Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavugal Virpanaikku
Kanavugal Virpanaikku
Kanavugal Virpanaikku
Ebook251 pages1 hour

Kanavugal Virpanaikku

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466909
Kanavugal Virpanaikku

Read more from N.C.Mohandass

Related to Kanavugal Virpanaikku

Related ebooks

Related categories

Reviews for Kanavugal Virpanaikku

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavugal Virpanaikku - N.C.Mohandass

    1

    "ப்ரியா! அங்க என்னடி பண்ணிண்டு இருக்கே... பைப்புல ஜலம் விடறானான்னு பாரு!"

    ப்ளவுஸ் தச்சிண்டு இருக்கேன்... இதோ பாக்கறேம்மா...?

    சுப்புலட்சுமி ஜன்னல் வழி தெருவை எட்டிப் பார்க்க அங்கே குடங்கள் அணிவகுத்திருப்பது தெரிந்தது.

    அக்ரஹார வாசல்களில் வண்ணக் கோலங்கள்! ரேடியோக்களில் பாட்டு! உன் சேலை நன்னாருக்கே... எங்கே எடுத்தாய்! என்று காலங்கார்த்லேயே விளம்பரங்கள்...!

    சுப்புலட்சுமி பொறுமையிழந்து முழங்காலை ப்டித்தபடி எழுந்து, வர வர இவளுக்கு பொறுப்ப்ல்லாமப் போச்சு! என்று முனகினாள்.

    அவளுக்கு ஆடிக் காற்றில் பறந்து விடும் தேகம், உதிர்ந்து போன குடுமி. ஒட்டின கன்னம்!

    இருண்டு, தட்டு முட்டு சாமான்களுடனிருந்த அறைக்குள் எட்டிப் பார்த்து, ப்ளவுஸ்க்கு இப்போ என்னடி அவசரம்? என்று கத்தினாள்.

    முதுகில் துண்டு போர்த்தியிருந்த ப்ரியா, இதோ பார்த்தியா? என்று ப்ளவுஸின் கக்கக் பகுதியில் விரல் விட்டு காட்டி புன்னகைத்தாள்.

    இதைப் போட்டுண்டு போனா அவ்வளோதான்! அப்புறம் தெரு பசங்க துரத்த ஆரம்ப்ச்சிருவா!

    சுடிதார் போடேன்.

    இருக்கறதே ஒண்ணு! அதுவும் நைஞ்சு போணுமா!

    தண்ணி நின்னு போகும்!

    இதோ ஆச்சு! என்று ஊசியையும் நூலையும் ஓடவிட்டாள், அவ்ளோ அவசரம்னா அனுஷாவை அனுப்பேன்.

    அவ பாவம் - குழந்தேடி!

    ஆமா - குழந்தை! இந்தக் கார்த்திகை வந்தா பதினாலு ப்றக்கறது! மணி ஏழாறது. இன்னும் தூங்கறதைப் பாரேன்! என்று ஒரு மூலையில் குறுக்கி படுத்திருந்த தங்கையை ப்டித்து உலுக்கி, ஏ. எழுந்திரு! என்றாள் ப்ரியா.

    அவளை ஏண்டி வம்புக்கு இழுக்கறே...?

    அவளைத் தொட்டா உடனே கண் கலங்கடுமே! உனக்கு அவதானே செல்லப்புத்ரி.

    சீ ஏண்டி இப்படி ப்ரிச்சு பேசறே? எனக்கு நீயும் அவளும் ஒண்ணுதான்!

    க்கும்! என்று ப்ரியா நூலை பல்லால் கடித்து விடுவிடுத்து ஊசியை நூல்கண்டில் செருகினாள்.

    துண்டை ஒதுக்கிவிட்டு ப்ளவுசைப் போட அது பம்மென்று இறுக்கிற்று.

    அவள் ப்ளஸ் டூ பதினாறு.

    பதினாறும் பெற்ற வனப்பு! ஈர கேசம் சுதந்திரமாய் அவளது முதுகில் படர்ந்திருந்தது. கழுத்தோரம் முடியிலிருந்து சொட்டின முத்துக்கள் ப்ரகாசித்தன ப்ரியா அவற்றை ஒற்றி முடியை ஒதுக்கி, ரசம் உதிர்ந்த கண்ணாடியின் முன் நின்று பொட்டு வைத்துக் கொண்டாள். தாவணி! முடியை அள்ளி ரப்பர் பேண்டில் அடக்கி, சமையல் கட்டிற்குப் போய் ப்ளாஸ்டிக் குடம் எடுத்துக்கொண்டு தெருவில் இறங்கினாள்.

    அம்மா! காப் எங்கே?

    அனுஷா, இடுப்பை விட்டு நழுவியிருந்த பாவாடையை இழுத்து விட்டபடி கேட்டாள்.

    நீ போய் பல் தேய்ச்சுட்டுவா!

    அவள் எழுந்து சோம்பல் முறித்தாள். முகத்தில் வடிந்த எண்ணெய் ப்சுக்கை துடைத்துக்கொண்டு, பாயை சுருட்டி பரண் மேல் செருகினாள். அம்மா! என் கண்ணாடி எங்கே?

    டேப்ல் மேல இருக்கு பார்! முதல்ல கண்ணாடியை எடுத்து மாட்டு!

    தடிமனாயிருந்த மூக்கு கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு, அம்மா, பேஸ்ட் எங்கே?

    ஏண்டி- ஒனக்கு ஒவ்வொண்ணும் நானே எடுத்து தரணுமா... அங்கேதான் இருக்கும் பார்!

    அவள் பல் விளக்கி, முடியை அலங்கோலமாய் அள்ளி செருகிக்கொண்டு காப் டம்ளருடன் அமர்ந்த போது வாசலில் நிழல் தெரிந்தது.

    எட்டிப் பார்க்க, நான்காம் வீட்டில் குடியிருக்கும் டீச்சர்!

    உள்ளே வாங்க டீச்சர்! என்று சட்டை பொத்தானை போட்டுக் கொண்டு காப்யை மறைத்து வைத்தாள்.

    இவ்ளோ நேரம் தூங்கினாயா... டூ பேட்! உங்கக்கா எங்கே!

    தண்ணிக்குப் போயிருக்கா!

    ஏன் நீ போறதில்லையா...?

    ம்கூம். என்று அனுஷா தோளை குலுக்கினாள், அம்மா விடமாட்டா!

    ஏன்?

    சுப்புலட்சுமி சமையல் கட்டிலிருந்து, இவளுக்கு குடம் தூக்க முடியறதில்லை, அதனாலதான்!

    அப்போது ப்ரியா குடத்துடன் உள்ளே ப்ரவேசித்தாள். அவளது இடுப்பும், பாவாடையும் நனைந்திருந்தன. மரியாதை நிமித்தம் தாவணியை இழுத்து விட்டுக்கொண்டு, நீங்க வந்து ரொம்ப நேரமாச்சா டீச்சர்?

    இல்லே, இப்போதான்! மார்க் ஷீட் வந்திருக்காமே தெரியாதா உனக்கு?

    ப்ரெண்டுகூட சொன்னா டீச்சர். போகணும்!

    மேலே என்ன படிக்கிறதா உத்தேசம்?

    ப்ரியா தயக்கத்துடன் தாயை பார்த்து டாக்டருக்கு!

    டாக்டராகி?

    லோகத்துல ஆருக்குமே ஹார்ட் அட்டாக் வராம பார்த்துக்கணும்!

    ஏன் ஹார்ட் அட்டாக்குன்னா அத்தனை பயமா?

    ஆமா டீச்சர்! எங்கப்பா அதனாலதான் செத்துப் போனார். அப்படிதானேம்மா?

    அப்படின்னுதான் சொன்னா!

    சொன்னான்னா என்ன அர்த்தம்?

    சுப்புலட்சுமி அதற்கு பதில் சொல்லவில்லை. ப்ரியா காலிகுடத்தை வைத்துவிட்டு, ஹார்ட் அட்டாக் இல்லேன்னா அப்புறம் வேறு என்னவாம்?

    ப்ரியா! அதெல்லாம் நோக்கு ஏன்? நாழியாறது பார்! நீ டிரஸ் பண்ணிண்டு கிளம்பு!

    ப்ரியா! உனக்கு வேண்டிய அப்ளிகேஷனையெல்லாம் வாங்கி வெச்சிருக்கேன். நாளைக்கு மார்க் ஷீட்டை எடுத்து வா. ப்ல்அப் பண்ணி போட்டிடலாம்!

    டீச்சர் கிளம்ப்ப் போனதும், சுப்புலட்சுமி, பூஜை அலமாரியின் முன்னில் அமர்ந்து மாலையுடனிருந்த கணவனின் படத்தை வெறிக்க ஆரம்ப்த்தாள்.

    ‘ஏண்ணா! எங்களை தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டேளே... இது நியாயமா? எங்களை எத்தனை சொகுசாய் வெச்சிருந்தேள்! எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சம்பாதிச்சேள்! மும்பையில் பங்களா! ப்சினஸ்! பணம்! காசு! புகழ்! அதெல்லாம் இப்போ வெறும் கனவா தெரியறது. உங்க பொண்ணு கஷ்டம் தெரியாம குதிக்கிறா! நடக்கிற காரியமா? அவளுக்கு எப்படி புரிய வைப்பேன். ஒங்க சம்பாத்தியத்தை யாரெல்லாமோ அனுபவிக்கிறா, கேக்க நாதியில்லே. எங்களால கிட்டே நெருங்க முடியலே, எல்லாம் விதி!

    விதியில்லை -சதி! வஞ்சகம்! நா அப்பாவின்னும், ப்ழைக்கத் தெரியாதவன்னும் சொல்லி திட்டிண்டேயிருப்பேள்! கடைசியில் நீங்களும் அப்படிதானே! இந்த லோகத்துல சம்பாதிச்சா மாத்திரம் போறாது. அதை பாதுகாத்தும் வெச்சுக்கணும். நீங்க வெக்கலியே! வெச்சுட்டுப் போனதையும் என்னால் காப்பாத்திக்க முடியலியே...’

    அம்மா!

    ப்ரியா குதித்துக்கொண்டு வீட்டிற்குள் ஓடி வந்தாள். அந்த துள்ளல் அவளது ரவிக்கையிலுமிருந்தது. கண்களில் குதூகலம். மகிழ்ச்சி!

    அம்மா! உடனே பாயாசம் வை! டீச்சர் வீட்டுக்குப் போகணும்! என்று மார்க் ஷீட்டை நீட்டினாள். ஹை... ஹை! தொன்னூத்தைஞ்சு பர்சென்ட்ம்மா! இதோ பார்... பயாலஜில் சென்ட்டம்! என்று நர்தனம் பண்ணினாள்.

    அப்பாட்ட வெச்சு நமஸ்காரம் பண்ணிக்கோடி!

    பத்திரிகைகளுக்கு ப்ரியாவின் படம் எப்படி கிடைத்ததோ தெரியவில்லை அன்று மாலை பதிப்ப்லேயே வெளியிட்டிருந்தனர். அவள் பயாலஜியில் சென்ட்டம் என்கிற விபரமும் மற்ற பாடங்களில் முதல் மார்க் வாங்கியிருந்தவர்களும் பேப்பரில் அணி வகுத்திருந்தனர்.

    மறுநாளே நிருபர்கள் அவர்கள் வீட்டில் ஆஜர் ப்ரியாவுக்கு ஆச்சரியம் கூச்சம்!

    மாமி! பொண்ணோட சேர்ந்து நில்லுங்க. படம் எடுத்து, பேட்டியும் வெளியிடணும்!

    சுப்புலட்சுமி என்னை விட்டிருங்கோ, என்று ஒதுங்கினாள். ஆனால் அவர்கள் விடுவதாயில்லை.

    ப்ரியாவுக்கு பெருமிதம் ப்டிபடவில்லை. எப்படி படித்தாய், உன் லட்சியம் என்ன?" என்றெல்லாம் நிருபர்கள் கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டனர்.

    உங்கப்பா பத்தி சொல்ல முடியுமா?

    அத அம்மாட்டதான் கேட்கணும்!

    சுப்புலட்சுமி, வேணாம், அவரை பத்தி எழுத வேணாம்! என்று கண்கலங்கினாள்.

    ஏன் மாமி?

    எழுதி ஆகப்போறதென்னவாம்! போனதெல்லாம் போகட்டும்! அநாவசியமா பழசையெல்லாம் கிளறாதீங்கோ ப்ளீஸ்...

    மறுநாளே அவர்களது படமும், மேட்டரும் வெளியாயிற்று. அதில் வறுமை படிப்புக்கு எதிரியல்ல! என்று தலைப்ப்ட்டு, ப்ரியா ஆரம்பம் முதல் மெரிட் ஸ்காலர் ஷிப்ப்ல் படித்த விபரங்களை வாங்கின பரிசுகள், மெடல்கள் பற்றி எழுதியிருந்தனர்,

    அதன் ப்ன்பு தெரு முழுக்க அவளை பெருமையாய் பேசிற்று. பொறாமையில் சிலுப்ப்ற்று. நீயும் தான் இருக்கியே... தண்டச் சோறு! என்று தங்கள் வீட்டு பசங்களை இடித்தது.

    அந்த பத்திரிகை செய்தியால் அவர்களுக்கு நன்மை வளைந்ததோ இல்லையோ ஆனால், மிகப் பெரிய தீமை ஒன்று நிகழ அது தூண்டுகோலாக அமைந்தது உண்மை.

    மூன்றாம் நாள் இரவு.

    அக்கம் பக்க வீடுகளில் தனியார் டி.விகள் விளம்பரங்களையும், இடையிடையே நிகழ்ச்சிகளையும் விளம்ப்க் கொண்டிருக்க இவர்கள் வீட்டில் பழுப்பு நிற பல்பு! கொசுக்களின் ரீங்காரம்!

    அனுஷா! என் பேனாவை எடுத்தியா நீ? என்று ப்ரியா கேட்க, ஆமா எடுத்தேன்.

    எதுக்குடி எடுத்தே? யாரை கேட்டுட்டு? என்று ப்ரியா அவளது காதைப் ப்டித்து திருக, அவள் சிணுங்க, மரியாதையாய் கொடுத்திரு! இல்லேன்னா பொட்டை கண்ணு மாதிரி, பொட்டை காதுமாக்கிருவேன்!

    அம்மா! இவளைப் பாரு. என்னை பொட்டைக் கண்ணுங்கிறா!

    சனியன்களா... உங்க சண்டையை ஆரம்ப்ச்சுட்டீங்களா...? என்று சுப்புலட்சுமி ஸ்கேலை ஓங்கினபோது,

    வாசலில் அத்தே! என்கிற குரல் -

    அவள் எட்டிப் பார்த்து ஆரு...? என்று புருவத்தை உயர்த்தினாள்.

    நா சிவாத்தே. சிவராஜ்!

    எந்த சிவா?

    அத்தே! நிஜமாலுமே என்னை தெரியலியா இல்லே, மனசுல வைராக்கியம் வெச்சுண்டு அப்படி கேட்கறேளா? நா உங்க அண்ணா பையன்!

    உடன் அவளது முகத்தில் இறுக்கம். கண்களில் அனலுடன், ஏம்ப்பா - அன்னைக்கு பண்ணினதெல்லாம் பத்தாதுன்னு திரும்பவும் எங்களை அழிக்க வந்துட்டேளா? போ வெளியே!

    "அத்தே! அன்னைக்கு ஏதோ ஒரு உந்துதல்ல அப்படி நடந்துண்டாலும், அப்புறமா அம்மா அதை நினைச்சு நினைச்சு ரொம்பவே வருத்தப்பட்டா! உங்களை சந்திச்சு மன்னிப்பு கேட்கவும் தயாரா இருந்தா. ஆனா, நீங்கதான் எடம் தரலே.

    இப்போ இந்த பத்திரிகையை பார்த்ததும்தான் உங்க விலாசமே தெரிஞ்சது. அத்தே! நடந்ததுக்கெல்லாம் பரிகாரம் தேடத்தான் நா வந்திருக்கேன்!"

    எங்களுக்கு எந்த பரிகாரமும் வேணாம்! நீ மொதல்ல வெளியே போ! ஏய்... ப்ரியா என்ன இங்கே வேடிக்கை? உள்ளே போ! என்று சுப்புலட்சுமி கதவை அடித்து சாத்தினாள்.

    அன்று ராத்திரி முழுக்க ப்ரியாவுக்கு தூக்கமில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று நல்ல மார்க் வாங்கிவிட்ட ஆர்ப்பரிப்பு. தூக்கம் மட்டுமில்லை, சந்தோஷம் அதிகமாகிவிட்டாலும் தூக்கம் ப்ரச்சனைதான்!

    அடுத்தது அந்த சிவா!

    சாது சந்தினியான அம்மாவின் அந்த ஆவேசத்தை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த ஆவேசத்திற்கு காரணம் அறிந்தால்தான் தூக்கம் வரும் போல் இருந்தது.

    மெல்ல அவளிடம் போய், யாரும்மா அந்த சிவா?

    உனக்கு ஏன் அதெல்லாம்? அவனோட பேச்சை எடுக்காதே! என்று சுப்பு எரிந்து விழுந்தாள்.

    சரி, அவனை விட்டிடலாம். அப்பா விஷயத்தை பேசலாமில்லே? அவரோட சாவுக்கு ஹார்ட் அட்டாக் காரணமில்லேன்னு சொன்னாயே... அது நிஜமா?

    ஆமாம்.

    அப்புறம்?

    கொலை!

    வெளியே பனி படர்ந்திருந்தது. தெரு விளக்கில் ஈசல்கள் குவிந்திருந்தன. அதன் இறக்கைகள் தரையில் உதிர்ந்திருந்தன. அவற்றை பல்லிகள் பொறுக்கிக் கொண்டிருந்தன.

    வீட்டிற்குள் பேனின் கடாமுடா சப்தம்! அந்த காற்றுக்கு டிமிக்கி கொடுக்கும் கொசுக்கள்!

    அனுஷா பாயில் அலங்கோலமாய் கிடந்தாள். அவள் எது பற்றியும் கவலைப்படுவதில்லை. ப்ரியாவுக்கு அப்படி இருக்க முடியவில்லை.

    அம்மா எதையெதையோ மறைக்கிறாள். நான் என்ன சின்னப் ப்ள்ளையா? என்னிடம் சொல்லக்கூடாதா? சொல்லி பாரத்தை இறக்கிக் கொள்ளக் கூடாதா? எல்லாத்தையும் இவளே ஏன் சுமக்கணும்?

    சுப்புலட்சுமி ஒருக்களித்து படுத்து விசும்ப்க் கொண்டிருக்க, ப்ரியா அவளது தோளைப் பற்றி, அம்மா! அப்பாவை கொன்னது யார், எதுகக்க கொன்னாங்க? என்று உலுக்க ஆரம்ப்த்தாள்.

    சுப்பு அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. சொல்ல விரும்புவதாகவும் தெரியவில்லை.

    அம்மா! நா கேட்டேனே!

    ஏய்! சும்மா கத்தி கூச்சல் போட்டு அனுஷாவோட தூக்கத்தையும் கெடுக்க வேணாம்! எதையெதை யார்ட்ட எப்போ சொல்லணும், எப்போ கூடாதுன்னு நேக்கு தெரியும் நீ போய் தூங்கு!

    அம்மா! வேறு எதுவும் வேணாம்? அந்த பாவத்தை செஞ்சது மட்டும் யார்ன்னு சொல்லிரு போதும்!

    அது எனக்கெப்படி தெரியும்!

    யார் மேல சந்தேகம்?

    யாரைன்னு சந்தேகிக்கிறதாம்!

    அம்மா! இப்படி பட்டும் படாம பேசினா எப்படியாம்? அங்கே என்னதான் நடந்தது? நாம் ஏன் மும்பையை விட்டுட்டு வந்தோம்? வீடு, கார்ன்னு சொகுசாய் வாழ்ந்தோமே... அதெல்லாம் இப்போ எங்கே?

    உன்னோட வைத்தி சித்தப்பா பார்த்துக்கறார்!

    பார்த்துக்கிறாரா இல்லை, அனுபவிக்கிறாரா? நம் சொத்துல அவளுக்கு என்ன உரிமை? சொல்லும்மா! ஏன் பேசமாட்டேங்கிறே? எல்லாத்தையும் விட்டுட்டு நாம் ஏன் கஷ்டப்படணும்?

    எல்லாம் விதி!

    புடலங்காய்! அம்மா! நா இத்தனை கெஞ்சறேனே ஒனக்கு கருணையே இல்லையா? அப்பா எங்க மேல எத்தனை அன்பாயிருந்தார்! பொத்தி பொத்தி வளர்த்தாரே! அப்படிப்பட்டவரோட மரணத்தைப் பத்தி தெரிஞ்சுக்கிற உரிமை கூட எங்களுக்கு இல்லையா?

    ப்ரியாவுக்கு அழுகை அழுகையாய் வந்தது.

    தோல்வியுடன் படுக்கைக்கு திரும்ப் போர்த்திக் கொண்டாள். அப்படியும் கூட தூக்கம் வரவில்லை.

    அப்பாதான் கண் முன்னில் வந்து, ப்ரியாக்குட்டி! என்று அணைத்துக் கொண்டார். தலையில் முத்தம் பதித்தார்.

    மும்பையில் நடந்த சம்பவம் அவளுக்கு ஒவ்வொன்றாய் ஞாபகத்திற்கு வர ஆரம்ப்த்தன. ஆனால் அதற்கெல்லாம் காரண காரியம் அறியும் வயசு அப்போது அவளுக்கில்லை.

    ப்ரியா நான்காம் கிளாஸ் படிக்கும் போதுதான் வைத்தி சித்தப்பா மும்பைக்கு வந்தார். அவருக்கும் அப்பாவுக்கும் எப்போதுமே ஆகாது!

    ப்ரியாவின் அப்பா ராமச்சந்திரன் அவருடன் முகம் கொடுத்து பேசவேமாட்டார். ப்ரியா, வைத்தி சித்தப்பாவை எப்போதோ ஒன்றிரண்டு முறை பார்த்ததோடு சரி. பழகினதில்லை. சித்தப்பா, அப்பாவுடன் சண்டை போட்டுக்கொண்டு சொத்தை ப்ரித்து வாங்கி திருச்சியில் இருப்பதாய் கேள்விப்பட்டிருந்ததோடு சரி.

    அவருக்கு அங்கே போலீசில் உத்யோகமாம். மீசையை பார்த்தாலே தெரியும். போலீஸ் என்றால் மீசை வளர்க்கணும் என்று சட்டம் இருக்குமோ? அவரது முகத்தை பார்த்தால் சண்டை போடுபவராக தெரியாது.

    அப்பா வேலை விஷயமாய் வெளியூர் போயிருந்த போதுதான் வைத்தி சித்தப்பா வீட்டுக்கு வந்திருந்தார். வந்தவரின் முகத்தில் களையில்லை. அந்த போலீசின் மிடுக்கில்லை முள் முள்ளாய் தாடி! சீக்கு ப்டித்து, ஆஸ்பத்திரியிலிருந்து வந்த மாதிரி தெரிந்தார்.

    அம்மாவுடன் என்னவோ உருகி உருகி பேசினார். ‘மன்னி! நீங்கதான் என்னை காப்பாத்தணும்!’ என்று காலை ப்டிக்காத குறை.

    ‘இதுல நான் செய்ய என்ன இருக்கு? உங்கண்ணா சம்மதிக்கணுமே!’

    ‘சம்மதிக்க வைக்கணும். நீங்க சொன்னா அவர் கேப்பார்! நீங்க மட்டும் எனக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1