htmlZn~zZ } $l`$HKb *>IȪxF]]?_}UǛ?wOݧo.Vl.妸KK\cmR]~o~oN}nC<..p)FlU3ڶ\ʺ}m~^#kz|'ʆNKROS'\f3IVUw:B/GJzdC/47{c ZQ_]pG?ǺХkO?I.lo0Q'mte(NV~ RhR~%7솟͔|"\qV%>:,W ߂. ySgMMp:q~ś>f΃{؇Ia&X`&0g}p(Xknd`&NfV#A RA={q4Ntuq(X@o:JQS·#R&6SШbkC#)(UJ\kx 0V82'Jű Ȑ9OO`^|5nVېM8w}B CF-8q*1diS` žK8 dAe /vuvt+;oQ ٣3Fo=bfdׂq$>pVjh6+$k0Z6L51v`tu(*O8E6,%Xɬ?Jq|Q&}k X psƜ{t27"xs@+Z%4!4 {XѓQB*q8W:Z`3d RA>6mΥ!N!0̭MҴTkkҍk&%A5fQ lNPy)]ǁr(RR+409mR*N)v{ZdEN}muy2lyКF)U noDZ̓4cޔH1Vгxy0F⪳f0JN`#U8 ;(Ҳ 39a^dة"\B Ոu9 dl&t1gPEhU5 F܌fe՝Ϻi)GS9q}L9!̊BR0CDD m0*\FzSXR +l:0)'Cbp"y jXbH?UXMq_ [5ߍxP$SvkX?a)R9vFC)dc4U=Zmfܳ3:gq;&=9>c+c䟴-t yƒ˪Z@4?!69(&ƥo&T!e(gϭ<Z"d1& Avx[p|υ{'X 3y煔kRsTh0֖>|&9sb+h%GOX[y9dXk}L>>&[#I%7n֛"M{O_a1;< Jem [KIrLofI ־f\ǀ6uTrmAwܠ(XLҗ<ܸw])rEZ4%jy:%7s@Y+l\h(юt4N}_HFǴ?5Zp${P#ƾVӫhiVlx T⨝r"fXA7aUf'aUk: LqƜtA7<}X g컑:xi09t eFI5pzW-ܹ[k+Y^2Z*v.=zs}-zSKĹVŷKw氘2QaIC)Cͼ9MKPC& 9l5Jy*u+S҃ $]()Q4"[i˭ji?'eFqQM+O_y!&\V,d_ zgo AE^ 5Ĥl3/C ~imӠUݕ8pv]Jsd 3aroč|8 p gR@ A_} K!PRbP2&ĸe[(f2Fch<.9×݀qrIJv3C@k[lfϸI'f8AhNak)$N4 j$#ΞZKgM7nC2.*u쵨x~f{BEgD|Rƚ(džf L(*)B ՙ%5
    Enjoying the preview?
    Page 1 of 1