Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Punitham Arulum Puttabarthi
Punitham Arulum Puttabarthi
Punitham Arulum Puttabarthi
Ebook147 pages51 minutes

Punitham Arulum Puttabarthi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“கடவுள் மீது வைக்கும் பற்று அசைக்க முடியாததாக இருக்கவேண்டும். நமக்கு நேரும் சோதனைகள் நம்முடைய கடவுள் பற்றைக் கலைத்துவிடக்கூடாது. ஆனால் இன்று நாம்கொள்ளும் பக்தி எப்படிப்பட்டது? என்பதை பகவானின் பதில்களும் விளக்கங்களும் மூலம் அறியலாம்.

Languageதமிழ்
Release dateSep 13, 2021
ISBN6580127506652
Punitham Arulum Puttabarthi

Read more from Lakshmi Subramaniam

Related to Punitham Arulum Puttabarthi

Related ebooks

Reviews for Punitham Arulum Puttabarthi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Punitham Arulum Puttabarthi - Lakshmi Subramaniam

    https://www.pustaka.co.in

    புனிதம் அருளும் புட்டபர்த்தி

    Punitham Arulum Puttabarthi

    Author:

    லட்சுமி சுப்பிரமணியம்

    Lakshmi Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/lakshmi-subramaniam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    நம்பிக்கை

    கடவுள் மீது வைக்கும் பற்று அசைக்க முடியாததாக இருக்கவேண்டும். நமக்கு நேரும் சோதனைகள் நம்முடைய கடவுள் பற்றைக் கலைத்துவிடக்கூடாது. ஆனால் இன்று நாம்கொள்ளும் பக்தி எப்படிப்பட்டது? ஒரு தும்மல் போட்டால் அது இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறது.

    - பகவான் பாபா

    பொருளடக்கம்

    வேரும் பயிரும்

    கோபிகைகளின் பிரேம பக்தி!

    சங்கராந்தி

    இன்றைய மலர்கள் நாளைய கனிகள்...

    புகழ் சேர்க்கும் புட்டபர்த்தி

    இயற்கை நம்மை தண்டித்துவிடும்!

    மனித சேவையே மாதவன் சேவை...

    புட்டபர்த்தியில் ஓர் புனிதத் திருவிழா

    பகவான் பாபா அமைத்த ஆலயத்தில்...

    புட்டபர்த்தியில் ஒரு புனிதப் பொங்கல்!

    இதயங் கனியும் இணையிலா சேவை!

    பக்தர்களுக்காகக் காத்திருக்கும் பரந்தாமன்!

    உண்மையைப் போற்றினால் மற்றவை கிடைக்கும்

    பாபா சொன்ன சின்னக் கதைகள்

    கர்வம் வேண்டாம்!

    முழுமையான ஞானம் எது?

    நித்ய பிரம்மச்சாரியும் நித்ய உபவாசியும்!

    பாபாவின் அருள்மொழிகள்

    வேரும் பயிரும்

    முள் இல்லாத பாதையில் நடந்து மனிதன் தெய்வத்தை நாட முடியுமா? முடியும் என்று சொல்லுகிறது சனாதன தர்மம். ஒரே ஒரு நிபந்தனைதான். இதை அவரவர் தாமேதான் சாதித்துக்கொள்ள வேண்டும். தனிவழியே நடந்துதான் அடையவேண்டும். அப்படி அடையமுடியும் என்ற தன்னம்பிக்கையும் மிக அவசியம்.

    அர்ஜுனன் கிருஷ்ண பகவானின் மைத்துனர்; அவருடைய நெருங்கிய நண்பரும்கூட. இருவரும் போருக்கு வருகிறார்கள். எப்படி? முக்கியமான படைத்தலைவனும் அவனுடைய தேரின் சாரதியுமாக! அவ்வளவு நாட்களும் செய்திராத உபதேசம் அங்கே நெருக்கடியான போர்க்களத்தில் நடக்கிறது. சந்தேகங்களைப் பகவான் நிதானமாக விளக்கித் தெளிவுபடுத்துகிறார். பகவான் நினைத்திருந்தால் தன்னுடைய சக்தியை உபயோகித்து அர்ஜுனன் மனதில் தெளிவான ஞானம் ஏற்படும்படி செய்திருக்கலாம் அல்லவா? அவரால் முடியாத ஒன்று உண்டா?

    ஆனால் கிருஷ்ண பகவான் அப்படிச் செய்யவில்லை. ஒரு மருத்துவர் வைத்தியத்துக்கு மருந்து கொடுப்பதுபோல கொடுக்கிறார். அதற்குரிய பத்திய வழிகளையும் சொல்லுகிறார். அர்ஜுனன்தான் அந்த மருந்தைச் சாப்பிட வேண்டும். அவன்தான் அதற்குரிய உணவு முறைகளை மேற்கொள்ள வேண்டும். அவனாகத்தான் உடல் நலத்தைப் பெறவேண்டும். இதையே பகவான் வற்புறுத்திச் சொல்லுகிறார். அர்ஜுனா! எனக்குப் பிரியமான தோழன் நீ. என் சகோதரியின் கணவன் நீ. நீ எனக்கு மிக நெருங்கியவன். அதனாலேயே நான் உனக்குத் தேரோட்டச் சம்மதித்து வந்து உட்கார்ந்திருக்கிறேன். உன் மனம் அமைதியற்றுத் தவிக்கிறது; நீ வேதனைப்படுகிறாய்; அது எனக்குப் புரிகிறது. இது உன் உள்ளத்தில் சூழ்ந்த அஞ்ஞானத்தால் ஏற்பட்டிருப்பது. அதை நீயாகவேதான் விலக்கிக்கொள்ள வேண்டும். என்னுடைய சக்தியால் நான் அதைத் திட்டமிட்டு விலக்க இயலாது. அப்படி ஓர் அதிசயம் நடக்கவேண்டும் என்று நீ எதிர்பார்க்காதே! என்று சொல்லுகிறார்.

    உண்மையைப் பெறுவதற்கு நாம் பொய்ம்மையுடன் போராடித்தான் பெறவேண்டும். அப்போதுதான் அதன் அருமை தெரியும். அப்போதுதான் நாம் அதன் மதிப்பை உணர்ந்து பாதுகாப்போம். குறுக்குவழியில் சுலபமாகச் சம்பாதித்த பணத்தை, விரைவாக அலட்சியமாக செலவு செய்துவிடுவோம். சிரமப்பட்டு உழைத்து ஈட்டிய பொருளை அப்படி விரயம் செய்வதில்லையே? அதேபோல இப்படித் தேடி உணர்ந்த உண்மையைப் பொக்கிஷத்தைப்போல மதித்துப் பாதுகாக்கவேண்டும்.

    அர்ஜுனன் கிருஷ்ண பகவானிடம் தனது மனம் பெரிதும் கலங்கிக் குழப்பம் அடைந்திருப்பதாகச் சொன்னான். பலத்த காற்று வீசும்போது எல்லாமே பறப்பதைப்போல, இந்த மனப்போராட்டத்தில் என்னுடைய எண்ணங்கள் அலைபாய்கின்றன. நீதான் எனக்கு அமைதியைத் தரவேண்டும். அது என் கையில் இல்லை. என் மனம் நிலையாக நிற்காது என்று எனக்குத் தெரியும்! என்று சொன்னான் பார்த்தன்.

    கொடையாளி கர்ணனைப்பற்றி ஒரு கதை உண்டு... அவன் தங்கப் பாத்திரம் ஒன்றில் எண்ணெயை எடுத்து வைத்துக்கொண்டு தலையில் தேய்த்துக்கொண்டிருந்தான். கிருஷ்ண பகவான் அவனைச் சோதிப்பதற்காக அங்கே வந்துசேர்ந்தார். கர்ணா! நீ கேட்டது எதுவானாலும் கொடுக்கும் கொடையாளி என்று கேள்விப்பட்டேன். இந்தத் தங்கப்பாத்திரம் எனக்குவேண்டும். கொடுப்பாயா என்று சிரித்தபடி கேட்டார். கர்ணனின் இடதுகையில் எண்ணெய் உள்ள தங்கப்பாத்திரம் இருந்தது. வலது கை தலையில் எண்ணெயைவைத்து தேய்த்தபடி இருந்தது. கிருஷ்ணன் கேட்டதும் கர்ணன் சிறிதும் யோசியாமல் இடதுகையில் இருந்த தங்கக் கிண்ணத்தை அப்படியே தூக்கிக் கொடுத்துவிட்டான். கிருஷ்ணர் கர்ணனிடம், என்ன கர்ணா? தர்மசாஸ்திரம் தெரிந்த நீ இப்படிச் செய்யலாமா? இடதுகையால் தர்மம் செய்வது சரியாகுமா? எனக்குக் கொடுப்பது தங்கப் பாத்திரமானாலும் இடதுகையால் கொடுப்பது தவறாயிற்றே? என்று கேட்டார்.

    சுவாமி! தாங்கள் என்னை நாடி வருபவரா? அபூர்வமாகவந்து கேட்கிறீர்கள். தங்களுக்கு ஒரு தங்கப்பாத்திரத்தை வழங்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. அதை நான் நழுவவிடலாமா? நான் எழுந்துபோய் கையைச் சீயக்காய் போட்டுக் கழுவிக்கொண்டு வந்து பிறகு வலது கையால் கொடுக்கலாம். சாஸ்திரப்படி அதுவே சரியாகும். ஆனால் யார் கண்டது? அதற்குள் என்னுடைய மனம் மாறிவிடலாமல்லவா? இந்தப் பொன்னான சந்தர்ப்பத்தை இழந்துவிட வேண்டி இருக்குமே? என்று சொன்னான் கர்ணன். கிருஷ்ணர் சிரித்தபடியே அதை வாங்கிக்கொண்டு போய்விட்டார்.

    கர்ணன் சொன்னது உண்மை. மனம் சபலத்துக்கு ஆளாகக்கூடியது. நல்ல மனிதர்களாலும்கூட அதை நிலையாக வைத்திருக்கமுடியாது. அப்படி இருக்க, ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்போது நாம் அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாமா? அதைத்தான் கர்ணன் செய்தான். பற்று இல்லாத நிலையையும், கட்டுப்பாட்டையும் மேற்கொண்டு, மனதை உறுதிப்படுத்திக்கொள்ளப் பழகிக்கொள்ளவேண்டும்.

    புத்திக்கு மனம் அடிபணிய வேண்டும். புலன்கள் தூண்டும் ஆசைக்கு மனம் அடிமையாகிவிடக்கூடாது. அது பகுத்தறிவைப் பயன்படுத்திக்கொண்டு உடலின் பற்றுதல்களிலிருந்து விலக்கிக்கொண்டு, அதற்குள்ளேயே வாழ முயலவேண்டும். புளியம்பழம் பழுத்த பின் ஓட்டுக்குள்ளேயே இருக்கிறது. ஆனால் ஓட்டுடன் ஒட்டுவதில்லை, விலகி நிற்கிறது. அதைப்போல வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்; புளியங்காயைக் கல்லால் அடித்து மரத்திலிருந்து விழச்செய்யுங்கள். கல்லடிபட்ட இடத்தில் காயம் ஏற்பட்டு அது சிதைந்திருக்கும். புளியம்பழத்தை அப்படி வீழ்த்துங்கள்; மேல் ஓடுதான் உடையும்; உள்ளே பழம் பத்திரமாக இருக்கும். ஞானிகளை விதிகளின் விளையாட்டு பாதிப்பதே இல்லை. சாதாரண மனிதர்களை அது கொஞ்சம் என்றாலும் மிகவும் பாதித்துவிடுகிறது.

    ***

    ஒரு அரசன் காட்டில் வேட்டையாடப் போனான். மான் ஒன்றைத் துரத்திக்கொண்டேபோய் காட்டினுள் வெகுதூரம் போய்விட்டான். அங்கே வழி தவறி பாழுங்கிணறு ஒன்றில் விழுந்துவிட்டான். நல்ல வேளையாகக் கிணற்றின் சுவரிலிருந்து தடித்த மரவேர் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. அதைப் பற்றிக்கொண்டு உள்ளே விழாமல் தொங்கிக்கொண்டிருந்தான். என்னை யாராவது காப்பாற்றுங்களேன்! என்று அபயக்குரல் கொடுத்தவண்ணம் இருந்தான்.

    அந்தப் பக்கமாக ஒரு சந்நியாசி போய்க்கொண்டிருந்தார். அவருடைய காதுகளில் அரசனின் கூப்பாடு விழுந்தது. அவர் ஓடிவந்து பார்த்தார். உள்ளே அரசன் இருந்ததை உணர்ந்து ஒரு தாம்புக் கயிற்றை மேலே கிணற்றின் அருகில் இருந்த பெரிய பாறையில் கட்டி, கயிற்றை உள்ளே இறக்கினார். அரசே! இந்தக் கயிற்றைப் பற்றிக்கொண்டு மெல்ல மேலே ஏறி வந்துவிடுங்கள் என்று சொன்னார்

    Enjoying the preview?
    Page 1 of 1