Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

கண்ணே கனி 'அமுதா'
கண்ணே கனி 'அமுதா'
கண்ணே கனி 'அமுதா'
Ebook246 pages1 hour

கண்ணே கனி 'அமுதா'

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காரிலிருந்து இறங்கி, ஓவர் கோட்டினால் தன்னை நன்றாக மூடியபடி, கையில் பார்சலுடன் உள்ளே வரும் மடோனாவை எதிர்கொண்டு வரவேற்கிறான் பிரெடரிக்.
 அமெரிக்க வழக்கப்படி, அவனைத் தழுவி, நெற்றியில் முத்தமிடுகிறாள்.
 தளர்ந்த கைகளால் அவன் தலையில் கைவைத்து "நல்லா இரு பிரெடரிக்."
 "என் அருமை மகள் எங்கே காணும்."
 "மாடி அறையில் பெட்டியை 'பாக்' பண்ணிட்டு இருக்காம்மா. இருங்க கூப்பிடறேன்."
 "வேண்டாம் பிரெடரிக் நானே போய் பார்க்கிறேன்" கார்பெட் போடப்பட்ட மரப்படிக்கட்டில் சப்தமிட நடக்கிறாள்.
 பெட்டியைத் திறந்து வைத்து எதையோ எடுத்து வைத்துக் கொண்டிருந்த எல்சா.
 அம்மாவைப் பார்த்ததும் அதை அப்படியே போட்டு விட்டு ஓடி வந்து அவளைத் தழுவிக் கொள்கிறாள்.
 "அம்மா, இந்த ஸ்நோவில் டிரைவ் பண்ணிட்டு வர, இன்னும் லேட்டாகும்னு நினைச்சேன். சீக்கிரமாக வந்துட்டியே."
 "என் மகளைப் பார்க்கப் போகிறேன் என்ற எண்ணமே என்னைச் சீக்கிரம் கொண்டு வந்து சேர்த்துடுச்சு எல்சா."
 அம்மாவைப் பார்க்கிறாள் எல்சா.
 பிரெடரிக்கை விட இன்னும் கூடுதலான ரோஜா நிறம். வெளிறிய தலைமுடி. வயதின் காரணமாக கண்கள் குழி விழுந்திருந்தாலும், தீட்சண்யமான பார்வை. முதுகு லேசாக கூன் விழுந்து விட்டது. பேண்ட், சட்டை அணிந்து அதன் மேல் குளிருக்கு ஸ்வெட்டர் அணிந்திருந்தாள்அமெரிக்க பிரஜை என்பது அவளைப் பார்த்தாலே தெரிந்தது.
 "இந்தா உனக்குப் பிடிக்குமென்று வழியில், 'காஸ் கோவில் நிறுத்தி பனானா மஃபின் வாங்கிட்டு வந்தேன்."
 "உனக்கு எதுக்கும்மா சிரமம். இந்த ஸ்நோவில் நீ டிரைவ் பண்ணிட்டு வந்ததே பெரிய விஷயம். இதில் ஷாப்பிங் வேறா..."
 "மகளைப் பார்க்க கைவீசிட்டு வரலாமா?"
 "உன் அன்பை மனசு முழுக்க தாராளமாக எடுத்துட்டு வர்றியேம்மா, எனக்குக் கடைசி வரை அது கிடைச்சா... அதுவே எனக்கு சந்தோஷம்."
 "என்னடா இந்திய பயணத்திற்குத் தயாராயிட்டியா."
 "ஆமாம்மா, வேணுங்கற பொருளை ஞாபம் வரும் போது எடுத்து வைக்கிறேன். நாலு மாசம் இல்லையா. நிறைய ஏற்பாடு பண்ண வேண்டி இருக்கு."
 "பெத்த தாயைப் பார்த்ததும், உன்னை வளர்த்த தாயை மறந்துட மாட்டியே எல்சா."
 கண்கலங்க தன்னைப் பார்க்கும் அம்மாவைப் பார்க்கிறாள்.
 மடோனாவின் மனதிலோ பழைய நினைவுகள் அணி வகுக்கின்றது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223351160
கண்ணே கனி 'அமுதா'

Read more from Parimala Rajendran

Related to கண்ணே கனி 'அமுதா'

Related ebooks

Reviews for கண்ணே கனி 'அமுதா'

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    கண்ணே கனி 'அமுதா' - Parimala Rajendran

    1

    அமெரிக்காவில் சிகாகோ நகரில், கண்ணாடியில் மூடப்பட்டிருந்த ஜன்னல் வழியாக தேங்காய்ப்பூ துருவலாக விழும் பனிப்பொழிவை வேடிக்கைப் பார்த்தபடி நின்றிருந்தாள் எல்சா.

    பிரட் டோஸ்டரில், ப்ரெட்டை டோஸ்ட் பண்ணி, பட்டர் ஜாம் தடவி, இரண்டு ப்ளேட்டுகளில் எடுத்துக் கொண்டு எல்சாவிடம் வந்தான் ஃப்ரெடரிக்.

    எல்சா... சாப்பாடு ரெடி.

    (அவர்கள் உரையாடல் ஆங்கிலத்தில் இருந்தது.)

    தாங்க்யூ... ஹனி... இன்னைக்கு என்னமோ தெரியலை ரொம்ப ஒர்ரி.

    வேலை ஜாஸ்தியா?

    ஆமாம். நாலு மாசம் லீவு போடப் போறேன். வேலை அதிகம். ஓரளவு என் வேலைகளை முடிச்சுக் கொடுத்திட்டேன். அட்வான்ஸா என் வேலைகளை முடிச்சதில் மானேஜருக்கு திருப்தி.

    ஓ.கே. இந்தியா கிளம்ப ரெடியாயிட்டு இருக்கே

    பின்னே இல்லையா. என்னுடைய எத்தனை நாள் கனவு நிறைவேறப் போகுது.

    பிரெடரிக், உன்னுடைய பிஸினஸ் ஒண்ணும் பாதிக்காதே.

    நோ. டியர் அதுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன். உன்னோடு உன் பிறந்த மண்ணுக்கு வர நானும் தயாராயிட்டேன்.

    அமெரிக்கர்களுக்கே உரிய சிவந்த ரோஜா நிறத்தில், பூனை விழிகளுடன், பொன்னிற தலை முடியை ஒட்ட வெட்டி, ஆறடி உயரத்தில் கம்பீரமாய் தன் முன் நிற்கும் கணவனைப் பார்த்தாள்.

    என்ன எல்சா, என்னை அப்படிப் பார்க்கிறே.

    ப்ரெட்டை இரண்டு கைகளாலும் பிடித்துக் கடித்தபடி எல்சாவைப் புன்னகையுடன் பார்த்தான்.

    ம்... என் அழகுக் கணவனை ரசிக்கிறேன்.

    ஓ.கே. நானும் அதையே செய்யறேன்.

    மாநிறம் என்றாலும் கலையான திருத்தமான முகம். குட்டையாக வெட்டப்பட்ட கூந்தலைத் தளர விட்டிருந்தாள்.

    உன்னுடைய நிறத்துக்கு நான் பொருத்தமானவளாக இருக்கேனா பிரெட்ரிக்.

    எனக்கு அதைப் பத்திக் கவலையில்லை. என் எல்சாவோட அன்பான மனசு பிடிக்கும்.

    பிரெட்ரிக்கை பார்த்துச் சிரித்தாள் எல்சா.

    ஸ்நோஃபால் பார்த்தியா நிக்காம கொட்டுது. இன்னைக்கு நைட் பத்து மணி வரை இருக்கும். நிறைய ப்ளைட் கான்சல் ஆயிடுச்சுன்னு வெதர் டெலிகாஸ்டில் சொன்னான்.

    "நோ ப்ராப்ளம். நாம் அடுத்த வாரம் கிளம்பற அன்னைக்கு வெதர் நல்லாயிருக்கு. நம்ப ப்ரோக்ராம் எதுவும் மாறாது.

    நாளைக்கு அம்மா வர்றதாகச் சொல்லியிருக்காங்க.

    இந்த ஸ்நோவில் டிரைவ் பண்ணிட்டு வரணுமா?

    சொன்னேன். கேட்கலை. அடுத்த வாரம் இந்தியா போற. ஒரு நாலு நாள் உன்னோடு இருந்தாதான் மனசுக்கு திருப்தியா இருக்கும்னு சொல்றாங்க.

    ம்... உன் மேலே அவ்வளவு பாசம். அதான் நாலு மாசம் கூட உன்னைப் பிரிய அவங்களுக்கு மனசில்லை.

    உண்மைதான் ஹனி. தாயோட அன்பு என்னைக்குமே மாறாது, குறையாது. அதை என் தாய் மூலமாக நான் பரிபூர்ணமாக உணர்ந்திருக்கேன்.

    "உங்கம்மாவுக்கு மனோ தைரியம் அதிகம். நம்மோடு வந்து இருக்கலாம்னு சொல்லியும் அதை அவங்க ஏத்துக்கலை.

    "என்னோட ஒரே பொண்ணு எல்சா. நானும் என் கணவரும், அவளை ஒரு நல்ல பெண்ணாக, திறமை உள்ளவளாக வளர்த்து ஆளாக்கிட்டோம்.

    அவளை உன்னை நம்பி, உன் கையிலும் ஒப்படைச்சாச்சு. இனி இந்த வாழ்க்கை உங்கள் இருவருக்குமானது.

    அதில் நாங்க தலையிடக்கூடாதுன்னு வர மறுத்துட்டாங்க."

    அம்மாவை நினைக்கும்போது எல்சாவுக்குப் பெருமையாக இருந்தது.

    அவங்க என்னைக்குமே தன்னை நம்பி வாழுறவங்க. நம்மகிட்டே அவங்க எதிர்பார்க்கிறது நம்மோட அன்பான அரவணைப்பு மட்டும்தான்.

    இருக்கட்டும் எல்சா. அப்பா இறந்த பிறகும் இந்த வயசான காலத்தில் தனி மனுஷியா இருக்காங்களே.

    ஒரு மருமகனாக இல்லாமல், மகனாக மாறி நீ என் அம்மாவை நினைச்சுக் கவலைப்படறதை எண்ணி பெருமைப்படறதா... இல்லை. வயசானாலும் நம்மால யாருக்கும் எந்தத் தொந்தரவும் வரக்கூடாதுன்னு தனி மனுஷியாய் வாழும் அம்மாவின் மனஉறுதியை எண்ணி பெருமைப்படறதான்னு தெரியலை..

    மொத்தத்தில் உன்னை கணவனாகவும், அவங்களை அம்மாவாகவும் அடைஞ்ச நான்தான் கொடுத்து வச்சுருக்கேன்.

    இரு கைகளையும் அகல விரித்து, எல்சாவை தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொள்கிறான் பிரெடரிக்.

    மங்கிய விளக்கொளியில் கண்ணில் நீர் பளபளக்க, மார்பில் சாய்ந்தபடி, கண்களை மேல்நோக்கி பிரெடரிக்கின் முகத்தைப் பார்க்கிறாள்.

    என்ன ஹனி சொல்லுடா.

    நான் இந்தியா போற டிரிப் நல்லபடியா முடியுமா?

    ஆமாம். அதிலென்ன சந்தேகம்.

    அத்தனை கோடி மக்களில் என்னை பெத்த தாயை நான் தேடிக் கண்டுபிடிச்சுடுவேனா பிரெடரிக்.

    கண்டிப்பா உன் மனசில் தேக்கி வச்சிருக்கிற அன்பு உன் தாயை அடையாளம் காண்பிக்கும்.

    உன் வாக்கு பலிக்கட்டும். சந்திக்கணும். அதுக்கு அந்தக் கடவுளும் நீயும்தான் துணை இருக்கணும் பிரெடரிக்.

    கண்டிப்பாக.

    2

    காரிலிருந்து இறங்கி, ஓவர் கோட்டினால் தன்னை நன்றாக மூடியபடி, கையில் பார்சலுடன் உள்ளே வரும் மடோனாவை எதிர்கொண்டு வரவேற்கிறான் பிரெடரிக்.

    அமெரிக்க வழக்கப்படி, அவனைத் தழுவி, நெற்றியில் முத்தமிடுகிறாள்.

    தளர்ந்த கைகளால் அவன் தலையில் கைவைத்து நல்லா இரு பிரெடரிக்.

    என் அருமை மகள் எங்கே காணும்.

    மாடி அறையில் பெட்டியை ‘பாக்’ பண்ணிட்டு இருக்காம்மா. இருங்க கூப்பிடறேன்.

    வேண்டாம் பிரெடரிக் நானே போய் பார்க்கிறேன் கார்பெட் போடப்பட்ட மரப்படிக்கட்டில் சப்தமிட நடக்கிறாள்.

    பெட்டியைத் திறந்து வைத்து எதையோ எடுத்து வைத்துக் கொண்டிருந்த எல்சா.

    அம்மாவைப் பார்த்ததும் அதை அப்படியே போட்டு விட்டு ஓடி வந்து அவளைத் தழுவிக் கொள்கிறாள்.

    அம்மா, இந்த ஸ்நோவில் டிரைவ் பண்ணிட்டு வர, இன்னும் லேட்டாகும்னு நினைச்சேன். சீக்கிரமாக வந்துட்டியே.

    என் மகளைப் பார்க்கப் போகிறேன் என்ற எண்ணமே என்னைச் சீக்கிரம் கொண்டு வந்து சேர்த்துடுச்சு எல்சா.

    அம்மாவைப் பார்க்கிறாள் எல்சா.

    பிரெடரிக்கை விட இன்னும் கூடுதலான ரோஜா நிறம். வெளிறிய தலைமுடி. வயதின் காரணமாக கண்கள் குழி விழுந்திருந்தாலும், தீட்சண்யமான பார்வை. முதுகு லேசாக கூன் விழுந்து விட்டது. பேண்ட், சட்டை அணிந்து அதன் மேல் குளிருக்கு ஸ்வெட்டர் அணிந்திருந்தாள்.

    அமெரிக்க பிரஜை என்பது அவளைப் பார்த்தாலே தெரிந்தது.

    இந்தா உனக்குப் பிடிக்குமென்று வழியில், ‘காஸ் கோவில் நிறுத்தி பனானா மஃபின் வாங்கிட்டு வந்தேன்.

    உனக்கு எதுக்கும்மா சிரமம். இந்த ஸ்நோவில் நீ டிரைவ் பண்ணிட்டு வந்ததே பெரிய விஷயம். இதில் ஷாப்பிங் வேறா...

    மகளைப் பார்க்க கைவீசிட்டு வரலாமா?

    உன் அன்பை மனசு முழுக்க தாராளமாக எடுத்துட்டு வர்றியேம்மா, எனக்குக் கடைசி வரை அது கிடைச்சா... அதுவே எனக்கு சந்தோஷம்.

    என்னடா இந்திய பயணத்திற்குத் தயாராயிட்டியா.

    ஆமாம்மா, வேணுங்கற பொருளை ஞாபம் வரும் போது எடுத்து வைக்கிறேன். நாலு மாசம் இல்லையா. நிறைய ஏற்பாடு பண்ண வேண்டி இருக்கு.

    பெத்த தாயைப் பார்த்ததும், உன்னை வளர்த்த தாயை மறந்துட மாட்டியே எல்சா.

    கண்கலங்க தன்னைப் பார்க்கும் அம்மாவைப் பார்க்கிறாள்.

    மடோனாவின் மனதிலோ பழைய நினைவுகள் அணி வகுக்கின்றது.

    3

    "மடோனா... கிளம்பலாமா?"

    ம்... நான் அப்பவே ரெடி.

    குட்டை கவுன் காற்றில் பறக்க பொன்னிற கூந்தலை இழுத்துக் கட்டி கணவனை நோக்கி வருகிறாள்.

    வாங்க வேண்டிய சாமான் லிஸ்ட் எடுத்துக்கிட்டியா.

    எல்லாம் இருக்கு. நீ காரை ஸ்டார்ட் பண்ணலாம்.

    கராஜ் கதவு பட்டனை தட்டியவுடன் திறக்க, காரை வெளியில் எடுத்த ஜான், காரிலிருக்கும் பட்டனை அழுத்த கதவு மூடிக் கொள்கிறது.

    அகலமான தெருவில் வெண்ணெயாக வழுக்கியபடி கார் செல்கிறது.

    டரைவ் பண்ணுவதில் கவனமாக இருந்தபடி, மடோனாவிடம் பேச்சுக் கொடுத்தான்.

    நான் சொன்னதை யோசிச்சுப் பார்த்தியா டியர்.

    எது... குழந்தைக்காக ட்ரீட்மெண்ட் போவோம்னு சொன்னியே அதுவா.

    "ஆமாம். ரொம்ப வெறுமையா தெரியுது. எதுக்கு இப்படி ஓடியாடி சம்பாதிக்கிறோம்னு வெறுப்பு மனசில் வருது.

    குழந்தைகளோடு சந்தோஷமா வரும் பெத்தவங்களைப் பார்க்கும்போது நாம் இன்னும் எத்தனை நாளைக்கு அதைப் போல வர காத்திருக்கணுமோன்னு தோணுது."

    ஜானின் குரலில் வருத்தம் இழையோடுகிறது.

    மடோனாவுக்கும், ஜானுக்கும் திருமணம் முடிந்து நான்கு வருடங்கள் பூர்த்தியாகி விட்டது.

    இருவரும் வேலைக்குப் போவதால், வசதிக்கு எந்தச் குறைவும் இல்லை.

    சொந்தமாக வீடு, இருவருக்கும் இரண்டு கார்கள் பாங்கில் கணிசமாக தொகை. எந்தத் தடங்கலுமில்லாமல் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.

    அவர்கள் அன்பின் அடையாளமாக இன்னும் ஒரு குழந்தை கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் இருவரது மனதிலும் இருந்தது.

    பின்புறம் க்ரில் அடுப்பில் சிக்கன் ரோலை ப்ரை பண்ணி எடுத்து வந்து, லானில் அமர்ந்திருந்த மடோனாவிடம் கொடுத்தான்.

    நீ எடுத்துக்கலையா ஜான்.

    உனக்குதான் சூடா சாப்பிடப் பிடிக்கும். நீ சாப்பிடு. எனக்கு எடுத்துட்டு வரேன்.

    பத்து நிமிடத்தில் இன்னொரு ப்ளேட்டில் எடுத்து வந்து அவளுக்கு எதிரில் இருந்த சேரில் அமர்ந்து கொண்டான்.

    இந்த வீக் எண்ட் லானை மூவ் பண்ணனும் ஜான். பெரிசா வளர்ந்துடுச்சு.

    சரி, அதெல்லாம் இருக்கட்டும். நான் சொன்னதை யோசிச்சியா. இன்னும் தள்ளிப்போட வேண்டாம்னு தோணுது. இதுவே லேட் மடோனா.

    சரி ஜான். தாய்மை பாக்கியம் தன்னால வரும்னு பார்த்தேன். கடவுள் ஏன் என்னை மறந்துட்டாருன்னு தெரியலை. உங்க விருப்பத்தைத் தடுக்க விரும்பலை. முயற்சி செய்வோம்.

    டாக்டரின் முன் இருவரும் அமர்ந்திருந்தார்கள்.

    "உங்க, ரெண்டு பேருக்குமே எல்லா டெஸ்ட்டும் பண்ண வேண்டியிருக்கும். நாலு வருஷம் காத்திருந்தும் கிடைக்கலைன்னா... எதனால தாமதம்னு அவசியம் பார்க்கணும்.

    கவலைப்படாதீங்க, வர அடம்பிடிக்கிற உங்க மகனை எப்படியாவது வரவழைச்சுடுவோம்."

    ப்ளெட் டெஸ்ட், ஸ்கேன், யூட்ரஸ் பொஸிஷன்... என்னென்னவோ... டெஸ்டுகள்.

    நான்கு நாளைக்கு ஒரு தரம் ஹாஸ்பிடல் போவதே வேலையாக...

    "உங்க ரெண்டு பேர்கிட்டேயும் எந்தக் குறையுமில்லை. எல்லாமே நார்மலாக இருக்கு. எதனால் இந்தத் தாமதம்னு புரிஞ்சுக்க முடியலை.

    ஐ.வி.எப். டிரை பண்ணலாம் நிச்சயம் சக்ஸஸ் ஆகும்."

    மடோனாவுக்கு ஹார்மோன் இன்ஜெக்ஷன் போட்டு. ஒரு மாதம் அவளைத் தயார் பண்ணி, கருமுட்டைகளை வெளியே எடுக்கிறார்.

    ஜானின் விந்தணுவோடு டெஸ் ட்யூப்பில், எம்பிரியோ உருவாகி, அவர்களுக்கான குழந்தை லேப்பில் உருவாகிறது.

    உருவான கருவை அவள் கருப்பையில் வைக்க, ஒவ்வொரு நாளையும், தாய்மையின் அன்போடு... குழந்தை உருவாகும் என்ற நம்பிக்கையில் கடத்துகிறாள் மடோனா.

    அதற்கு மேல் ஜான் அவளருகிலேயே தவம் இருக்கிறான்.

    ஸாரி மடோனா, ரிசல்ட் நெகடிவ்னு வந்திருச்சு. உன் உடம்பு ஏன் ஏற்க மறுக்குதுன்னு தெரியலை.

    எம்பிரியோ... இன்னும் நான்கு இருக்கு. இன்னும் இரண்டு சைக்கிள் டிரை பண்ணலாம். டாக்டரின் வார்த்தைகள்.

    இந்த நான்கில் ஒண்ணு, என் குழந்தையாக உருவெடுத்தால் போதும்.

    செலவைப் பற்றி கவலைப்படாமல் குழந்தை ஒன்றே குறியாக சம்மதிக்கிறார்கள்.

    மடோனா ஊசி மருந்து என்று உடம்பை வருத்திக் கொண்டது தான் மிச்சம்.

    அவர்களின் முயற்சி கைகூடாமல் போக, தளர்ந்து போகிறான் ஜான்.

    நாம் என்ன பாவம் பண்ணினோம் மடோனா. எதுக்காக கடவுள் நமக்குக் குழந்தையைத் தர மறுக்கிறாரு.

    இல்லை ஜான். நமக்கான குழந்தையை கடவுள் ஏற்கனவே இந்த உலகத்துக்கு அனுப்பி வச்சுட்டாருன்னு தோணுது.

    என்ன சொல்ற டியர்.

    4

    சிகாகோ நகரின் சியர்ஸ்டவர் கட்டிடத்தின் உச்சியில் நின்று கொண்டிருக்கிறாள் மடோனா. சிகாகோ நகரமே ஒளி வெள்ளத்தில் சொர்க்கபுரியாக காட்சி தருகிறது.

    சில்லென்ற பனிக்காற்று உடலைச் சிலிர்க்க வைக்கிறது.

    அருகில் மூன்று வயதுக் குழந்தையை இருபுறமும் கைகளைப் பிடித்து அழைத்துச் செல்லும் தம்பதியர்.

    உன் மனசில் என்ன இருக்குன்னு சொன்னா தானே எனக்குப் புரியும் டியர். ப்ளீஸ் தயக்கமில்லாம சொல்லு.

    அருகில் நின்ற ஜான், மடோனாவின் இடுப்பை கை போட்டு, தன்னருகில் அணைத்தபடி நிற்கிறான்.

    ஜானின் கண்களை ஊடுருவிப் பார்த்தாள்.

    "நாம் பெத்தெடுத்தால்தான் ஒரு குழந்தைக்குத் தாயாக முடியுமா. உண்மையான அரவணைப்போடு அன்பு, பாசத்தோடு என்னால எந்தக் குழந்தைக்கும் தாயாக இருக்க முடியும்.

    எத்தனையோ குழந்தைங்க பெத்தவங்க அரவணைப்பைத் தேடி தவிக்குது. அதிலே ஒரு குழந்தையை நம் குழந்தையா தத்தெடுப்போம். நம்ப அன்பு, பாசத்தின் மூலம், உள்ளன்போடு அதுவும் நம் குழந்தையா வளரும்."

    கண்கலங்க மடோனாவைப் பார்க்கிறான் ஜான்.

    நிச்சயம் நீ ஒரு உன்னதத் தாயாக இருப்பே மடோனா. நமக்கான குழந்தை எங்கே இருக்குன்னு தேடுவோம்.

    பக்கத்தில் குடியிருக்கும் இந்தியக் குடும்பம் மடோனாவிடம் நன்கு பழகுவார்கள்.

    மினு... உங்க வீட்டு சமையல் வாசனை, இங்கே வரைக்கும் வருது. என்ன செய்யறே.

    சிக்கன் பிரியாணி, கொடுத்து விடறேன். சாப்பிட்டுப் பாரு.

    அடுத்த பத்தாவது நிமிடம் கன்டெயினரில், சூடாக போட்டு பத்து வயது

    Enjoying the preview?
    Page 1 of 1