Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Appuvin Cycle
Appuvin Cycle
Appuvin Cycle
Ebook72 pages39 minutes

Appuvin Cycle

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பு வணக்கம். உங்களுக்காக நான் எழுதியுள்ள மற்றுமொரு சிறார் நாவல் “அப்புவின் சைக்கிள்”. அப்பு என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒரு சைக்கிள் வாங்க ஆசைப்பட அதனால் அவன் வாழ்க்கையில் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களே இந்த நாவலின் உள்ளடக்கம். அப்பு தான் ஆசைப்பட்ட சைக்கிளை வாங்கினானா இல்லையா என்பதை இந்த நாவலைப் படித்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

Languageதமிழ்
Release dateDec 3, 2022
ISBN6580138809316
Appuvin Cycle

Read more from R.V.Pathy

Related to Appuvin Cycle

Related ebooks

Reviews for Appuvin Cycle

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Appuvin Cycle - R.V.Pathy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அப்புவின் சைக்கிள்

    (சிறார் நாவல்)

    Appuvin Cycle

    Author:

    ஆர். வி. பதி

    R.V.Pathy
    For more books

    https://www.pustaka.co.in/home/author/rv-pathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அப்புவின் வீடு

    2. சைக்கிள் கணக்கு

    3. வந்தது வம்பு

    4. அப்பு கண்ட கனவு

    5. கிடைத்தது பரிசு

    6. சார் பேப்பர்

    7. முதல் சம்பளம்

    8. ஸ்லோ சைக்கிள்

    9. கரைந்து போன காசு

    10. காணாமல் போன சைக்கிள்

    11. கிளியண்ணே

    12. பாலாறு பரவசம்

    13. சில திருப்பங்கள்

    14. சிவராமன் சார்

    15. அப்புவின் சைக்கிள்

    E:\Priya\Book Generation\Appuvi Cycle\cycle1-min.jpg

    ஆர்.வி.பதி

    60 குமுதம்

    அணுபுரம் 603127

    செங்கற்பட்டு மாவட்டம்

    9443520904

    rvpathi@yahoo.com

    சுட்டிகளுக்கு,

    அன்பு வணக்கம். உங்களுக்காக நான் எழுதியுள்ள மற்றுமொரு சிறார் நாவல் அப்புவின் சைக்கிள். அப்பு என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒரு சைக்கிள் வாங்க ஆசைப்பட அதனால் அவன் வாழ்க்கையில் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களே இந்த நாவலின் உள்ளடக்கம். அப்பு தான் ஆசைப்பட்ட சைக்கிளை வாங்கினானா இல்லையா என்பதை இந்த நாவலைப் படித்து நீங்கள் அறிந்து கொள்ளலாம். சைக்கிளைப் பற்றிய பல சுவாரசியமான தகவல்களை இந்த நாவலில் ஆங்காங்கே எழுதியுள்ளேன். சைக்கிளை முன்னிருத்தும் இந்த சிறார் நாவல் உங்களைக் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

    சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னர் சைக்கிள் பலருக்கு ஒரு நண்பனைப் போல உடனிருந்து நன்மைகளைச் செய்துள்ளது. உடல் நலத்தையும் காத்தது. தற்கால நவீன வாழ்க்கையில் சைக்கிளை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துபோய் விட்டது.

    இந்த நாவலில் எழுதப்பட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனையே என்பதை இதன் மூலம் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

    அப்புவின் சைக்கிள் என்ற சிறார் நாவலை மின்னூலாகப் பிரசுரித்துள்ள புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

    அன்புடன்

    ஆர்.வி.பதி

    24 நவம்பர் 2022

    1. அப்புவின் வீடு

    அந்த சிறிய கிராமத்தின் பெயர் நத்தம். மொத்தமாக முப்பது தெருக்கள் இருக்கலாம். நத்தத்தில் தொடக்கப்பள்ளி உண்டு. நத்தத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் வெங்கம்பாக்கம் என்றொரு ஊர் உண்டு. அந்த ஊரில் ஒரு மேல்நிலைப்பள்ளி இருந்தது. வெங்கம்பாக்கத்தைச் சுற்றிலும் பல கிராமங்கள் அமைந்திருந்தன. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு தொடக்கப்பள்ளி இருந்தது. இந்த அனைத்து கிராமங்களுக்குமாக சேர்த்து வெங்கம்பாக்கத்தில் மேல்நிலைப் பள்ளி இயங்கிக் கொண்டிருந்தது. நத்தத்தை ஒட்டி மற்றொரு புறத்தில் பாலூர் அமைந்திருந்தது. நத்தத்தைவிட சற்றே பெரிய கிராமம். அங்கு ஒரு உயர்நிலைப் பள்ளி இயங்கிக் கொண்டிருந்தது.

    அப்புவின் வீடு நத்தத்தில் இருந்தது. பத்துக்குப் பத்து அளவில் ஒரு சிறிய ஹால் மற்றும் அதை ஒட்டி ஒரு சிறிய சமையல் அறை. சீமை ஓடு வேய்ந்த வீடு. உள்ளே மட்டும் பூச்சு வேலை செய்யப்பட்டிருந்தது. வெளியே நாலாபக்கமும் பூச்சு வேலை செய்யாததால் செங்கற்கள் தெரியும்படியாக இருந்தது. அப்புவின் வீட்டில் அரசு வண்ணத் தொலைக்காட்சி ஒன்று

    Enjoying the preview?
    Page 1 of 1