Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Siri Vilaiyadal Sirippu Kathaigal - Thoguppu 2
Siri Vilaiyadal Sirippu Kathaigal - Thoguppu 2
Siri Vilaiyadal Sirippu Kathaigal - Thoguppu 2
Ebook169 pages1 hour

Siri Vilaiyadal Sirippu Kathaigal - Thoguppu 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தத் தொகுப்பில் இருக்கும் அனைத்து சிரி கதைகளும் மாம்பலம் டைம்ஸ் இதழில் சிரிவிளையாடல் என்ற தலைப்பில் வாரா வாரம் பிரசுரமானவை. அதில் 41 முதல் 80 வரையான 40 கதைகளின் தொகுப்பு தான் இந்த நூல். எல்லாமே கலகலப்பான தனித் தனி நகைச்சுவைக் கதைகள்.

Languageதமிழ்
Release dateJan 27, 2024
ISBN6580141510414
Siri Vilaiyadal Sirippu Kathaigal - Thoguppu 2

Read more from Nandhu Sundhu

Related authors

Related to Siri Vilaiyadal Sirippu Kathaigal - Thoguppu 2

Related ebooks

Related categories

Reviews for Siri Vilaiyadal Sirippu Kathaigal - Thoguppu 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Siri Vilaiyadal Sirippu Kathaigal - Thoguppu 2 - Nandhu Sundhu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சிரி விளையாடல் சிரிப்புக் கதைகள் - தொகுப்பு 2

    Siri Vilaiyadal Sirippu Kathaigal - Thoguppu 2

    Author:

    நந்து சுந்து

    Nandhu Sundhu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/nandhu-sundhu

    பொருளடக்கம்

    பலராம கோபால்

    பிரித்து வாழ வேண்டும்

    சனிக்கிழமை

    கண்காணிப்பு

    நச்சரி ரைம்ஸ்

    நரசிம்ம நேரம்

    சொல்லாதே யாரும் கேட்டால்

    அம்மான்னா சும்மாவா...

    படிப்பு – ஒரு கிலோ மீட்டர்

    தொங்காதே தம்பி தொங்காதே...

    சுத்தமே இது பொய்யடா...

    எடக்கு மடக்கு மாப்பிள்ளை

    வழுக்கு எண் 18

    பரம்பரைப் பணக்காரன்

    புத்தம் புதுக் காலை

    மேதா விலாசம்

    மாம்பலத்து வண்டு

    வெள்ளிக் கிழமை வரதன்

    சின்னக் கம்பி

    மணீஸ் கபே மசால் தோசை

    சாவி த்ரீ

    கர் ஸ்டோரி

    பா(மி)னி பூரி

    ஆத்மாவின் அபராதம்

    வெண்டைக்காய் வியாசம்

    ராம் அவுர் மாம்

    சிம் திங்…சிம் திங்

    நாற்பது வயதினிலே...

    பழையன கழிதல்

    சாயமே இது பொய்யடா...

    உடையப்பா

    தாம்பூல ரகசியம்

    அந்த பத்து நாட்கள்

    மயக்கமா... கலக்கமா

    குணாக் காணும் காலங்கள்

    கைலாசத்தின் லாஸ்

    மூன்று பிடி

    மாவிலை

    ராணி v/s ஆணி

    சிரிவிளையாடல் – விளையாட்டான சிரிப்புக் கதைகளின் இரண்டாம் தொகுப்பு இந்த நூல்.

    இத்தொகுப்பில் அடுத்த நாற்பது கதைகள் உள்ளன.

    மாம்பலம் டைம்ஸ் இதழில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ச்சியாக வெளியான கதைகள் தான் இவை.

    முன்னதாக இந்தக் கதைகளை வெளியிட்ட மாம்பலம் டைம்ஸ் இதழ் ஆசிரியர் திரு. ராமகிருஷ்ணன் அவர்களுக்கும், அது சமயம் பொருத்தமாக ஓவியங்கள் வரைந்து சிறப்பு செய்த ஓவியர் திரு. அரஸ் அவர்களுக்கும் நன்றி.

    இப்புத்தகத்தை நேர்த்தியான முறையில் பதிப்பித்த புஸ்தகாவுக்கு நன்றி.

    அன்பன்

    நந்து சுந்து

    போன்: 94431 81615

    பலராம கோபால்

    ஹலோ சுப்புவா? நான் தான் கோபாலன் பேசறேன். இங்கே மருமக வீட்டுக்கு வந்திருக்கேன் என்றார் போனில் கோபால்.

    மகன் வீடுன்னு சொல்லேன். அதென்ன மருமக வீடு?

    இங்கே மருமக தான் எல்லாம். மகன் ஒரு டம்மி. கல்யாணம் ஆகி ஆறே மாசத்துல சரண்டர் ஆகிட்டான்

    அதனால உனக்கென்ன?

    மருமக என்னை காத்தால ஏந்திரிச்சு காபி டிகாஷன் போடச் சொல்றா?

    வாட்? மருமக தானே மாமனாருக்குக் காபி கொடுக்கனும்? நீ ஈவினிங் என்னை பார்க்ல வந்து பாரு. நான் ஒரு ஐடியா சொல்றேன் என்றார் சுப்பு.

    மாலை. பார்க்குக்குப் போனார் கோபால். பலரும் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்கள்.

    எதிரே ஒடிசலாக, கால்கள் இடற வாக்கிங் போய்க் கொண்டிருந்தார் ஒருவர்.

    அவரைக் காட்டிப் பேச ஆரம்பித்தார் சுப்பு.

    அதோ போறாரே அவர் பேர் பலராமன். நல்லா திடமா இருந்தாரு. இப்படித் தான் அவரோட மருமக காபி போடச் சொன்னா. அவரும் போட்டாரு. இப்போ இப்படி ஒல்லியா பல்லிராமன் ஆகிட்டாரு

    ஒரு சுற்று வந்ததும் மூச்சு வாங்க அந்த பலராமன் பெஞ்சில் அமர்ந்தார்.

    பாத்தியா. ஒரு ரவுண்டுக்கே மூச்சு வாங்கி உட்கார்ந்துட்டாரு. ஒரு காலத்துல இவர் சபரி மலைக்கு பெரு வழில போய்கிட்டிருந்தவரு. புலிப் பால் கூட கொண்டு வருவாரு. கேவலம் ஒரு டிகாஷனால இப்படி ஓய்ஞ்சு போயிட்டாரு

    விவரமா சொல்லுப்பா

    காத்தால ஏந்திரிச்சு டிகாஷன் போடுங்கன்னு மருமக சொன்னா. இவரும் அப்பாவியா டிகாஷன் போட்டாரு. அதுல தான் மாட்டிகிட்டாரு

    என்ன ஆச்சு?

    அப்படியே பாலும் காய்ச்சிடுங்களேன். பர்னர் பக்கத்துல தானே இருக்குன்னு சொன்னா

    அடடா. சர்க்கரை டப்பாவும் பக்கத்துல இருந்திருக்குமே

    அதே தான். ஒரு வாரம் போச்சு. அடுப்புல குக்கர் வைச்சிருக்கேன். நாலு விசில் வந்தா ஆஃப் பண்ணுங்கன்னு மருமக சொன்னா

    ஆஃப் செஞ்சாரா?

    ஆஃப் செஞ்சு தனக்குத் தானே ஆப்பு வைச்சிகிட்டாரு. பிரஷர் அடங்கினவுடனே மூடியைத் திறந்துடுங்களேன்னு ரெண்டு நாள்ல சொன்னா. இவரும் மூடியைத் திறந்தாரு. பூதம் புறப்பட்டுடுச்சு

    போச்சுடா

    உள்ளே பருப்பு வேக வைச்சிருக்கும். அதைத் தூக்கி பக்கத்து பர்னர்ல இருக்கற ரசம் பாத்திரத்துல போடுங்கன்னு சொன்னா. இதுல என்ன விசேஷம்னா ரசம் பாத்திரமே அடுப்புல இல்லே. இவர் தான் வைக்க வேண்டியதாப் போச்சு

    அடப்பாவமே

    அப்படியே கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி வாழைப்பூ வடை செய்யற வரைக்கும் வந்துட்டாரு

    What a pity!

    நாலே மாசம் தான். நானாவித பர்னர் சமர்ப்பயாமினு ஒரு நாலு பர்னர் அடுப்பு வாங்கி வைச்சிட்டா மருமக. டிகாஷன்ல ஆரம்பிச்சது டோக்ளால போய் முடிஞ்சிடுச்சு

    ஓ... குஜராத்தி டிஷ் எல்லாம் செய்ய வைச்சிட்டாளா?

    நீ வேற. அருணாச்சலப் ப்ரதேஷ் ஐட்டம் எல்லாம் இப்போ செய்யறாரு. இப்போ வீட்டுக்குப் போனவுடனே நைட் கேஸ் அடுப்பைத் துடைச்சு மேடைல கோலம் வேற போடனும் அவர்

    ஐயோ. அப்போ நானும் மேடைல கோலம் போட வேண்டியிருக்குமா?

    யார் கண்டது? நீ சிம்னில கூட கோலம் போட வேண்டி வரலாம்

    இப்போ என்ன செய்யறது? டிகாஷன் போடல்லேன்னா பெரிய பூகம்பமே வெடிச்சுடுமே

    உனக்கு டிகாஷன் போடத் தெரியுமா?

    தெரியும். குவியலா ஆறு ஸ்பூன் காபிப் பொடி போட்டு ஒரு கப் சுடு தண்ணீர் பில்டர்ல கொஞ்சம் கொஞ்சமா ஊத்தனும்

    பாவி. இப்படி பெர்ஃபெக்டா டிகாஷன் போட்டா நீ மாட்டிப்பே. மருமகளுக்குப் பிடிச்சுப் போய் டிகாஷன் போடற வேலையை ரெகுலரா உன் தலைலயே கட்டிடுவா. அப்புறம் நீயும் பலராமன் ஆகிடுவே

    என்ன செய்யலாம்?

    தப்புத் தப்பா டிகாஷன் போடு. ஒரே ஒரு ஸ்பூன் காபி பொடி போட்டு டிகாஷன் போடு. காபி கழனித் தண்ணி மாதிரி இருக்கும்

    நல்ல ஐடியாவா இருக்கே. உனக்கு எப்படித் தோனிச்சு?

    நான் ஆபீஸ்ல இப்படித் தான் செய்வேன். வேலை தப்புத் தப்பா செய்வேன். ஆபிசர் என் கிட்டே ஒரு வேலையும் கொடுக்க மாட்டாரு

    அடுத்த நாள் காலை. மருமகள் இன்னும் எழுந்திருக்கவில்லை. சுப்பு சொன்ன மாதிரி மிகவும் கேவலமாக டிகாஷன் போட்டார் கோபால்.

    ஏழரை மணிக்கு மருமகள் வந்தாள். டிகாஷனைப் பார்த்தாள்.

    வாவ்... வாட் எ டிகாஷன்! நான் Black coffee தான் குடிக்கறது வழக்கம். ஃப்ளைட்ல கொடுக்கற மாதிரி தண்ணியா டிகாஷன் கிடைக்காதான்னு ஏங்கிகிட்டிருந்தேன். நீங்க கொடுத்திட்டீங்க மாமா. எனக்கு அப்படியே ஆகாசத்துல பறக்கற மாதிரி இருக்கு. இனிமே டெய்லி நீங்களே டிகாஷன் போட்டுடுங்க என்றாள்.

    மருமகள் வானத்தில் பறந்து கொண்டிருந்தாள். கோபால் தான் கீழே விழுந்து விட்டார்.

    பிரித்து வாழ வேண்டும்

    வாஷிங் மெஷினிலிருந்து துணியை எடுத்தார் சித்ராவின் மாமனார். அவருடைய வேட்டியும் நைட் பேன்டும் ஒன்றுக்கொன்று மாட்டிக் கொட்டிருந்தன. கிட்டத் தட்ட ஸ்க்ரூ ஆணி மாதிரி சுருண்டிருந்தன.

    சில சமயம் அவருடைய அண்டர்வேர் அவரைக் கொடி மாதிரி பனியனைச் சுற்றிப் படர்ந்திருக்கும்.

    இப்படி கன்னாபின்னாவென்று துணிகள் வாஷிங் மெஷினில் ஆலிங்கனம் செய்து கொள்வதால் பெண்கள் துணிகளுடன் தன் துணிகளை அவர் போடுவதில்லை.

    சுருக்கு விழுந்த துணிகளைப் பிரிப்பதற்கு அவருக்கு சாமர்த்தியம் போதாது.

    மருமகள் சித்ராவிடம் Joint venture செய்திருந்த வேட்டியை நீட்டினார்.

    அம்மா... வேட்டியும் நைட் பேன்ட்டும் கவ்விகிச்சு. கொஞ்சம் பிரிச்சுக் கொடும்மா என்றார்.

    நேத்தும் இப்படித்தான் வேட்டி சுத்திகிச்சுன்னு கொடுத்தீங்க. நேத்தைய விட இன்னைக்கு சுத்தல் ரொம்ப பெருசா இருக்கே?

    நேத்து நாலு முழ வேட்டி. இன்னைக்கு எட்டு முழ வேட்டி

    இனிமே நீங்க ஒரு முழ வேட்டி கட்டுங்க என்று அலுத்துக் கொண்டாள் சித்ரா.

    ஒரு முழ வேட்டி என்பது பதினாறு வயதினிலே படத்தில் சப்பாணி கமல் கட்டியது என அவளுக்குத் தெரியவில்லை பாவம்.

    நீங்க ஒன்னு பண்ணுங்களேன் மாமா. மெஷின்ல போடறப்ப ரெண்டு துணியை ஒன்னோட ஒன்னா சுருட்டிப் போடுங்க. அது ஒரு வேளை மாட்டின துணிகளை தனித் தனியா பிரிச்சுத் துவைக்கலாம்

    இப்படியாக மாட்டி யோசித்தாள் சித்ரா.

    மாலை. மகள் மாலு வந்தாள்.

    அம்மா... இந்த இயர் போன் ஒயர் சிக்கு விழுந்திடுச்சு. பிரிச்சுக் கொடேன்

    எப்படிடீ சிக்கு விழுந்தது?

    தலைகாணிக்கு அடீல வைச்சிருந்தேன். சிக்கு விழுந்துடுச்சு

    உனக்கு தலைலயும் சிக்கு. தலைகாணிக்கு அடீலயும் சிக்கு. என்ன பொண்ணோ நீ?

    சுருண்டு படுத்திருந்த இரண்டு தலை நாகம் மாதிரி இருந்தது இயர் போன்.

    ஒரு சிங்கிள் ஒயர் சிக்கு விழுந்திருந்தாலே பிரிக்க வராது. இது திருச்சி பக்கத்துல காவிரியும் கொள்ளிடமும் பிரியற மாதிரி நடுவுல பிரிஞ்சு வேற இருக்கு. இதை எப்படி பிரிக்கறது?

    அம்மா... ப்ளீஸ்

    சரி. போ. பிரிக்கறேன்

    கால் மணி நேர போராட்டத்துக்குப் பிறகு அதைப் பிரித்தெடுத்தாள் சித்ரா.

    அடுத்த வாரம் வீட்டுக்கு உறவினர் பெண் உமா வந்திருந்தாள்.

    உதிரி மல்லிகைப் பூ சல்லிசா கிடைச்சது. சிரமம் பாக்காம மாலையா தொடுத்துக் கொடுத்திடேன் என்றாள். பிறகு நான் எங்கே போனாலும் கையோட நூல் கண்டும் கொண்டு போவேன். இந்தா என்று நீட்டினாள்.

    என்ன இது?

    நூல் கண்டு

    கண்டோட end எங்கே இருக்கு?

    கண்டு பிடிக்கனும். கண்டு பிடிச்சா ஈசியா பிரிச்சிடலாம். நீ பிரிக்கறதுல எக்ஸ்பர்ட்டாமே?

    சடுதியில் அந்த சிக்கலைப் பிரித்தெடுத்தாள் சித்ரா.

    "இனிமே

    Enjoying the preview?
    Page 1 of 1