Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

திருமகள் தேடி வந்தாள்..!
திருமகள் தேடி வந்தாள்..!
திருமகள் தேடி வந்தாள்..!
Ebook127 pages1 hour

திருமகள் தேடி வந்தாள்..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அது குளிர்பான நிறுவனம் ஒன்று பொறுப்பேற்று நடத்தும் மெல்லிசைப் போட்டி. இறுதிச் சுற்றுப் போட்டிக்கு நாலு பேரைத் தேர்ந்தெடுத்தார்கள். அதில் ஒருவன் குகன். ஆறு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கிவிட்டது. 

அப்பா, அம்மா, நகுல் என்று எல்லாருமே அதிசயமாக அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். 

போட்டி தொடங்கிவிட்டது. 

முதலில் ஷெனாயுடன் ஒரு மேற்கத்திய இசை... இரண்டு இளைஞர்கள் பாடினார்கள். ஏறத்தாழ ஹிந்துஸ்தானி கிளாசிக்கல். 

அடுத்தது ஒரு பெண், ஒரு ஆண் ராப் ரக அதிரடிப் பாடல் வகை, ஏகப்பட்ட வாத்தியங்களுடன்! 

மூன்றாவதாக குகன். கொஞ்சம் நம்மையும், மேற்கத்திய இசையையும் குழைத்து அழகாக அமைத்திருந்த பாடல்கள். 

இறுதியில் அந்தப் பெண்! 

ராஜஸ்ரீ! 

அற்புதமான நமது சாஸ்த்திரிய சங்கீதம் கலந்த வித்யாசமான மெல்லிசை. தியாகராஜ கீர்த்த கானய பாரதியாரோடு கலந்து கலக்கினாள்! பலத்த கைதட்டல். 

ராஜஸ்ரீக்கு பரிசு கிடைத்தது. 

குகனுக்கு ஒரு ஆறுதல் பரிசு! 

வீடு திரும்பி விட்டார்கள். சாப்பிட்டார்கள். அவரவர் படுக்கப் போக ஆயத்தமாக, 

மொட்டை மாடியில் குகன் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான். நகுல் படியேறி வந்தான். 

"தம்பி" 

குகன் அவசரமாக சிகரெட்டை காலடியில் போட்டு மிதித்து விட்டு திரும்பினான். 

"வாண்ணா!" 

"உங்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்!" 

"சொல்லு!" 

"இதுவரைக்கும் உத்யோகம், மெஸ், ஓய்.எம்.சி.ஏ. அது இதுன்னு எந்திரத்தனமா வாழ்ந்தாச்சு! இன்னிக்கு கொஞ்சம் இன்பமான அதிர்ச்சி-  உன்னால!" 

"என்ன சொல்ற?" 

"எனக்கு இன்னிக்குப் பாட்டுப் பாடின ராஜஸ்ரீயை ரொம்பப் பிடிச்சிருக்கு. எனக்குள்ள ஆழமா அந்தப் பொண்ணு எறங்கியாச்சு. இந்த அளவுக்கு எந்தப் பொண்ணும் என்னை பாதிச்சதில்லை! அவ என் லைஃப் பார்ட்னரா வந்தா, என் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்!" 

குகன் அருகில் வந்தான். 

தோளில் கை வைத்தான். 

"ஹே... ஆச்சர்யமா இருக்கு நீயா பேசற இப்படி?" 

நகுல் வெட்கத்துடன் சிரித்தான். 

"சரி! முதல்ல நான் விசாரிக்கறேன் அவளைப் பற்றி! அப்புறம் தொடர்ந்து போகலாம்!" 

"தேங்க்யூடா! உன்னாலதான் சாதிக்க முடியும் இதை!"

நகுல் போய்விட்டான். 

குகன் மற்றொரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான். 

'அந்தப் பெண் என்ன ஜாதி? அவள் குடும்பம் எங்கே? இது சரிப்படுமா?' 

'சரி விசாரிப்பதில் தப்பில்லையே?' 

அப்படியே படுத்துவிட்டான் குகன். 

Languageதமிழ்
Release dateFeb 27, 2024
ISBN9798224306206
திருமகள் தேடி வந்தாள்..!

Read more from Devibala

Related to திருமகள் தேடி வந்தாள்..!

Related ebooks

Reviews for திருமகள் தேடி வந்தாள்..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    திருமகள் தேடி வந்தாள்..! - Devibala

    1

    கதைக்கு போவதற்கு முன் பார்த்தசாரதியைப் பற்றி நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

    பார்த்தசாரதி ஒரு வித்தியாசமான கதாபாத்திரம்.

    ஆர்மியில் அதிகாரியாக இருந்து, போன வருடம்தான் ஓய்வு பெற்றார். அவரது ஓய்வுக்கு பிறகுதான் அரசாங்கம் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியது!

    இத்தனை காலம் அவர் வாழ்ந்தது பெரும்பாலும் வடஇந்தியாவில்தான். பஞ்சாப், காஷ்மீர் எல்லைப் பகுதி, ராஜஸ்தான் என வாழ்க்கை வடகோடியில் ஓடிவிட்டது!

    நல்ல மனிதர்!

    ஆனால் தண்ணியடிப்பது, அழகான பெண்களைக் கண்டால் குஷியாவது போன்ற ‘கல்யாண’ குணங்கள் இப்போதும் உண்டு. தெய்வ நம்பிக்கை அறவே இல்லை. நெற்றியில் ஒரு விபூதிக் கீற்று கூட இடம்பெறாது. ஜாலியான மனிதர்! ஆனால் குடும்பத்தில் பற்றும் பாசமும் உள்ள நல்ல குடும்பத் தலைவர்!

    அவரது மனைவி அலமேலு அவருக்கு நேர் எதிர்!

    தெய்வ பக்தி அளவுக்கு அதிகம். ஆச்சாரம், வழிபாடு, ஜோசியம், ஜாதகம், ராகு, கேது, அஷ்டமி, நவமி என எதையும் விடுவதில்லை.

    தினசரி குளித்து பூஜை செய்து சாப்பிடவே பகல் ஒரு மணியாகிவிடும்.

    பெரும்பாலும் வடஇந்தியாவில் இருந்து விட்டதால் ஆலய வழிபாடுகளுக்கு வாய்ப்பு குறைவு. எனவே பஜன்ஸ் போல பிரதி வியாழக்கிழமை வீட்டில் நடத்தி, பிரசாதம் வினியோகிப்பது வருடந்தவறாமல் தென்னகம் வந்து குருவாயூர், திருப்பதி, பழனி என நட்சத்திரக் கோயில்களை ஒருமுறை சுற்றிவிட்டு வருவது... இதுதான் அலமேலு.

    வடஇந்தியாவில் இருந்துவிட்டதால், மூத்தவன் நகுல் டெல்லி ஐ.ஐ.டியில் படித்தான். முடிப்பதற்குள் காம்பஸ் இண்டர்வியூ முடிந்து, பிரமாதமான ஒரு கம்பெனியில் வேலை கிடைத்துவிட்டது!

    அமைதியே வடிவானவன் நகுல். முப்பது வார்த்தைக்கு ஒரு வார்த்தை பதில் சொன்னால் அதிகம். அதீத புத்திசாலி. எடுத்த எடுப்பில் ஐந்து இலக்கச் சம்பளம். அழகான இளைஞன். படிப்பு, உத்யோகம் தவிர வேறு எதிலும் ஆர்வம் இல்லாதவன்.

    அடுத்தவன் குகன்! ருசிகரமான கதாபாத்திரம். ஏறத்தாழ இந்தக் கதையின் நாயகன்! விளையாட்டு வீரன்! கிரிக்கெட், செஸ், கோல்ஃப் என்று பந்தயங்களில் எதையும் விட்டு வைக்காதவன்! அதனால் படிப்பில் பெரிதாக சாதிக்க அவனால் முடியவில்லை! பி.எஸ்சி., ரசாயனமும், கொஞ்சம் கம்ப்யூட்டர் பயிற்சியும் இருந்ததால், தனியார் நிறுவனம் ஒன்றில் சென்னையில் அவனுக்கு வேலை கிடைத்துவிட்டது. கவிதை, சங்கீதம், ஓவியம் என்று எதையும் அவன் விட்டு வைத்ததில்லை. ரசனைகளின் மொத்த வடிவம்!

    பார்த்தசாரதி ஓய்வு பெற்றதும், தென்னகம் போய்விடலாம் என்று அலமேலு அரித்தெடுத்து விட்டாள்.

    அதற்கு ரெண்டு வருடங்கள் முன்பே குகனுக்கு வேலை சென்னையில் கிடைத்ததாலே, அவனுக்கும் தமிழக வாழ்க்கை பிடித்துவிட்டது.

    ஏற்கனவே சென்னையில் அண்ணாமலைபுரத்தில் அவர்களுக்கு பழைய வீடு ஒன்று இருந்தது.

    அதை துப்புரவாக இடித்துவிட்டு, மாடர்னாகக் கட்டலாம் என்று குகன் அபிப்ராயம் சொல்லியிருந்தான். ஏற்கனவே பணம் உள்ளவர்கள் தான்.

    ரிடையர்மெண்டில் அவரது மொத்தப் பணமும் வர, நிலம் சொந்தமாக இருந்ததால், ஆயிரத்து அறுபது சதுர அடியில் அழகாக வீட்டைக்கட்டி விட்டார்கள்.

    ரிடையராகி வந்ததும் வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்துக் கொண்டார்கள். ஒரே வருடத்தில் அந்த வீட்டை கட்டி முடித்து, போன மாதம்தான் குடி வந்தார்கள்.

    இரண்டு பிள்ளைகளும் ஒரே வீட்டில் வாழும்படியாக போர்ஷன்களை அமைத்திருந்தார்கள்.

    குகன் முதலில் ஹாஸ்டலில் இருந்தவன், அம்மா, அப்பா வந்தபிறகு, சொந்த வீடும் தயாரானதும், வீட்டிலிருந்து போகத் தொடங்கி விட்டான்.

    இனி கதைக்குள் போகலாம்.

    சொந்த வீட்டுக்குள் பூஜை அறைக்கு அதிக முக்கியத்துவம் தந்திருந்த அலமேலு திருவேற்காடு, மாங்காடு, வடபழனி என அலைந்து கொண்டிருந்தாள்.

    பார்த்தசாரதி ஜாலியாக காஸ்மா பாலிட்டன் கிளப், ஒயின் ஷாப் என்று வலம் வந்து கொண்டிருந்தார்.

    இந்த நிலையில்,

    என்னங்க! நம்ம நகுலுக்கு வயது இருபத்தி ஆறு!

    அதுக்கென்ன?

    கல்யாணம் செஞ்சு வைக்கணும்!

    நீ ஏன் கவலைப்படற? அதெல்லாம் தானா நடக்கும்! அவனே தேர்ந்தெடுத்துட்டு வருவான். தேதியைக் குறி. அதுதான் நியாயம்! வாழப்போறது அவன். நீ ஏன் அலட்டிக்கற?

    உங்க மூத்த பிள்ளை அந்த ரகமில்லை! அவன் பெரியவங்க பேச்சை மதிக்கிறவன்! காதல், ஊதல்னு போகமாட்டான்!

    அப்பச் சின்னவன் படுமோசம்னு சொல்றியா?

    அப்பா... என்னை வார்றியா? குகன் குறுக்கிட்டான்.

    இல்லைடா. நீ கொஞ்சம் என்னை மாதிரினு சொன்னேன்!

    அப்பா நீ தெனமும் தண்ணியடிக்கற! நான் வாரத்துல ஒருவாட்டி தான்!

    அலமேலு காதுகளை மூடிக் கொண்டாள்.

    அப்பாவும், பிள்ளையும் பேசற மாதிரியா இருக்கு? ஆச்சாரமான பிராமண குடும்பத்துல பொறந்துட்டு...?

    பிராமணக் குடும்பம்னப்ப ஞாபகம் வந்ததுடி! என் பூணூலை எங்கே கழட்டி வச்சேன்?

    குகன் சிரித்தான்.

    நான் அப்படி ஒண்ணை போட்டுக்கறதே இல்லை!

    பார்த்தசாரதி உரக்கச் சிரித்தார்.

    அன்றைக்கு தபாலில் நகுலின் கடிதம் வந்தது!

    தென்னகத்துக்கு கூடிய விரைவில் அவனுக்கு மாற்றல் கிடைத்துவிடும் என்று!

    ஒரு கடிதம் தந்து அப்பாவோ, தம்பியோ போய்ப் பார்க்கட்டும் என்று சிபாரிசு செய்திருந்தான்.

    மாற்றல் சம்பந்தப்பட்ட கடிதம்.

    இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டான்.

    எப்ப வருவே நகுல்?

    நிச்சயமா ஒரு மாசத்துல மாற்றல் கிடைச்சிடும்மா! வந்துடுவேன்!

    உனக்குக் கல்யாணத்துக்கு பாக்கட்டுமா?

    இன்னும் ரெண்டு வருஷம் போகக் கூடாதா?

    இல்லப்பா! இதுதான் சரியான நேரம். உன் மனசுல யாராவது...

    இல்லைம்மா! நீ பார்த்துக்கோ!

    அலமேலு சந்தோஷமாக ஜாதகத்தை எடுத்துவிட்டாள். பிரபலமான ஜோசியர்களை வைத்து பத்துப் பொருத்தமும் பார்க்கப்பட வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள்.

    நகுல் சொன்னபடி ஒரே மாதத்தில் மாற்றலாகி வந்துவிட்டான். இங்கே மணலியில் ஒரு பெரிய நிறுவனத்தில் கெமிக்கல் என்ஜினீயர்! அயல்நாடு போகும் வாய்ப்பும் விரைவில் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

    அம்மா இந்த ஒரு மாதத்தில் சகலமும் பார்த்து எல்லா பொருத்தமும் உள்ள மூன்று இடங்களைத் தேர்ந்தெடுத்துவிட்டாள்.

    பெண்களின் புகைப்படங்கள், குடும்பத் தகவல்கள் என சகலமும் சேகரித்துவிட்டாள்.

    அது ஞாயிறு!

    என்ன இந்த மூணுமே சகல தகுதிகளும் உள்ள நமக்கு ஏற்ற குடும்பம். பொண்ணுங்களும் பார்க்க லட்சணமா இருக்கு! இதுல எந்தப் பொண்ணைப் போய் முதல்ல பாக்கலாம்?

    ஆளை விடு தாயே! அது உன் டிபார்ட்மென்ட்!

    "போதுமே! நம்ம வீட்டுக்கு மூத்த

    Enjoying the preview?
    Page 1 of 1