Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

அன்பெனும் ஜீவ நதி!
அன்பெனும் ஜீவ நதி!
அன்பெனும் ஜீவ நதி!
Ebook251 pages1 hour

அன்பெனும் ஜீவ நதி!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ரகு தூங்கி எழுந்து அவன் அறையிலிருந்து வெளியே வர,
 ஹாலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த தேவகி எழுந்து கொள்கிறாள்.
 "காபி தரட்டுமா ரகு."
 "வேண்டாம்மா. ஒண்ணா குளிச்சுட்டு வந்து டிபன் சாப்பிட்டுக் குடிக்கிறேன்."
 "நீ உன்னைச் சரியா கவனிக்காம எப்படி இளைச்சுப் போயிட்டே பாரு. இந்த ஒரு வருஷமா பவித்ராவோடு எவ்வளவு கஷ்டம்."
 "என்னம்மா பண்றது. தொட்டுத் தாலி கட்டி அவளோடு இரண்டு வருஷம் வாழ்ந்துட்டேனே. விட்டுட முடியுமா? குணமாயிடுவான்னு எவ்வளவு போராடினேன். கடைசியில் எந்தப் பலனும் இல்லாமல் போயிடுச்சி."
 "சரி ரகு, இனி பழசை மறக்கிறதுதான் நல்லது. நம்ப சாம்பசிவம் மாமா, அப்பாவோட நண்பர் உனக்கு அருமையான பொண்ணு பார்த்திருக்காரு. டிகிரி முடிச்சிருக்கா. பார்க்கவும் லட்சணமாக இருக்கா. அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான்.
 பொண்ணோட போட்டோ எடுத்துட்டு இன்னைக்கு சாயந்திரம் வர்றதாகச் சொல்லியிருக்காரு. உனக்குப் பிடிச்சிருந்தா, பேசி முடிச்சு, சிம்பிளா கோவிலில் வச்சு அடுத்த மாசமே கல்யாணத்தை முடிச்சுடலாம். என்னப்பா சொல்றே?"
 "விவாகரத்து வாங்கின கையோடு கல்யாணம் முடிக்கணுமா?"
 "இதுவே லேட்டு. ஒரு வருஷம் அவளோடு கஷ்டப்பட்டுத்தான் வெளியே வந்திருக்கே. அவளுக்குக் கொடுத்து வைக்கலை. என்னப்பா செய்யறது. அதுக்காக நீ காலம் முழுக்க இப்படியே இருக்க முடியுமா?"சரிம்மா. உன் இஷ்டம். ஆனா அவங்கப்பா போகும் போது ஒரு வார்த்தை சொன்னாரு. கவனிச்சியா. 'என் மகள், உங்களைப் பிரிஞ்சு எப்படி இருப்பான்னு தெரியலை. மாசம் ஒரு தடவையாவது வந்து பார்த்துட்டுப் போங்க. உங்களுக்கு வரத் தோது இல்லாட்டி. நான் அழைச்சிட்டு வந்து காண்பிச்சுட்டுப் போறேன்'. அதுக்கு மட்டும் தயவு செய்து நீங்க அனுமதிக்கணும்."
 "இங்கே பாரு ரகு. வந்தா வந்து பார்த்துட்டுப் போகட்டும். நாம் எல்லா உண்மையும் சொல்லித்தான் அந்த இடத்தில் பெண் பார்த்திருக்கோம். வரப்போற பொண்ணுகிட்டே பவித்ராவைப் பத்தி விபரமா சொல்லிடுவோம். அவ புரிஞ்சுப்பா.
 உனக்குக் கல்யாணம் முடிச்சு; நான் ஊருக்குக் கிளம்பணும் ரகு. வயல் வேலைகள் நிறைய இருக்கு. நான் கிளம்பி வந்தே ஒரு மாசமாகுது. உனக்கு ஒரு நல்ல வழி காண்பிச்சுட்டுத்தான் ஊருக்குப் போகணும்னு தீர்மானத்தோடு புறப்பட்டு வந்திருக்கேன்."
 "நான் போய்க் குளிச்சுட்டு வரேன். நீ டிபனை ரெடி பண்ணும்மா. பவித்ரா போனதும், சமையல்காரம்மாவை நிறுத்திட்டே."
 "ஆமாம் எதுக்கு. அவளுக்காகத்தான் வீட்டோடு ஆள் தேவைப்பட்டது. இனி உனக்கு வர்றவ, உன்னையும் வீட்டையும் நல்லபடியா கவனிச்சுப்பா. உன் வாழ்க்கையில் மீண்டும் சந்தோஷம் மலரப் போகுது."
 தேவகி சொல்ல, மௌனமாக எழுந்து தன் அறைக்குள் செல்கிறான் ரகு

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223890232
அன்பெனும் ஜீவ நதி!

Read more from Parimala Rajendran

Related to அன்பெனும் ஜீவ நதி!

Related ebooks

Related categories

Reviews for அன்பெனும் ஜீவ நதி!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    அன்பெனும் ஜீவ நதி! - Parimala Rajendran

    Contents

    Contents 1

    1 2

    2 5

    3 6

    4 8

    5 9

    6 11

    7 14

    8 16

    9 18

    10 23

    11 26

    12 28

    13 30

    14 35

    15 37

    16 40

    17 43

    18 44

    19 45

    20 47

    21 51

    22 53

    23 56

    24 59

    25 62

    26 64

    27 66

    28 68

    29 69

    30 74

    32 80

    33 83

    34 85

    35 87

    36 90

    37 92

    38 93

    39 95

    40 97

    41 99

    42 101

    43 103

    44 106

    45 107

    46 109

    47 111

    48 112

    49 117

    50 119

    51 120

    52 123

    53 126

    54 127

    55 129

    56 134

    57 135

    58 138

    59 143

    60 145

    61 148

    62 148

    63 150

    64 152

    65 153

    1

    ரயிலில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த பவித்ரா, நெற்றி ஜன்னல் கம்பிகளில் அழுந்த, கற்றையாக முன் நெற்றியில் விழும் முடி காற்றில் பறக்க, இது எதையும் சட்டை செய்யாமல், கண்களில் வியப்புத் தோன்ற வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்தாள்.

    ரயிலின் வேகத்தில் மரங்கள் எதிர்த்திசையில் வேகமாகச் செல்லும் மாயத் தோற்றத்தை வெளிப்படுத்த,

    அப்பா, இந்த மரம் செடியெல்லாம் எவ்வளவு வேகமாகப் போகுது பாரேன்.

    அருகில் அமர்ந்திருக்கும் சிவப்பிரகாசத்தின் முகவாய்க் கட்டையைப் பிடித்துத் தன் பக்கம் திருப்புகிறாள்.

    இருக்கட்டுமா. நீ வேடிக்கை பாரு.

    அப்பா, ரயில் நிக்கும்போது வடை வாங்கித் தர்றியா?

    சரி. வாங்கித் தரேன்.

    அப்பா, ரகு எப்ப வருவாரு?

    வருவாரும்மா.

    எப்ப, சொல்லு.

    இப்பதானே, அவர் வீட்டிலிருந்தே கிளம்பி வர்றோம். இன்னும் ஒரு வாரம் கழிச்சு வருவாரு.

    எத்தனை நாள், சொல்லு.

    ஏழு நாள் கழிச்சு.

    என் கையைப் பிடிச்சுச் சொல்லுப்பா.

    அவள் விரல்களைப் பிடித்து, ஒண்ணு, இரண்டு சொல்லி ஏழு விரல்களைத் தொடுகிறார்.

    கை விரல்களையே பார்த்தவள், சரி. வரட்டும்.

    திரும்பவும் வேடிக்கை பார்க்கத் தொடங்க, அருகில் அமர்ந்திருந்த பெண்மணி, கேள்விக்குறியுடன் அவரைப் பார்க்கிறாள்.

    இது உங்க பெண்ணா?

    ஆமாம். நீங்க எதுக்குக் கேட்கறீங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. வயது முப்பதுக்குள் இருக்கும். கழுத்தில் மாங்கல்யம் தொங்குது. பார்க்கவும் லட்சணமாகத் தெரியறா. ஆனா பேசறது, நடந்துக்கிறதைப் பார்த்தா ஒரு சின்னப்பிள்ளையின் நடவடிக்கை தெரியுதேன்னுதானே கேட்கறீங்க.

    ஆமாம், ஏதும் உடம்பு சரியில்லையா?

    "நல்லபடியா இருபத்தைஞ்சு வயசில் கல்யாணம் பண்ணிப் போனவதான்மா என் பொண்ணு. ரொம்பவும் புத்திசாலி. எந்தக் காரியம் செய்தாலும் சுத்தமாகவும், நறுவிசாகவும் இருக்கும். அவ அழகைப் பார்த்தே இல்லாத வீட்டுப் பெண்ணாக இருந்தாலும், பாங்கில் ஆபிசராக இருக்கும் என் மாப்பிள்ளைக்குக் கட்டி வச்சாங்க.

    என் மகளுக்குத்தான் அவரோடு வாழக் கொடுப்பினை இல்லை. கல்யாணமாகி இரண்டு வருஷம் கழிச்சு நடந்த ஒரு ஆக்ஸிடெண்டில் தலையில் பலமாக அடிபட்டு, மூளை கலங்கிப் போச்சு. என் மாப்பிள்ளை சென்னையில் பார்க்காத வைத்தியமில்லை. டாக்டருங்க கைவிரிச்சுட்டாங்க. இனிக் காலத்தை இப்படி ஓட்டணும்னு தலை விதி.

    ஒரு வருஷமா இவளோடு போராடி, சம்பந்தியம்மா தன் மகனின் வாழ்க்கை பறிபோகுதேன்னு கவலைப்பட்டு, கடைசியில் கோர்ட் மூலமா விவாகரத்து வாங்கியாச்சு. மாப்பிள்ளைக்கு இன்னொரு கல்யாணம் நடக்கப் போகுது. இனியும் அங்கே விட்டு வைக்கக் கூடாதுன்னு எங்க கிராமத்துக்குக் கூட்டிப் போறேன்."

    கேட்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு. இவ்வளவு அழகான பெண்ணுக்கு இப்படி ஒரு கஷ்டமா. இவங்க அம்மா வரலையா சார்.

    இருந்தாதானே வர்றதுக்கு. சின்ன வயசிலேயே தாயை இழந்த பொண்ணு. நான்தான் தனி மனுஷனா வளர்த்து ஆளாக்கினேன். வாத்தியாராக இருந்து ரிடையர்ட் ஆயிட்டேன். இனி வரும் காலங்கள் எப்படிப் போகப் போகுதுன்னு கவலையா இருக்கு.

    ரகு, ரகுன்னு உங்க பொண்ணு கேட்டுதே. அது யாரு?

    "என் மாப்பிள்ளைதான் ரகுநாதன். இவ்வளவு தூரம் ஞாபகங்களைத் தொலைத்து வாழும் என் மகள். கணவன் மேலே ஆத்மார்த்தமான அன்பு வச்சிருந்தாங்கிறதுக்கு, இன்னமும் அவர் ஞாபகங்கள் அவள் மனசின் மூலையில் இருக்கிறதுதான் ஆதாரம்.

    ரகு, ரகுன்னு அவரைப் பார்க்காமல் இருக்க மாட்டா. இனி எப்படித் தான் இவளை வச்சு சமாளிக்கப் போறேன்னு தெரியலை."

    அப்பா, ரகு வரப்போறாரா?

    ரகுவின் பெயரை உச்சரித்தவுடன் சடாரென்று திரும்பி அப்பாவைப் பார்க்கிறாள்.

    வருவாரு கண்ணம்மா. நீ சாப்பிட்டு தூங்கறியா?

    தூக்கம் வரலையே.

    கண் மூடிப் படுத்தா தூக்கம் வரும். முதலில் சாப்பிடு.

    சாப்பாட்டுப் பொட்டலத்தை எடுத்துக் கொடுக்க, அழகாக அதைப் பிரித்து, இட்லிகளை விண்டு சாப்பிடுகிறாள். சாப்பிடும் மகளைக் கண்கலங்கப் பார்த்தபடி இருக்கிறார் சிவப்பிரகாசம்.

    2

    ரகு தூங்கி எழுந்து அவன் அறையிலிருந்து வெளியே வர,

    ஹாலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த தேவகி எழுந்து கொள்கிறாள்.

    காபி தரட்டுமா ரகு.

    வேண்டாம்மா. ஒண்ணா குளிச்சுட்டு வந்து டிபன் சாப்பிட்டுக் குடிக்கிறேன்.

    நீ உன்னைச் சரியா கவனிக்காம எப்படி இளைச்சுப் போயிட்டே பாரு. இந்த ஒரு வருஷமா பவித்ராவோடு எவ்வளவு கஷ்டம்.

    என்னம்மா பண்றது. தொட்டுத் தாலி கட்டி அவளோடு இரண்டு வருஷம் வாழ்ந்துட்டேனே. விட்டுட முடியுமா? குணமாயிடுவான்னு எவ்வளவு போராடினேன். கடைசியில் எந்தப் பலனும் இல்லாமல் போயிடுச்சி.

    "சரி ரகு, இனி பழசை மறக்கிறதுதான் நல்லது. நம்ப சாம்பசிவம் மாமா, அப்பாவோட நண்பர் உனக்கு அருமையான பொண்ணு பார்த்திருக்காரு. டிகிரி முடிச்சிருக்கா. பார்க்கவும் லட்சணமாக இருக்கா. அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான்.

    பொண்ணோட போட்டோ எடுத்துட்டு இன்னைக்கு சாயந்திரம் வர்றதாகச் சொல்லியிருக்காரு. உனக்குப் பிடிச்சிருந்தா, பேசி முடிச்சு, சிம்பிளா கோவிலில் வச்சு அடுத்த மாசமே கல்யாணத்தை முடிச்சுடலாம். என்னப்பா சொல்றே?"

    விவாகரத்து வாங்கின கையோடு கல்யாணம் முடிக்கணுமா?

    இதுவே லேட்டு. ஒரு வருஷம் அவளோடு கஷ்டப்பட்டுத்தான் வெளியே வந்திருக்கே. அவளுக்குக் கொடுத்து வைக்கலை. என்னப்பா செய்யறது. அதுக்காக நீ காலம் முழுக்க இப்படியே இருக்க முடியுமா?

    சரிம்மா. உன் இஷ்டம். ஆனா அவங்கப்பா போகும் போது ஒரு வார்த்தை சொன்னாரு. கவனிச்சியா. ‘என் மகள், உங்களைப் பிரிஞ்சு எப்படி இருப்பான்னு தெரியலை. மாசம் ஒரு தடவையாவது வந்து பார்த்துட்டுப் போங்க. உங்களுக்கு வரத் தோது இல்லாட்டி. நான் அழைச்சிட்டு வந்து காண்பிச்சுட்டுப் போறேன்’. அதுக்கு மட்டும் தயவு செய்து நீங்க அனுமதிக்கணும்.

    "இங்கே பாரு ரகு. வந்தா வந்து பார்த்துட்டுப் போகட்டும். நாம் எல்லா உண்மையும் சொல்லித்தான் அந்த இடத்தில் பெண் பார்த்திருக்கோம். வரப்போற பொண்ணுகிட்டே பவித்ராவைப் பத்தி விபரமா சொல்லிடுவோம். அவ புரிஞ்சுப்பா.

    உனக்குக் கல்யாணம் முடிச்சு; நான் ஊருக்குக் கிளம்பணும் ரகு. வயல் வேலைகள் நிறைய இருக்கு. நான் கிளம்பி வந்தே ஒரு மாசமாகுது. உனக்கு ஒரு நல்ல வழி காண்பிச்சுட்டுத்தான் ஊருக்குப் போகணும்னு தீர்மானத்தோடு புறப்பட்டு வந்திருக்கேன்."

    நான் போய்க் குளிச்சுட்டு வரேன். நீ டிபனை ரெடி பண்ணும்மா. பவித்ரா போனதும், சமையல்காரம்மாவை நிறுத்திட்டே.

    ஆமாம் எதுக்கு. அவளுக்காகத்தான் வீட்டோடு ஆள் தேவைப்பட்டது. இனி உனக்கு வர்றவ, உன்னையும் வீட்டையும் நல்லபடியா கவனிச்சுப்பா. உன் வாழ்க்கையில் மீண்டும் சந்தோஷம் மலரப் போகுது.

    தேவகி சொல்ல, மௌனமாக எழுந்து தன் அறைக்குள் செல்கிறான் ரகு.

    3

    பவித்ரா புஸ்தகத்தை விரித்து வைத்து, அதிலுள்ள படங்களைப் பார்த்துக் கொண்டிருக்க, அஞ்சலை உள்ளே நுழைந்தாள்.

    யாரு நீ?

    பாப்பா, என்னைத் தெரியலை? நான் அஞ்சலை.

    அஞ்சலையா? சரிசரி... இதிலே கதை இருக்கு. எனக்குப் படிச்சுச் சொல்றியா? கண் கலங்க அவளைப் பார்க்கிறாள் அஞ்சலை.

    "அஞ்சலை, உன் புருஷன் குடிச்சுட்டு வந்து அடிச்சா நீ பொறுத்துப் போகணும்னு அவசியமில்லை. தைரியமா எதிர்த்து நில்லு. நீ அவனை நம்பி இல்லை. நீ நாலு வீடு வேலை பார்த்துச் சம்பாதிக்கிறே.

    இப்படி தினமும் அடிச்சிட்டிருந்தா... உன்னை விட்டு தனியா போயிடுவேன். அதுக்கு மேலும் தொந்தரவு கொடுத்தா போலீஸில் கம்ப்ளெய்ண்ட் பண்ணுவேன்!’னு தைரியமா பேசு. நாலு நாளைக்கு எதிர்த்து நின்னா... தன்னால அடங்கிப் போவான். நீ இல்லாம அவனால தனியா வாழ முடியாது."

    தனக்குத் தைரியம் சொன்னவள், இன்றைக்குக் குழந்தையாய் ஒன்றும் புரியாமல் மனம் பேதலித்து நிற்கிறாள்.

    அஞ்சலையா... வா... அஞ்சலை. உன்னைத் தான் எதிர்பார்த்திட்டிருந்தேன். உள்ளிருந்து சிவப்பிரகாசம் வர,

    ஐயா, சொல்லுங்க. என்னை வரச் சொன்னீங்களாம். சோமு சொன்னான். போட்டது போட்டபடி ஓடி வரேன். தங்கச்சி வாழ்க்கை இப்படி முடிஞ்சு போச்சே. விவாகரத்துக் கொடுத்துட்டாங்களாமே. கேட்கவே மனசுக்கு கஷ்டமா இருக்கு.

    என்ன செய்யறது? இதுதான் அவ தலைவிதின்னா, யாரால மாத்த முடியும்? நீ எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா அஞ்சலை?

    சொல்லுங்க ஐயா.

    "இனி பவித்ரா இங்கேதான் இருக்கப் போறா. அவளைக் கூட இருந்து கவனிச்சுக்க ஆள் வேணும். நான் வீட்டில் இல்லாத சமயம், அவளுக்குத் துணையாக இருக்கணும். உன்னால முடியுமா அஞ்சலை? நீ நாலு வீடு வேலை பார்த்துப் பிழைப்பை ஓட்டறது தெரியும். உனக்கு மாசா மாசம் கணிசமாக ஒரு தொகை தரேன். மூணு வேளையும் இங்கேயே சாப்பிட்டுக்கலாம்.

    உன் புருஷனும் உன்னை விட்டுட்டு எங்கேயோ போயிட்டான். நீ விருப்பப்பட்டா பவித்ராவோடு இங்கேயே தங்கிடலாம். என்ன சொல்றே?"

    என்ன ஐயா, இப்படிக் கேட்கறீங்க. தங்கச்சிக்குத் துணையா வீட்டோடு வந்து இரு அஞ்சலைன்னு சொன்னா... இருந்துட்டுப் போறேன். இதிலே என்ன தயக்கம். இப்பவே போய் நாலு துணி எடுத்துட்டு வந்துடறேன். நான் வந்து சோறாக்குறேன். நீங்க தங்கச்சியைப் பார்த்துக்குங்க.

    இப்படிப்பட்ட கஷ்டத்திலும், நல்ல உள்ளங்களை அருகில் வச்சு, எனக்குக் கருணை செய்யறியே, அதுக்கே நான் உனக்கு நன்றி சொல்லணும்.

    சுவரில் மாட்டியிருந்த வினாயகரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுகிறார்.

    4

    தன்னருகில் உட்கார்ந்திருக்கும் புவனாவைப் பார்க்கிறான் ரகு.

    பவித்ராவோடு என் வாழ்க்கை முடிந்து விட்டது. இனி இவள்தான் என் மனைவி. என்னோடு துணை வரப் போகிறாள்.

    பவித்ராவோடு இரண்டு வருடம் வாழ்ந்த வாழ்க்கை சொர்க்கம். எனக்காகவே வாழ்ந்து, என் மீது உயிராக, என் ஒவ்வொரு தேவைகளையும் ஈடுபாட்டோடு செய்து... இப்போது எல்லாமே முடிந்து விட்டது.

    "உங்க மனசு எனக்குப் புரியுது. அக்காவைப் பத்தி எல்லா விபரமும் சொன்னாங்க. மனசுக்குக் கஷ்டமா இருந்தது. மனநிலை பேதலித்த நிலையிலும் உங்ககிட்டே மட்டும் இன்னும் அன்பாக, பிரியத்தோடு இருக்காங்களாம். சொன்னாங்க.

    அவங்களால நமக்கு எந்தத் தொந்தரவும் இல்லாட்டி, அவங்களும் நம்மோடு இருக்கிறதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லைங்க."

    வேண்டாம் புவனா. பவித்ரா இங்கே இருந்தால், என்னால உன்னோடு சகஜமாகப் பழக முடியாது. எனக்குள் ஒரு குற்ற உணர்வு இருக்கும். அவ கிராமத்துக்கு அவங்க அப்பாவோடு போய்ட்டா. இனி அவ ஒரு குழந்தைக்குச் சமம். அவளால எதையும் புரிஞ்சுக்க முடியலை. காலமெல்லாம் அவளோடு போராடற சக்தியும் எனக்கில்லை.

    அழகோவியமாக அமர்ந்திருக்கும் புவனாவை நெருங்குகிறான்.

    புது வாழ்க்கை தொடங்கப் போற இந்த நேரத்தில், இனி நம்மைப் பற்றிப் பேசுவோம். உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா புவனா? வெட்கத்துடன் அவனைப் பார்த்துச் சிரிக்கிறாள்.

    பிடிக்காமலா உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்?

    எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு, தெரியுமா? இந்த அழகான கண்கள், கவிதை பேசும் உதடுகள்... அப்புறம்...

    போதும் வர்ணித்தது. வெட்கத்துடன் சிணுங்க.

    உன்னுடைய அன்பும், நெருக்கமும், என்னுடைய பழைய வாழ்க்கையை மறக்க வைக்கணும் புவனா. எனக்கு எல்லாமே நீதான். என் உலகமே உன்னைச் சுற்றித்தான் இயங்கப் போகுது. என் மனசு போல நடந்துப்பியா புவனா?

    நிச்சயமாங்க. உங்க சந்தோஷம்தான் என் வாழ்க்கை. இந்தப் புவனா என்னைக்கும் உங்களுக்கானவள். உங்களை சந்தோஷமா வச்சுக்கறதுதான் என் குறிக்கோள். போதுமா?

    போதும் புவனா. இது போதும்.

    அவளைத் தன்னோடு சேர்த்துத்

    Enjoying the preview?
    Page 1 of 1