Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sakthi Leelai Part - 2
Sakthi Leelai Part - 2
Sakthi Leelai Part - 2
Ebook209 pages1 hour

Sakthi Leelai Part - 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நம் உறவுகளிலேயே தாயின் உறவும் அவளது பாசமும் மிக உயர்வானது என்பதை நன்கு அறிந்தவன் நான். என்னைப் பெற்ற தாயின் பாசமே எனக்குப் பெரிதாகத் தோன்றும் போது, இந்த புவனங்களுக் கெல்லாம் தாயானவளுக்கு எவ்வளவு பாசமும் கருணையும் இருக்குமென்பதை என்னால் கற்பனையே செய்து பார்க்க இயலவில்லை. அந்த தாயின் கருணை சக்தி லீலையின் இரண்டாம் பாகத்தின் மூலம் நாமும் பெறலாமா...

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580100706875
Sakthi Leelai Part - 2

Read more from Indira Soundarajan

Related to Sakthi Leelai Part - 2

Related ebooks

Reviews for Sakthi Leelai Part - 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sakthi Leelai Part - 2 - Indira Soundarajan

    https://www.pustaka.co.in

    சக்தி லீலை பாகம் - 2

    Sakthi Leelai Part – 2

    Author:

    இந்திரா சௌந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    வியாசர் இதுகாறும் கூறிய அம்பிகையின் பிரதாபங்கள் ஜெனமே ஜெயன் வரையில் ஒரு புதிய விழிப்புணர்ச்சியையே உருவாக்கி விட்டிருந்தது.

    ‘குருவே! தங்கள் மூலம் நான் அம்பிகையின் அளவற்ற சக்தியை மட்டுமல்ல, அவளது கருணையையும் ஒருசேர அறிந்தேன். நம் உறவுகளிலேயே தாயின் உறவும் அவளது பாசமும் மிக உயர்வானது என்பதை நன்கு அறிந்தவன் நான். என்னைப் பெற்ற தாயின் பாசமே எனக்குப் பெரிதாகத் தோன்றும் போது, இந்த புவனங்களுக்கெல்லாம் தாயானவளுக்கு எவ்வளவு பாசமும் கருணையும் இருக்குமென்பதை என்னால் கற்பனையே செய்து பார்க்க இயலவில்லை.

    கற்பனைக்கெட்டாத அவளது கருணை, தேவர்களுக்கு ஆபத்து நேரிட்ட போதெல்லாம் எப்படி உதவியது என்பதையே மகிஷாசுரன் முதல் சும்ப நிசும்பர் வரையிலான அசுரர்களின் வரலாற்றின் மூலம் நான் அறிந்து கொண்டதாகும்.

    இந்த சம்பவங்களை நீங்கள் பொறுமையாகக் கூறியபோது, அதைச் செவிமடுத்து நான் இடையிடையே கேட்ட கேள்விகள் - அதற்குத் தாங்கள் தந்த விளக்கங்கள் அசாதாரணமானவை. இப்போது நான் மேலும் சில கருணை மிகுந்த சம்பவங்களோடு தேவருலகம் பற்றியும், ரிஷிகள், முனிவர்கள் மற்றும் சர்வலோக சஞ்சாரியான நாரதர் முதலியோர் குறித்தும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். தங்களால் கூற இயலுமா? என்று மிகப் பணிவாகக் கேட்டான் ஜெனமே ஜெயன்.

    தாராளமாகக் கூறுகிறேன். ரிஷிகளில் வசிஷ்ட மகரிஷி பிரதானமானவர். இவர் பிரம்மரிஷி என்கிற பட்டத்துக்கும் பெரிதும் உரியவர். இவர் ஒருமுறை தன் உடலை இழந்து ஆத்மசரீரத்தோடு - அதாவது இறவாமல் இறந்து போவது போல் கஷ்டப்பட்ட ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன். என்று தொடங்கினார் வியாசர்.

    குருவே... இது என்ன விந்தை? ஒரு மனிதன் தன் உடலையே இழப்பதா? அது எப்படி? என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்றான் ஜெனமே ஜெயன்.

    கற்பனை செய்து பார்க்கமுடியாத விசித்திரங்கள் கொண்டதே மனித வாழ்வு... நீ வசிஷ்டரின் கதையைக் கேள்... என்று வியாசர் வசிஷ்டர் குறித்துக் கூறத் தொடங்கினார்.

    இக்ஷவாகு என்று ஒரு அரசன்! இவன் சூரியனுடைய பேரன் ஆவான். இவனே ஸ்ரீராமபிரான் அவதரித்த சூரிய குலத்தின் தோன்றல் ஆவான். இவனுக்குப் பின்னால் இவன் பிள்ளைகள், பேரர்கள் என்று இவன் குலம் விருத்தியடைந்து அயோத்தி எனும் நிலத்தை ஆட்சியும் செய்துவந்தது.

    ஜெனமே ஜெயா, சந்திர குலத்தில் நீ எப்படியோ அப்படியே தான் இவன் குலத்தில் நிமி என்னும் அரசனும்! இந்த சூரிய குலத்துக்கான ராஜாங்க குருவாகத்தான் வசிஷ்ட மகரிஷியும் இருந்தார். எப்போதும் இவரைக் கலக்காமல் எந்தவொரு காரியத்தையும் அயோத்தி அரசர்கள் செய்யமாட்டார்கள்.

    நிமி ஒருமுறை நம் தேவியைத் துதிக்கும் விதமாய் ஒரு பெரும் யாகம் செய்ய விரும்பினான். அதற்கான ஏற்பாட்டிலும் இறங்கினான். நிமி பூவுலகில் இப்படியொரு முயற்சியில் இறங்குவதை கவனித்த இந்திரனுக்கு அச்சம் உண்டாயிற்று. ஏனென்றால் நிமியின் பாட்டனான இக்ஷவாகு பெரும் தவமும் வேள்வியும் செய்து பிரம்மலோகத்திலிருந்த பிரணவாகாரப் பெருமாளையே தனக்கு வேண்டுமென்று பூவுலகுக்குக் கொண்டு சென்றுவிட்டான். எனவே இவனும் அதுபோல் யாகம் செய்து, பதிலுக்கு தேவர்களின் தலைவனான தன்னிடம் கேட்கக் கூடாததைக் கேட்டுவிட்டால் என்ன செய்வதென்று பெரிதும் அச்சப்பட்டான். அதன் விளைவாக ஒரு யுக்தியை மேற்கொண்டான்.

    எப்படியும் யாகம் செய்ய ராஜகுரு அவசியம்! அதாவது வசிஷ்டர். அவரில்லாமல் யாகம் செய்ய இயலாது. எனவே மறைமுகமாக நிமி யாகம் செய்யாதபடிக்கு தானொரு யாகத்தை இந்திர லோகத்திலேயே செய்யத் தீர்மானித்தான் இந்திரன். அதற்கு வசிஷ்டரே தலைமை தாங்க வேண்டும் என்றும் வேண்டினான். வசிஷ்டரும் சம்மதித்துவிட்டார். இவ்வேளையில்தான் நிமியும் வசிஷ்டரிடம் வந்து தான் புரியும் தேவி யக்ஞத்தை நடத்தித்தர வேண்டினான்.

    வசிஷ்டரோ இந்திரனுக்கு வாக்களித்து விட்டதைக்கூறி, ‘அந்த யாகம் முடியட்டும்; பிறகு தொடங்கலாம்’ என்றார். நிமியும் ‘சரி’ என்று கூறி, தான் செய்ய நினைத்த வேள்வியைத் தள்ளிப்போட்டான்.

    இந்திரனும் வசிஷ்டரைக் கொண்டு யாகத்தைத் தொடங்கினான். அப்படித் தொடங்கிய யாகத்தை இந்திரன் விடாமல் நாள்கணக்கில் இருந்து வாரம், மாதம் என்று கொண்டு சென்றான். இதையறிந்த நிமி இந்திரன் வேண்டுமென்றே தனக்குப் போட்டியாக செயல்படுவதைப் புரிந்து கொண்டவனாய், இந்திரனுக்கு பதிலடி கொடுக்க முடிவுசெய்து அயோத்தியில் பெரும் யாகசாலை அமைத்து யாகத்தைத் தொடங்கிவிட்டான்.

    யாகத்தைத் தலைமையேற்று நடத்த குரு வேண்டுமே? நிமி அதுகுறித்துக் கவலைப்படாமல் கௌதம ரிஷி எனும் ரிஷியை அணுகி தன் யாகத்துக்கு தலைமை யேற்கச் சொல்ல, அவரும் சம்மதித்தார். இந்த விஷயம் இந்திரனுக்குச் செல்லவும் அதிர்ந்தான். அவனைவிட வசிஷ்டர் பெரிதும் அதிர்ந்தார். குறிப்பாகத் தன் இடத்தில் கௌதம மகரிஷியை வைத்து நிமி யாகத்தைத் தொடங்கிவிட்டது அவருக்குப் பெரிதும் வருத்தத்தை அளித்தது. சரி, போகட்டும் என்று அவர் விட்டுவிடத்தான் நினைத்தார். ஆனால் இந்திரன் கேட்கவில்லை. இந்திரலோகத்து யாகத்தை போதும் என்று நிறுத்தியவன், வசிஷ்டரே... இதை நீங்கள் அப்படியே விடக்கூடாது. அயோத்திக்கு நீங்கள் ராஜகுருவா? கௌதமர் ராஜகுருவா? ஒருவர் உயிரைக்கூட பிறர் கேட்டால் தரச் சம்மதிக்கலாம். உரிமையை மட்டும் விட்டுத்தர சம்மதிக்கவே கூடாது, என்று வசிஷ்டரைத் தூண்டிவிட்டு பூவுலகுக்கும் அனுப்பினான்.

    வசிஷ்டரும் அயோத்தி அரண்மனையை அடைந்தார்.

    இங்கேயும் இந்திரனே வசிஷ்டர் வரையில் அவர் கோபத்தை அதிகரிக்கச் செய்வது போல, காவலாளிகள் மூலம் வசிஷ்டரை உள்ளே விடாமல் அரண்மனை வாயிலிலேயே தடுத்து நிறுத்தினான். இது எதுவும் தெரியாமல் நிமி அரண்மனைக்குள் இருந்தான். வசிஷ்டரோ நிமிதான் இப்படி அடுக்கடுக்காய் தவறு செய்கிறான் என்று கருதி ஆத்திரம் கொண்டார்.

    ஹே நிமி... என்னை அலட்சியம் செய்ததோடு, குருவின் கட்டளையையும் நீ மீறிவிட்டாய். உன்னை சபிக்கிறேன். எந்த உடலோடு நீ இந்த காரியங்களையெல்லாம் செய்தாயோ, அந்த உடல் உனக்கு இல்லாது போகட்டும். உடம்பை மரணத்தால் இழந்த துர் ஆத்மாக்கள் போல நீ அலைந்து திரிந்து கஷ்டப்படு... என்று சபித்துவிட்டார்.

    அதைக்கண்ட இந்திரனுக்கோ கொண்டாட்டம்! உடம்பை இழந்த நிமி பெரிதும் வருந்தினான். இவ்வாறு தனக்கு ஒருநிலை ஏற்பட இந்திரன்தான் காரணம் என்ற போதிலும், நிமியின் வருத்தமும் கோபமும் வசிஷ்டர் மேலேயே சென்றது.

    ஏனென்றால் இந்திரன் புலன்களை அடக்கியாளும் ஒருவனல்ல. அதன் போக்கில் போகும் ஒரு ராஜன். வசிஷ்டர் அப்படியல்ல. அவர் புலன்களை அடக்கியாண்ட மகரிஷி. உணர்வுகளை வென்றவர். குறிப்பாக அவர் கோபமே படக்கூடாது. அப்படிப்பட்டவர் தன் விஷயத்தில் கொஞ்சமும் யோசிக்காமல், இந்திரனின் சூழ்ச்சிக்கு பலியாகி தன்னையும் சபித்துவிட்டாரே என்று கருதியவன், எதிர்காலத்தில் இந்திரனும் தன் செயலுக்காக வருந்த வேண்டும், வசிஷ்டரும் தன் வேதனையை உணரவேண்டும் என்று முடிவு செய்து, இல்லாத உடம்போடு வசிஷ்டரைத் தேடிச்சென்று அவர்முன் தோன்றாமல் தோன்றி உண்மையில் நடந்ததைக் கூறியவன், வசிஷ்டரே... என் விஷயத்தில் இந்திரனைவிட நீங்களே பெரிதும் தவறிழைத்தவர் ஆவீர். நடந்ததை நீங்கள் ஞானக்கண் கொண்டே பார்க்கவில்லை. ஊனக் கண்ணால் பார்த்து என் வரையில் தவறிழைத்துவிட்டீர். நான் பூலோக மானுடனாக இருப்பினும் சூரியனின் வம்சாவளியில் வருபவன். அந்தவகையில் நானும் தேவனே. எனக்கும் சபிக்கும் சக்தி உண்டு என்ற நிமி, ‘என்னைப்போலவே உங்களுக்கும் உருவம் இல்லாது போகட்டும்’ என்று சபிக்கவும் செய்தான்.

    நிமியின் சாபம் உடனேயே வேலை செய்தது. வசிஷ்டர் தன் தவ உடலை இழந்தார். பிறகே தன் தவறையும் உணர்ந்தார்! என்று வியாசர் வசிஷ்டர் உடலிழந்த சம்பவத்தைக் கூறிமுடிக்கவும், ஜெனமே ஜெயனும் தனது கேள்வியை அதன் நிமித்தம் அவரிடம் கேட்கத் தொடங்கினான்.

    முனிவர் பெருமானே! இந்திரன் இவ்வளவு மோசமானவனா? தேவர்களின் தலைவன் இப்படியா நடந்து கொள்வான்? இப்போது பாருங்கள், ஒருவருக்கு இருவர் உடம்பை இழந்துவிட்டனர் என்றான்.

    இந்திரனின் செயல்பாட்டை மேலோட்டமாய்ப் பார்த்தால் இப்படித்தான் கேட்கத் தோன்றும். ஆனால் உண்மையில் இந்திரன் மானுடர்களை சோதிக்கிறான். இந்த சோதனையில் தேருகிறவர்களே உண்மையில் மேலானவர்கள்...

    அதற்காக இப்படியெல்லாமா சோதிப்பார்கள். சரி... அதன் பிறகு என்னாயிற்று? இருவருக்கும் சாபவிமோசனம் எப்படி கிடைத்தது?

    சொல்கிறேன். வசிஷ்டர் தன் தவசக்தி காரணமாக எங்கும் செல்லமுடிந்தவர் ஆதலால் பிரம்மலோகம் சென்று, பிரம்மாவிடம் தன் சாபநிவர்த்திக்காக வேண்டி நின்றார். பிரம்மனும் வழியைக் காட்டி அருளினார்...

    அது என்ன வழி குருவே?

    ஒருமுறை உடம்பை இழந்தவர்கள் திரும்ப அதைப் பெற இயலாது. அந்த உடல் மண்ணாகவோ, சாம்பலாகவோ அல்லாவிடில் விண்ணில் புகையாகவோ கரைந்துவிடும். எனவே புதிய உடல் கிடைக்க வேண்டுமென்றால் மறுபிறப்பு போல் பெண்ணின் கருவில் கலந்து, பின் உருக்கொண்டு பிறந்த நொடி, அந்த உடம்பை வேகமாய் வளரச்செய்து தமதுடம்பாக ஆக்கிக்கொள்ளலாம்.

    இப்படியும் ஒரு வழி உள்ளதா?

    எல்லாருக்கும் இது சாத்தியமில்லை ஜெனமே ஜெயா. சித்தர்கள், ரிஷிகள் முதலானோருக்கு மட்டுமே உண்டு.

    அவர்களுக்கு மட்டும் எப்படி சாத்தியம்?

    அவர்கள் தவத்தால் உடம்பை அடக்கி வெற்றி கண்டவர்கள். உடம்பின் உட்கூறுகளை அறிந்து கொண்டு, அதன்மேல் ஆதிக்கம் புரிபவர்கள். எனவே அவர்களுக்கு இது சாத்தியமே...

    அப்படியானால் வசிஷ்டர் எந்தப் பெண்ணின் கருவில் திரும்பச்சென்று சேர்ந்தார்?

    அவர் நேராக அப்படிச் செய்யவில்லை. பிரம்மா அவரை மித்ரவருணரின் உடம்பில் தற்காலிகமாகக் கலக்கச் சொன்னார்.

    ஆச்சரியமாக உள்ளதே. இப்படி இன்னொருவர் உடலில் புகுந்து வாழ இயலுமா?

    ஒருவர் உடலை அவருக்கே தெரியாமல் பிடித்தால் அது ஆவியின் செயல்... தெரிந்து பிடித்தால் அது ஆத்மாவின் செயல்.

    ஆத்மா, ஆவி - என்ன வேறுபாடு?

    வடிவில் வேறுபாடில்லை. ஆனால் எண்ணங்கள் அளவில் பெரிதும் வேறுபாடுண்டு. ஆத்மாவுக்கு வழிமுறைகள் தெரியும். அதற்கு இடம், பொருள் என்னும் கட்டுமானம் கிடையாது. ஆவி அப்படியல்ல...! இது வழிமுறை தெரியாதது. பாவத்தின் காரணமாகவே அது ஆவியானது. எனவே அலைந்த வண்ணமே இருக்கும்.

    வசிஷ்டர் வரையில் என்ன நடந்தது?

    ‘வசிஷ்டரின் ஆன்மவுடல் மித்ரவருணருடன் கலந்தது. மித்ரவருணரும் இதற்கு இடமளித்தார். ஒரு நாள் மித்ரவருணர் தேவலோக மாதுவான ஊர்வசியைக் கண்டு மோகித்து அவளோடு கூடினார். இவர் ஒரு முனிவர். மோகத்தின் உச்சத்தில் இவருடைய தேஜஸ் எனப்படும் விந்துவானது இவரிடமிருந்து வெளியேறி அவரது ஆசிரமத்திலுள்ள பூஜைக்கான கும்பம் ஒன்றில் விழுந்தது. கும்பம் எனப்படுவதும் பெண்ணின் கருவறை போன்றதே. எனவே அதில் விழுந்த மித்ர வருணரின் விந்து மிக வேகமாக பிள்ளை வடிவம் கொண்டு மறுஜென்மமும் அடைந்து விட்டது. இதில் ஒரு ஆச்சரியம் என்ன வென்றால் மித்ரவருணரின் தேஜசில் ஒருவர் முதலில் தோன்றிட, அவரே அகத்தியர் என்றானார்.’

    யார் அது... நாம் எல்லாரும் பெரிதும் மெச்சும் அகத்திய மாமுனிவரா?

    "அவரேதான்! அகத்தியரும் வசிஷ்டரும்

    Enjoying the preview?
    Page 1 of 1