Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nila Kaayum Neram
Nila Kaayum Neram
Nila Kaayum Neram
Ebook88 pages30 minutes

Nila Kaayum Neram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466800
Nila Kaayum Neram

Read more from N.C.Mohandass

Related to Nila Kaayum Neram

Related ebooks

Related categories

Reviews for Nila Kaayum Neram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nila Kaayum Neram - N.C.Mohandass

    1

    சூரியன் கடலில் மூழ்கத் தயாராயிருந்தபோது ஸ்கூல் பஸ் ஒன்று காம்பவுண்டிற்கு வெளியே வந்து ஹாரனடித்தது.

    பிள்ளைகள் ஜன்னலை விலக்கி, ஹாய்... பியூட்டிஃபுல்! என்று வியந்தனர். ஹாய் படகு! அதோ கப்பல்! ஒண்டர்ஃபுல்யா! என்று ஒருவன் காமிராவை எடுத்து கிளிக்!

    மேலே வானத்தின் சிகப்பு. மூன்று பக்கம் அலைகள்! தீவு முழுக்க பசுமை! தென்னை! மூங்கில்! ஒல்லியாய் பாக்கு மரங்கள்! பாசிபடர்ந்த பாறைகள்! இடையிடையே வெளிநாட்டவரின் டெண்ட்! மணலில் நீட்டியிருக்கும் வெள்ளை மாந்தர்கள்! அவர்களை வேடிக்கைப் பார்க்கும் ஜொள்ளர்கள்!

    அது –

    பொழுதுபோக்கு அம்சங்கள் அத்தனையும் நிரம்பின உல்லாச ஸ்தலம்.

    கேட் திறக்கப்படாமல் போக கறுப்புடை போர்த்திய மதர், ஏய்... பசங்களா! சைலன்ஸ்! என்று கீழே இறங்கினார்.

    ஹூம்! இங்கே வந்தும்கூட சைலன்ஸா? என்று பத்தாங்கிளாஸ் விக்கி முணுமுணுத்தான். அவன் ஜீன்ஸ்-பனியன்!- ரேபான்கிளாஸ்! கையில் தங்க முலாம் வாட்ச்! தோளில் பென்டாக்ஸ் காமிராவைத் தொங்கவிட்டிருந்தான். இரண்டு கைகளிலும் மோதிரங்கள்! தங்கக் காப்பு!

    சைலன்ஸ் வேணும்னா லைப்ரரி போகலாமே! எதுக்கு பிக்னிக்காம்?

    காபினிலிருந்த அலுவலர், மேடம்! எங்கேயிருந்து வரீங்க... எந்த ஸ்கூல்? என்றார். லெட்ஜரில் குறித்துக்கொண்டு என்ன நோக்கம்? ஸ்டூடன்ஸ் எத்தனை பேர்? எத்தனை நாள் ஸ்டே...?

    மதர் சற்று மூக்கு சிவந்து இதெல்லாம் இந்த பர்மிஷன் சீட்டிலேயே இருக்கே! என்றாள்.

    ஓ... பர்மிஷன் வாங்கியாச்சா? தென் நோ பிராப்ளம்! உங்களுக்கு பி பிளாக் ஒதுக்கப்பட்டிருக்கு. அங்கே சகலவசதிகளும் உண்டு. பசங்களுக்கு ஹால் போதுமில்லையா...?

    போதும். ரெண்டு நாள்தானே! கேட்டைக் கொஞ்சம் திறக்கறீங்களா!

    "வெயிட்! வெயிட்! வந்திருப்பது பசங்கங்கிறதால சில விஷயங்களை முன்கூட்டியே சொல்லிர வேண்டியது அவசியமாகிறது. மேடம்! இங்கே பிரைவஸி முக்கியம். தீவுக்கு வரவால்லாம் அமைதிக்கும், தன்மைக்கும்தான் வரா!

    தீவுக்குள்ளே ஷூட்டிங் நடக்குது. தொழிலதிபர்களின் கான்ஃபரன்ஸ்! அரசியல் மீட்டிங்! ஃபாரினர்ஸ்! ஹனிமூன் கப்புள்ஸ்! இப்படி பலதரப்பட்டவாளும் வந்திருக்கா!"

    இதையெல்லாம் எங்கிட்ட ஏன்...?

    பசங்க பாருங்கோ! கையும் காலும் வெச்சுண்டு சும்மா இருக்கமாட்டா! யு ஷுட் கண்ட்ரோல்! உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துலதான் அவா இருக்கணும். இயங்கணும்! மத்தவாளுக்கு டிஸ்டர்பா இருக்கப்படாது!

    நல்லது. நான் பாத்துக்கறேன் என்றதும் கேட் மேலே எம்பிற்று. பஸ் உள்ளே பிரவேசிக்க, பசங்கள் ஹே... ஹே... என்று கத்த ஆரம்பித்தனர். காபினிலிருந்த அலுவலரைப் பார்த்து கைதட்டு!

    ஹோட்டல் மூன்லைட்.

    அறைகளெல்லாம் கடலை நோக்கி அமைக்கப்பட்டிருந்தன. ஜன்னல் திரைச்சீலையை விலக்கினால் அலைகளும் அதன் மேல் மின்னும் சூரியக் கதிர்களும் ரம்யம்.

    மணலில் குருவிகள் சில ப்ளஸ் டூவுடன் உலாத்திக் கொண்டிருக்க, ஜார்ஜ், வாவ்! என்று பால்கனியிலிருந்து வியந்தான். அற்புதம்! ஹனிமூனுக்கு ஏத்த இடம்!

    சும்மாவா! எங்கப்பாவோட செலக்ஷனாச்சே சொல்லிவிட்டு, ரெக்ஸி அடர்ந்த முடியுடன் சிலாகித்து அவனது முதுகில் படர்ந்தாள். அந்த இதமும், பதமும் அவனை மேலும் குஷிப்படுத்தின. இருக்காதா பின்னே! கல்யாணமாகி ஒரு வாரம்தானே முடிந்திருக்கிறது.

    ஜார்ஜ் எம்.பி.ஏ.! வீட்டில் வசதியில்லாவிட்டாலும்கூட ஸ்காலர்ஷிப்பிலும், சிறப்புச் சலுகையிலும் படித்து தற்போது கம்பெனி ஒன்றில் மதிப்பான பதவி!

    ரெக்ஸி! இன்னும் ஏன் டிலே? வெளியே சுற்றிப் பார்க்க வேணாம்?

    வேணாம்.

    ஏன்?

    அப்பா போன் பண்றேன்னார். இன்னும் காணோம்!

    சரி, நீயே பேசிரேன்!

    அவர் வீட்டிலில்லை. சே! ஏன் இப்படி லேட் பண்றார்னு தெரியலே என்று சிணுங்கிக்கொண்டு கட்டிலில் விழுந்தாள். ரெக்ஸியின் பிணக்கும் கோபமும் அவனுக்குத் தெரியும். ஒரு வாரமாய் அவளை நிறையவே பார்த்தாயிற்று, படித்தாயிற்று.

    அவள் அப்பா செல்லம்! மூச்சுக்கு மூச்சு அப்பா! பணக்காரர்கள் என்றாலே அவனுக்கு அலர்ஜி. இப்போது அது அதிகமாகியிருக்கிறது. பணமும் பகட்டும் அவளை ரொம்பவே கெடுத்து வைத்திருக்கின்றன. கேட்டதெல்லாம் கிடைக்கும் போது வாழ்க்கை எளிதாய்த் தெரிகிறது. படித்திருக்கிறாள். ஆனால் மனிதர்களைப் படிக்கவில்லை. மனிதத் தன்மையை உணரவில்லை. கஷ்ட நஷ்டங்களை அறியவில்லை.

    ஆசைப்பட்டது அப்போதே வேண்டும். நினைத்தது உடனே நடந்தாக வேண்டும். அதற்கு வேண்டி சுற்றியிருப்பவர்கள் ஆட வேண்டும். ஆட்டி வைத்துவிடுவாள்.

    வீட்டில் சரி, ஆடிதானாக வேண்டும். வெளியேயும் அப்படி எதிர்பார்க்க முடியுமா? வெளியே எப்படிப் பேச வேண்டும் - பழக வேண்டும் என்று அவளுக்குத் தெரிவதில்லை.

    வரும் போதே டாக்ஸிக்காரனுடன் சண்டை. பிறகு ரிசப்ஷனில்! அப்புறம் ரூம் பாயை விரட்டு. ஒன்றுமில்லாத

    Enjoying the preview?
    Page 1 of 1