Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Panithuli Ondru
Panithuli Ondru
Panithuli Ondru
Ebook99 pages36 minutes

Panithuli Ondru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466800
Panithuli Ondru

Read more from N.C.Mohandass

Related to Panithuli Ondru

Related ebooks

Related categories

Reviews for Panithuli Ondru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Panithuli Ondru - N.C.Mohandass

    1

    எதுவுமே புதுசு என்றால் அதற்கு தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. புது டிரஸ், புது செருப்பு, புது ஸ்கூல், புது வீடு, புது அலுவலகம், புது கணவன், இப்படி எல்லாவற்றிலும் ஒருவித பதற்றமும் அச்சமும் இருப்பது சகஜமே. அத்துடன் பெருமிதம்.

    இருபத்திரண்டு வயது அமிர்தாவிடம் கொஞ்ச நாட்களாகவே ஒரு மாற்றம். யாராவது அதிர்ந்து பேசினாலே, நடுங்கிப் போகிறாள்.

    பொதுவாக பாம்பைக் கண்டால் பயப்படுவர். கரப்பான் பூச்சி! அமிர்தாவிற்கு விஷ ஜந்துக்களின் மேல் பயமில்லை. அவற்றை துணிச்சலுடன் போய் அடிப்பாள் அவளது பயமெல்லாம் மனிதர்களின் மேல்தான் அவர்கள் எப்போது பதுங்குவார்கள் எப்போது கொத்துவார்கள் என்று தெரியாதே!

    அவளுக்குச் சில கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எல்லாம் அவளே ஏற்படுத்திக் கொண்டது. அவற்றிலிருந்து மீள்வதற்கு அவளுக்கு சிலகாலம் பிடித்தது. அந்த இடைவெளியில் மனிதர்களைப் படிக்கக் கற்றுக் கொண்டாள்.

    கல்லூரி நாட்களில் பாடம்தான் பிரதானமாயிருக்கிறது. பரீட்சை, கேள்விகள், அதற்கான பதில்கள்! நெட்டுரு போட்டு, தூக்கம் விழித்துப் படித்து பரீட்சை எழுதினால் வெற்றி! ஆனால் அந்த வெற்றி வாழ்க்கைக்கும் தொடர வேண்டும் என்பதில்லை. வாழ்க்கை என்பது தனி பாடம். படிக்கும் நாட்களில் அவள் சரியான வாயாடி. தோழிகள் எல்லாம் அவளை அடங்காப்பிடாரி என்பர். அமிர்தாவிடம் தர்க்கம் பண்ணி ஜெயிக்க முடியாது. ஏன் வம்பு என்று ஒதுங்குபவர்களே அதிகம்.

    அப்படிப்பட்டவள் இன்று அடங்கிப் போயிருக்கிறாள். வீட்டினர் பார்த்த குகன் என்பவனைக் கட்டிக் கொண்டு இதோ ஒரு வாரம் ஓடிப் போயிற்று. குகன் பார்வைக்கு முரடாயிருந்தான். முப்பது வயது. இந்த வயதுக்கு இப்படி ஒரு முரட்டு மீசை தேவையா என்றிருந்தது அவளுக்கு. கல்யாணத்திற்கு முன்பே, உனக்கு வரப் போகிறவன் மிகுந்த கோபக்காரன். பார்த்து நடந்துக்கோ என்று சொல்லிச் சொல்லிப் பெரிசுகள் பயமுறுத்தி வைத்திருந்தன.

    அந்த வார்த்தைகள் அடிமனதில் பதிந்து - அவனை துரத்தில் பார்க்கும் போதே கிலி தோன்றும்.

    ஆனால் அவள் எதிர்பார்த்தபடி அவன் அத்தனை பயமுறுத்தவில்லை. இயல்பாகத்தானிருந்தான். உருவத்திற்கு ஏற்ற வேகமில்லை. அதட்டலில்லை. முரண்பாடு. குரல்கூட ரொம்ப நளினம்.

    கல்யாணம் முடிந்து அன்று ராத்திரிவரை அமிர்தா, அவனுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அறைக்குள் தனிமையில் விட்ட பின்புதான் அந்தக் குரலையே கேட்க நேர்ந்தது.

    கீச் கீச். இதுவே பழைய அமிர்தாவாயிருந்தால் முதலிரவில் பாலிற்கு பதில் விக்ஸ் மாத்திரை கொடுத்து, விக்ஸ் சாப்பிடுங்கள். கீச்... கீச் அகற்றுங்கள் என்றிருப்பாள். இப்போது பயம். அதிலும் பெண் என்பவள் ஒவ்வொன்றிற்கும் பயப்பட வேண்டியிருக்கிறது. நடக்கும் ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் பழியிலிருந்து தப்ப முடியாது.

    முதலிரவென்பதே த்ரில். பழகின ஆண் என்றால் பரவாயில்லை. கணவனின் சுபாவம் அறிந்து, ரசனையறிந்து அதற்கேற்றபடி தன்னையும் மாற்றிக் கொள்ளலாம். புது மனிதன் - வேற்று மனிதன் என்கிறபோது - அந்த த்ரில் அதிகமாகிறது. என்ன சொல்வானோ, ஏது சொல்வானோ என்கிற அச்சம். படபடப்பு. பரிதவிப்பு.

    குகன் அவளை அதிகம் சோதிக்காமல், ஆதரவாய் அருகில் அமர்த்திக் கொண்டு அவளது கண்களையே உற்றுப் பார்த்தான். அந்தப் பார்வையின் ஒளி அவளது உச்சி முதல் உள்ளங்கால்வரை ஊடுருவிற்று. உலுக்கிற்று. பேச்சைவிட பார்வை ஆழமாய் பதிகிறது. வேர்விடுகிறது. வியர்க்க வைக்கிறது.

    ஏன் உன் கைகளெல்லாம் நடுங்குகின்றன. குளிருதா?

    இல்லை

    என்னைப் பார்த்தால் பயமாயிருக்கிறதா?

    ஆமாம் என்று சொன்னால் கோபித்துக் கொள்வானோ என்கிற

    தயக்கம். இல்லை என்று பொய் சொல்லவும் முடியவில்லை. பேசாமலிருந்தாள். இன்னும் கொஞ்சம் பொறுப்போம். இன்னும் கொஞ்சம் பேசட்டும். அதற்குள் இவனை படித்து விடலாம். புரிந்து கொள்ளலாம்.

    சொல்! ஏன் பயம்? நீ பயப்படுகிற மாதிரி என்னிடம் அப்படி என்ன இருக்கிறது? உன்னைப் பயமுறுத்துவது எது... இந்த மீசையா?

    குகன் அவளது கன்னத்தை நிமிர்த்திக் கேட்க, புன்னகைத்தாள். அதற்கு ஆமாம் என்று அர்த்தம். ‘நீங்க என்ன சந்தன மரம் கடத்தறீங்களா? இல்லை கடத்துபவனை பிடிக்கப் போகிறீர்களா? உங்களுக்கு எதுக்கு இத்தனை பெரிய மீசை?’ கேட்கத் தோன்றிற்று. ஆனால் கேட்கவில்லை. பெரிய மீசைக்காரர்கள் எல்லோரும் முரடர்கள் என்று சொல்ல முடியாது. உருவத்திற்கும் மனதிற்கும் ரொம்ப தூரம். சாதுவாயிருப்பான். உள்ளுக்குள் இருக்கும் ஈரம் வெளியே வரும்போது ஆவி பறக்கலாம். நாம் சாது என்று யாரும் தலையில் மிளகாய் அரைத்து விடக்கூடாது என்கிற தாழ்வு மனப்பான்மை எழுந்து அதை விரட்டக்கூட மீசை வைக்கலாம். குகன் எந்த ரகம் என்று அவளால் தீர்மானிக்க முடியவில்லை. அதற்குக் கொஞ்சம் அவகாசம் வேண்டும்.

    அமிர்தா! உனக்கு என்னென்ன பிடிக்கும் - எதெது பிடிக்காதுன்னு சொல்லு!

    முதலிரவில் கேட்கப்படும் வழக்கமான கேள்விதான் இது. அந்த வழக்கம் ஒரு சம்பிரதாயம். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள, ஒருவர் சுபாவம் மற்றவர் அறிய ஒரு வாய்ப்பு. புது மனைவியிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்கிற தயக்கத்திற்கு இந்த ஆரம்பம் ஒரு விதி, வழிகாட்டி. அப்படியே மெல்ல மெல்ல நெருங்கலாம். உரசலாம். அரவணத்துக் கொள்ளலாம். பயம் விலக்கலாம். நான் உன்னவன். உனக்காகவே படைக்கப்பட்டவன். நீயும் என்னவள். எனக்கு விசுவாசமாய் இருக்க வேண்டியவள். வாழ்க்கையில் தவறுகள் சகஜம்.

    Enjoying the preview?
    Page 1 of 1