Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhalin Pidiyil...
Kaadhalin Pidiyil...
Kaadhalin Pidiyil...
Ebook127 pages46 minutes

Kaadhalin Pidiyil...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நரேந்திரன் - பவித்ரா இருவர்கள் காதலர்கள். இருவரின் குடும்பத்தாரின் சம்மதத்தோடு திருமணம் செய்ய முடிவு செய்த நேரத்தில், எதிர்பாராத விதமாக நரேந்திரன் இறந்துவிட்டதாக செய்தித்தாளில் வெளிவர, அதைக் கண்ட பவித்ரா மிகவும் அதிர்ச்சியடைகிறாள். இந்த மர்மத்திற்கான காரணம் என்ன? அதன்பின் நடந்த அதிர்ச்சியான சம்பவங்கள் என்ன? என்பதை வாசித்து அறிந்து கொள்வோம் வாருங்கள்...!

Languageதமிழ்
Release dateMar 23, 2024
ISBN6580155610860
Kaadhalin Pidiyil...

Read more from Lakshmi

Related to Kaadhalin Pidiyil...

Related ebooks

Reviews for Kaadhalin Pidiyil...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhalin Pidiyil... - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காதலின் பிடியில்...

    Kaadhalin Pidiyil...

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    1

    வீட்டிலேயே முடங்கிக்கொண்டு நடந்ததை நினைத்து தன்னையே சித்திரவதை செய்துகொள்வதை தடுத்துக்கத்தான் அண்ணா, அவளுக்கு அந்த வேலையை தேடித் தந்தார்.

    பி.ஏ. படிப்பிற்குப்பின் பவித்ரா வீட்டில் பொழுதை வீணாக்க விரும்பவில்லை.

    அருகிலிருந்த தட்டெழுத்து நிறுவனத்தில் சேர்ந்து தட்டெழுத்து, குறுக்கெழுத்து இரண்டையும் பயின்று தேர்ந்துவிட்டிருந்தாள். அது இப்போது உதவியாக இருந்தது.

    வேதா அண்ட் கோ கட்டட சாமான்கள் விற்பனைப்பகுதியில் அவள் ஒரு டைப்பிஸ்டாக வேலைக்கமர்ந்துவிட்டிருந்தாள்.

    மாதம் நூற்றைம்பது ரூபாய் சம்பளம். பல துளிகள் பெருவெள்ளம் என்ற கதையாக குடும்பத்தை நிர்வகிக்கப் பாடுபட்ட அண்ணிக்கு அது கொஞ்சம் உதவியது என்றே கூறவேண்டும்.

    நகரத்திலே நெருக்கமான தெருவொன்றின் குறுக்கே ஓடிய சிறு சந்துக்குள் இருந்த வேதா அண்ட் கோ, வெளிப்பார்வைக்கு காரைப்பூச்சு இடிந்து, கற்களை இங்கும் அங்கும் காட்டிக்கொண்டிருந்ததொரு பழங்காலத்து கட்டடமாகத்தான் இருந்தது. ஆனால் உள்ளே நுழைந்தால்?

    வாங்கிய பொருட்களை லாரி, ஆட்டோ ரிக்ஷா என்று பல வாகனங்களில் ஏற்றிக்கொண்டு வளைய வரும் மனிதப்புழக்கம் நிறைந்த கட்டட காண்டிராக்டர்களிடையே மிகப் பிரபலமானதொரு நிறுவனம்.

    தலைமைக்கணக்கருடன் கூட சதா ஓயாது ஒலித்த டைப் இயந்திரங்களுடன் உட்கார்ந்திருந்த பத்து டைப்பிஸ்டுகளில் அவளும் ஒருத்தி. ஜனப்புழக்கம் எப்படி அங்கு அதிகமோ அதைப்போல வம்பு பேசும் பழக்கமும் ஓரளவு ஊழியர்களிடையே அதிகம் என்பதை அவள் சிலநாட்களில் புரிந்துகொண்டிருந்தாள்.

    அவளைப் பற்றிய கிசுகிசு அலுவலர்களிடையே, ஆபீஸ் பையன்வரை பரவிவிட்டிருந்தது.

    அவள் என்னவோ கொலைக்குற்றம் செய்துவிட்டவள் போல சக ஊழியர்கள் அவளைப் பார்த்த பார்வை?

    எனக்கு இந்த வேலை வேண்டாம் என்று அதை உதறிவிட்டு வெளியேறி விடவேண்டும் என்று அவள் பலமுறை தவித்தாள்.

    நாற்பத்தைந்து வயதிலேயே நடை தள்ளாடி, பொறுப்பு முழுவதும் சுமந்த சுவடு முகத்திலே சுருக்கங்களாகத் தெரிய, நரை பரவத் தொடங்கிவிட்ட தலைமுடியைக் கோதிக்கொண்டு அண்ணா சிவநேசன், ஸ்கூட்டரில் இருந்து இறங்கி வீட்டுக்குள் வந்ததும் ‘அப்பாடா’ என்று ஒரு மூச்சுடன் சாய்வு நாற்காலியில் விழுவதைப் பார்த்து அவள் மனம் இரக்க வசப்பட்டது உண்மை.

    மூன்று தங்கைகளையும் வாழவைக்க வேண்டியது உன் பொறுப்பு என்பதுபோல, அண்ணன் சிவநேசனுக்கு திருமணம் ஆன உடனேயே பெற்றோர்கள் கண்களை மூடிவிட்டனர்.

    பாவம் அண்ணி பூரணி. வலது காலை எடுத்து வைத்ததுமே பாறாங்கல்லாக பெரும் சுமையை ஏற்கவேண்டியதொரு ரெடிமேட் குடும்பத்திலே வந்து அகப்பட்டுக்கொண்டுவிட்டாள்.

    அண்ணன் சிவனேசன் ஒரு உயர் மட்டத்து அதிகாரிதான். ஒரு பிரபல என்ஜினியரிங் கம்பெனியில் உதவி என்ஜினியராக ஒரு பகுதியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். கைநிறைய சம்பளம் வாங்கினார். மூன்று பெண்கள் கல்யாணத்திற்கு நிற்கும்போது அவரது சம்பாத்தியம் நிறக்கவில்லை.

    எப்பொழுதும் அவர்கள் பற்றாக்குறையில் திண்டாடினார்கள். கிராமத்தில் இருந்த வீட்டை விற்று ஒரு நாள் சொந்த வீட்டுக்காரனாகலாம் என்று ஆசையுடன் அடையாற்றில் வாங்கிப்போட்ட பூமியை விற்று, கடன் வாங்கி மனைவியின் சில நகைகளை விற்று, மூத்த தங்கைகள் இருவரையும் எப்படியோ தக்க இடத்தில் கல்யாணம் செய்துகொடுத்து தலை தப்பிக்கொண்டார். மூன்றாவது தங்கை பவித்ராவின் கல்யாணம் அண்ணனுக்கு ஒரு பெரும் சுமையாக இருக்கவில்லை.

    அது ஒரு காதல் கல்யாணமாக அமைந்துவிட்டதால் வரதட்சிணை சீர் என்ற விவகாரங்கள் அடிபட்டுப்போயின.

    அந்தக் காதல் விஷயமும் பிரச்சனைக்குரியதாக இல்லாது... ஜாதி, மதத் தகராறுகளைக் கிளப்பாது, பெரியோர்கள் பார்த்து நிச்சயித்த கல்யாணம்போல... அமைந்துவிட்டதைப் பற்றி அண்ணன் பெருமைப்பட்டுக்கொண்டார்.

    காதல்னுட்டு பவித்ரா யாரையோ பிடிச்சுக்கொண்டு வந்து நிறுத்திடலை. பையன் பார்க்க நல்லா இருக்கிறான். எல்லாம் நம் இனம். கை நிறைய சம்பாதிக்கிறான். என்னைப்போல அவனும் என்ஜினியருக்குப் படித்தவன்.

    இந்த பவித்ரா டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டுக்குத் தானே போய்வந்தாள்... இவள் எப்படி?

    காதல் பிடியில் சிக்குண்டாள். இவனை எங்கே சந்தித்தாள்...? என்றெல்லாம் என்கிட்டே கேட்காதே. உன் நாத்திகிட்ட ரகசியமா கேளு... என் தங்கைக்கு அமையப்போற புக்ககம்கூட வெகுதொலைவில் இல்லை... மீட்டர் தூரத்திலே உள்ள மயூரா காலனியில் இரண்டாம் தெரு, ஏழாம் நெம்பர்...

    வீடு சொந்தமா? அண்ணி ஆவலுடன் கேட்டாள்.

    "வீடு வாங்கணும்னு ஆசை இருக்கு. நேரம் வரணும். இப்போ இருக்கிறது வாடகை வீடு. அம்மாவுக்கு ஒரே பிள்ளை... அதனால் மற்ற பிரச்சனை ஏதும் கிடையாது. பாவம் அந்த அம்மாள் மகனைப் படிக்கவைத்து ஆளாக்க ரொம்ப பாடுபட்டுவிட்டாங்களாம்.

    அதிகம் படிக்கலை. அதனாலே அலுவலக உத்யோகத்தை தேடமுடியலை. ஆனாலும் கெட்டிக்காரி. வீட்டோட தையல்கடை வச்சு... அதை நல்லாவே நடத்தி குடும்பத்தை சமாளிச்சுக்கிட்டாளாம். பையன் தலையெடுத்த பிறகு... அந்த வேலையை விட்டுவிட சொல்லிட்டானாமே... கண்பார்வை கொஞ்சம் மந்தமாகிட்டு வந்ததாம். அதோட முதுகில் வலி வேற ஆரம்பிச்சுடுச்சாம். போதும் இந்த வேலைன்னு அவன் தடுத்து, வாங்கிப்போட்டிருந்த மிஷினைக்கூட வித்துட்டானாம்."

    தாய்க்கும் பிள்ளைக்கும் செலவு அதிகமாகாதே. உங்களைப்போல அவனும் ஸ்கூட்டர் வச்சிருக்கான்போல இருக்கு.

    திடீரென்று தன் நினைவிலிருந்து விழித்துக்கொண்டாள். தொண்டையை துக்கம் கல் உருண்டையாக அமுக்கி வேதனை செய்தது.

    ஒருசில நாட்களில் மறக்கக்கூடிய துயரமா அது... உகும்... அவளைப்பற்றி பலர் தங்களுக்குள் ரகசியமாகப் பேசிக்கொள்வதை அவள் அறிவாள். அவளை வெறுத்துப் பார்ப்பதை உணர்வாள். ஆனால் வேண்டுமென்றே யாரும் அவள் காதுபட மனம் நோக எதுவும் அன்றுவரை சொன்னதில்லை.

    புதிதாக வேலையில் சேர்ந்த உதவி கணக்கர் துளசிக்கு வாய் அதிகம். முப்பது வயதைத் தாண்டியவள். முப்பது வரன்களால் ஒதுக்கப்பட்டுவிட்டோம் என்ற ஆத்திரம் போலும்.

    அத்தனை துயரத்திலும் அழகுப் பிம்பமாக இருந்த பவித்ராவை அவளுக்கு முதல் பார்வையிலேயே பிடிக்கவில்லை.

    உன் பேர் என்ன? பவித்ராவா? உனக்கு இருபத்தி நாலு வயசாகிறதா? இருபது வயசுதான் இருக்கும்னு கணிப்பு செய்தேன். இந்த நீலவண்ண நைலானை எங்கே வாங்கினே? உங்க அண்ணாவுக்குத் தெரிஞ்சவர் சிங்கப்பூரிலிருந்து வாங்கிட்டு வந்து கொடுத்தாரா? புழுபோல துவண்டு உடல்மேலே ஒட்டிக்குது. நீ ஓங்கி ஒடிய இருக்கிறதுக்கு ரொம்ப பாந்தமா இருக்கு.

    தன் உடல் எடை சமீபத்தில் வெகுவாக கூடிவிட்டிருப்பதை எண்ணி வெகுண்டு பொறாமையுடன் விசாரித்தாள்.

    வேண்டுமென்றே அவளது வேலையில் பல தடவை தவறுகள் கண்டுகளித்தாள்.

    அன்று பகல் உணவு நேரத்தின்போது பெண்கள் உபயோகத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் அவர்கள் அனைவரும் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த சமயந்தான் துளசி வேண்டுமென்றே ஆரம்பித்தாள்.

    அண்ணி பூரணி கட்டிக்கொடுத்த எலுமிச்சம்பழ சாதத்தை சாப்பிட்டுவிட்டு கையுடன் கொண்டுவந்த பிளாஸ்க்கிலிருந்த காப்பியை குடித்துவிட்டு, டிபன் டப்பாவையும், பிளாஸ்க்கையும் கழுவ, பீங்கான் அமைக்கப்பட்டிருந்த அடுத்த அறைக்குள் புகுந்தாள் பவித்ரா.

    அந்த அறை அப்படி ஒன்றும் தொலைதூரத்தில் இருக்கவில்லை.

    துளசி வேண்டுமென்றே உரத்தகுரலில், தன் பக்கத்தில்

    Enjoying the preview?
    Page 1 of 1