Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கடைசிவரை யாரோ
கடைசிவரை யாரோ
கடைசிவரை யாரோ
Ebook88 pages30 minutes

கடைசிவரை யாரோ

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காலை ஐந்து மணிக்கு அம்மா உறக்கத்தில் இருக்க, பத்மினி வாய் கொப்பளித்து முகம் கழுவிக் கொண்டு வந்தாள்!
அங்குள்ள டெலிபோனை நெருங்கி, அக்கா விஜயா வீட்டுக்கு டயல் செய்தாள்.
அத்தான் எடுத்தார்.
“அத்தான்! பத்மினி பேசறேன்!”
“சொல்லு பப்பி! என்ன காலங்காத்தால?”
“அம்மா அட்மிட் ஆயிருக்காங்க”, எனத் தொடங்கி விவரம் சொல்ல, அக்கா கைக்கு ரிசீவர் போக, அக்கா விஜயா பதறி விட்டாள்.
“ஒரு மணி நேரத்துல நாங்க ரெண்டு பேரும் வர்றோம் பப்பி!”
பத்மினி வைத்து விட்டு இந்தப் பக்கம் வந்தாள்.
நர்ஸ் வந்தாள்.
“முன்பணம் மூவாயிரத்தைக் கட்டச் சொல்லிடுங்க!”
“சரிங்க சிஸ்டர். பேங்க் திறந்ததும், அண்ணன் பணம் எடுத்துட்டு வந்துடுவார்!”
பத்மினி உள்ளே வர, அம்மா கண் விழித்தாள்.
ஏதோ பேச நினைத்தாள்.
“நீ பேசாம இரு! ஸ்ட்ரெயின் பண்ணிக்காம இருந்தா, எல்லாருக்கும் நல்லது!”
சொன்னபடி ஒரு மணி நேரத்தில் அக்கா விஜயா, அத்தான் முரளி வந்து விட்டார்கள்.அம்மாவைப் பார்த்தார்கள். அம்மா அழுதாள்.
“உனக்கு ஒண்ணுமில்லை! அழுது அதிகப்படுத்திக்காதே! தியாகு பணத்தோட வர்றானா?”
அக்காவை பத்மினி தனியாக அழைத்து வந்தாள்.
“அண்ணி குடுக்க விடுவாளா? பெரிய ரகளையாகும். பணத்தைக் கட்டியும் ஆகணும். புரியலைக்கா!”
“இப்ப என்ன கட்டணும் பப்பி?” - முரளி கேட்க,
“மூவாயிரம் அத்தான்!”
“விஜி! நான் போய் ஏடிஎம்ல எடுத்துட்டு வந்துர்றேன்! நீ காபி சாப்பிட்டியா பப்பி?”
“இல்லை அத்தான்!”
“என்கூட வா! ரெண்டு பேரும் காபி சாப்டுட்டு, பணத்தை எடுத்துட்டு வந்திடலாம். அக்கா, அம்மாவைப் பார்த்துப்பா!”
“வேண்டாம் அத்தான்!”
“அவர்தான் கூப்பிடறாரே! போயேண்டி பப்பி!”
“இல்லைக்கா! காபிகூட சாப்பிடத் தோணலை!”
“சரி! நீங்க போயிட்டு வாங்க!”
முரளி வெளியேறினான்!
விஜயா கவலையுடன் அம்மா அருகில் வந்து உட்கார்ந்து கலைந்த கேசத்தை சரி செய்தாள்.
“நான் இருக்கறதே குடும்பத்துக்கு பாரம்டி விஜி!”
“நீ புலம்பாதேம்மா!”
“என்னால அது மட்டும் தானேடீ முடியும்?”
“சரி! அதனால ஒடம்பு இன்னும் கெட்டுப் போகும். எங்களுக்கெல்லாம் கஷ்டம்!என்ன செலவாகுது இங்கே?”
“தெரியலை! முன்பணம் மூவாயிரம் கட்டணுமாம். அவர் பணம் எடுக்கப் போயிருக்கார்.”
“மாப்ளைக்கு சிரமம்!”
“எதுக்கு உபசார வார்த்தைகள்? தியாகு வந்து பணம் கட்டுவானா? சொல்லும்மா! இவர்தானே வேண்டியிருக்கு?”
அம்மா முகம் வாடியது!
பத்மினி அருகில் வந்து அக்காவைத் தொட்டாள்.
“பின்ன என்ன பப்பி? உண்மையைப் பேசித்தானே ஆக வேண்டியிருக்கு?”
நர்ஸ் உள்ளே வந்தாள்.
“எப்படி இருக்கீங்க? பல் தேய்ச்சு, வாய் கொப்பளிங்க! ஏதாவது சாப்பிடணும்! ரெண்டு பேரும் வெளியில இருங்க!”
அக்கா - தங்கை வெளியே வந்தார்கள்.
முரளி உள்ளே வந்து விட்டான்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
கடைசிவரை யாரோ

Read more from தேவிபாலா

Related to கடைசிவரை யாரோ

Related ebooks

Reviews for கடைசிவரை யாரோ

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கடைசிவரை யாரோ - தேவிபாலா

    1

    படுத்த பத்து நிமிடங்களில் தொடங்கிய மூச்சிரைப்பு அம்மாவுக்கு அதிகமாகி விட்டது!

    படுக்க முடியாமல் அம்மா எழுந்து உட்கார, பத்மினி அரைத் தூக்கத்தில் இருந்தாள்.

    பப்பிமா, பப்பிமா!

    அம்மா குரல் கொடுக்க, பத்மினி படக்கென எழுந்து விட்டாள்.

    மு... முடியலைமா!

    பத்மினி விளக்கைப் போட்டாள்.

    என்னம்மா?

    மூச்சு... வி... ட... முடியலை...ம்மா!

    மாத்திரை போட்டுக்கலையா நீ?

    சாப்பிட்டேன்மா! - அம்மாவுக்கு பேச முடியாமல் இளைத்தது! பத்மினி சமையல் கட்டுக்குப் போய் வெந்நீர் வைத்து எடுத்து வந்தாள். குடிக்க வைத்தாள். ஒத்தடம் கொடுத்தாள். எதற்கும் கட்டுப்படவில்லை.

    வேறு வழியில்லை! ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போக வேண்டியதுதான். அண்ணனின் பெட்ரூமை நெருங்கினாள்.

    கதவைத் தட்ட கை கூசியது! வேறு வழியில்லை!

    தட்டி விட்டாள். சில நிமிடங்களுக்குப் பிறகு அண்ணன் தூக்கக் கலக்கத்தோடு திறந்தான்.

    அம்மாவுக்கு ரொம்ப முடியலைண்ணே!

    இப்ப மணி என்ன?

    பத்தரை!

    எந்த டாக்டரைப் போய் தேடறது? காலைல பாத்துக்கலாம்!

    இல்லைண்ணே! விபரீதமா ஏதாவது ஆயிட்டா? 24 மணிநேர க்ளினிக்ல பாக்கலாம்.

    அண்ணி எழுந்து வந்தாள்.

    என்ன பத்மினி இது? டபுள் ட்யூட்டி பாத்துட்டு வந்து அவர் படுத்திருக்கார். உங்களுக்கெல்லாம் இரக்கமே இல்லையா?

    ஸாரி அண்ணி! ரொம்ப முடியலை அம்மாவுக்கு!

    அண்ணன் தியாகு எரிச்சலுடன் உள்ளே போய் சட்டையை மாட்டிக் கொண்டான்.

    சரி! ஆட்டோ கொண்டு வர்றேன்!

    வெளியேறினான்!

    இந்த வீட்ல நிம்மதியா தூங்கக் கூட முடியாது! மத்தவங்க கஷ்டங்களப் புரியாத ஜென்மங்க!

    அண்ணி முனங்கத் தொடங்கி விட்டாள்.

    தியாகு ஆட்டோவுடன் வந்து விட்டான்.

    அம்மாவைக் கூட்டிட்டு வா!

    பத்மினி அம்மாவை மெல்லப் பிடித்து அழைத்து வந்தாள். ஆட்டோவில் ஏற்றினாள்.

    சுசிலா! கதவை சாத்திக்கோ!

    தியாகு சொல்லி விட்டு ஆட்டோவில் ஏறினான்!

    ஆட்டோ, 24 மணி நேர க்ளினிக் வாசலில் நிற்க, பத்மினி அம்மாவை தாங்கிப் பிடித்து அழைத்து வந்தாள்.

    டாக்டர் பரிசோதித்தார்!

    உடனே அட்மிட் பண்ணிடுங்க!

    இன்ஜெக்ஷன் போட்டுக் கட்டுப்படுத்த முடியாதா? - தியாகு கேட்க,

    இல்லை சார்! நெபிலைசர் வைக்கணும். எங்க பார்வைல இருக்கணும். சாதாரணமா விட்டா லங்க்ஸ் பாதிக்கும். மேலும் நாளைக்கு டெஸ்ட்டுகள் எடுத்துட்டுத்தான் ட்ரீட்மெண்ட் என்னானு தீர்மானிக்க முடியும்!

    சரி!

    காலைல வந்து மூவாயிரம் ரூபா பணம் கட்டிடுங்க. அப்புறமா சொல்றேன். சிஸ்டர்! பெட் ஏற்பாடு பண்ணு! கூட இருக்கப் போறது யாரு?

    நானிருக்கேன் டாக்டர்! - பத்மினி சொல்ல,

    அம்மா படுக்க வைக்கப்பட்டு, நெபிலைசர் பொருத்தி, ட்ரிப்ஸ் போட்டு, ஊசியும் போட்டார் டாக்டர்!

    பத்மினி பக்கத்தில் உட்கார்ந்து விட்டாள்.

    சரி பப்பி! நான் வீட்டுக்குப் போயிட்டு காலைல வர்றேன்!

    அண்ணே! அம்மாவுக்கு மாற்றுப் புடவை, முடிஞ்சா காபி கொண்டு வர்றியா?

    ம்! பாக்கலாம். காலைல மூவாயிரம் பணம் கட்டணும். தவிர, இன்னும் எத்தனை இருக்கப் போகுதோ?

    அம்மாவுக்கு உன்னைத் தவிர யார் இருக்காங்க அண்ணே?

    சரி பப்பி! நானும் எத்தனைதான் சமாளிக்க முடியும்? முதல்ல உங்கண்ணியை சமாளிக்கணுமே! சரி! நான் பண்ணின பாவம்!

    வேகமாக வெளியே வந்தான்.

    ஒரு ஆட்டோவைத் தேடிப் பிடித்து அவன் வீடு வந்து சேரும் போது நள்ளிரவு 12 மணி!

    சுசீலா கதவைத் திறந்தாள். அவன் மட்டும்.

    எங்கே அவங்க ரெண்டு பேரும்?

    ரொம்ப அதிகமா இருக்கு. அட்மிட் பண்ணச் சொல்லிட்டாங்க!

    அப்புறம்?

    காலைல மூவாயிரம் முன்பணம் கட்டணும்! அப்புறமா டெஸ்ட்டுகள் எடுத்துட்டு ட்ரீட்மெண்ட்!

    எப்படியும் மூணு நாள் வச்சுகிட்டு பத்து ரூபா கறந்துடுவாங்க!

    ம்!

    ம்’னு சொன்னா எப்படி? பணத்துக்கு எங்கே போறது?

    செஞ்சுதானே ஆகணும் சுசி?

    அவன் சட்டையைக் கழட்டி விட்டு கட்டிலில் வந்து உட்கார்ந்தான்.

    அவர்களது ஐந்து வயது மகள் பவித்ரா உறக்கத்தில்!

    இந்த ரேஞ்சுல போனா, நம்ம குழந்தை தெருவுலதான் நிக்கணும்!

    சரி சுசி! விட்ர முடியுமா? அம்மாவாச்சே?

    விடாதீங்க! கெட்டியா புடிச்சுக்குங்க! ஆனா கட்டின பொண்டாட்டி, பெத்த மகள் ரெண்டு பேரையும் நீங்கதான் பாத்துக்கணும்!

    இப்ப உங்க ரெண்டு பேருக்கும் என்னடீ கஷ்டம்?

    "என்னதா? வாடகை வீடு - மாசக் கடைசில பற்றாக்குறை! நம்ம புள்ளை கான்வென்ட்லயா படிக்குது? இல்லை... தங்கமும் வைரமுமா என்னை இழைச்சிருக்கீங்களா? துணிக்

    Enjoying the preview?
    Page 1 of 1