Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அந்தி மழை
அந்தி மழை
அந்தி மழை
Ebook108 pages38 minutes

அந்தி மழை

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிருஷ்ணா காலையில் முனகியபடி படுத்திருக்க, யமுனா பதறி விட்டாள்.
“என்னம்மா?”
“வழக்கமான இடுப்பு வலி! வெளில சாப்ட்டுக்கோ யமுனா! நீ புறப்படு!”
“நீ பட்டினி கிடப்பியா?”
“நான் கொஞ்சம் மெதுவா எழுந்து செஞ்சுபேன்! இதுக்கெல்லாம் உன் லீவை வீணாக்காதேம்மா! வலி அதிகமிருந்தா நான் போன் பண்றேன்!”
“சரிம்மா!” யமுனா அரை மனதுடன் புறப்பட்டாள்!
ஆபீஸ் வந்து அரைமணியில் சேர்மன் அழைத்து விட்டார். உள்ளே வந்து வணங்கினாள்!
“ஒக்காரு யமுனா! சிகாகோலேருந்து இப்பத்தான் தகவல் வந்தது! ஒரு புது ப்ராஜெக்ட் தொடங்க உத்தரவு குடுத்திருக்காங்க! பெரிய ப்ராஜெக்ட்! பெரிய தொகை ஒதுக்கியிருக்காங்க! எடுத்துச் செய்ய திறமையான அதிகாரிகள் வேணும்!”
“சரிங்க சார்!”
“உன்னையும் சென்னைல உள்ள ரமணியையும் அலாட் பண்ணியிருக்காங்க!”
“ரெண்டு பேரும் சிகாகோ போகணுமா?”
“இல்லைம்மா! சென்னைலதான் இதுக்கான சூழ்நிலை, ராமெட்டீரியல் இன்னம் பல சங்கதிகள் சரியா வரும். ரமணி அங்கியே இருக்கார். நீதான் சென்னைக்குப் போகணும் யமுனா!”
“எத்தனை நாள்?”“நாளெல்லாம் இல்லை! ப்ராஜெக்ட் முடிய குறைஞ்சபட்சம் மூணு வருஷங்கள் ஆகும்! அதனால சென்னைக்கு உனக்கு மாற்றல் தரவேண்டியிருக்கும்!”
யமுனா முகம் மாறியது!
“என்னம்மா?”
“அதில்லை! போய்த்தான் ஆகணுமா?”
“உங்கம்மாவோட போய்டு! உனக்கு கம்பெனி வீடு, கார் எல்லாம் தரும்! இப்பவே உன் சம்பளம் உயர்ந்தாச்சு! தவிர, இன்சென்டிவ், அதுஇதுன்னு லட்சரூபாய் தாண்டுவே! ப்ராஜெக்ட் பிரமாதமா கம்ப்ளீட் ஆயிட்டா, உன்னைப் பிடிக்க முடியாது!”
அவள் பேசவில்லை!
“நீ படிச்சு, வேலைக்கு வந்த வரைக்கும் ஆளானது இந்த மும்பைலதான்! ஆனாலும் அடிப்படைல நீ தமிழ்நாட்டுப் பெண்தானேமா!”
“ஆமாம் சார்!”
“இதை நீ வீட்ல சொன்னா, உங்கம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க! தமிழ் நாட்டு வாழ்க்கையை அந்த பூமில பிறந்தவங்க வேண்டாம்னு சொல்லுவாங்களா?”
“இல்லை சார்!”
“அடுத்த வாரமே நீ புறப்பட வேண்டி வரும்! இங்கே எல்லாம் தயாராயிடும்! அங்கே போனதும், கம்பெனி வீட்டுக்கே உன்னைக் கூட்டிட்டுப் போயிடுவாங்க! எந்தக் கஷ்டமும் இல்லை!”
“சரிங்க சார்!”
யமுனா வெளியே வந்தாள்!
‘இந்த மாற்றம் நல்லதா? கெட்டதா?’
‘அம்மா இதை எப்படி எடுத்துக் கொள்வாள்?நிறையக் கேள்விகள் வந்தது!
அவசரமாக ஒதுக்கி விட்டு, மற்ற வேலைகளை கவனிக்கத் தொடங்கி விட்டாள்!
புறப்படவே இரவு ஏழரை ஆகி விட்டது!
அம்மா வழக்கம் போல போன்!
“வந்துட்டே இருக்கேன்மா!”
அரைமணி நேரத்தில் வீடு திரும்பி ஒரு குளியலை போட்டு, நைட்டி அணிந்து யமுனா வர, அம்மா சூடான சப்பாத்தி, சப்ஜியை தயார் செய்திருந்தாள்!
“சாப்பிடும்மா!”
“நீயும் ஒக்காரும்மா!”
“இருக்கட்டும்! உனக்கு சூடா போட்டுத் தர்றேன்! பசிக்கும்! இன்னிக்கு வேலை அதிகமா? முகம் சோர்வா இருக்கே யமுனா?”
யமுனா பதிலேதும் சொல்லவில்லை

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
அந்தி மழை

Read more from தேவிபாலா

Related to அந்தி மழை

Related ebooks

Reviews for அந்தி மழை

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அந்தி மழை - தேவிபாலா

    1

    யமுனா வேலைக்குப் போகத் தொடங்கி, இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது!

    இருபத்திரண்டு வயதில் தன் எம்.காம் படிப்பை யமுனா முடித்தாள்! கூடவே கணிப்பொறி தொடர்பான அனைத்து பயிற்சிகளையும் எடுத்து விட்டதால், படிப்பை முடிப்பதற்குள் பிரமாதமான வேலை ஒரு தனியார் நிறுவனத்தில் கிடைத்து விட்டது!

    அது வெளிநாட்டு வர்த்தக நிறுவனம் ஒன்றுடன் இணைந்த இந்திய நிறுவனம்!

    எடுத்த எடுப்பில் ஐம்பதாயிரம் சம்பளம்! கம்பெனியே கார் கொடுத்து விட்டது!

    இதோ இந்த இரண்டு வருடங்களில் டிபார்ட்மெண்ட்டில் உச்சத்துக்கு வந்து உயர்பதவியைப் பெற்று, மேலும் இருபதாயிரம் சம்பள உயர்வு! யமுனாவுக்கு ஒரு தனி மரியாதை!

    இந்த இரண்டு வருட வருமானத்தில் சகல லோன்களையும் அடைத்து கணிசமாக பணமும் சேர்த்து விட்டார்கள்!

    யமுனாவை ஆளாக்க அம்மா - கிருஷ்ணா - பட்ட பாடு கொஞ்சமில்லை!

    கிருஷ்ணாவும் படித்தவள்தான்!

    ஆரம்ப பத்து வருடங்களில் ஒரு பள்ளிக்கூடத்தில் டீச்சராக இருந்து, அதன் பிறகு நிறைய ட்யூஷன்களையும் ஏற்றுக் கொண்டு யமுனாவை ஒரு நிலைக்குக் கொண்டு வர கடுமையாக உழைத்தாள். உழைப்புக்கு பலன் கிடைத்து விட்டது!

    கிருஷ்ணா வேலைக்குப் போக வேண்டாம் என யமுனா தடுத்து விட்டாள். கடந்த இரண்டு வருடங்களில் உடம்பில் சகல நோய்களும் குடியேற, இத்தனை நாள் பட்ட பாட்டுக்கு உடம்பு ஓய்வுக்குக் கெஞ்சியது!

    கிருஷ்ணா மறுத்தாள்!

    யமுனா! உன் கல்யாணம் வரைக்கும் வேலைக்குப் போறேன்! அப்புறமா விட்டுக்கிறேன்!

    தேவையே இல்லை! இப்பவே விடு!

    யமுனா கண்டித்து, ராஜினாமா எழுதினார்கள்!

    நல்ல டாக்டர்களிடம் அழைத்துப் போய், மருந்துகளை வாங்கி, வீட்டு வேலைகளைத் தானே செய்து, அம்மாவை புஷ்பமாகத் தாங்கினாள்!

    கிருஷ்ணா, பூரித்துப் போயிருந்தாள்!

    வாழ்க்கையில் தான் பட்ட அடிகளுக்கு இன்றுதான் மகள் மூலம் ஒத்தடம் கிடைக்கிறது!

    கிருஷ்ணாவின் கவலை, கூடிய சீக்கிரம் யமுனாவுக்கு கல்யாணம் செய்து விட வேண்டும்!

    அதை சொல்லத் தொடங்கிவிட்டாள்!

    அம்மா! நான் புகுந்த வீட்டுக்குப் போயிட்டா, நீ தனியா எப்படி இருப்பே?

    நானும் உன்கூட வந்துர்றேன்!

    இது நல்ல யோசனை. மாப்ளை வீட்டுக்கு நான் போடற முதல் நிபந்தனையே இதுதான்!

    அப்படி போட்டா என் வயசு தாண்டினாலும் உனக்குக் கல்யாணம் நடக்காது!

    யாரு சொன்னது? என் படிப்பு, பணத்துக்கு ஓடி வருவாங்க!

    அப்படி சொல்லாதேம்மா! பணத்துக்கு எல்லாரும் மயங்குவாங்கனு சொல்ல முடியாது! அப்படியே ஆரம்ப வேகத்துல அனுமதிச்சாலும், உன் வீட்ல நான் வாழறது உனக்கும் தர்ம சங்கடம். எனக்கும் அது கௌரவ பிரச்னை! இந்த வயசுக்கு எனக்கென்ன துணை! நீ அடிக்கடி வா. நானும் உன்னை வந்து பாத்துக்கறேன்.

    யமுனா அம்மாவை உற்றுப் பார்த்தாள்!

    கிருஷ்ணா ஐம்பதுகளின் ஆரம்பத்தில் இருந்தாலும், அந்த வயது தெரியாத அளவுக்கு தோற்றத்தில் இளமை மிச்சமிருந்தது! கூந்தல் கூட ஐந்து சதவிதம்தான் நரைத்திருந்தது! நெற்றியில் அழகாக குங்குமம் - அதன் மேல் விபூதிக் கீற்று! நல்ல நிறம். பார்க்க மகாலக்ஷ்மி போன்ற கனிவான தோற்றம்!

    ஏம்மா அப்படி பாக்கற?

    இத்தனை நல்லவளா, கனிவா, கருணையோட இருக்கற உன்னை விட்டுட்டு அப்பா எப்படீம்மா போயிட்டார்? எப்படி அவருக்கு மனசு வந்தது?

    கிருஷ்ணா சங்கடத்துடன் நிமிர்ந்தாள்!

    காதல் கல்யாணம்! ரெண்டு குடும்பமும் சம்மதிக்கலை. தனியா வந்து குடித்தனம் நடத்தினோம். ரெண்டு வருஷம் கழிச்சுத்தான் நீ பிறந்தே! அதுக்குள்ளே உங்கப்பாவுக்கு குடிப்பழக்கம், கூடாத நட்பு வந்து, அதை பயன்படுத்தி, அவங்க மனுஷங்க - எல்லாத்துக்கும் நான் தான் காரணம்னு என் மேல் களங்கம் சுமத்தி, நீ ஒரு வயசுக் குழந்தையா இருக்கும் போது என்னை விட்டுப் பிரிஞ்சார்! அப்புறம் வரவேயில்லை!

    நீ எப்படி துடிச்சிருப்பே! எத்தனை போராடியிருப்பே? நினைக்கவே முடியலியேம்மா!

    விடும்மா! வேண்டாம்! அந்தக் கசப்பான நாட்களை நினைக்கக்கூட மனசுக்குத் தெம்பில்லை!

    இப்ப, அப்பா எங்கேயிருக்கார்?

    தெரியாது! தெரிஞ்சுகவும் நான் விரும்பலை!

    உன் வாழ்க்கை தொடங்கினது, நான் பிறந்தது எல்லாம் தமிழ்நாட்ல இல்லையா?

    ஆமாம்மா. அவர் என்னை விட்டுப் பிரிஞ்ச பிறகு மனசு கசந்து போய் நான் மும்பைக்கு வந்துட்டேன். உன்னைப் படிக்க வச்சு ஆளாக்கி 23 வருஷங்களை இங்கே ஓட்டியாச்சு! உன்னைக் கட்டிக் குடுத்துட்டா, நான் செத்துட்டாக்கூடக் கவலையில்லை!

    ஒரு கேள்விம்மா! தப்பா எடுத்துக்காதே!

    கேளு யமுனா!

    பொட்டு, தாலியோட இருக்கே! அப்பா எங்கேனு கேட்டா...?

    உண்மையைச் சொல்லுவேன்!

    உலகம் ஒப்புக்குமா? ஸாரிமா! ‘புருஷனை ஏன் விரட்டி விட்டாளோ? இவ பொண்ணு எப்படி இருப்பாளோ?’னு கேக்கமாட்டாங்களா?

    கிருஷ்ணா கண்களில் வலியுடன் நிமிர்ந்தாள்!

    இந்த மும்பைல அந்த அளவுக்கு இதைப் பெரிசு படுத்த மாட்டாங்கனு நினைக்கிறேன்!

    நீ எனக்கு பாக்கப் போற வரன் தமிழ் நாட்டுக் குடும்பமா? இந்திக் குடும்பமா?

    மும்பைல மூணு தலை முறையா வாழற தமிழ்க் குடும்பங்கள் கிடைக்காதா? நான் பாவம் செய்யலை! யாருக்கும் துரோகம் செய்யலை! உனக்கு நல்ல வாழ்க்கை அமையும் யமுனா! எனக்கந்த நம்பிக்கை இருக்கு!

    சரிம்மா! பசிக்குது!

    நான் சாப்பாடு ரெடி பண்றேன்!

    அம்மா! ஒரு நிமிஷம்!

    என்ன யமுனா?

    ஸாரிம்மா! கேக்கக் கூடாத கேள்வி ஒண்ணைக் கேட்டு உன்னை நான் புண்படுத்திட்டேனா?

    இல்லை யமுனா! இந்தக் கேள்வியை ரெண்டு வருஷமா பல கோணங்கள்ல எனக்கு நானே கேட்டுக்கத் தொடங்கியாச்சு! என் வாழ்க்கை வில்லங்கமாயாச்சு! உனக்கு என்னால அந்த நிலை வராம இருக்க, நான் யோசிக்காத நாளில்லை யமுனா!

    உள்ளே போய் விட்டாள்!

    Enjoying the preview?
    Page 1 of 1