Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paravasamoottum Bakthi Kathaigal
Paravasamoottum Bakthi Kathaigal
Paravasamoottum Bakthi Kathaigal
Ebook200 pages1 hour

Paravasamoottum Bakthi Kathaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆன்மிகத்திற்குப் புகழ் பெற்ற நாடு நம் இந்திய நாடு. இந்தியாவின் தலைசிறந்த இரண்டு இதிகாசங்கள் இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகும். இந்து மதத்தில் ஏராளமான ஆன்மிகக் கதைகள் உள்ளன. இவற்றில் 60 ஆன்மிகக் கதைகளைத் தேர்வு செய்து “பரவசமூட்டும் பக்திக் கதைகள்” என்ற நூலினை எளிய நடையில் எழுதியுள்ளேன். புராண நீதிக்கதைகளைப் படித்து இதன் உட்பொருளை மனதில் நிறுத்தி உங்கள் வாழ்க்கையை நீங்கள் செம்மையாக அமைத்துக் கொள்ளலாம்.

Languageதமிழ்
Release dateApr 8, 2023
ISBN6580138809705
Paravasamoottum Bakthi Kathaigal

Read more from R.V.Pathy

Related to Paravasamoottum Bakthi Kathaigal

Related ebooks

Reviews for Paravasamoottum Bakthi Kathaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paravasamoottum Bakthi Kathaigal - R.V.Pathy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பரவசமூட்டும் பக்திக் கதைகள்

    Paravasamoottum Bakthi Kathaigal

    Author:

    ஆர். வி. பதி

    R.V.Pathy
    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. நசிகேதனின் கதை

    2. அகலிகையின் கதை

    3. அனுமன் பெற்ற சாபம்

    4. ததிபாண்டனின் கதை

    5. அபிராமி

    6. தனுர் வித்தை

    7. பசி தீர்த்த அருகம்புல்

    8. மண்ணைத் தின்ற கண்ணன்

    9. ஏகலைவன்

    10. அர்ஜீனன் விட்ட அம்பு

    11. நல்லதும் கெட்டதும்

    12. சிபியின் கதை

    13. காலவ முனிவர்

    14. பூதத்தைத் தின்ற கண்ணன்

    15. முனிவர் பெற்ற தண்டனை

    16. நளாயினி

    17. எது சிறந்த தர்மம்?

    18. கட்டுப்பட்ட கண்ணன்

    19. சுகர் முனிவர்

    20. சாகா வரம்

    21. வன்னி இலை மகிமை

    22. சூரியக்கோயில் பிறந்த கதை

    23. மகிஷாசுரமர்த்தினி

    24. தங்கமழை

    25. பாரிஜாதப்பூ

    26. தண்ணீரில் எரிந்த விளக்கு

    27. சூரியபகவானின் அவதாரம்

    28. சாயாதேவி

    29. கர்வம்

    30. கிளி கேட்ட வரம்

    31. வினைப்பயன்

    32. ஜடாசுர வதம்

    33. பீஷ்மர் கதை

    34. கர்ணன் பெற்ற சாபம்

    35. பீமன் அனுமனைச் சந்தித்த கதை

    36. பரந்த மனம்

    37. தர்மம் தவறாத தருமர்

    38. திலோத்தமை

    39. வால்மீகி முனிவர்

    40. நித்ராத்வம்

    41. காந்தாரியின் சாபம்

    42. கௌசிகன்

    43. சரணாகதி

    44. பரீட்சித்து மகாராஜா

    45. சர்வம் கிருஷ்ணார்ப் பணம்

    46. தானத்தில் சிறந்தவர் யார்?

    47. பொய்மான்

    48. துளசி மகிமை

    49. பணிவு

    50. அர்ஜீனன் சபதம்

    51. எது சிறந்த உணவு?

    52. துருவன்

    53. அருகம்புல்லின் மகிமை

    54. நாளை பிடிக்கிறேன்

    55. பக்தனைக் காத்த இராமபிரான்

    56. வைர மூக்குத்தி

    57. சாப விமோசனம்

    58. விநாயகரின் விளையாட்டு

    59. முருகன் தந்த முதலடி

    60. காளிங்க நர்த்தனம்

    என்னுரை

    ஆன்மிகத்திற்குப் புகழ்பெற்ற நாடு நம் இந்திய நாடு. இந்தியாவின் தலைசிறந்த இரண்டு இதிகாசங்கள் இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகும். இந்து மதத்தில் ஏராளமான ஆன்மிகக் கதைகள் உள்ளன. இவற்றில் 60 ஆன்மிகக் கதைகளைத் தேர்வு செய்து பரவசமூட்டும் பக்திக் கதைகள் என்ற நூலினை எளிய நடையில் எழுதியுள்ளேன். புராண நீதிக்கதைகளைப் படித்து இதன் உட்பொருளை மனதில் நிறுத்தி உங்கள் வாழ்க்கையை நீங்கள் செம்மையாக அமைத்துக் கொள்ளலாம்.

    பரவசமூட்டும் பக்திக் கதைகள் என்ற இந்த நூலை மின்னூலாக வெளியிடும் புஸ்தகா நிறுவனத்திற்கு நன்றிகள் பல.

    ஆர்.வி. பதி

    மார்ச் 2023

    1. நசிகேதனின் கதை

    விசுவஜித். அந்நாட்களில் இது ஒரு பிரசித்தி பெற்ற யாகம். இந்த யாகத்தை முழுமையாகச் செய்பவன் உலகத்தையே ஆளும் தகுதி படைத்தவனாகிறான். உலகம் முழுவதையும் ஆளவேண்டும் என்ற எண்ணம் அந்நாளில் ஒருவனுக்கு ஏற்பட்டது. அவன் பெயர் வாஜசிரவஸ். பெரும் செல்வந்தனான அவனுக்கு விசுவஜித் யாகத்தைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் விதிப்பயனால் ஏற்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவன் செய்தான். இந்த யாகத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால் தன்னிடம் உள்ள அனைத்தையும் யாகத்தைச் செய்பவன் பிறருக்கு தானமாகத் தந்துவிட வேண்டும். அப்போதுதான் உலகத்திலுள்ள அனைத்தும் அவனுக்குச் சொந்தமாகும்.

    யாகத்தின் முடிவில் வாஜசிரவஸ் தன்னிடமுள்ள அனைத்துச் செல்வங்களையும் தானம் செய்ய வேண்டும். ஆனால் வாஜசிரவஸோ மாபெரும் தவறு ஒன்றைச் செய்தான். தன்னிடம் இருந்த செல்வத்தில் நல்லவற்றையெல்லாம் தானே வைத்துக்கொண்டு ஒன்றுக்கும் உதவாத கிழட்டுப்பசு முதலானவற்றை தானமாகத் தந்தான்.

    வாஜசிரவஸிற்கு ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் நசிகேதன். நசிகேதன் தன் தந்தை செய்யும் மாபெரும் தவறைப் பார்த்து வருந்தினான். இதனால் இரண்டு விஷயங்கள் நடைபெறும். யாகம் செய்வதற்கான பலன் கிடைக்காமல் போவது முதல் விஷயம். மேலும் ஒன்றுக்கும் உதவாத பொருட்களைத் தானம் செய்வதால் நரகம் செல்ல வேண்டிவரும் என்பது இரண்டாவது விஷயம். தன் தந்தையார் செய்த தவற்றை நாசுக்காகச் சுட்டிக்காட்ட விரும்பி அவ்வாறே செய்தான் நசிகேதன்.

    நேரடியாகக் கூறினால் தன் தந்தை கோபித்துக் கொள்வார் என்பதற்காக மறைமுகமாக அவருடைய தவறைச் சுட்டிக்காட்டினான். ஆனால் தந்தையாரோ அதை ஏற்பதாய் இல்லை. கடைசி முயற்சியாக தன் தந்தையிடம் ஒரு கேள்வியைக் கேட்டான் நசிகேதன்.

    தந்தையே விசுவஜித் யாகத்தைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். என்னை யாருக்கு தானமாகத் தரப்போகிறீர்கள்?

    நசிகேதனின் தந்தை இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனவே அவன் மீண்டும் தன் தந்தையிடம், என்னை யாருக்கு தானமாகத் தரப் போகிறீர்கள்? என்று கேட்டான்.

    இப்போதும் வாஜசிரவஸ் அதைப் பொருட்படுத்தவில்லை.

    நசிகேதன் மூன்றாம் முறையாக அக்கேள்வியினை கேட்க, அதனால் பெருங்கோபமுற்ற வாஜசிரவஸ், உன்னை எமனுக்கு தானமாகத் தருகிறேன் என்று கூறிவிட்டான்.

    இதனால்தான் கோபத்தில் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். மேலும் கோபம் ஏற்படும் சமயங்களில் அமைதி காப்பதே சிறந்த செயலாகும்.

    சிறிதுநேரம் கழித்து தான் கூறியதன் பொருளை உணர்ந்த வாஜசிரவஸ் மிகவும் வருந்தினான்.

    நசிகேதன் தன் தந்தையை மிகவும் மதிப்பவன். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பது ஆன்றோர் வாக்கு. எனவே அவருடைய வாக்குப்படி எமலோகம் புறப்பட ஆயத்தமானான். புறப்படும் முன்னர் கவலையில் ஆழ்ந்திருந்த தன் தந்தையிடம் வாழ்க்கையின் உண்மைகளை எடுத்துரைத்து அவரைச் சமாதானப்படுத்திவிட்டுப் புறப்பட்டான்.

    நசிகேதன் எமலோகம் சென்றபோது எமதர்மன் அங்கே இல்லை. இதனால் அவன் எமதர்மனின் மாளிகையின் முன்பு மூன்று நாட்கள் காத்திருந்தான். மூன்று நாட்கள் கழித்து எமதர்மன் தனது மாளிகைக்குத் திரும்பினான். அவனிடம் அவனுடைய மந்திரிகள் நசிகேதன் மூன்று நாட்களாக தங்களைச் சந்திப்பதற்காக காத்திருக்கிறான் என்ற விஷயத்தைக் கூறினார்கள்.

    தன்னைச் சந்திப்பதற்காக வந்தவனை மூன்று நாட்கள் காத்திருக்க வைத்துவிட்டோமே என்று நினைத்து வருந்தினான் எமதர்மன். உடனே அவன் நசிகேதனை நாடிச் சென்றான்.

    நசிகேதனே, என்னைச் சந்திக்க வந்த உன்னை மூன்று நாட்கள் காக்க வைத்துவிட்டேன். இதை மிகப்பெரிய தவறாக நான் கருதுகிறேன். உன்னை மூன்று நாட்கள் காக்க வைத்தமைக்காக நீ என்னிடம் மூன்று வரங்களைக் கேட்டுப் பெறலாம்.

    இவ்வாறு நசிகேதனிடம் எமதர்மன் கூறினான்.

    யோசித்த நசிகேதன் முதலாவதாய் ஒரு வரத்தைக் கேட்டான்.

    எமதர்மனே, நான் இங்கிருந்து திரும்பிச் சென்றதும் எனது தந்தையார் என்னை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் எக்காரணத்தைக் கொண்டும் என்மீது கோபப்படக் கூடாது. என்னை முழுமையான தெளிந்த மனத்துடன் தன் மகனாய் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுவே நான் வேண்டும் முதல் வரம்.

    நசிகேதா, இங்கிருந்து உன் இருப்பிடம் சென்றதும் உனது தந்தை உன்மீது கோபப்படாமல் உன்னை முழுமையாக ஏற்றுக்கொள்ளுவார்.

    இப்போது நசிகேதன் தனது இரண்டாவது வரத்தைக் கேட்டான்.

    சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக் கூடிய யாகத்தைப் பற்றி முழுமையாக அறிந்தவன் நீ. அந்த யாகத்தை நீ எனக்கு போதிக்க வேண்டும்.

    சொர்க்கத்திற்குச் செல்லக் கூடிய யாகத்தைப் பற்றி அறிய விரும்பினான் நசிகேதன்.

    நசிகேதனே, சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக் கூடிய யாகத்தைப் பற்றிச் சொல்லுகிறேன். கவனமாய் கேள்.

    எமதர்மன் அந்த யாகத்தைப் பற்றி கூற மிக கவனமாய் அதைக் கேட்ட நசிகேதன் அப்படியே திருப்பிச் சொன்னான். இதனால் மகிழ்ச்சி அடைந்த எமதர்மன், இனி இந்த யாகம் உன்னுடைய பெயரால் நசிகேத யாகம் என்று அழைக்கப்படும் என்று கூறி அழகிய இரத்தின மாலை ஒன்றையும் பரிசளித்தான்.

    இப்போது நசிகேதன் எமதர்மராஜனிடம் தனது மூன்றாவது வரத்தைக் கேட்டான்.

    எமதர்மனே, மரணத்திற்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இதுவே நான் விரும்பும் மூன்றாவது வரமாகும்.

    ஆனால் எமதர்மனோ இவ்வரத்தைத் தர விருப்பமின்றி, என்னை கட்டாயப்படுத்தாதே. நீ விரும்பும் வரை வாழலாம். நூறு ஆண்டுகள் ஆயுள் உடைய பிள்ளைகளைப் பெறலாம். ஏராளமாக பொன், வைரம், வைடூரியம் என எதை வேண்டுமானாலும் கேள் தருகிறேன். நீண்ட ஆயுள், நிலைத்த செல்வம் இரண்டையும் மூன்றாவது வரமாய் பெற்றுக்கொள் என்று சொன்னான் எமதர்மராஜன்.

    ஆனால் நசிகேதனோ, இவை எதுவும் தனக்கு வேண்டாம் எனவும் மரணத்திற்குப் பின்னால் மனிதனின் நிலை என்ன என்பதை மட்டுமே அறிய வேண்டும் என்று உறுதிபட தெரிவித்தான்.

    நசிகேதனின் பிடிவாதத்தை உணர்ந்த எமதர்மராஜன் வேறுவழியின்றி ஆத்மாவின் தத்துவத்தை அவனுக்கு போதித்து ஏராளமான பரிசுகளை அளித்து திருப்பி அனுப்பி வைத்தான்.

    நசிகேதனை அவனுடைய தந்தையார் எமதர்மன் அருளிய வரத்தின்படி மிக்க அன்போடு வரவேற்று ஏற்றுக்கொண்டார்.

    2. அகலிகையின் கதை

    ஒருமுறை நாரதர் இந்திரனின் சபைக்குச் சென்றார். இந்திரன் அவரை மரியாதையோடு வரவேற்று அமர வைத்து உபசரித்தான்.

    மூவுலகங்களிலும் சஞ்சரிக்கும் நாரதமுனியே, சமீபகாலத்தில் ஏதாவது அதிசயத்தைக் கண்டிருந்தால் அதை எனக்குச் சொல்லுங்கள்.

    யோசித்த நாரதர் இந்திரனிடம் ஒரு விஷயத்தைத் தெரிவித்தார்.

    "இந்திரனே, பூலோகத்தில் ஒரு அழகியைக் கண்டேன். அத்தகைய அழகுமிக்க பெண்ணை நான் இதுவரைக் கண்டதில்லை. ஐம்புலன்களையும் அடக்கி ஆண்ட கௌதம முனிவரே அவளுடைய அழகில் மயங்கி

    Enjoying the preview?
    Page 1 of 1