Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yetho Yetho Ondru
Yetho Yetho Ondru
Yetho Yetho Ondru
Ebook117 pages40 minutes

Yetho Yetho Ondru

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466817
Yetho Yetho Ondru

Read more from N.C.Mohandass

Related to Yetho Yetho Ondru

Related ebooks

Related categories

Reviews for Yetho Yetho Ondru

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yetho Yetho Ondru - N.C.Mohandass

    1

    அடர்ந்த மரங்களும், மலைகளும், பசுமையும் நிறைந்திருந்தாலும் கூடவே தண்ணீர் பிரச்சனையும் துரத்துவது கேரளத்தில் ஆச்சரியமான உண்மை. மூன்று மாத தொடர் மழையில் கொஞ்சம் குறைந்தாலும் பாதாளத்திற்கு போய்விடும் அபாயம்.

    பாறை மணலில் பூஞ்சான் நிறத்தில் மிரட்டும் தண்ணீரை பார்த்து நிகில் அப்போது மிரண்டு கொண்டிருந்தான். மூட்டாத லுங்கியை முழங்கால் முடி தெரிய தூக்கிக் கட்டி, வாளியை கையில் பிடித்தபடி பாத்ரூம் முன்னால் நின்றிருந்த பிரம்மச்சாரி இளைஞர்களை பார்க்க பரிதாபமாயிருந்தது.

    கேரளத்து இளைஞர்களுக்கு உரிய (பெண்களுக்கு அடர்ந்த முடி ஆண்களுக்கு அம்போ! ஒரே ஊர் ஒரே நீர் ஆனால் ஏனிந்த முரண்பாடு!) வழுக்கை கொண்டவர்கள் வழக்கமாய் வைக்கும் குறுந்தாடியுமாயிருந்த இளைஞன் ஒருவன் எந்தா சாரே... டேங்கில வெள்ளம்’ இல்லை? என்றான்.

    டேங்கில் மட்டுமில்லை. கிணற்றிலும் இல்லா!

    அப்போ வா அம்பலி குளத்துக்குப் போகாம்!

    டயமாச்சு டூட்டிக்குப் போகணும்! நிகில் தவிக்க, அவன் சைக்கிளை தள்ளி வைத்து கேறு! என்றான். குறுகிய நாளிலேயே நிகிலுக்கு மலையாளம் பிடிபட்டிருந்தது அவர்களின் வளமும், உச்சரிப்பும், அக்கிறிணையாக்கி பேசும் பாசையும் அவனுக்கு ஆரம்பத்தில் சிரிப்பு மூட்டினாலும் பிறகு பழகி விட்டிருக்க.

    கிருஷ்ணன் கோயில் குளத்தில் பிரமாண்டமாய் மதில் எழுப்பி ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி இடங்கள் ஒதுக்கியிருந்தனர். விசால குளத்தில் பச்சை நிறத்தில் தண்ணீர் தழைத்திருந்தது. இது பெண்கள், வெள்ளை துண்டு உடுத்தியும், முடியை வசதிப்படி சுருட்டி கொண்டை போட்டும், ரவிக்கையோடு பாவாடையை தூக்கி கட்டியும் முங்கி ஏழ, நிகிலுக்கும் சங்கடமாயிருந்தது.

    எந்தானு... நோக்குன்னது? வா!

    நண்பன் இழுக்க, அவசரத்துக்கு குளித்து, வெடவெடப்புடன் கிருஷ்ணன் கோயிலில் வலம் வந்து சந்தனம் பெற்று அறைக்கு வந்த போது மணி எட்டரை.

    என்னதான் விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும், எத்தனை முன் எச்சரிக்கையுடன் செயல்பட்டாலும் கூட சில நிகழ்வுகளை மாற்ற முடிவதில்லை. அன்றாட செய்கைகள் அதுபாட்டிற்கு ஒரே மாதிரி போய்க் கொண்டிருக்கின்றன.

    அதுவும் குறிப்பாய் காலை நேர பதற்றம்.

    முந்தைய நாளின் களைப்பு மாறி, தூங்கி எழுந்த பின்பு உற்சாகம் கிடைத்திருந்தாலும் கூட டென்ஷன்!

    தனி என்றாலும் குடும்பம் என்றாலும் இயந்திர வாழ்க்கை. எழுந்து பல்தேய்த்து, காபி! பாத்ரூம் பேப்பர்! குளியல்! டிபன்! குழந்தைகளை ரெடி பண்ணி பள்ளிகூடம் வண்டியோ பஸ்ஸோ பிடித்து அலுவலம்!

    இதற்கிடையே டிவியின் ஆக்ரமிப்பு: அதிகாலையில் வணக்கம் சொல்லி ஆரம்பித்தார்கள் என்றால் போட்டிபோட்டு அமரவைத்துவிடும் கொடுமை! இதோ செய்தி வந்திரும்... இப்போ வந்திடும் என்று விளம்பரங்களால் பழிதீர்க்கப்பட்டு மகா எரிச்சல்!

    பிரம்மச்சாரிகளுக்கு அறை நண்பர்கள்தான் எதிரி. பொது குளியலறைக்கு கியூ. முந்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அலுவலகத்திற்கு நேரத்திற்கு போக முடியாது.

    நிகில் தலையை உலர்த்தி, ஈர வஸ்துகளை பின்பக்க கொடி கயிற்றில் உலர்த்திக் கொண்டிருக்கும் போது - வாசலில் தம்பி! தம்பி! என்கிற அழைப்பு கேட்டது.

    அவன் எட்டி பார்த்து அலங்கோலமாய் நாற்காலியில் அமர்ந்து ஒரு கையில் சிகரெட்டும் மறுகையில் காபியுமாயிருந்த நண்பன் அரசுவிடம், ஏய்... யாருன்னு பாரு!

    ஆங் வேறு யாரு! காலங்காத்தாலயே பிச்சை! இதுங்க தொல்லை தாங்கலப்பா! என்று அங்கலாய்த்தானே தவிர நகரவில்லை.

    கதவை திறடா!

    த! பாரு! இந்த விரட்டற வேலையெல்லாம் வேணாம்! இங்கே உனக்கு என்ன உரிமை இருக்கோ அதே அளவு எனக்கும் இருக்கும். நீ தர வாடகைதான் நானும் தரேன். ஒனக்கு ஒரு கட்டில்! எனக்கு ஒண்ணு! உனக்கு ஒரு மேஜை எனக்கும்! உனக்கு ஒரு அலமாரி எனக்கும் ஒண்ணு

    ஆனா- வாய் மட்டும் உனக்கு ரெண்டு!

    அதற்குள் தம்பி நிகில், கதவை திறப்பா! என்று ஜன்னல் வழி முகம் தெரிய, டி.வி.யின் வாயை அடக்கிவிட்டு ஓடிப் போய் கதவை திறந்து அக்கா! நீயா என்று பாசம் பொங்கினான்.

    வாட்ச்சைபார்த்து நேரமாச்சு - இந்த நேரத்தில் இவ ஏன் என்று பதற்றம்! அதை மறைத்துக்கொண்டு உள்ளே வாக்கா!

    சாந்தி தடித்த உடலும், ஈர முடியுமாய் உள்ளே பிரவேசிக்க, நாற்காலியில் அமர்ந்திருந்த அரசு லுங்கியை வாரி சுருட்டிக்கொண்டு, கொடியில் கொசுக்களுடன் இருந்த சட்டையை உதறி தோளில் போட்டுக்கொண்டு பின் பக்கம் பாய்ந்தான்.

    புகையை நாசிக்கு நேராய் தட்டிக்கொண்டு சாந்தி இந்தப்பா கிருஷ்ணன் கோயிலுக்கு வந்தேன். பிரசாதம் எடுத்துக்கோ! என்று நீட்டினாள்.

    காலடியில் இருக்கும் கிருஷ்ணனை அவன் தினசரி மூன்று காட்சிகள் காண்கிறேன். பத்தாதிற்கு நண்பர்கள் வேறு ஏதாவது ‘தென்றலை’ கோவில் பிரகாரத்தில் துரத்தி, அவர்களுக்கு ஐயம் வரக்கூடாது என்று பிரசாதமும் சந்தனமும் பெற்று இங்கே வந்து தாம்பாலத்தில் கொட்டிவிட்டுப் போகிறார்கள்,

    இந்த லட்சணத்தில் பத்து கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் எர்ணா குளத்திலிருந்து இவள் எதுக்கு இங்கே வரவேண்டும்?

    ஏங்க்கா உனக்கு சிரமம்?

    இதிலென்ன சிரமம்! நீ தனியாய் இருக்காய்! உன்னை பாத்துக்கச் சொல்லி அம்மா லட்டர் மேலே லட்டர் போடறாங்க, உனக்கு என்னை விட்டா வேறு யாரு இருக்கா! வீட்டுக்கு வான்னாலும் வரமாட்டேங்கிறாய்!

    முந்தா நேத்துதானே வந்தேன்!

    ஹோட்டல்ல சாப்பிட்டு ரொம்ப இளைச்சுட்டே நீ!

    ரெண்டு நாள்லயா...?

    அவள் அவனது கிண்டலை பொருட்படுத்தாமல், சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சுட்டே போலிருக்கு!

    இல்லேக்கா,

    அப்புறம்... இந்த புகை?

    அது வந்து தீபம் ஏத்த!

    அப்புறம் சிகரெட் டப்பா?

    அது எப்பயாவது ரூம்மேட்... என்று பின்பக்கம் பார்க்க, அங்கிருந்து அரசு உதைப்பேன் என்று சைகை காண்பித்தான்.

    விடுக்கா! மாமா வந்தாரா?

    அவரு எங்கே! போனா ஒரே போக்கு! ஒழுங்கா வீட்டுக்கு வரதில்லை. கேட்டா எஸ்டேட்லெ ஆள் இல்லையாம் இவரு இல்லேன்னா ஆளுங்க ஏமாத்திருவாங்கன்னு முதலாளி லீவு கொடுக்க மாட்டேங்கிறாராம். ஹும்! இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த பிரிவோ தெரியலே!

    "எதுக்கு பிரச்சனை நீயும் பேசாம மூணாறுக்குப்

    Enjoying the preview?
    Page 1 of 1