Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mr. X Siri Kadhaigal - Part 2
Mr. X Siri Kadhaigal - Part 2
Mr. X Siri Kadhaigal - Part 2
Ebook195 pages1 hour

Mr. X Siri Kadhaigal - Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தத் தொகுப்பில் இருக்கும் அனைத்து மிஸ்டர் எக்ஸ் கதைகளும் குமுதம் இதழில் பிரசுரமானவை. குமுதத்தில் தொடர்ந்து 80 மிஸ்டர் எக்ஸ் கதைகள் பிரசுரமாகின. அதில் 21 முதல் 40 வரையான இருபது கதைகள் அடங்கிய தொகுப்பு தான் இந்த நூல். எல்லாமே கலகலப்பான நகைச்சுவைக் கதைகள் தான்.

Languageதமிழ்
Release dateDec 11, 2023
ISBN6580141510457
Mr. X Siri Kadhaigal - Part 2

Read more from Nandhu Sundhu

Related authors

Related to Mr. X Siri Kadhaigal - Part 2

Related ebooks

Related categories

Reviews for Mr. X Siri Kadhaigal - Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mr. X Siri Kadhaigal - Part 2 - Nandhu Sundhu

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மிஸ்டர் எக்ஸ் சிரி கதைகள் - பாகம் 2

    Mr. X Siri Kadhaigal - Part 2

    Author:

    நந்து சுந்து

    Nandhu Sundhu

    For more books

    https://www.pustaka.co.in/home/author/nandhu-sundhu

    பொருளடக்கம்

    கேள்வியின் நாயகன்

    ஆபரேஷன் அண்டர்கிரவுண்ட்

    சின்னஞ்சிறு சீப்பே... காணோம்மா...

    எனக்கு நானே வல்லவன்

    கடை கடையாம் காரணமாம்

    கூடையெல்லாம் மல்லிகைப்பூ

    பள்ளிக்கு மிக அருகில்...

    குளிரே உனக்காக...

    போலர் எல்லாம் ஆதார் வைச்சிருக்கனும்...

    ராத்திரி நேரத்து ஷாப்பிங்

    ஆடித் தள்ளுபடி

    தப்பு சத்தியாகிரகம்

    புலியே... புலியின் ஒலியே...

    கிழிசல்.காம்

    திருடன் என் தோழன்

    பால் கணக்கு

    கார் கொண்டு வா...

    மாட்டுங்க சார்... மாட்டுங்க

    ஓல்ட் கப்

    சுண்டல் வேட்டை

    மிஸ்டர் எக்ஸ் கதைகளின் இரண்டாம் தொகுப்பு இது.

    இந்தத் தொகுப்பில் இருக்கும் அனைத்து மிஸ்டர் எக்ஸ் கதைகளும் குமுதம் இதழில் பிரசுரமானவை.

    முதலில் மிஸ்டர் எக்ஸ் கதைகளை Face bookல் தான் எழுதிக் கொண்டிருந்தேன். குமுதம் ஆசிரியர் அமரர். திரு. ப்ரியா கல்யாணராமன் அவர்கள் அவைகளைப் படித்து விட்டு குமுதத்தில் எழுதுமாறு பணித்தார்.

    அவ்வாறு ஆரம்பித்து எழுதப்பட்ட கதைகள் தான் இவை. குமுதத்தில் தொடர்ந்து 80 மிஸ்டர் எக்ஸ் கதைகள் பிரசுரமாகின.

    அதில் 21 முதல் 40 வரையான இருபது கதைகள் அடங்கிய தொகுப்பு தான் இந்த நூல். எல்லாமே கலகலப்பான நகைச்சுவைக் கதைகள் தான்.

    என் எழுத்துகளுக்கு ஒரு சிறப்பு அங்கீகாரம் கொடுத்த குமுதம் பத்திரிகைக்கும், அவை வெளியான சமயம் படித்து நல்லாதரவு வழங்கிய வாசகர்களுக்கும் நன்றி.

    இந்நூலை சிறப்பான முறையில் வெளிக் கொணர்ந்திருக்கும் புஸ்தகாவுக்கு நன்றி.

    அன்பன்,

    நந்து சுந்து

    போன்: 94431 81615

    கேள்வியின் நாயகன்

    நான் சமூக சேவை செய்யலாம்னு இருக்கேன் என்றார் மிஸ்டர் எக்ஸ்.

    அதுக்கு முன்னால ஒரு வுமனுக்கு சேவை செய்யுங்க. லெமன் சேவை செஞ்சிகிட்டு இருக்கேன். எலுமிச்சம் பழத்தைப் பிழிஞ்சு கொடுங்க என்றார் எக்ஸெல்.

    எலுமிச்சம் பழத்தை எடுத்து நசுக்கினார் மிஸ்டர் எக்ஸ். எலுமிச்சம் பழத்தோல் போர்த்திய நெல்லிக்காயாக இருந்தது அது. எவ்வளவு அமுக்கியும் சாறு வரவில்லை.

    இது சாறுலெஸ் எலுமிச்சை போல இருக்கு

    அப்போ தேங்காய் சேவை பண்றேன். தேங்காய் உடைச்சு துருவிகிட்டு வாங்க

    மிஸ்டர் எக்ஸுக்கு தேங்காய் உடைக்க வராது. உடைத்தால் அது பல கோணங்களில் சில்லு சில்லாக உடையும். குழந்தைகள் அதை வைத்து zig zag puzzles விளையாடலாம்.

    பேசாம கருட சேவை செஞ்சிடேன். சாமி முன்னால விளக்கேத்தினா போதும்

    சற்று நேரத்தில் சூடான சேவையை இருவரும் பால் ஊற்றி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

    இப்போ சொல்லுங்க... என்ன சமூக சேவை செய்யப் போறீங்க?

    பரிட்சை எல்லாம் வருதில்லே. குழந்தைகளுக்குக் கோச்சிங் கிளாஸ் எடுக்கப் போறேன்

    இன்னும் பத்து நாள்ல பரிட்சை ஆரம்பிக்கப் போகுது. இப்போ போய் க்ளாஸ் எடுத்தா என்ன உபயோகம்?

    இது பரிட்சைக்கு ரெடி பண்ற கோச்சிங் க்ளாஸ். இம்பார்டன்ட் கொஸ்டின் எல்லாம் குறிச்சு கொடுக்கப் போறேன்

    புரியல்லே

    நாம அந்த காலத்துல பரிட்சை எழுதினோமே ஞாபகம் இருக்கா? பரிட்சைக்கு எந்த கேள்வி எல்லாம் வரும்னு செலக்ட் செஞ்சி படிப்போமே. அந்த மாதிரி ஒரு லிஸ்ட் தயார் செய்யப் போறேன்

    அந்த கேள்வி எல்லாம் இப்போ வராது. சிலபஸ் மாறிடுச்சு

    அடி அசடே. புது சிலபஸ்ல கூட நான் கேள்வித் தாள் செட் பண்ணுவேன். சமச்சீர், மாமியார் சீர் எந்த பாடத்திட்டமா இருந்தாலும் நான் ஜமாய்ச்சிடுவேன்

    நீங்க என்ன ஸ்கூல் வாத்தியாரா? உங்களுக்கு என்ன தெரியும்?

    என்னைப் பத்தி என்ன நினச்சே? எங்க பரம்பரையே வாத்தியார் பரம்பரை. எங்க அப்பாவே வாத்தியார் தான். தெரியுமில்லே?

    அவர் டிராயிங் வாத்தியார். அது வாத்தியார் கணக்குல சேத்தி இல்லே

    எங்க அப்பாவுக்கு என்னை ஒரு ப்ரொபசர் ஆக்கி பாக்கனும்னு ஆசை. மகனேன்னு கூட கூப்பிட மாட்டாரு. ப்ரொபசர் புத்ரான்னு தான் கூப்பிடுவாரு

    சரி. உங்க திட்டத்தைப் பத்தி சொல்லுங்க

    ஸ்கூல் பசங்க புத்தகத்தை படிக்கப்போறேன். பழைய பரிட்சைக் கேள்வித்தாள் எடுத்து ஆராயப்போறேன். அதுலேந்து இந்த வருஷம் இந்த கேள்விகள் தான் வரும்னு கண்டு பிடிச்சுடுவேன். அதை மட்டும் பசங்க படிச்சிகிட்டு போனா போதும்

    சக்சஸ் ஆகுமா?

    நான் ஸ்கூல், காலேஜ் படிக்கறப்ப இப்படித்தான் செஞ்சேன். ஓல்ட் பாய்ஸ் அசோசியேஷன் மாதிரி ஓல்ட் கொஸ்டின் பேப்பர் அசோசியேஷனே நாங்க வெச்சிருந்தோம்

    அதெல்லாம் சரி. உங்க கிட்டே கோச்சிங் படிக்க யார் வருவாங்க?

    நீ தான் போய் ஆள் பிடிக்கனும்

    நான் மாட்டேன்

    நான் என்ன காலா பிடிக்கச் சொன்னேன். ஆள் தானே பிடிக்கச் சொன்னேன். செய்யும்மா

    கோர்ஸ் ஃபீஸ் எவ்வளவு?

    ஃபீஸா? இது இலவச சேவை. கல்வியை விக்கறவன் இல்லே நான் – சொல்லும் போதே அவருக்கு தொண்டை விக்கியது.

    சரி... சரி. விக்கினது போதும்

    என் விக்கல் உனக்கு நக்கலா இருக்கா? இரு... இரு... உன் வண்டவாளம் பூரா விக்கி லீக்ஸ் பண்ணிடறேன்

    பழைய கேள்வித்தாள்களும் புத்தகங்களும் வாங்க மிஸ்டர் எக்ஸ் புத்தகக் கடைக்குப் போனார். மிஸ்டர் எக்ஸைப் பார்த்ததும் கடைக்காரருக்கு குழப்பமாக இருந்தது.

    உங்களைப் பாத்தா Plus two படிக்கற மாதிரி தெரியல்லையே... Multiply two படிக்கற மாதிரி இருக்கே...

    நான் பரிட்சை எழுதல்லே. பரிட்சை எழுதற பசங்களுக்கு ஹெல்ப் பண்றேன்

    ஓ... பிட் ரெடி பண்ணப் போறீங்களா? என் கிட்டே ரெடிமேடா நிறைய இருக்கு. பசங்களுக்கு தனி பிட். பொண்ணுகளுக்கு தனி பிட்

    ஏகப்பட்ட பேண்ட் பிட்டுகளும் ரவிக்கை பிட்டுகளும் வைத்திருப்பார் போல இருக்கிறதே என்று வியந்தார் மிஸ்டர் எக்ஸ்.

    சார்... பரிட்சைக்கு ஒரு வாரம் இருக்கறப்ப நான் பிட்டுங்க மட்டும் தான் விக்கறது வழக்கம். பத்து பேரை வெச்சு பிட் எழுதிகிட்டு இருக்கேன். ஒரு பிட் பில்டிங் ஒர்க் ஷாப்பே நடத்தறேன். மைக்ரோ பிட், நானோ பிட் எல்லாமே இருக்கு. வயித்துல ஓட்டை போட்டு சொருகற மாதிரி ட்ரில் பிட் கூட இருக்கு – இதை சொல்லும் போதே அவரின் கண்களில் பிட்டும் ஒளிச் சுடர் தெரிந்தது.

    எனக்கு பழைய கொஸ்டின் பேப்பர் எல்லாம் வேணும்

    இருக்கு சார். டேய்... கஜினி... பத்து வருஷத்து ப்ளஸ் டூ கேள்வித் தாள் எடுத்துகிட்டு வா

    முப்பது வயது மதிக்கத்தக்க கஜினி வந்தான்.

    பெயிலாகறதுக்குன்னே இந்த மாதிரி நாலு பசங்கள வளத்திகிட்டு வர்ரேன் சார். நல்லா அடிச்சு அடிச்சு படிக்காம பாத்துக்கறேன். நல்ல குரு பக்தி. சொன்னா மட்டும் போதும். பெயிலாயிடுவான்

    பழைய கேள்வித் தாள்களுடன் மதியம் ஒரு மணிக்கு வீட்டுக்கு வந்தார் மிஸ்டர் எக்ஸ்.

    இப்போதைக்கு இந்த பசங்க தான் கிடைச்சாங்க என்று இரண்டு பையன்களைக் காட்டினார் எக்ஸெல்.

    இவங்க அஞ்சாம் கிளாஸ். நாளைக்கு ஒரு க்ளாஸ் டெஸ்ட் இருக்காம். முக்கியமான கேள்வி எல்லாம் கேக்கறாங்க... கொடுக்க முடியுமா?

    ‘எம்.பி பதவிக்கு விண்ணப்பம் போட்டால் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி கொடுக்கிறேன் என்கிறார்களே? சரி... படிப்படியாய் ஏணி மாதிரி மேலே போகலாம். எஸ்கலேட்டர் வேண்டாம். பல சமயங்களில் எஸ்கலேட்டரிலும் படி ஏறி தானே போக வேண்டியுள்ளது’

    பசங்களா... நாளைக்கு எந்த சப்ஜெக்ட்ல பரிட்சை?

    சயின்ஸ் என்றான் ஒரு பொடியன்.

    புத்தகத்தை கொடுத்திட்டுப் போ. ஒரு மணி நேரத்துல கொஸ்டின் ரெடி பண்ணித் தர்ரேன்

    புத்தகத்தை வாங்கி படிக்க ஆரம்பித்தார் மிஸ்டர் எக்ஸ்.

    நிறைய விஷயங்கள் புதிதாக இருந்தன. அவர் படிக்கும் போது ஓஜோன் ஓட்டை எல்லாம் இருக்கவில்லை. இப்போது ஓஜோன் ஓட்டை பற்றி நாலு பக்கம் இருந்தது. அதிலும் மூன்றாவது பக்கத்தில் ஓட்டை விழுந்திருந்தது.

    சமையலறையிலிருந்து சூடாக புலாவ் வாசனை வந்து கொண்டிருந்தது.

    இப்போ எதுக்கு புலாவ் பண்றே?

    உங்களுக்கு இல்லே. அந்த பசங்களுக்கு. வீட்டுக்கு வந்து படிங்கடா... புலாவ் செஞ்சுத் தர்ரேன்னு சொல்லி தான் கூட்டி வந்தேன்

    ‘இந்த மதிய புலாவ் திட்டம் பிடித்துப் போய் தான் பசங்கள் வந்திருக்கிறார்களா? முதலில் லேப் டாப்பை எடுத்து உள்ளே வைக்க வேண்டும் இல்லாவிட்டால் அதையும் இலவசமாக கொடுத்து விடுவாள்’ என்று தோன்றியது.

    ஒரு மணி நேரத்தில் இரண்டு பையன்களும் ஒரு பெரியவரும் வந்தார்கள்.

    என்னடா? ரெண்டு பசங்க தானே அங்கிள் கிட்டே கத்துக்க வந்தீங்க... கூட யாரோ ஒரு பெரியவரும் வந்திருக்காரு

    ஆமா ஆன்டி. இவர் எங்க தமிழ் வாத்தியாரு. சும்மா புலாவ் சாப்பிட வந்திருக்காரு

    அந்த தமிழ் புலாவர் எக்கச்சக்கமாக புலாவ் சாப்பிட்டார்.

    உங்கள் நளபாகம் சிறப்பாக இருந்தது என்றார் ஏப்பம் விட்டுக் கொண்டே.

    ஆனா... எங்களுக்குத்தான் பாகம் வைக்காம சாப்பிட்டுட்டீங்க

    மிஸ்டர் எக்ஸ் தயாரித்து வைத்திருந்த கேள்வித்தாளைக் கொடுத்தார்.

    நாளைக்கு இன்னும் பசங்களை கூட்டி வா. குலுக்கல் முறைல பரிசு உண்டு என்றார் எக்ஸெல்.

    ஐந்தாம் கிளாஸ் பயல்கள் என்ன சொன்னார்களோ தெரியவில்லை. அடுத்த நாள் எட்டாம் க்ளாஸ் பெண்கள் மூவர் வந்தார்கள்.

    அங்கிள். நாளைக்கு எங்களுக்கு ஜியாகரஃபி டெஸ்ட். என்ன கேள்வி வரும்னு சொல்லுங்களேன் என்றார்கள்.

    புத்தகத்தை வாங்கிப் பார்த்தார் மிஸ்டர் எக்ஸ். டில்லி சிலபஸ் ஜியாக்ரஃபியாக இருந்தது அது. செக்கோஸ்லேவியாவைப் பற்றி சேக்ஸ்பியர் இங்க்லீஷில் ஏதோ இருந்தது.

    கேள்வித்தாள் ரெடி செஞ்சி வைக்கறேன். வர்ரப்ப வீட்லயே சாப்பிட்டு வந்துடுங்க. இங்கே சாப்பாடு எல்லாம் கிடைக்காது. இது சதாப்தி எக்ஸ்ப்ரஸ் கிடையாது

    அவர்கள் கொடுத்த புத்தகத்தை ஆராய்ந்து அரை மணி நேரத்தில் கேள்வித்தாள் தயாரித்து விட்டார்.

    இரண்டு நாட்கள் கழித்து அந்த மூன்று பெண்களும் வந்தார்கள்.

    அங்கிள்... ரொம்ப தாங்க்ஸ். நாங்க மூனு பேருமே டாப் மார்க் வாங்கிட்டோம்

    மார்க் வாங்கிக் கொடுத்ததில் மிஸ்டர் எக்ஸுக்கு பெருமை பிடிபடவில்லை. வாட்ஸ் அப் ப்ரொஃபைலில் தன் பெயரை மார்க்கபந்து என்று வைத்துக் கொள்ளலாமா என்று யோசித்தார். அது பழைய பெயர் என்று மார்க் ஆன்டனி என்று வைத்துக் கொண்டார்.

    ப்ளஸ் டூ பரிட்சை ஆரம்பித்தது. கிட்டத்தட்ட பத்து பேர் அபார்ட்மென்டில் பரிட்சை எழுதுகிறார்கள். அனைவரும் மிஸ்டர் எக்ஸிடம் வந்தார்கள்.

    அங்கிள். நீங்க தான் கேள்வித்தாள் செட் செஞ்சு கொடுத்து எங்களுக்கு மார்க் வாங்கிக் கொடுக்கனும் என்று கோரஸ் பாடினார்கள்.

    கவலைப்படாதீங்க. இந்த கொஸ்டின் பேங்க் ஆஃப் கோடம்பாக்கம் இருக்கற வரைக்கும் நீங்க எதுக்கும் கவலைப்பட வேணாம் என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.

    பத்து பேரும் ப்ளஸ் டூ பரிட்சை சிறப்பாக எழுதியதாக உளவுத் துறை ரிப்போர்ட் வந்தது.

    உனக்கு ஒரு சேதி தெரியுமா? நம்ம தொகுதி எம்.எல்.ஏ புவனா சட்டசபைல என்னைப் பத்தி கேள்வி நேரத்துல பேசப் போறாங்களாம். கேள்விப்பட்டேன்

    "அதெல்லாம்

    Enjoying the preview?
    Page 1 of 1