Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ninaivin Karaigal
Ninaivin Karaigal
Ninaivin Karaigal
Ebook68 pages26 minutes

Ninaivin Karaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தீ விபத்தின் காரணமாக, நீரஜா ஆகிவிட்ட பத்மா, மீண்டும் தீ விபத்தின் காரணமாகவே பத்மா ஆகிறாள். அதிர்ச்சி வைத்தியம் ஒன்றில் அவளுக்குப் புது வாழ்வு கிடைக்கிறது. குழப்பத்தில் தத்தளிக்கும் ஒரு பெண் நம்பிக்கையின் கரைகளை எட்டித் தொடும் இந்த முயற்சிதான் “நினைவின் கரைகள்.”

Languageதமிழ்
Release dateJul 9, 2022
ISBN6580127507070
Ninaivin Karaigal

Read more from Lakshmi Subramaniam

Related to Ninaivin Karaigal

Related ebooks

Reviews for Ninaivin Karaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ninaivin Karaigal - Lakshmi Subramaniam

    http://www.pustaka.co.in

    நினைவின் கரைகள்

    Ninaivin Karaigal

    Author:

    லட்சுமி சுப்பிரமணியம்

    Lakshmi Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    முன்னுரை

    பொதுவாகக் குடும்பக் கதைகளையே என்னிடமிருந்து எதிர்பார்க்கும் வாசகர்களுக்கு இந்தத் தொகுப்பில் உள்ள இரண்டு குறுநாவல்களும் ஒரு மாறுதலாகத் தோன்றினால் வியப்பில்லை. இவற்றில் ஒன்று மனோதத்துவப் பின்னணியில் அமைந்தது. இன்னொன்று பல்வேறு மனங்களுடன் உறவாடும் புனிதமான நெஞ்சம் ஒன்றைப் பற்றியது.

    இந்த இரண்டு குறுநாவல்களுக்குமே பொதுவான அம்சம் ஒன்று உண்டு. அது இந்த இரண்டிலுமே அமைந்திருக்கும் மனோதத்துவ சிகிச்சைதான். தீ விபத்தின் காரணமாக, நீரஜா ஆகிவிட்ட பத்மா, மீண்டும் தீ விபத்தின் காரணமாகவே பத்மா ஆகிறாள். அதிர்ச்சி வைத்தியம் ஒன்றில் அவளுக்குப் புது வாழ்வு கிடைக்கிறது. குழப்பத்தில் தத்தளிக்கும் ஒரு பெண் நம்பிக்கையின் கரைகளை எட்டித் தொடும் இந்த முயற்சிதான் நினைவின் கரைகள்.

    நான்கு சுவர்களுக்கு வெளியே வந்து மக்களுடன் கலந்து பழகி, அந்தப் பணிவிடையில் தன் நோயை மறக்க முன்வருகிறார் பாதிரியார் ஜோஸப். பூங்குடி மிஷன் ஆஸ்பத்திரியில், அந்த ஆறுமாத காலத்தில் அவருடைய உடல் பலவீனத்தை வெற்றி கொள்கிறது அவருடைய உள்ள வலிமை. அருளின் ஒளியில் ஒவ்வொரு பாத்திரத்திலும் இந்தப் புனிதரின் கருணை சிந்துகிறது, கலம் நிறைந்து வழிகிறது.

    எஸ். லட்சுமி சுப்பிரமணியம்

    சென்னை -90

    26-3-77.

    1

    நீரஜா சக்கர வண்டியில் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள். புடைவைத் தலைப்பை இழுத்து கழுத்தை மூடிக்கொண்டாள். குளிர் காற்றில் உடல் புல்லரித்தது. இலைகளின் சந்துகளின் வழியே காலைக் கதிரின் பொன் இழைகள் மின்னிக் கொண்டிருந்தன. தோட்டத்தில் ‘பம்ப்’ வேலை செய்யும் இடத்திலிருந்து நாடித் துடிப்பாய்ப் பொங்கி வடியும் நீரின் சப்தம் கேட்டது.

    தன் மடிமேல் பிரித்து வைத்திருந்த செய்தித்தாளை ஒருமுறை புரட்டினாள் நீரஜா. ஒரு கணம்தான் பார்வை அதன் மேல் நிலைத்தது. மறுபடி அது தன் கைகளின் மீதே திரும்பிற்று. தோல் உரிந்த விரல்கள், மணிக்கட்டில் மீன் சதையாக வழவழவென்ற சுட்ட வடு. காய்ந்து மென்மை இழந்த அந்தக் கையைப் பார்த்தபோது கண்களின் முன் பூச்சி பறந்தது போன்ற தோற்றம். கண்களை மூடிக் கொண்டாள்.

    யாரோ அவசரமாக அவளை இழுத்துத் தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். சுற்றிலும் குழப்பம் நிறைந்த கூச்சல். குழந்தைகளின் அழுகுரல். நாலாபுறமும் தடதடவென்ற காலடி ஒலிகளின் குழப்பம். இடிந்து விழும் கட்டிடத்தின் கற்கள், சட்டங்கள் எழுப்பும் பேரொலி, அனல் நாக்குகள் கக்கும் வெம்மையின் உணர்வு, அந்த வெளிச்சம், ஒளிப் பிழம்பு, கண்களைக் கூச வைக்கும் எரிச்சல் தாங்காமல் கண்களை மூடிக்கொண்ட நினைவு... பழைய ஞாபகத் துளிர்கள்...

    நான் இப்போது எங்கே இருக்கிறேன்?

    அவளுக்குப் புரியவில்லை. நினைவில் எதையும் சரிக்கட்டி வரவழைத்துக் கொள்ள முடியவில்லை. வெறும் புலன் உணர்ச்சிகளைத் தவிர சிந்தனையில் அசைவே இல்லை.

    நான் எங்கிருந்து வந்தேன்?

    அவளுடைய நினைவில் தெளிவில்லை. அந்தக் கேள்விக்குப் பதில் நினைக்கையில் புதிதாக ஒரு பலவீனம் உடலில் பரவிற்று. மடியில்

    Enjoying the preview?
    Page 1 of 1