Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaansudar
Vaansudar
Vaansudar
Ebook363 pages2 hours

Vaansudar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எனக்குத் தெரிந்த புகழ்பெற்ற நடிகை ஒருவருக்குத் தன் மகளையும் அப்படி ஒரு நடிகையாக்கி விட மிகவும் ஆசை. ஆனால் அந்தப் பெண்ணுக்கோ அதில் ஈடுபாடே இல்லை. தாய்க்குக் கிடைக்காத நிம்மதியான குடும்ப வாழ்க்கையும், கணவனின் ஒருமித்த காதலும் தனக்காவது கிடைக்க வேண்டும் என்று மிகவும் விரும்பினாள். மேலே படித்து டாக்டர் ஆகவேண்டும் என்றும் ஒரு ஆசை உண்டு. ஆனால் அவளுடைய விருப்பம் ஈடேறவில்லை, புகழ் பெற்ற நடிகையாக மட்டுமே அவள் உயர முடிந்தது. ஆனால் அவளுடைய மனத்தில் தான் விரும்பியதை அடைய முடியவில்லையே என்ற ஏக்கம் தணிந்த பாடில்லை, எனக்குத் தெரிந்த இந்த பின்னணியே 'வான்சுடர்' நாவலுக்கு அடிப்படை.

நாவல் எழுதியபோது எனக்கு இளைய தலைமுறையினரிடமிருந்து நிறைய கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. முதலில் சுரேனும், பிறகு ராதாவும் மறைந்து போனபோது, தங்களுக்கு மனத்தளவில் நெருங்கிய இருவரை பிரிந்து விட்ட மனவருத்தத்தில், என்னிடம் சண்டைபோட்ட வாலிபர்கள், பெண்கள் பலர் உண்டு, ஆனால் இந்த நாவல் அவர்களுடைய மனத்தைத் தொடும் வீதமாக அமைந்ததற்குக் காரணமே, இப்படி எழுந்த ஒரு அளவுகடந்த அனுதாபம் தான் என்பது என் கருத்து. இந்த நாவலின் இன்னொரு முக்கிய அம்சம், பள்ளிகூடப் படிப்பு மட்டுமே படித்து நின்றுவிட்ட இன்னும் பச்சை முற்றாத ஒரு இளம்பெண், கதாநாயகியாக அமைந்ததுதான். அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் மன இயல்புகளையும், குழந்தை ஆசைகளையும், சிறு விருப்பு வெறுப்புகளையும் நான் அங்கங்கே வருணித்தபோது வாசகர்கள் ராதாவின் இயற்கையான அமைப்பைப் பெரிதும் பாராட்டினார்கள். இந்த வெற்றிக்குக் காரணம், என்னிடம் நெருங்கிப் பழகிய ஒரு நபரின், பள்ளிக்கூடப் பருவத்திலிருந்த, மகளை நான் அண்மையில் இருந்து கூர்ந்து கவனிக்க நேர்ந்ததுதான். அவளுடைய பண்புகளையும், இயல்பையும், அவள் என்னுடன் பழகிய நேரங்களில் கவனித்து எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதில் என்னிடம் அவளுக்குச் சிறிது கோபம் கூட உண்டு.

எப்படி இந்த அனுபவங்ளையெல்லாம் சேர்த்து நாவலாக எழுதினேன் என்று கேட்டால் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை அந்த எல்லா ஞாபகங்களும் உள்ளே அரும்பிக் கொண்டிருந்தன.

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580127504465
Vaansudar

Read more from Lakshmi Subramaniam

Related to Vaansudar

Related ebooks

Reviews for Vaansudar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaansudar - Lakshmi Subramaniam

    http://www.pustaka.co.in

    வான்சுடர்

    Vaansudar

    Author:

    எஸ். லட்சுமி சுப்பிரமணியம்

    S. Lakshmi Subramaniam

    For more books

    http://pustaka.co.in/home/author/lakshmi-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    முன்னுரை

    எனக்குத் தெரிந்த புகழ்பெற்ற நடிகை ஒருவருக்குத் தன் மகளையும் அப்படி ஒரு நடிகையாக்கி விட மிகவும் ஆசை. ஆனால் அந்தப் பெண்ணுக்கோ அதில் ஈடுபாடே இல்லை. தாய்க்குக் கிடைக்காத நிம்மதியான குடும்ப வாழ்க்கையும், கணவனின் ஒருமித்த காதலும் தனக்காவது கிடைக்க வேண்டும் என்று மிகவும் விரும்பினாள். மேலே படித்து டாக்டர் ஆகவேண்டும் என்றும் ஒரு ஆசை உண்டு. ஆனால் அவளுடைய விருப்பம் ஈடேறவில்லை, புகழ் பெற்ற நடிகையாக மட்டுமே அவள் உயர முடிந்தது. ஆனால் அவளுடைய மனத்தில் தான் விரும்பியதை அடைய முடியவில்லையே என்ற ஏக்கம் தணிந்த பாடில்லை, எனக்குத் தெரிந்த இந்த பின்னணியே 'வான்சுடர்' நாவலுக்கு அடிப்படை.

    நாவல் எழுதியபோது எனக்கு இளைய தலைமுறையினரிடமிருந்து நிறைய கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. முதலில் சுரேனும், பிறகு ராதாவும் மறைந்து போனபோது, தங்களுக்கு மனத்தளவில் நெருங்கிய இருவரை பிரிந்து விட்ட மனவருத்தத்தில், என்னிடம் சண்டைபோட்ட வாலிபர்கள், பெண்கள் பலர் உண்டு, ஆனால் இந்த நாவல் அவர்களுடைய மனத்தைத் தொடும் வீதமாக அமைந்ததற்குக் காரணமே, இப்படி எழுந்த ஒரு அளவுகடந்த அனுதாபம் தான் என்பது என் கருத்து.

    இந்த நாவலின் இன்னொரு முக்கிய அம்சம், பள்ளிகூடப் படிப்பு மட்டுமே படித்து நின்றுவிட்ட இன்னும் பச்சை முற்றாத ஒரு இளம்பெண், கதாநாயகியாக அமைந்ததுதான். அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் மன இயல்புகளையும், குழந்தை ஆசைகளையும், சிறு விருப்பு வெறுப்புகளையும் நான் அங்கங்கே வருணித்தபோது வாசகர்கள் ராதாவின் இயற்கையான அமைப்பைப் பெரிதும் பாராட்டினார்கள். இந்த வெற்றிக்குக் காரணம், என்னிடம் நெருங்கிப் பழகிய ஒரு நபரின், பள்ளிக்கூடப் பருவத்திலிருந்த, மகளை நான் அண்மையில் இருந்து கூர்ந்து கவனிக்க நேர்ந்ததுதான். அவளுடைய பண்புகளையும், இயல்பையும், அவள் என்னுடன் பழகிய நேரங்களில் கவனித்து எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதில் என்னிடம் அவளுக்குச் சிறிது கோபம் கூட உண்டு.

    எப்படி இந்த அனுபவங்ளையெல்லாம் சேர்த்து நாவலாக எழுதினேன் என்று கேட்டால் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை அந்த எல்லா ஞாபகங்களும் உள்ளே அரும்பிக் கொண்டிருந்தன.

    1

    காரில் ஏறி உட்கார்ந்ததும் ராதா தன் கன்னத்தை ஒருமுறை தொட்டுப் பார்த்துக் கொண்டாள். அம்மாவின் ஞாபகம் வந்ததும் கன்னம் புன்னகையில் குழிந்தது, அந்த இடத்தில் ரோஜா நிறமாய் சிவப்புத் திட்டுப் பூத்தது. அம்மாவின் குரல் காதில் ஒலிப்பது போலத் தோன்றியது.

    ஹாப்பி பர்த் டே டு யூ!

    அம்மா அவளைக் கிட்டே இழுத்து ஆசையுடன் கன்னத் தில் ஒரு முத்தம் கொடுத்தாள். ராதா அந்த மார்பின் மிருதுவில் முழ்கியே போனாள். அவள் இதயம் அந்த அணைப்பில் அழுந்தித் துடித்தது.

    எதிரேயிருந்த ஆள் உயர நிலைக்கண்ணாடியில் ராதா தன்னையும் தாயையும் பார்த்துக் கொண்டாள். அம்மா இந்த வயதிலும் எவ்வளவு அழகாக இருக்கிறாள்? பதினான்காவது வயதில் அடியெடுத்து வைக்கும் தனக்கும், நாற்பதைக் கடந்துவிட்ட அம்மாவுக்கும் கொஞ்சம் தோற்ற மாறுதல் மட்டும்தான் இடைவெளியாகத் தெரிந்தது. சொல்லப் போனால் அம்மாவின் அழகில் இருந்த நிறைவு அவளுக்கிள்ளை, மனசைப் பேச்சாகவும் பார்வையாகவும் கொட்டத் தெரியவில்லை, இரைந்து தான் சிரிக்க முடிகிறது. அம்மாவின் அழகான வெண்முத்துப் பற்கள்...

    அம்மாவின் இதழ்கள் பதிந்த கன்னத்தில் இன்றும் அந்த அன்பின் முத்திரை இதமாகத் தெரிவது போல இருந்தது, நெருங்கிய அவள் முகத்தில் கண்ணுக்குள் கண்ணாகத் தெரிந்த பார்வையில், தந்தியுள் உறைந்து கிடக்கும் ஸ்வரம் போல எத்தனையோ உணர்ச்சிகள்! அம்மாவிடம் அவளுக்கும் எவ்வளவு ஆசை! எல்லோரும் குழந்தைகளிடம் அப்படித் தான் இருப்பார்களா? அல்லது அவளுக்குக் கனகமே தாயும் தந்தையுமாக ஒன்றிவிட்டதால், அப்படி அன்பை அள்ளிக் கொட்டுகிறாளா?

    கார் நின்றது. கான்வெண்ட் பள்ளிக்கூடம், பெண்கள் கூட்டம், பெரிய சாக்லெட் பெட்டியைக் கையில் பெருமையுடன் தூக்கிக் கொண்டு இறங்கினாள். டிரைவர் புத்தகப் பையை எடுத்துக் கொண்டு பின்னால் வந்தான், சற்றுத் தள்ளிக் கூட்டமாக நின்று கொண்டிருந்த நாலைந்து பெண்கள் சட்டென்று திரும்பிப் பார்த்தார்கள், சொல்லி வைத்தாற் போல அத்தனை முகங்களிலும் அரும்பு ஒளி நிழல் தட்டிற்று. கைகள் உயர்ந்து அலைந்தன:

    ஓ, ஹாப்பி பர்த் டே ராதா!

    ஒரு பெண் ஓடி வந்து அவள் தோளை அணைத்துக் கொண்டாள். இன்னொரு பெண் புது உடையில் ஒரு ‘நியூ பிஞ்சும்’ கொடுத்தாள். சற்று வளர்ந்த பெண் டெய்லி, அவள் ராதாவை இடையில் கைலாகு கொடுத்து உயரே தூக்கியே இறக்கிவிட்டாள். சிரிப்பு பூ மழையாகப் பொழிந்தது.

    அப்படி எல்லோரும் சேர்ந்தாற்போல் மகிழ்ச்சியைக்காட்டிய போது, மனம் ஓர் இன்பத் திகைப்பில் மயங்கிற்று. உடலின் உள்ளுணர்வில் ரகசிய கனியாக மாறும் கிளர்ச்சி, வெட்கத்தில் முகம் கவிழ சாக்லெட் பெட்டியைப் பிரித்தாள், விரல்கள் குவியல்களாக அள்ளி எடுத்தன.

    எடுத்துக்குங்க. பையில் இன்னும் இரண்டு பெட்டி இருக்கிறது.

    ‘கலகல’வென்று சிரிப்பு கழித்துக் கோலம் போட்டது. அதன் ஒளியாட்டத்தில் அந்த அறையே குலுங்கியது. நான்கு பேருமாகச் சேர்ந்து அவளைத் தூக்கிக் கொண்டார்கள், கிண்டலும், சிரிப்பும், செல்லமான முதுகுத் தட்டலும் சூழ்ந்து வர அவள் வகுப்பிற்குள் எடுத்துச் சென்றார்கள். கை தட்டல் நீர்வீழ்ச்சியின் சரிவாய் அவர்களை வரவேற்றது வெட்கத்தில் முகம் குழம்ப ராதா இரு கைகளாலும் கண்களை மூடிக்கொண்டாள், சுற்றிலும் மொய்த்த மாணவிகள்.

    ‘கணகண' வென்று பள்ளிக்கூட மணி அடித்தது. அந்த ஆரவாரம் முற்றுப்புள்ளி வைத்தது போலச் சட்டென்று நின்றது.

    பிற்பகல் நேரம்.

    கொஞ்சம் தயக்கத்துடன் பிரின்ஸிபாலின் அறைக்குள் நுழைந்தாள் ராதா. கையில் கட்டம் கட்டமாக கேக் அடுக்கிய அட்டைப் பெட்டி. வகுப்பு டீச்சரும், வேறு இருவரும் அமர்ந்திருந்தார்கள். அவர்களைக் கண்டதும் பிரின்ஸிபாலின் கண்கள் சட்டென்று விளகேற்றியது போல் ஒளிர்ந்தன. கையைச் சற்று உயர்த்தி அவளை அருகே அழைத்தாள்.

    கிட்டே வந்து நின்ற ராதாவின் முகம் பணிவாகத்தாழ்ந்தது. இதழ்களில் மரியாதையுடன் மலர்ந்த புன்னகை.

    உனக்கு ‘பர்த்டேயா?' கேள்விப்பட்டேன்.

    பிரின்ஸிபால் அவளுடைய தலையைத் தொட்டு வாழ்த்தினாள், ஒரு பிரார்த்தனையாக உதடுகள் முணுமுணுப்பில் அசைந்தன. கேக் பெட்டியை மெதுவாக மேஜையில் வைத்து விட்டு நிமிர்ந்தாள் ராதா. பிரின்ஸிபால் சிரித்துக் கொண்டாள்.

    என்னை ஏமாற்ற முடியாது...!

    ராதாவின் கண்கள் ஒரு திகைப்பில் உயர்ந்தன. பிரின்ஸ்பால் மொகேவிழ்ந்தாற்போல் அவள் வாய் திறந்த விதத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டாள் மறுபடியும்:

    இதற்காகப் பள்ளிக்கூடத்திற்கு ஒரு நல்ல 'டொனேஷன்' கொடுக்க வேண்டும்.

    ராதா கை விரல்களைச் சேர்த்துப் பிரித்துவிட்டுக் கொண்டாள். கொஞ்சம் தயக்கத்துடன் தலையை ஆட்டினாள், அம்மாவிடம் கேட்டுப் பார்க்கிறேன் மேடம்! என்று இழுத்தாற் போலச் சொன்னாள்.

    பார்க்கிறது என்று இல்லை, நிச்சயமாகக் கொடுக்க வேண்டும், உன் ‘மதர்' தாராளமாகக் கொடுக்கலாம்!

    அடுத்த வார்த்தையை நல்ல வேளையாக பிரின்ஸிபால் சொல்லவில்லை, அது காதில் விழுந்திருந்தால் ராதாவின் முகம் சட்டென்று வெயிலில்பட்ட பூவாய் வாடிப் போயிருக்கும், ஆனால் அவள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தினந்தோறும் எவ்வளவு பேர் அவளிடம் சொல்லுகிறார்கள்?

    உன் அம்மாவுக்கென்ன? ஒரு பாப்புலர் ஸ்டார். சில சமயம் அந்தக் குரலில் பெருமை தோனிக்கும், சில சமயம் பொறாமையும் தெரியும். கேலியும் குமுறலுமாக மனத்தை இம்சையாகக் கிளறும் விதத்தில் தவிப்பதும் உன்டு.

    உண்மை தான். கனகா இன்னும் ஒரு பாப்புலர் ஸ்டார் தான், பெண்கள் பத்திரிகையில் நாகரிகக் குறிப்புகளின் தலைப்பில் அம்மாவின் மலர்ந்த முகம் மாதம் இருமுறை தெரிகிறது மலர்க் காட்சியை அவள் ரிப்பன் வெட்டி, திறந்து வைத்த படம் பத்திரிகையில் முதல் பக்கத்தில் வெளி வருகிறது.

    முன்னவ்வளவு படங்கள் இல்லைதான். ஆனாலும் அந்தப் பெயருக்கு இன்னும் ஒரு கவர்ச்சி இருக்கிறது. இரண்டொரு படங்களில் இன்னும் கல்லூரிப் பெண்ணாக நடிக்கிறாள். மவுண்ட்ரோடில் வைத்திருக்கும் உயரமான உருவத்தில், அவள் சோளியும் லுங்கியும் அணிந்து நிற்கும் தோற்றம் பார்வையைச் சுண்டி இழுக்கிறது. வயதின் எல்லையே தெரியாமல் அதில் அம்மா எத்தனை சின்னப் பெண்ணாக இருக்கிறாள்?

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரையில், யாரேனும் அம்மாவைப் பிரபல நட்சத்திரம் என்று புகழ்ந்தால் அவளுக்குப் பெருமையாகத்தான் இருந்தது. அவளுக்கு இன்னும் விவரம் தெரியாத வயது அப்போது, எல்லோருடைய பேச்சும் இனிப்பாக மட்டுமே புரிகிற பருவம். ஆழமான உள்ளர்த்தம், கிண்டல், குத்தல் எதுவுமே நிழல் விழாத பிஞ்சு மனம்.

    இப்போது அப்படி இல்லை, அந்தக் குறிப்பிலேயே நெஞ்சில் ஏதோ நெருடுகிறது. அவள் முதுகு திரும்பியதும் ஏதோ ஓர் அர்த்தம் தெரிய அவர்கள் சிரிப்பதை அவளால் உணர முடிகிறது. எத்தனையோ செல்வந்தர்கள் வைத்திருப்பதைப் போல் உரிமை கொண்டாடுவதைப்போல சம்பாதித்துச் சேர்த்த பெருளாகத்தான் அவர்களுக்கும் பங்களா இருக்கிறது. கார், குளிர்சாதனம், தோட்டம் எல்லாம் இருக்கின்றன, ஆனால் அவற்றிற்குச் சமூகத்தில் ஏனோ முழு மதிப்பு இல்லை. அவளுக்கு ஓரளவு புரிகிறது. அப்படிப் புரியும்போது நெஞ்சு கரகரக்கிறது. கண்கள் சட்டென்று ஈரம் காணுகின்றன.

    என்ன யோசனை செய்து கொண்டே நின்றுவிட்டாய் ராதா?

    பிரின்ஸிபாலின் குரல் அவளை எழுப்பினாற் போலக் காதில் விழுந்தது. நினைவுகளின் ஊர்வலம் அறுந்தாற்போல் நின்றது அப்படித் தன்னை மறந்துவிட்ட நிலையை உணர்ந்தவளாக, வெட்கம் தவழும் புன்னகையுடன் நிமிர்ந்து விட்டுத் தலையைக் குனிந்து கொண்டாள்.

    நாளைக்கு 'செக்' கொண்டு வருகிறேன் மேடம்! - தலையை லேசாக அசைத்து வணங்கி விட்டு ராதா வெளியே போய்விட்டாள்.

    சார்மிங் லிட்டிவ் கேர்ல்.

    பிரின்ஸிபாலின் பாராட்டு இரகசியக் குரலாசப் பின்னால் கேட்டது. நாக்கில் கரையும் சாக்லெட்டைப் போல, அதில் நினைவினூடே ஒரு தித்திப்பு.

    லேடி ஆப் ஹெல்த் உருவத்துக்கு முன்னால் பதின்மூன்று மெழுகுவத்திகளை ஏற்றி வைத்தாள். கூட நின்ற ஆயா பதின்மூன்று நல்ல நம்பர் இல்லை மகளே! நீ ஏற்றி வைத்தது இருக்கட்டும். நானும் இதை ஏற்றுகிறேன் என்று ஒரு மெழுகுவர்த்தியைக் கூடுதலாகத் தனியாக ஏற்றி வைத்தாள். சிரித்துக்கொண்டே அவள் கையில் ஓர் ஒற்றை ரூபாய் நோட்டை வைத்தாள் ராதா, நன்றியிலும் பணிவிலும் கிழவியின் முகம் நசுங்கல் கண்டது.

    ஆயாவுக்குக் குழந்தைகள் இல்லை, அவள் கல்யாணமே செய்து கொள்ளாமல் இருந்திருப்பாள், ஏதோ ஒரு விதி அவளை ஒரு குடிகாரக் கணவனுடன் கோர்த்து விட்டது. பள்ளிக்கூடக் குழந்தைகள் எல்லாமே அவளுடையவை தாம். கார மருந்தை வெல்லத்தில் பதிப்பதைப் போல, சில வேளைகளில் கண்டிப்பாக நிமிரும் குரலிலும் உள்ளே ஒரு நயம் தான் தெரியும், சற்று வளர்ந்த பெண்கள் அதையும் லட்சியம் செய்வதில்லை, ஆயா சமாளித்துக் கொள்வாள் எப்படியோ...

    அந்த மார்கழியில் கடைசி மழையும் ரெண்டு மூன்று நாட்களுக்குத் தூற்றலாகக் கொட்டிவிட்டு, கடைசியில் 'ஜோ'வென்று பெரிதாகப் பொழிந்தது. கான்வெண்டிலிருந்து மாலையில் திரும்பினால், தோட்டத்து மண்ணில் காலை வைக்க முடியவில்லை. ‘நசநச’வென்று குழம்பிய மண், திறந்த வெளி ஊஞ்சவிலும், கல் நடைபாதையிலும் தொட்டால் சில்லிடும் ஈரம்.

    முன் மாலையிலேயே இருட்டிவிட்டது. கார் வீட்டுக்கத் திரும்பி காம்பவுண்டில் நுழையும்போது, பங்களாவின் முன் புறம் அவள் பார்வை விழுந்தது. பூ அலங்காரமாகப் பதின்மூன்று வர்ண விளக்குகள் கண்ணைப் பறித்தது. நெஞ்சு கொள்ளாமல் ஒரு பூரிப்பு கழுத்துவரை உயர்ந்து ததும்பிற்று.

    காரைவிட்டு இறங்குமுன் அவள் கை விரல்கள் 'லீட்’ டைத் துழாவி அந்த அட்டைப் பெட்டியை எடுத்தன, இன்னும் ஐந்தாறு கேக்குகள் அதில் இருந்தன. டிரைவரிடம் அதை நீட்டினாள்.

    குமரு, இதைக் குழந்தைகளிடம் கொடு!

    அவள் அவனை டிரைவர் என்று கூப்பிடுவது இல்லை, குமரு என்று பெயரைச் சொல்லித்தான் கூப்பிடுவாள், அந்த அழைப்பிலேயே ஒரு கனிவு ததும்பும், சிறு குழந்தையாக அவள் இருந்தபோது அவன் அவளைத் தூக்கி வைத்துக் கொண்டு நடப்பான், காரின்மேல் அவளைச் செல்லமாக உட்கார வைப்பான். பதினான்கை எட்டிவிட்டாலும் ராதா அவனுக்கு இன்னும் பேபிதான். அப்படித்தான் அவளைக் கூப்பிடுவான். அவன் சட்டைப் பையில் மணிபர்ஸில் அவள் கறுப்புக் கண்ணாடி அணிந்து கையை உயர்த்தி ஆட்டும் குழந்தை உருவம் இன்னும் இருக்கிறது; மனசிலும் தான்.

    இப்போது அவனுக்கு கேக் பரிசு கொடுக்கிறாள் ராதா. குமருவின் உதட்டில் ஒரு புன்னகை ஓடியது. அவள் வளர்ச்சியை அடையாளம் கண்டு கொள்ளும் பூரிப்பு அது. வீட்டில் குழந்தைகளுக்குக் கொண்டு போய்க் கொடுப்பான். சின்னம்மா கொடுத்தது என்று சொல்லுவான், அவனுடைய ‘பேபி’ இப்போது சின்னம்மாவா?

    மணி எட்டு.

    டின்னர் தொடங்கிவிட்டது. ராதாவுக்குத் தெரியும். வழக்கமாக அந்த டின்னரில் நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், பத்திரிகை நிருபர்கள் எல்லோரும் வருவார்கள். வரவர இந்த எண்ணிக்கை சுருங்கிவிட்டது. இந்தத் தடவை அதுவும் ரொம்பச் சுருக்கம்.

    அம்மாவை அடிக்கடி புகழும் தெலுங்கு பிஸினஸ்மேன் ஒருவர், தேசியப் பரிசு வாங்கிய ஒரு மலையாளப்பட டைரக்டர், வெற்றிகரமான படங்கள் எடுத்து இப்போது சற்று ஓய்ந்துவிட்ட ஒரு துணிச்சலான தயாரிப்பாளர், வியாபாரத்துக்காக கவிதை வன்மையை விளம்பர அளவுக்கு இறக்கிவிட்ட ஒரு கவிஞர் -இப்படித் தெளித்தாற் போல் சிலருடைய முகங்கள் தாம் அவளுக்குப் பழக்கமானவை. திரைப்படத்துக்காகவே ஏற்பட்ட பத்திரிகைகளிலிருந்தும் கூட ஒரு சிலர்தாம் வந்திருந்தார்கள்.

    அம்மா அவளுக்கென்று தேர்ந்தெடுத்திருந்த அந்த உடையைப் பார்த்தபோது ராதாவுக்குக் கொஞ்சம் பிரமிப்பாகத்தான் இருந்தது. அவளுடைய வயதையும் வளர்ச்சியையும் சற்றுக் கூடுதலாகவே காட்டும் உடை அமைப்பு. இளமையின் பூரிப்பையும் வாளிப்பையும் சற்று அலட்சியமாகவே ஏந்தி நிற்பதைப் போலக் காட்டும் தோற்றம், பின் கழுத்தின் பளபளப்பும் பருவப் பொலிவும், அழுத்தமும், தோளின் சரிவும் தெளிந்து தெரியும் ‘டிசை’னில் உடை. அவளுக்கு வயது பதினான்கு தான் தொடங்குகிறதா? நிலைக்கண்ணாடி பொய் சொல்லுகிறது.

    மெழுகுவர்த்திகளை ஊதி அணைத்தபோதும் கேக் வெட்டியபோதும் பெருமையாகத்தான் இருந்தது. அம்மா அவளைச் செல்லமாக அணைத்துச் கொண்டபோது காமிராவின் ‘க்ளிக்' மின்னலடித்தது, எங்கெங்கோ பத்திரிகைகளில் இது இடம் பெறலாம், நழுவி மறைந்தும் போகலாம்.

    புதிதாசப் படங்கள் எடுக்கத் தொடங்கி இருந்த ஒருவருக்கு கனகா அவளை அறிமுகம் செய்து வைத்தாள், தனது படங்களில் இரண்டொரு புதுமுகங்களையாவது புகுத்துவது அவருடை ய பழக்கம். அப்படி அறிமுகமானவர்களில் சிலர் இப்போது முன்னுக்கு வந்து படங்களில் அடிக்கடி தென்படுகிறார்கள்.

    உங்கள் பெண்ணாயிற்றே! எனக்கு நம்பிக்கைதான். எதற்கும் ‘ஸ்கீரீன் டெஸ்ட்' எடுத்துப் பார்க்கலாம். அப்புறம் சொல்கிறேன் என்றார் அவர்.

    கொஞ்சம் சீக்கிரம்தான். இருந்தாலும் உங்கள் கைக்கு ராசி தனி. உங்கள் படத்தில் அறிமுகமானால் எனக்கு ரொம்பத் திருப்தியாக இருக்கும் என்று புன்னகை செய்தாள் கனகா, அந்த குரலின் கனிவிலும் சிரிப்பின் குளுமையிலும் நனைந்து நின்றார் அவர்.

    ராதாவுக்குக் கொஞ்சம் பிரமிப்பாக இருந்தது. இப்படி ஓர் அறிமுகம் செய்யப்போவதாக அம்மா அவளிடம் அன்று காலையில் கூடச் சொல்லவில்லை. கான்வெண்ட் பள்ளிக் கூடத்துக்கு டொனேஷன் கேட்க அம்மாவிடம் பேசுவதற்கு மனத்தைத் தைரியம் செய்து கொண்டிருக்கும் குழந்தைப் பெண்ணுக்கா இந்த அறிமுகம்? அவளுக்கு நடிப்பதற்கு ஒரு சான்ஸ் கேட்கிறளா அம்மா? அவளுடைய தாயைப் பிறர் அப்படிக்கு குறிப்பிடும்போது, மனத்தில் எழும் சஞ்சலம் கூட அவளுக்கு பின்னும் அலை அடங்கவில்லையே! அவள் தயக்கம் கண்ணில் தெரிகிறதா? அம்மாவுக்குப் புரிகிறதா?

    அங்கே ஏதும் பேசுவதற்குத் தைரியம் வரவில்லை. எல்லாவற்றையும் நல்லதாகவே எண்ணிக்கொண்டு இதழ் விரிக்கும் குழந்தைப் பெண்ணின் புன்னகை தான். அந்தப் புன்னகைக்கு ஒரு 'கிளிக்'. படமாக அது பதிவாகிவிட்டது.

    கூட்டம் கலையத் தொடங்கி விட்டது. அம்மா ஒவ்வொருவரையும் கவனித்து முகமலர்ச்சியும் முறுவலும் மாறாமல் விடைகொடுத்து வழி அனுப்பிக் கொண்டிருந்தாள், கடைசியாக நின்றது அம்மாவிடம் ஒரு தனிப் பரிவு காட்டும் அந்தத் தெலுங்கு பிஸினஸ்மேன் தான், ராதா மாடிக்குப் போய் விட்டாள்.

    முன்புறம் விளக்குகள் அணைந்துவிட்டன. தோரணமான ஒளி மலர்கள் மறைந்துவிட்டன, லேசான நிலவொளி சல்லா போட்டது போல் உருவக்கோடுகள் மட்டும் காட்டிக் கொண்டிருந்தது. ராதா ஜன்னல் வழியாகத் தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள், கல் பாவிய நடை பாதையில் அ துளுடைய தாய் இறங்கிப் போவது தெரிந்தது. அந்த நிலவின் ஒளியிலும்கூட அம்மாவின் செதுக்கின உடற்கட்டும் உறுதியும் பளிச் சென்று மின்னின, நந்தியாவட்டை இதழைப் போல் அந்த நைப்பும் வழவழப்பும் நிலவோடு நிலவாகப் பொலிந்தன, இன்னும் அந்த இளமையின் பசுமை முழுவதும் முற்றிவிடத் தான் இல்லை. ராதாவின் நெஞ்சம் ஒரு பெருமையில் நெகிழ்ந்தது.

    சற்றுத் தள்ளிப் பின்னால் வந்த அந்த மனிதர் நடையைச் சற்று வேகப்படுத்தி அம்மாவுடன் சேர்ந்து கொண்டார். அவர்கள் இருவரையும் அப்படிப் பார்க்கும் போது அவள் மனத்தில் ஒரு வேதனை வண்டலாக உறுத்திற்று. அவன் பார்வை மாறாமல் நிலைத்தபடி இருக்கும் போதே, அவர் -

    ராதா ஜன்னலிலிருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள், ஒரு நிமிஷம்; இரண்டு நிமிஷம். இருள் சூடாக ஊர்ந்தது. மறுபடி அங்கே திரும்பிப் பார்க்க அவளுக்குத் தைரியம் இல்லை. படுக்கையில் வந்து விழுந்தாள், பட படவென்று மார்பு அடித்துக் கொண்டது. உடல் அலை மோதியது போல நடுங்கிற்று!

    2

    ராதா கண்ணை மூடிக் கொண்டாள். ‘கிணிக் கிணக்’ என்று இராக் குருவி கத்திக்கொண்டிருந்தது: எழுத்தாணியைக் கரகரக்கும் உலோகத்தில் அழுத்தி அழுத்தித் தேய்ப்பது போல, மூச்சை இழுத்து விட்டாள். தோட்டத்துப் பூவின் மணமும், அறையின் ஊதுவத்தி வாசனையும் கலந்து மூக்கை நிறைத்தன. அந்த இதமான வாசனைக்கு நடுவில் மனத்தில் ஒரு வேதனை.

    அந்த மனிதருடன் அம்மா அந்த நிலையில்-

    எழுந்து ஜன்னலை திறந்து வைத்தாள், முழுக்காற்றும் பரவும்படி. இப்போது தோட்டத்தில் யாரும் இல்லை, 'ஜிலுஜிலு' வென்ற குளிர்ந்த காற்று முகத்திலும் மார்பிலும் வீசிற்று. நெஞ்சில் ஒரு வெம்மை சுட்டது.

    அவள் சிறு குழந்தையாக இருந்தபோது கனகா தெலுங்கிலும், தமிழிலும் நிறைய நடித்துக் கொண்டிருந்தாள். கண்ணாலே காதலைக் கொட்டி, புன்னகையில் நெஞ்சில் பனிக் குளிர்ச்சியை எழுப்புகிற மாதிரி எத்தனையோ பாத்திரங்கள், குங்கும நெற்றியுடன் குடும்பத்துப் பெண்ணாக வீணையுடன் அமர்ந்திருக்கும் தோற்றம், ‘பாப்' செய்த கூந்தலுடன் உதட்டில் சிவப்பும் தோளின் சரிவில் வெண்மையும் தெரியப் பாதி திரும்பினாற் போல நிற்கும் அழகு வடிவம், இரட்டைப் பின்னலுடன் புத்தகக்கட்டை மார்போடு அணைத்தபடி நிற்கும் குறும்பு தவழும் கல்லூரிப் பெண்ணின் உருவம் அப்படி எத்தனையோ! ஆல்பத்தில் அவற்றைப் புரட்டும்போது ராதாவின் கண்களைக் கட்டி நிறுத்தும் ஒவ்வொரு பக்கமும்.

    அப்போது கனகாவின் பெயரே எத்தனையோ உள்ளங்களில் இளமைக் கனவுகளை எழுப்பிக் கொண்டிருந்த காலம், அந்த முத்திரைக்குச் சிறு மாற்றத்தையும் அவள் ஏற்க விரும்பியதில்லை. அதனால் ராதாவை எங்கேயும் அழைத்துக் கொண்டு போக மாட்டாள், திரைப்பட வெளியீடு, முகூர்த்த விழா, கல்லூரிக் கொண்டாட்டங்கள் எதில் கலந்து கொண்டாலும், கனகாவின் படம் சிறு பெண்ணாகத்தான் வெளியாகும், அவளுக்கு நாலைந்த வயதில் ஒரு பொண் இருப்பதாகத் துணுக்குச் செய்திகள் கூட வந்ததில்லை. ராதாவின் படத்தை எந்தப் பத்திரிகை நிருபரும் கேட்க அனுமதித்ததும் இல்லை

    "ஷூட்டிங்கிற்குப் போய்விட்டு இரவு வெகு நேரம் கழித்துத்தான் திரும்புவாள். சில நாள் திரும்பிவரும்போது அநேகமாக விடியற்காலை நேரம் கூட ஆகிவிடும். சேர்ந்தாற் போல ஒரு வாரம் வரை வெளிப்புறக் காட்சிகளுக்காகப் போய் விடுவதுமுண்டு. உதயபுரி ‘லேக் பாலெஸ்', சிம்லா பனிச்சிகரம், பிருந்தாவனப் பூங்கா, ஜோக் நீர்வீழ்ச்சி-இவையெல்லாம் எப்படி இருக்கும் அவற்றில் கனகா, காதல் காட்சிகளில் நடித்திருக்கிறாள், காஷ்மீரத்து மலராக உலாவி இருக்கிறாள். ஆனால் ராதா அந்த இடங்கள் எதையுமே பார்த்ததில்லை. வண்ணப் புகைப் படங்களை வைத்துக் கொண்டு அழகு பார்ப்பாள். ஒருசில படங்களைத் திரையில் ஆயாவுடன் இரவு இரண்டாவது காட்சியில் இரகசியமாகப் பார்த்துவிட்டு வரச் சந்தர்ப்பமும் கிடைக்கும்.

    கண்ணைக் கசக்கிக் கொண்டு அழும், பீங்கான் வழி வழுப்புத் தெரியும் சிங்கப்பூர் பொம்மை ஒன்று ராதாவிடம் இருந்தது. விளையாட்டுக்காக அதைப் பார்க்கும்போதெல்லாம் அவளுக்குத் தன் ஞாபகமே வரும், பொம்மையை எடுத்து வைத்துக் கொண்டு செல்லமாகச் சீராட்டுவதற்காவது ராதா இருந்தாள். அவளுடைய உணர்ச்சிகளைப் புரிந்து கொள்பவர் யார்? அவளை அப்படிச் சீராட்டுபவர் யார்?

    அம்மாவின் வாழ்க்கையில் அவள் பங்கு பெற்றதில், அதன் அந்தரங்கம் எதுவுமே அவளுக்கு ஒரு மூடிய புத்தகமாகத்தான் இருந்தது. வீட்டுக்கு யாராவது வந்தால் அவள் கூசி ஒதுங்கி மாடி அறைக்குப் போய்விடுவாள், யார் முன்னாலும் அவள், கனகாவை 'அம்மா' என்று கூப்பிட்டுவிடக் கூடாது. வளைவுகளும், அழுத்தமும் மலரின் மென்மையுமாக இருந்த அந்த இளமைக்கு, ஒரு தாய் உருவம் பொருந்த முடியாது தான். ஒரு குழந்தைகூட இருப்பதாகத் தெரியக் கூடாதுதான்…

    ராதா பள்ளிக்கூடத்தில் சேர்ந்து விட்டாள். லெசில் அனுமதி கிடைக்க முடியாத பெரிய 'கான்வென்ட்' அது. அநேகமாக எல்லோரும் காரில் தான் வந்து போவார்கள், அதுபோன்ற குடும்பத்துக் குழந்தைகளுக்காகவே நடத்தப்பட்ட பள்ளி அது. கனகா, தானே ராதாவை அழைத்துக் கொண்டு வந்து, பிரின்ஸிபாலின் கையில் ஒப்படைத்தபோது அவளுக்குப் பெருமை பிடிபடவில்லை.

    அவள் காது படவே ஆசிரியைகள் அவளைப்பற்றியும், புகழ்பெற்ற நட்சத்திரமான அம்மாவைப் பற்றியும் மரியாதையும் பிரமிப்பும் தொனிக்கப் பேசுவார்கள். அப்போதெல்லாம் அவளுக்கு மனத்தில் பெருமை பூரித்து நிற்கும். கூடப்படிக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1