Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nirka Neramillai
Nirka Neramillai
Nirka Neramillai
Ebook60 pages22 minutes

Nirka Neramillai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பொன்னிற மேனியும், காந்தம் போன்ற கண்களும் கொண்டவள் ஷண்பகா. இத்தனை அழகையும் தன்னுள் அடக்கியவளுக்கு கண்திருஷ்டி போல ஆண்டவன் ஒரு குறையை கொடுத்துட்டான். இந்த நிலையில் அவள் அனுபவித்த கஷ்டங்கள் என்ன? அதன் பின் அவளுக்கு நடந்தது என்ன? என்பதை காண வாருங்கள் வாசிப்போம்...!

Languageதமிழ்
Release dateNov 14, 2023
ISBN6580155608813
Nirka Neramillai

Read more from Lakshmi

Related to Nirka Neramillai

Related ebooks

Reviews for Nirka Neramillai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nirka Neramillai - Lakshmi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நிற்க நேரமில்லை

    Nirka Neramillai

    Author:

    லக்ஷ்மி

    Lakshmi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    1

    சிவன்கோயில் முன் வாயிலில், நாதசுர ஒலி உரக்கக் கேட்டது. கூடவே கெட்டிமேளம் கடகடவென்று இடியோசைபோல் முழங்கியது.

    கூடத்துத் தூண்மீது சாய்ந்தபடி, நின்றிருந்த ஷண்பகா, தன் காதுகளைக் கரங்களால் இருக மூடிக்கொண்டாள். அவள் நெஞ்சத்தில் எழுப்பி இருந்த இன்பக் கனவுக் கோட்டையை, பொடிப் பொடியாகச் சிதறடித்துவிடும் அந்தக் கெட்டிமேள ஓசையைக் கேட்கவிடாதபடி தடைசெய்ய முயன்று கொண்டிருந்தாள். ஆனால், அவள் மனம் ஏற்கெனவே ஏமாற்றத்தால் சுக்கு நூறாகிப் போய்விட்டிருந்ததே!

    கண்களில் கசியும் நீரை வெளியே வழியவிடாமல் உதடுகளைக் கடித்து உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டாள். இத்தனை நேரம் அந்தக் கோடிவீட்டுக் குப்புசாமி மகள் சுமதிக்கும், அந்த ஆஸ்திரேலியா மாப்பிள்ளைக்கும் திருமணம் முடிந்துவிட்டிருக்கும். தாலி கட்டிய மறுநாளே அவன் வெளிநாடு பறந்து செல்வான். சுமதியும் ஓரிரு மாதங்களில் பறந்து சென்று...

    ஷண்பகா இலேசாகப் பெருமூச்செறிந்தாள். மனம் உள்ளூரப் பொறுமியது, குமுறியது. பொறாமையால் அல்ல... நம்பிக்கையுடன் அவள் நாள்தோறும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஓர் ஆசை, கனவு கண்டு கொண்டிருந்த ஒரு வாய்ப்பு, கடந்த ஒருவருட காலமாக அதையே எண்ணி எண்ணி, அல்லும் பகலும் கற்பனையில் திளைத்துக் கொண்டிருந்த நினைவு, வெறும் பகற்கனவாய் முடிந்துவிட்டது. கிடைத்த சந்தர்ப்பமும் கைநழுவிப் போய்விட்டது!

    இப்படியே தூணைப் பிடிச்சுக்கிட்டு நின்னுட்டிருந்தா எல்லாம் சரியாயிடும்கிற நினைப்பா? போ! போ! எல்லாத்துக்கும் குடுப்பினை வேணும் சின்னம்மா. புவனேச்வரி உறுமினாள். கனமான உடலும் கூடவே ஆடியது.

    கூடத்து ஈஸிசேரில் சாய்ந்தபடி படுத்துக்கிடந்த அவளது தம்பி சுந்தரம், எதுக்கு அக்கா பாவம், அந்தப் பொண்ணைத் திட்டறே? நடந்தது நடந்துபோச்சு. அவளுக்குன்னு ஒருத்தன் பிறந்திருப்பான். கவலைப்படாதே என்றார் இரக்கத்துடன்.

    நீ சொல்லிட்டே, நான் கவலைப்படாம வேற யார் படுவாங்க, அம்மா இல்லாத பெண்ணாச்சே. சித்திக்காரி கொடுமை செய்தான்னு வரக்கூடாதுன்னு பார்த்தேன். ஹும் இவ அதிஷ்டம்தான் தெரிஞ்சு கிடக்குதே... அவளுக்கு மூச்சு வாங்கியது.

    புலம்பியபடி சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள் சின்னம்மா. அடிவயிற்றிலிருந்து அலை அலையாக எழும் கசப்பை விழுங்க முயன்றவளாய், வேகமாகக் கொல்லைப் பக்கம் ஓடிச்சென்றாள் ஷண்பகா.

    அவளுக்கு மெத்தப் பிடித்த அந்த மகிழ மரத்தடியில் தோய்ப்பதற்காகப் போட்டிருக்கும் துணி துவைக்கும் கல்மீது அமர்ந்தவள் அதற்குமேல் அடக்க மாட்டாதவளாய் விம்மி அழ ஆரம்பித்தாள்.

    ‘கடவுளே! உன் சந்நிதியில் தினமும் வந்து இறைஞ்சி நின்றேனே? எனக்கு இப்படி ஓர் அவமானத்தைப் பரிசாகக் கொடுத்துவிட்டாயே. ஊரில் இனி எப்படி மற்றவர் முன்னிலையில் தலைகாட்ட முடியும் இனி எப்படி நடமாட முடியும்? எப்படி மீண்டும் கோவில், குளம் என்று தலைகாட்ட முடியும்?’

    ஷண்பகா ரொம்ப அதிஷ்டக்காரி. அவள் அழகுக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து மாப்பிள்ளை பறந்து வரப்போறானாம் என்று ஊரார் அதிசயித்த காலம் மாறி இப்போது...

    ஷண்பகா கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். அண்ணாந்து பார்த்தவளின் கண்களில் அந்த மகிழ மரத்து மணமிகுந்த பூக்கள் தென்பட்டன.

    "பெண் என்பவள் மகிழம்பூ மாதிரிம்மா. அது வாடிப்போனாக்கூட எத்தனை மணம் வீசுது பாரு. அதுபோல

    Enjoying the preview?
    Page 1 of 1