Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kuttra Paththirikai
Kuttra Paththirikai
Kuttra Paththirikai
Ebook173 pages1 hour

Kuttra Paththirikai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateFeb 1, 2020
ISBN9781043466893
Kuttra Paththirikai

Read more from N.C.Mohandass

Related to Kuttra Paththirikai

Related ebooks

Related categories

Reviews for Kuttra Paththirikai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kuttra Paththirikai - N.C.Mohandass

    விக்டர்

    அமெரிக்காவில் பிறந்த விக்டருக்கு கட்டான உடலும், களையான முகமும், அந்த முப்பது வயதுக்காரனின் ஒரே வீக்னஸ் சோம்பேறித்தனம்.

    அவன் குனிந்து நிமிர்ந்து வேலை செய்வது இல்லை. இருந்த இடத்தில் இருந்தே பணம் சம்பாதிக்கணும், உடல் நோகாமல் பெரிய மனுஷனாகணும் என்கிற கொள்கையில் இருந்தான்.

    பெற்றோரின் சம்பாத்தியத்தைக் காலி செய்த பின்னால், அக்கம் பக்கம் கடன் வாங்கி வெளியே தலைகாட்ட முடியாத நிலைமை. பரம்பரை சொத்தையே தின்று தீர்த்தவனுக்கு கடன் கொடுத்தால் எங்கே திரும்பி வரப்போகிறது என்று எல்லோரும் ஒதுங்கினர். உள்ளூரில் வாழ வழி இல்லை என்று தெரிந்ததும் விக்டர் 1927 மே மாதத்தில் இங்கிலாந்து பயணமானான்.

    இங்கிலாந்தில் வாடகை வீடு தேடிப்போன முதல் வீட்டில் எஜமானி, யார் என்று விசாரிக்காமல் வீடு கொடுத்தாள். அவனது கண்களைப் பார்த்தவள் அப்படியே குழைய ஆரம்பித்தாள்.

    அவனது தோள்களையே பார்த்துக் கொண்டிருந்தவள் அட்வான்ஸும் கேட்கவில்லை. வசதியான அந்த வீட்டிற்கு மிகக் குறைந்த வாடகைதான் கேட்டாள். அவனுக்கு எதுவும் புரியவில்லை.

    அங்கிருந்து பக்கத்திலிருந்த கடைக்கு வந்தான். வேலை செய்யும் பெண் அவனையே பார்த்தாள், உருகினாள். வாங்க வந்த துணிகள் பற்றியே இன்னும் அவன் சொல்லவில்லை. அவனுக்கு அளவான துணிகளைப் பேக்ப் பண்ணி எடுத்துப் போங்கள் என்றாள்.

    எனக்கு ஒரு டிரஸ் போதும்

    பரவாயில்லை, எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவனது கண்களை மயக்கத்துடன் பார்த்தாள்.

    என்னிடம் பணமில்லை.

    அதனாலென்ன - நானே பில் கொடுத்து விடுகிறேன் என்று தன் கணக்கில் எழுதினாள். அவனுக்கு எதுவும் விளங்கவில்லை நடப்பதெல்லாம் கனவோ என்று தோன்றிற்று.

    அவன் தெருவில் நடந்தாலே எதிர்ப்படும் பெண்கள் மிகத் துல்லியமாய் வசீகரிக்கப்பட்டனர். வலிய வந்து உதவி செய்ய முன் வந்தனர்.

    அவனையும் அறியாமல் அவனுக்குள் ஒரு ஒளியும் புத்துணர்ச்சியும் கிடைத்திருந்தது. தனக்கு என்ன நடந்தது? - எப்படி அது சம்பவித்தது என்று அவனுக்கே தெரியவில்லை.

    கண்ணாடியில் தன் கண்களைப் பார்த்தால் அவனுக்கே மயக்கம் வந்து விடும் அளவிற்கு அவற்றில் ஒரு பிரகாசம் ஏற்பட்டிருந்தது!

    பார்க்கில் ஒரு சமயம், பெண் ஒருத்தி பூ கொடுத்து கிளாட்டு மீட் யூ... என்று பேச்சை ஆரம்பித்தவள் அப்படியே மயங்கிப் போய் ஐ லவ் யூ என்று விக்டரை வெறிக்க வெறிக்கப் பார்த்தாள்.

    நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

    எதுவுமில்லை, வேலை தேடிக்கொண்டிருக்கிறேன்

    அப்போ வருமானம்?

    இல்லை.

    அதற்காகக் கவலைப்பட வேண்டாம். உங்கள் செலவுகளை நான் ஏற்கிறேன் என்று சொல்லிய மறுநாளே செக்கையும் அனுப்பி வைத்தாள்.

    உலகத்தில் இப்படிக்கூட நடக்குமா? என்று அவனுக்கு ஆச்சர்யம். நடப்பது எதையும் அவனால் நம்பவே முடியவில்லை. ஒரு சோம்பேறிக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? சோம்பேறி செயல்படத் தொடங்கினான் - ஆனால் தவறாக.

    ‘கேட்காமலேயே எல்லாம் கிடைக்கிறது. அப்புறம் ஏன் வேலை தேட வேண்டும் -? ஒருத்தியா நம்மிடம் மயங்குகிறாள்? எல்லோரும்தானே... ஒருத்தியைக் காதலித்து அவளிடம் ஏன் வாழ வேண்டும்? தினமும் ஒருத்தி... வித விதமாய் அனுபவிப்போம்.’

    லிவர்பூல் பகுதியில் ஒரே குடும்பத்தில் நான்கு அக்கா தங்கைகள் இருந்தார்கள். அவர்கள் நான்கு பேர்களையுமே ஆசை வார்த்தைகளைக் கூறி வளைத்துப் போட்டான் விக்டர். ஒருவர் இல்லாதபோது மற்றவர்கள் வந்து வந்து மோதினர். அவன் எது பற்றியும் சிந்திக்கவில்லை. எதற்காகவும் கவலைப்படவில்லை.

    அவர்களது தாயின் நகைகளையே அபகரித்து, அவற்றை உருக்கி, புது நகையாக்கி கடைசி மகளுக்குப் பரிசாகக் கொடுத்தான்.

    அந்த விஷயம் பெளியே மூத்தவளுக்குத் தெரிந்துவிட அவள் விக்டரிடம், சீ, நீ இவ்வளவு மோசமானவனா? என்று திட்டினாள்.

    உன்னை நான் எவ்வளவு நம்பினேன்? எனக்கு ஆசை காட்டினதுபோல் என் தங்கையையும் மோசம் செய்திருக்கிறாய். உருப்படுவாயா?

    உன் தங்கையை நான் அழைக்கவில்லை. அவளாகத்தான் வந்தாள்.

    அவள்தான் சின்னப்பெண். விவரம் தெரியாமல் வந்தால் நீயும் உடனே உன் புத்தியைக் காட்டிவிடுவதா?

    என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? அவள்தான் விடாமல் வந்து மோதுகிறாள். தூங்கவிடாமல் படுத்துகிறாள்.

    அதுக்காக, என் தாயின் நகையையே திருடி அவளுக்குப் பரிசளிக்கணுமா?

    நான் என்ன செய்யட்டும்? அன்பின் அடையாளமாய் ஏதாவது பரிசு கொடுத்தாகணும் என்று பிடிவாதம் செய்தாள். பரிசு கொடுக்க நான் என்ன கொட்டியா வைத்திருக்கிறேன்.

    பாவி, நிச்சயமாய் நீ நரகத்திற்குத்தான் போவாய்.

    செத்தபிறதுதானே... அதைப் பிறகு பார்க்கலாம்.

    உன்னை மாதிரி அயோக்கியனும், பெண் பித்தர்களும் நாட்டில் உலவே கூடாது. உனது வசிய ரகசியத்தை வெளிப்படுத்துவேன்.

    ஓ, தாராளமாய் சொல், அத்தோடு என்னுடன் கூடிய உனது உறவும் கூட வெளிப்படும். அப்புறம் உன்னைக் கல்யாணம் செய்துக்க யார் முன்வருவார்கள் என்று பார்க்கிறேன்.

    விக்டரின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் மூத்தவளுக்கு மூச்சடைத்தது. அந்த மிரட்டலால் அவள் அடங்கிப் போனாள்.

    விக்டர் வெளியேறினான்.

    கென்னடி என்ற பெயரில் வேறு இடம் மாறினான். அலைஸ் என்பவள் அவனது காந்தப்பார்வையில் விபந்து, தன் வீட்டிலேயே தங்க வைத்துக் கொண்டாள்.

    அலைஸ் வேலைக்குப் போகும் சமயத்தில் விக்டர் தன் பார்வையால் அவளது தாயையும் மயக்க ஆரம்பித்தான்...

    இருவரும் மாற்றி மாற்றி அவனுக்குப் பணம் தந்தனர். அவனது அக்கௌண்ட் ஏறியது. அவர்களாகத் தந்தது போதாது என்று அவனாகப் பொய்க் கையெழுத்து போட்டு வேறு அவர்களது பணத்தைச் சுரண்ட ஆரம்பித்தான்.

    அது தெரிந்துவிட தாய், மகள் இருவருக்கும் அதிர்ச்சி. அவனை வீட்டை விட்டு விரட்டியடித்தனர்.

    அடுத்த சில மாதங்களுக்கு அவர்களின் பணம் அவனுக்குப் போதுமானதாக இருந்தது. அது தீர்ந்ததும் வேறு இடம் போக முயன்றான். ஆனால் அவனால் முடியவில்லை, ஏற்கனவே பார்த்த முகங்களில் ஏதேனும் ஒன்று தெரிந்து விடுகிறது. அவனால் சமாளிக்க முடியவில்லை. கடுமையான பணத்தேவை.

    1928 - அக்டோபரில் ஒருநாள்...

    அன்று காலையில் குளித்து முடித்த அலைஸ் தன் அறையில் மேக்கப் செய்து கொண்டு வேலைக்குப் போகத் தயாரானபோது சுவரேறிக் குதித்த விக்டர், அவளது தோளைத் தொட்டு கைகளை லேசாக கீழே இறக்கினான். திடுக்கிட்டுப் போய்த் திரும்பிய அலைஸ் விக்டரின் கண்களைப் பார்த்ததும் மயங்கிப் போனாள்.

    இருவரும் ஒன்றாக இருக்கும் அந்தச் சமயத்தில் அவளது தாய் தற்செயலாய் அங்கு வந்து கத்திக் கூப்பாடு போட - விக்டர் அவள் மேல் பாய்ந்தான். அவள் மேலும் கத்த... அவளது தொண்டையைக் கவ்வு... குரல்வளையை நெரித்து... அவளது உயிரை முடித்தான்.

    1929 பிப்ரவரி 3-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விக்டருக்கு எதிராக - அவனால் வஞ்சிக்கப்பட்ட பெண்கள் பட்டாளேமே வந்து சாட்சிகள் சொல்ல உடனே தீர்ப்பு சொல்லப்பட்டு, அப்போதே தூக்குத் தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.

    சங்க்

    "லியா, முடிவாக என்னதான் சொல்கிறாய்?"

    அதான் முன்பே சொல்லிட்டேனேப்பா, எனக்கு இங்கே இருக்கவே பிடிக்கலே.

    ஏன்?

    நான் ஸ்டேட்ஸில் படிக்கப் போகிறேன்.

    நீ எனது ஒரே மகள். நீயும் போய்விட்டால் அப்புறம் எனக்கு யார் இருக்கிறார்கள்?

    ஒரே மகள் என்று சொன்னால் மட்டும் போதுமா? என்னை கவனிக்கவும்... எனக்காக நேரம் ஒதுக்கவும் உங்களுக்கு எங்கே அவகாசம்? இருபத்திநாலு மணி நேரமும் பணம்... பணம்... பணம்தான் உங்களுக்குத் தேவை... பணப் பைத்தியம்.

    லியா, நீ ஒரு வார்த்தை சொல்? எல்லாவற்றையும் தூக்கி எறிஞ்சுடறேன்.

    வேண்டாம்ப்பா... எனக்காக உங்களை மாத்திக்க வேண்டாம். சம்பாதித்தனை இழக்கவும் வேண்டாம். அம்மா இறந்த பிறகு நான் அனாதை ஆயிட்டேன்... இப்படி சண்டை போட்ட லியா அமெரிக்க புறப்பட்டபோது அவளுக்கு வயது பதினாறு.

    லியாவின் தந்தை மாக்கா ஹாங்காங்கின் போர்த்துகீசியத் தீவில் பெரிய வியாபாரி. நிறையச் சொத்து சேர்த்திருந்த அவருக்கு அனுபவிக்கத்தான் கொடுத்து வைக்கவில்லை. திடீரென்று இறந்து போனார்.

    அதுவரை பூஸ்டன் பல்கலக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றிருந்த லியா, அப்பா இறந்த செய்தி கேட்டு பதறியடித்து ஹாங்காங் திரும்பினாள். தந்தை சம்பாதித்த சொத்துக்களை ஏற்றுக்கொள்ள அவளது மனது இடம் தரவில்லை. அவரையே வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டவளுக்கு, அவரது பணத்தை ஏற்கக் கூடாது என்ற சிந்தனை ஏற்பட்டது. தன் சொந்தச் செலவில் நகரில் ஒரு கலைக்கூடம் திறந்தாள். ஆனால் அது எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்புப் பெறவில்லை. மீண்டும் அமெரிக்காவுக்கே வந்து விட்டாள்.

    அங்கே வேலையில் சேர்ந்ததும் நிறையச் சம்பாதித்தாள். ஆனாலும் கூட மனத்திற்குள் ஒரு வெறுமை இருந்தது. அது அன்புக்கும், ஆதரவிற்குமான ஏக்கம்.

    அவளுக்கு இருந்த ஒரே வடிகால் அந்த அழகிய கடற்கரை. அவைகளை வெறித்துப் பார்க்கும் அவளுக்கு... அது பல விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருக்கும்.

    அந்தச் சமயத்தில் தான் சங்க் எனும் இளைஞனின் அறிமுகம் கிடைத்தது. அவனுக்கு குழந்தை முகம். எப்போதும் முகத்தில் புன்னகை. எப்படி ஒருவனால் 24 மணி நேரமும் சி... சி... சிரித்தபடியே இருக்க முடிகிறது. புன்னகை அவளை வசீகரித்தது. அந்த பள பளா... முகம் அவளுக்கு புத்துணர்ச்சியை எழுப்பியது...

    ஒரு சொந்தம் கிடைத்தது.

    பழகிய தொடக்க நாட்களில் அவனும் அவளுக்கு கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து கொண்டு கடலையே வெறிப்பான்.

    Enjoying the preview?
    Page 1 of 1