Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

சிம்ம சொப்பனம்..!
சிம்ம சொப்பனம்..!
சிம்ம சொப்பனம்..!
Ebook123 pages48 minutes

சிம்ம சொப்பனம்..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அது பண்டிகை காலம்! அம்மா மங்களம் நன்றாக பலகாரங்கள்  செய்வாள்! தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பாகவே நிறைய பலகார ஆர்டர்களை எடுத்து கொண்டு ராப்பகலாக அம்மா பாடு படுவாள்! அதில் கணிசமாக சம்பாதித்தாள்! வள்ளி இங்கே இருந்த வரை அவளும் நன்றாக ஒத்துழைப்பாள்! மாணிக்கமும் முறுக்கு பிழிவது போன்ற வேலைகளை செய்து தருவான்! மெஷினுக்கு போய் மாவு திரித்துக் கொண்டு வந்து, செய்த பலகாரங்களை பேக் செய்து, உரிய இடத்தில் சேர்ப்பது போன்ற வேலைகளை மாணிக்கம் செய்வான்! சிங்கத்தால் ஒரு உதவியும் இல்லை! ஓமப்பொடில உப்பு பத்தலை! பாதுஷா பிசுபிசுன்னு ஒட்டுது! லட்டுல சக்கரை அதிகம் என ஆயிரம் குறைகளை சொல்லிக்கொண்டு, போக வர, போக வர அத்தனை பலகாரங்களையும் சிங்கம் தின்று தீர்க்கும்! ஒரு தீபாவளிக்கு சிங்கம் ஓவராக மிக்சரை சாப்பிட்டு, பேதி புடுங்கி, ஆஸ்பத்திரியில் ட்ரிப்ஸ் ஏற்றி அம்மாவுக்கு சம்பாதித்த பணத்தில் பாதி கரைந்தது! 

இந்த முறை வள்ளியும் இல்லாமல், மாணிக்கத்துக்கு ஆஃபீசில் லீவு இல்லாததால், அம்மாவே தனியாக பாடுபட்டதால், தீபாவளி முடிந்த ஒரு வாரத்தில் பீப்பீ ஏறி, அம்மா மயக்கம் போட்டு விழுந்தார்கள்! அந்த நேரம் வீட்டில் யாரும் இல்லாமல் போக, மெஸ் ஆட்கள் பார்த்து மாணிக்கத்துக்கு தகவல் தர, மாணிக்கம் பதறி வந்து அம்மாவை ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தான்! டாக்டர் பரிசோதித்து, 

"எக்கச்சக்கமா பீப்பீ ஏறியிருக்கு! இது நல்லதில்லை! மற்ற எல்லா பரிசோதனைகளும் செய்யணும்! அட்மிட் பண்ணிடுங்க!" 

அவசர சிகிச்சை பிரிவில் மங்களம் சேர்க்கப்பட, மாணிக்கம் முன் பணத்தை கட்டி விட்டு கூடவே இருந்தான்! மாலையில் சிங்கம் வந்தது! 

"எப்படி இப்படி ஆச்சு?" என ஆயிரம் கேள்விகள் கேட்டு, அங்கும் தன் மேதா விலாசத்தை காட்டி, "எவ்ளோ பணம் கட்டினே?" 

"இருபத்தஞ்சாயிரம்!" 

"இது பகல் கொள்ளை! எதுவும் தொடங்காம, என்னானு தெரியாம எதுக்கு இருபத்தி அஞ்சாயிரம்? ஆஸ்பத்திரியை கட்டி வச்சிட்டு முகமூடி போடாத கொள்ளைக்காரங்க பணம் புடுங்கறாங்க!" 

இதை ஒரு டாக்டர் கேட்டு விட்டார்! அது ஒரு நியாயமான மருத்துவமனை! தேவையில்லாமல் பணம் பறிக்க மாட்டார்கள்! 

"யாருங்க அவரு? ஓவரா பேசறார்! அந்த பேஷன்டை உடனே டிஸ்சார்ஜ் குடுத்து அனுப்புங்க! அவங்களை நாம கூப்பிடலை! பணமே வாங்காத ஆஸ்பத்திரிக்கு அவங்க தாராளமா போகட்டும்!"

வெளியே போயிருந்த மாணிக்கம் விவரம் கேட்டு ஓடி வந்து, டாக்டரின் காலில் விழுந்து கெஞ்சி, "மன்னிச்சிடுங்க டாக்டர்! அவன் ஒரு கிறுக்கு! நாங்க எப்பவும் இங்கே தான் வருவோம்! இதப்பாருங்க! எங்கம்மாவோட ஃபைல்" எனக்கேட்டு மன்றாட, 

"சரி! அந்த ஆளை வெளில அனுப்புங்க! இல்லைனா நான் நடவடிக்கை  எடுக்க வேண்டி வரும்!" 

வெளியே மாணிக்கம் வர, கூடவே ஆட்களும் வர, மாணிக்கம் பேச, சிங்கம் கடுப்பாகி திட்ட, அந்த ஆட்கள் கழுத்தை பிடித்து தள்ள, நர்ஸ் பூங்கொடி உள்ளே வந்தாள்! 

"வேண்டாம்! அவர் புரியாம பேசறார்னா, அவரை நீங்களும் வெளில தள்ளி முரட்டுத்தனமா நடக்காதீங்க!" 

"நம்ம பெரிய டாக்டர் கடும் கோபத்துல இருக்கார் சிஸ்டர்! அந்த ஆள் நம்ம ஆஸ்பத்திரியை கொள்ளை கூடம்னு பேசறார்!"

"நான் டாக்டர் கிட்ட பேசிக்கறேன்! நீங்க நல்ல விதமா அவரை அனுப்புங்க!" 

மாணிக்கம், சிங்கத்திடம் கெஞ்சி கேட்டு, அவனை வெளியே அனுப்புவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது! அதன் பிறகு மாணிக்கம் வந்து சேர, நர்ஸ் பூங்கொடி உள்ளே அழைத்தாள்! டாக்டர் மகேந்திரன் இருந்தார்! 

"பூங்கொடி! நீ எதுக்கு அந்த ஆளுக்கு காம்ப்ரமைஸ் போறே? அவன் அவ தூறு பேசறான் ஆஸ்பத்திரி பற்றி!" 

"தெரியும் டாக்டர்! இது பப்ளிக் ப்ளேஸ்! பல பேஷன்டுகள் வந்து போற எடம்! இன்னிக்கு சோஷல் மீடியால எல்லாத்தையும் எழுதற காலம்! நாலு பேர் நல்லதை சொன்னா, நாப்பது பேர் தப்பா பேசறாங்க! பொது வாழ்க்கைல ஈடுபட்ட நமக்கு, இது நல்லதில்லை டாக்டர்! உங்களுக்கு தெரியாததில்லை!" 

அவள் பேசப்பேச பிரமிப்புடன் பார்த்தான் மாணிக்கம்!

"சரிம்மா! நீ பார்த்துக்கோ!" 

"இவங்கம்மா மங்களம் நம்ம பேஷன்ட்! ரொம்ப நல்லவங்க! பிரமாதமா மெஸ் நடத்தறாங்க! அன்னமிட்டவங்க, அன்னைக்கு  சமம்னு சொல்லுவாங்க இல்லையா டாக்டர்?" 

"ஓக்கே! பூங்கொடி சொல்லுக்கு என்னிக்கு மறு பேச்சு நான் பேசியிருக்கேன்?" 

பூங்கொடி அழகாக சிரித்தாள். 

 

Languageதமிழ்
Release dateFeb 26, 2024
ISBN9798224004775
சிம்ம சொப்பனம்..!

Read more from Devibala

Related to சிம்ம சொப்பனம்..!

Related ebooks

Related categories

Reviews for சிம்ம சொப்பனம்..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    சிம்ம சொப்பனம்..! - Devibala

    1

    பெயர் சிங்கமுத்து! சிம்ம ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்தவர்! அதனால் அவரை குடும்பமே சிங்கம் என்று தான் சொல்லும்! அவர் சிங்கமா? இல்லை அசிங்கமா என கதையை படிக்க படிக்க உங்களுக்கே புரியும்! வெறும் வீராப்பு, வெட்டி பந்தா, சவடால், அலட்டல், அகங்காரம், இவைகளின் மொத்த வடிவம் சிங்கமுத்து!

    பெரிய படிப்பா என்று நீங்கள் கேட்டால் எஸ்ஸெல்சி பெயில்! அதுவும் மார்ச் செப்டம்பர் என நாலு முறை எழுதி நாலிலும் வெற்றிகரமாக தோற்றவர்! அதற்கும் அலட்டலாக சில காரணங்கள்! வீட்டில் இவர் மூத்த பிள்ளை! அப்பாவை சிறு வயதில் இவரது ஜாதகம் தான் முழுங்கியது என்று பல பேர் சொன்னதுண்டு! விதவை தாயார்! ஒரு தம்பி, அவன் புத்திசாலி! நன்றாக படிப்பவன்! அதனால் ஒரு செலவு இல்லாமல் ஸ்காலர்ஷிப்பில் கல்லூரி படிப்புக்கு இடம் வாங்கியவன்! அதற்கும் கீழே ஒரு தங்கை! அவளும் புத்திசாலிதான்! அப்பா போனதால் அம்மா மங்களம் மெஸ் போல நடத்தி கடுமையாக உழைத்து பிள்ளைகளை வளர்த்தாள்! தம்பி மாணிக்கத்தை பாடு பட்டு படிக்க வைத்தாள்! சிங்கத்தையும் உள்ளூர் பெரிய மனிதர் ஒருவர் மூலம் ஒரு மில்லில் வேலைக்கு சேர்த்தாள்! சிங்கம் அங்கே தன் பொல்லாத ஜம்பத்தை காட்டி விரட்டி விடப்பட்டது! அதன் பிறகு அம்மா மற்றவர் கை, காலில் விழுந்து கடைசியாக ஒரு ஃபேக்டரியில் சிங்கத்தை ஒட்ட வைக்க பட்ட பாடு கொஞ்சமில்லை!

    அதற்குள் தம்பி வேலைக்கு வர, அம்மா தெளிந்தாள்! மாணிக்கம் தான் என் பாரம் நீக்கற பிள்ளை என சொல்ல சிங்கம் ஆத்திரப்பட்டு வீட்டுக்கே வராமல் வெளியேறி, கொஞ்சம் திரிந்து விட்டு இறுதியில் வழியில்லாமல் வீட்டுக்கே திரும்பி வந்தது!

    தங்கை வள்ளி, பட்டப்படிப்பு முடித்து ஒரு கார்மென்ட் கம்பெனியில் சேர, வயசு பெண்ணை வேலைக்கு அனுப்பக்கூடாது என சிங்கம் கர்ஜித்து, இறுதியில் சில நிபந்தனைகளுடன் வெளியே அனுப்பியது! அம்மா வள்ளிக்கு வரன் பார்க்க, வந்தவர்களை சிங்கம் கடித்து குதறி, இந்த வீட்டு பக்கமே யாரும் வராமல் போக, வள்ளியின் கல்யாணமே கேள்விக்குறி ஆக, அம்மா பொங்கி விட்டாள்!

    இதப்பாரு உன் வெத்து அதிகாரத்தை எங்கிட்ட காட்டு! ஆனா வள்ளி வாழ்க்கைல நீ குறுக்கே நிக்காதே! வர்றவங்களை இப்படி நீ ஓட ஓட விரட்டினா, வள்ளி காலம் முழுக்க கழுத்துல தாலி ஏறாமதான் நிக்கணும்! நீ அடங்கு!

    நான் இனிமே பேசலை! அவ கல்யாணத்துக்கு சல்லிக்காசு எங்கிட்ட எதிர்பார்க்காதே!

    நிறுத்துடா! நீ வாங்கற ஒண்ட்றேணா சம்பளத்தையும் வீட்டுக்கு தர்றதில்லை! இப்பவும் நானும் மாணிக்கமும் சம்பாதிக்கற பணத்துல தான் குடும்பம் நடக்குது! இதுல வள்ளி கல்யாணத்தை நீ நடத்த போறியா? வழிச்சுகிட்டு சிரிப்பாங்க யாராவது கேட்டா!

    நீ என்னை ரொம்ப அவமானப்படுத்தறே! உனக்கு மூத்த பிள்ளை நான்! கொள்ளி வேணுமா? வேண்டாமா?

    அம்மா மங்களம் சிரித்து விட்டாள்!

    அடப்போடா! நான் செத்தா கண் தானம் தரணும்னு சொல்லியாச்சு! என் உடம்பை மருத்துவ கல்லூரிக்கு தரணும்னு உன் தம்பிகிட்ட சொல்லிட்டேன்! எழுதியும் வச்சாச்சு! உன் கையால கொள்ளி வாங்கறது எனக்கு பெருமையில்லை!

    நீ படுத்த படுக்கை ஆகும் போது நான் தேவைப்படுவேன்!

    ஏண்ணே, இப்படி பேசற? அம்மா நமக்காக பட்ட பாடு தெரியாதா? அம்மா இல்லைனா நாம இந்த அளவுக்கு வந்திருக்க முடியுமா?

    நீ என்னடா ‘மெட்டி ஒலி’ மாணிக்கமா? அம்மா புராணம் பாடறே?

    இப்படியாக அம்மாவும் மாணிக்கமும் கடனை உடனை வாங்கி வள்ளியை ஒரு அரசாங்க ஊழியருக்கு கல்யாணம் செய்து வைத்தார்கள்! அந்த நடராஜன் நல்ல மனிதன்! குடும்பமும் நல்ல குடும்பம்! இவர்கள் சிங்கத்தை மூடித்தான் வைத்தார்கள்! ஆனால் சிங்கம் தன் வழக்கப்படி ஓவராக பிளிறி அங்கும் பேரை கெடுத்து கொண்டது! சிங்கத்தை பார்த்தாலே வள்ளியின் குடும்பம் தெறித்து ஓடியது! வீட்டிலும் சிங்கத்துக்கு கெட்ட பெயர்! வெளியிலும் சிங்கத்தை யாரும் மதிக்கவில்லை! இந்த நிலையில் சிங்கத்துக்கு ஒரு கல்யாணம் செய்ய வேண்டும் என அம்மா பேச்சை ஆரம்பிக்க, இதப்பாரு! இது என் வாழ்க்கை! அதை எப்படி தேர்ந்தெடுக்கணும்னு எனக்கு தெரியும்! இதுல நீ தலையிடாதே!

    அம்மா! நீ உள்ளே போகாதே! விட்ரு!

    மாணிக்கம் சொல்ல, இல்லைடா! இவன் போக்கே சரியில்லை! என்னால இவனை மாற்ற முடியலை! உங்க யாரையும் அவன் மதிக்கறதில்லை! மத்தவங்களை தூக்கி எறியற அளவுக்கு இவனுக்கு எந்த ஒரு யோக்யதையும் இல்லை! ஒருத்தி வந்து தாண்டா இவனை மாற்றணும்!

    அம்மா! அதனால தான் சொல்றேன், நீ தலையிடாதே! நாளைக்கு வாழ வந்தவ உன்னை நிக்க வச்சு கேள்வி கேப்பா! நீ அசிங்கப்படுவே! நீ சொல்றதை அண்ணன் கேக்கவும் மாட்டான்!

    அப்படி விட முடியுமாடா மாணிக்கம்? நான் அவனை பெத்தவ! அவனும் எல்லாரையும் போல வாழணும்னு எனக்கு ஆசை இருக்காதா?

    "இந்த அம்மாக்களுக்கு மத்தவங்க நல்லதை எடுத்து சொன்னா புத்தி வராது! அவமானப்படறது உன் தலைல எழுதியிருந்தா யாரால் அதை தடுக்க முடியும்?

    அம்மா திரும்பவும் சொல்ல, நீ எனக்கு பெண் பார்க்க வேண்டாம்! என் வாழ்க்கையை நான் முடிவு செஞ்சுபேன்! நீ ஒதுங்கி நில்லு!

    சிங்கத்தின் கல்யாண வேட்டை தொடங்கியது! இனி தான் சுவாரசியமான கதை தொடங்கப்போகிறது!

    2

    அது பண்டிகை காலம்! அம்மா மங்களம் நன்றாக பலகாரங்கள் செய்வாள்! தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பாகவே நிறைய பலகார ஆர்டர்களை எடுத்து கொண்டு ராப்பகலாக அம்மா பாடு படுவாள்! அதில் கணிசமாக சம்பாதித்தாள்! வள்ளி இங்கே இருந்த வரை அவளும் நன்றாக ஒத்துழைப்பாள்! மாணிக்கமும் முறுக்கு பிழிவது போன்ற வேலைகளை செய்து தருவான்! மெஷினுக்கு போய் மாவு திரித்துக் கொண்டு வந்து, செய்த பலகாரங்களை பேக் செய்து, உரிய இடத்தில் சேர்ப்பது போன்ற வேலைகளை மாணிக்கம் செய்வான்! சிங்கத்தால் ஒரு உதவியும் இல்லை! ஓமப்பொடில உப்பு பத்தலை! பாதுஷா பிசுபிசுன்னு ஒட்டுது! லட்டுல சக்கரை அதிகம் என ஆயிரம் குறைகளை சொல்லிக்கொண்டு, போக வர, போக வர அத்தனை பலகாரங்களையும் சிங்கம் தின்று தீர்க்கும்! ஒரு தீபாவளிக்கு சிங்கம் ஓவராக மிக்சரை சாப்பிட்டு, பேதி புடுங்கி, ஆஸ்பத்திரியில் ட்ரிப்ஸ் ஏற்றி அம்மாவுக்கு சம்பாதித்த பணத்தில் பாதி கரைந்தது!

    இந்த முறை வள்ளியும் இல்லாமல், மாணிக்கத்துக்கு ஆஃபீசில் லீவு இல்லாததால், அம்மாவே தனியாக பாடுபட்டதால், தீபாவளி முடிந்த ஒரு வாரத்தில் பீப்பீ ஏறி, அம்மா மயக்கம் போட்டு விழுந்தார்கள்! அந்த நேரம் வீட்டில் யாரும் இல்லாமல் போக, மெஸ் ஆட்கள் பார்த்து மாணிக்கத்துக்கு தகவல் தர, மாணிக்கம் பதறி வந்து அம்மாவை ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தான்! டாக்டர் பரிசோதித்து,

    "எக்கச்சக்கமா பீப்பீ ஏறியிருக்கு! இது நல்லதில்லை! மற்ற எல்லா பரிசோதனைகளும்

    Enjoying the preview?
    Page 1 of 1