Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaal Pona Pokkile...
Kaal Pona Pokkile...
Kaal Pona Pokkile...
Ebook178 pages1 hour

Kaal Pona Pokkile...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது பயணக் கட்டுரையா.. ஆன்மீகக் கட்டுரையா..அல்லது அனுபவக் கட்டுரையா? மூன்றும் சேர்ந்த கலவை இது. நடு நடுவே காமெடியும் கலாய்த்தலும் உண்டு. ஆக மொத்தம் இது ஒரு மசாலா தமிழ் சினிமா படம் போல. தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் கையைக் கடிக்காது.

இந்த கட்டுரையில் ஆங்காங்கே நகைச்சுவையை புகுத்தியிருக்கிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல. ஒரு குழுவாகப் போகும் போது ஒவ்வொரு மனிதரும் வித்தியாசமாய் நடந்து கொள்வார்கள். அதை கொஞ்சம் கவனித்து அவர்கள் குணாதிசயங்களை தேவையான இடங்களில் தூவியிருக்கிறேன்.

பயண அனுபவங்கள், அந்த ஊர் பற்றிய விபரங்கள், சற்றே தல புராணம் கொடுக்க முயற்சிக்கிறேன். என்னைப் பற்றிய சுய புகழ்ச்சி கண்டிப்பாக தவிர்க்கப் படும். தைரியமாகப் படிக்கலாம்.

இந்த கட்டுரையை படித்த பிறகு நாமும் இந்த தலங்களுக்கு எல்லாம் போக வேண்டும் என்ற ஆவல் உங்களுக்குள் தோன்றினால் இந்த கட்டுரை வெற்றி பெற்று விட்டதாக கருதப்படும்.

இப்போது ரயில் ஏறுவோமாக...

Languageதமிழ்
Release dateApr 14, 2021
ISBN6580141506808
Kaal Pona Pokkile...

Read more from Nandhu Sundhu

Related authors

Related to Kaal Pona Pokkile...

Related ebooks

Related categories

Reviews for Kaal Pona Pokkile...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaal Pona Pokkile... - Nandhu Sundhu

    https://www.pustaka.co.in

    கால் போன போக்கிலே...

    Kaal Pona Pokkile…

    Author:

    நந்து சுந்து

    Nandhu Sundhu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/nandhu-sundhu

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. தமிழ் நாடு எக்ஸ்ப்ரஸ்

    2. ரயில் பயணம்

    3. டில்லியில் குழப்பம்

    4. பயண திட்டத்தில் சிக்கல்

    5. தட்ச மகாதேவ் கோவில்

    6. மானச தேவி

    7. கங்கா ஆரத்தி

    8. ஹரித்வார் சாமியார்கள்

    9. மழையில் ரிஷிகேஷ்

    10. குரங்கு பாய்ந்தது.

    11. விஞ்ஞானக் கோவில்கள்

    12. பாதை திறந்தது

    13. ஆபத்தான வளைவுகள்

    14. தேவப் பிரயாகை

    15. மண் சரிந்தது

    16. ருத்ரப் பிரயாகை.

    17. வியூகம் தயாரானது

    18. சாலையில் பள்ளம்

    19. குதிரை ஏற்றம்

    20. மலைப் பயணம்.

    21. சிவ தரிசனம்

    22. மலை இறங்கினோம்

    23. ராம் பூர் திரும்பினோம்.

    24 மீண்டும் வந்த வழியே

    25. பத்ரி நாத் நெருங்குகிறது

    26. பத்ரி நாத் ஆலயம்

    27. முன்னோர்க்கு அஞ்சலி

    28. மானா கிராமம்.

    29. ஜோஷி மட்

    30. இமய மலை சூரியன்

    31. சுகர் – பரிக்ஷித் மகாராஜ்

    32. அக்‌ஷர் தாம்

    33. டில்லி கோவில்கள்

    34. வந்தனம்

    நன்றி

    இந்த பயணக் கட்டுரையை முதலில் விளையாட்டாக நான் சார்ந்திருந்த தமிழக எழுத்தாளர் குழும வாட்ஸ் அப் க்ரூப்பில் எழுத ஆரம்பித்தேன். முதல் அத்தியாயம் முடிந்தவுடனேயே நல்ல வரவேற்பு கிடைத்தது.

    பின்னர் தினம் ஒரு அத்தியாயமாக 34 அத்தியாயங்கள் எழுதினேன்.

    இதை அப்படியே முகநூலிலும் என் பக்கத்தில் பதிவிட்டேன். நான் எதிர் பார்த்ததை விட பாராட்டுகள் அதிகமாகவே கிடைத்தன.

    இந்த தொடர் முக நூலில் வந்து கொண்டிருக்கும் போது குமுதம் பத்திரிகையிலிருந்து தொடர்பு கொண்டு பத்திரிகையில் பிரசுரிக்கலாமா என்று கேட்டார்கள்.

    ஒரு எழுத்தாளனுக்கு இதை விட வேறென்ன வேண்டும்? உடனே சரியென்றேன்.

    இந்த பயணக் கட்டுரை குமுதம் பக்தியில் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் ஒரு தொடராக வந்தது. அழகிய வண்ணப் படங்களுடன்.

    இந்த தொடரை எழுதத் தூண்டிய தமிழக எழுத்தாளர் குழும நண்பர்களுக்கும், முக நூல் நட்புகளுக்கும், எனக்கு குமுதம் குழுமத்தில் சிறப்பானதொரு இடம் கொடுத்து வரும் குமுதம் ஆசிரியர் திரு. ப்ரியா கல்யாணராமன் அவர்களுக்கும், குமுதம் குழுமத்திற்கும் நன்றி தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன்.

    நந்து சுந்து

    முன்னுரை

    இது பயணக் கட்டுரையா..ஆன்மீகக் கட்டுரையா... அல்லது அனுபவக் கட்டுரையா? மூன்றும் சேர்ந்த கலவை இது. நடு நடுவே காமெடியும் கலாய்த்தலும் உண்டு. ஆக மொத்தம் இது ஒரு மசாலா தமிழ் சினிமா படம் போல. தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் கையைக் கடிக்காது.

    ஏழு வருடங்களுக்கு முன்பு சார் தாம் எனப்படும் யாத்திரை போனேன். அந்த யாத்திரையில் நிறைய சம்பவங்கள் நடந்தன. அதை நண்பர்களிடம் சொன்னேன். அதை இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியப் படுத்துமாறு என் வீட்டு வாசலில் சாலை மறியல் செய்தார்கள். எனவே இந்த தொடர் உங்கள் முன்னால்....

    நான் அக்மார்க் ஆன்மீக வாதி அல்ல. எனக்குத் தெரிந்ததை எழுதியிருக்கிறேன்.

    இந்த கட்டுரையில் ஆங்காங்கே நகைச்சுவையை புகுத்தியிருக்கிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல. ஒரு குழுவாகப் போகும் போது ஒவ்வொரு மனிதரும் வித்தியாசமாய் நடந்து கொள்வார்கள். அதை கொஞ்சம் கவனித்து அவர்கள் குணாதிசயங்களை தேவையான இடங்களில் தூவியிருக்கிறேன்.

    பயண அனுபவங்கள், அந்த ஊர் பற்றிய விபரங்கள், சற்றே தல புராணம் கொடுக்க முயற்சிக்கிறேன். என்னைப் பற்றிய சுய புகழ்ச்சி கண்டிப்பாக தவிர்க்கப் படும். தைரியமாகப் படிக்கலாம்.

    இந்த கட்டுரையை படித்த பிறகு நாமும் இந்த தலங்களுக்கு எல்லாம் போக வேண்டும் என்ற ஆவல் உங்களுக்குள் தோன்றினால் இந்த கட்டுரை வெற்றி பெற்று விட்டதாக கருதப்படும்.

    இப்போது ரயில் ஏறுவோமாக...

    1. தமிழ் நாடு எக்ஸ்ப்ரஸ்

    சென்னை செண்டிரல் ரயில் நிலையம். 2010 ம் வருடம் செப்டம்பர் மாதம் 18ம் நாள். இரவு 10 மணி. டில்லி செல்லும் தமிழ் நாடு எக்ஸ்ப்ரஸ் வண்டி ஆவின் பூத்தில் சூடான பால் குடித்துவிட்டுப் புறப்படத் தயாராக இருந்தது. பச்சை விளக்கு போட்டவுடன் வண்டி சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பியது (இப்போதெல்லாம் புறப்படும் போது ரயில் ஊய்ய்ய்ய் என்று ஊதுவதில்லை)

    ஊருக்குப் போகின்றவர்களை வழியனுப்ப வந்த நிறைய பேர் வண்டியுடன் கூட ஓடி வந்தார்கள். (மனம் மாறி திடீரென கீழே இறங்கி விட்டால் பிடித்து உள்ளே தள்ளி விடத்தான்)

    மனைவிக்கு டாடா காட்டி கண்களை கர்சீப்பால் துடைத்துக் கொண்ட கணவன் நேராக இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்குப் போனான்.

    வண்டிக்குள் நிறைய ஹிந்தி வாடை அடித்தது. கொஞ்சம் பேர் பிறப்பால் ஹிந்தி. கொஞ்சம் பேர் பிழைப்பால் ஹிந்தி. இதற்கு நடுவே மந்தி போல் ஐந்து பேர். நான், என் அண்ணன் அண்ணி, என் தங்கை மற்றும் அவள் கணவர்.

    என் மனைவி இந்த யாத்திரைக்கு வரவில்லை. பத்து நாள் முன்பு தான் அலகாபாத், காசி, கயா யாத்திரை முடிந்து நானும் மனைவியும் சென்னை திரும்பியிருந்தோம். அவர்களால் இன்னொரு யாத்திரை உடனே புறப்பட இயலவில்லை.

    என்னுடைய நிலை வேறு மாதிரி. டூர் போகவில்லை என்றால் கை கால்கள் நடுங்கும். எதுவும் அமையவில்லை என்றால் டி.வி யில் டிஸ்கவரி சேனலிலாவது டூர் போகும் ஆசாமி நான்.

    வண்டி புறப்பட்டு சிறிது நேரத்தில் டூர் ஆபரேட்டர் எங்கள் இருக்கை தேடி வந்தார். ஒரு ஷோல்டர் பை, தெய்வப் பாடல்கள் அடங்கிய ஒரு ஸ்தோத்திர புத்தகம், ஒரு லட்டு, புறப்படும் முன் அவர்கள் அர்ச்சனை செய்த கோவிலின் வீபூதி குங்குமம் ஆகியவற்றை அளித்து விட்டு சென்றார்.

    இந்த இடத்தில் யாத்திரை சர்வீஸ் நடத்தும் நிறுவனத்தை பற்றி சொல்லவில்லையென்றால் எனக்கு ஏழு ஜென்மத்திற்கு சாப்பாடு, டிபன், மிளகாய் பஜ்ஜி எதுவும் கிடைக்காது.

    இந்த நிறுவனத்தின் ஸ்பெஷாலிட்டியே சாப்பாடு தான். கை தேர்ந்த சமையல் காரர்கள் கூடவே வருவார்கள். சாப்பாடு அமர்க்களமாக இருக்கும். இதற்காகவே டூரில் கலந்து கொள்ளும் நபர்கள் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் என்னை நீங்கள் சந்தேகத்துடன் பார்க்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையோடு அடுத்த பாராவுக்குப் போகிறேன்.

    தங்கும் இடம், மூன்று காபி, மூன்று வேளை உணவு, கைடு, பஸ் வசதி எல்லாமே அவர்கள் ஏற்பாடு. எல்லாமே அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்….பல் தேய்ப்பது, குளிப்பது போன்ற காரியங்களை மட்டும் நாம் பார்த்துக் கொண்டால் போதும்.

    கொஞ்ச நேரம் வம்பு பேசி விட்டு படுக்கையில் சாய்ந்தோம். ஏதோ ஒரு நட்வர்லாலோ, ஜானகி மாமியோ உபயோகித்திருந்த கம்பளி போர்வைக்குள் உடலை நுழைத்து இமய மலை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளோடு தூங்கிப் போனேன்.

    வண்டி வழியில் கூடூர், நெல்லூர் போன்ற ஸ்டேஷன்களில் நிற்காமல் ஸ்டேஷன் மாஸ்டரைப் பார்த்து கேவலமாய் சிரித்துக் கொண்டே போய்க் கொண்டே இருந்தது.

    சென்னை விட்டால் விஜயவாடா தான். நள்ளிரவில் விஜயவாடாவில் வண்டி நுழைந்தபோது நான் தெலுங்கில் குறட்டை விட்டுக் கொண்டிருந்தேன்.

    2. ரயில் பயணம்

    சென்னையிலிருந்து டில்லி ரயில் மார்க்கத்தில் 2200 கிலோ மீட்டர் தூரம். தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இந்த தூரத்திற்கு மொத்தம் பத்து நிறுத்தங்கள் தான். ஏறத் தாழ மூன்று மணி நேரத்திற்கு ஒரு ஸ்டேஷன் வரும். வெவ்வேறு மாநிலங்களைக் கடந்து போகும் போதும் மூடி இருக்கும் ரயில்வே கேட்டுகளைப் பார்த்தாலே போதும். அந்த ஊரின் கலாச்சாரம் புரிந்து விடும். கேட் அருகே நிற்கும் பஸ்கள், டூ வீலரில் இருக்கும் ஆசாமிகள், அவர்கள் உடைகள், கடைகளில் இருக்கும் பெயர்ப் பலகைகள் எல்லாமே ஒவ்வொரு ஊரிலும் ஒரு மாதிரி.

    நாடு முழுக்க மாறாமல் இருப்பது ரயில் சத்தத்தில் தண்டவாளம் அருகிலிருந்து மிரண்டு ஓடும் மாடுகள் மட்டும் தான்.

    ரயில் ஓடிக் கொண்டிருந்தது. எங்களுக்குள்ளேயே சிரித்துப் பேசிக் கொண்டிருந்தோம். காலை எட்டரை மணிக்கு ஒரு பாத்திரமும் ஒரு சில்வர் பக்கெட்டுமாக யாத்திரை சர்வீஸிலிருந்து இரண்டு பேர் இருக்கை தேடி வந்தார்கள்.

    ‘டிபன் ரெடி..தட்டு எடுத்துக்குங்க..என்றான் ஒரு பையன். என்ன இட்லியா கார்த்தி?" என்று பாத்திரத்துக்குள் எட்டிப் பார்த்தேன். கார்த்தியின் தோளில் கை போட்டேன். பாத்திரத்தில் அல்ல.

    எப்போதுமே இது போன்ற டூர் போகும் போது சமையல் செய்பவர்கள், பரிமாறுபவர்கள் பெயர் எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது என்று என் வயிறுணர்வு சொல்லியிருந்தத்தால் ரயில் ஏறின உடனேயே பெயர் கேட்டு தெரிந்து கொண்டு விட்டேன்.

    தட்டை எடுத்துக் கொண்டேன். (இவர்களுடன் யாத்திரை போனால் சாப்பிடும் தட்டு.. காபி குடிக்க டம்ளர் இரண்டையும் நாம் தான் வீட்டிலிருந்து கொண்டு வர வேண்டும்..இது பாலாஜி பவனில் திருடியது என்று இருக்கும் டம்ளர்கள் அனுமதி இல்லை)

    டிபன் அன்லிமிடெட் ஆதலால் கார்த்தி இட்லி வைத்துக் கொண்டே இருந்தான். நான் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கும் போது என் எதிர் சீட்டில் இருந்தவர் போதும் சார்.. என்றார்.

    மதியம் இரண்டு மணிக்கு நாக்பூர் வந்தது. அங்கு ஆரஞ்சு பழம் விசேஷமானதல் கொஞ்சம் ஆரஞ்சு வாங்கிக் கொண்டோம். ஆனால் உறிக்கவில்லை. எதிர் சீட்டில் இருப்பவர் எங்களை உறித்து விடுவாரோ என்று பயமாக இருந்தது.

    வேளா வேளைக்கு சாப்பாடு சரியான நேரத்துக்கு வந்ததும் எதிர் சீட் காரருக்கு நாங்கள் திகார் ஜெயிலுக்கு போகிறோமோ என்று சந்தேகம் வந்திருக்க வேண்டும். ‘எங்கே போறீங்க?’ என்று கேட்டார்.

    பத்ரி நாத் என்று கூறியதும் எங்கள் மேல் அவருக்கு கொஞ்சம் பக்தி வந்தது.ராம்..ராம் என்று கை கூப்பினார்.

    லஞ்ச் ஆர்டர்….டின்னர் ஆர்டர் என்று ஒவ்வொரு பெட்டியாக போய்க் கொண்டிருந்த கேட்டரிங் ஆட்கள் எங்கள் பெட்டிக்கு வந்தார்கள். எங்கள் தட்டில் இமய மலை மாதிரி இருந்த புளியோதரை தயிர் சாதத்தைப் பார்த்து விட்டு ‘வியாபாரத்தை கெடுக்க வந்த வீணர்களே’ என்று சபித்துக் கொண்டே போனார்கள்.

    மற்றபடி இரண்டாவது

    Enjoying the preview?
    Page 1 of 1