Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

காத்திருப்பேன் நான் உனக்காக...
காத்திருப்பேன் நான் உனக்காக...
காத்திருப்பேன் நான் உனக்காக...
Ebook116 pages43 minutes

காத்திருப்பேன் நான் உனக்காக...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கொடைகானல் மலையை ஒட்டிய அழகான கிராமம். பசுமை மாறாத வயல்வெளிகள். இந்தக் கிராமத்தை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும் ஏரி. ஏரிக்கரையை ஒட்டி, வளர்ந்திருக்கும் நிழல் தரும் மரங்கள். 

பெரிதாக எந்த எதிர்பார்ப்பும், ஆசையும் இல்லாமல் இயல்பாக வாழ்க்கை நடத்தும் கிராமத்து மக்கள். மொத்தமே இருநூறு குடும்பங்கள் மட்டுமே இருக்கும் அந்த கிராமத்தில் நடுநாயகமாக விளங்கியது அந்த பங்களா. 

பங்களா என்று தான் சொல்ல வேண்டும். அந்தக் காலத்துக் கட்டிடம். தேக்கை இழைத்து செய்யப்பட்ட கதவுகள், தூண்கள். அந்த வீட்டை கிராமத்து மக்கள் பங்களா வீடு என்று தான் சொல்வார்கள். 

இந்த பூஞ்சோலை கிராமத்தில் நடக்கும் நல்லது அல்லது கெட்டது எல்லாவற்றிலும், அந்த பங்களா வீட்டில் இருப்பவரின் பங்களிப்பு கட்டாயம் இருக்கும். 

பெரிய ஐயா என்று எல்லோராலும் அழைக்கப்படும் தியாகராசனுக்கு கடல் போல் இருக்கும் அவ்வளவு சொத்துக்கும் வாரிசாக அரவிந்தன் இருந்தான். ஒரே மகன். 

மகனை மேற்படிப்பிற்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்து, இன்னும் இரண்டு மாதத்தில் வரப்போகும் மகனுக்காக தியாகராசனும், அவன் மனைவி காந்திமதியும் ஆவலுடன் காத்திருந்தார்கள். 

வாசலில் கார் வந்து நிற்க, மகளுடன் உள்ளே வந்தார் சிவராமன். 

சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்த தியாகராசன், காந்திமதியின் தங்கை விமலாவின் கணவரும் அவர் மகள் நந்தினியும் வருவதைப் பார்த்து, 

"வாப்பா, சிவா நல்லாயிருக்கியா... நந்தினி எப்படிம்மா இருக்கே" 

அன்புடன் விசாரிக்க, அங்கே வந்த காந்திமதி, தங்கை மகளை அன்போடு தழுவிக் கொண்டாள். 

"என்னம்மா நந்தினி அம்மாவையும் அழைச்சுட்டு வந்திருக்கலாமே." 

"பெரியம்மா அம்மாவுக்கு உடம்புக்கு முடியலை... வரலை நீங்க போய் பார்த்துட்டு வாங்கன்னு சொன்னாங்க... நாங்களும் இங்கே வத்தலகுண்டுவில் அப்பா ப்ரெண்டை பார்க்க வந்தோம். அப்படியே உங்களையும் பார்த்துட்டு, போகலாம்னு வந்தோம்." 

"சரி, இருங்க மட்டன் எடுத்து சமையல் செய்ய சொல்றேன். இப்ப காபி கொண்டு வரச் சொல்லட்டுமா." 

"வேண்டாம் அண்ணி, இப்ப தான் டிபன் சாப்பிட்டோம். உட்காருங்க பேசிட்டு இருப்போம். அரவிந்த் எப்ப வர்றான்."  

"அந்த நாளுக்குதான் நாங்களும் காத்திருக்கோம். இன்னும் இரண்டு மாசமிருக்கு." 

பதில் சொல்லுகிறார் தியாகராசன். 

"வெளிநாட்டில் படிப்பு. அங்கேயே வேலை பார்த்துட்டு அண்ணன் செட்டில் ஆகப் போறாரு"

நந்தினி சிரிப்போடு சொல்ல, 

"அப்படியெல்லாம் எங்க பிள்ளையை விட்டுட மாட்டோம். நந்தினி நாங்க படிக்காத படிப்பெல்லாம் என் மகன் படிக்கணும் அதுக்கு ஆசைப்பட்டு தான் அனுப்பி வச்சோம். அவனும் நல்லமுறையில் படிப்பு முடிச்சு வரப் போறான். அவனுக்கு பிடிச்ச மாதிரி இந்தப் பக்கம் வேலை தேடிக்கட்டும். இல்லை பிஸினஸ் பண்ணட்டும். தேவையான சொத்து சுகம் அவனுக்கு இருக்கு. இதெல்லாம் பரம்பரை சொத்து, எல்லாம் அவனுக்குத்தான்." 

பெருமை பொங்க சொல்கிறார் தியாகராசன். 

"அப்ப உங்க பிள்ளை தங்கமான பிள்ளை. உங்க பேச்சை தட்ட மாட்டாருன்னு சொல்லுங்க." 

குறும்போடு நந்தினி சொல்ல, 

"உன்னை என்ன செய்யறேன் பாரு"

அவள் காதை பிடித்து செல்லமாக கிள்ள, 

"விடுங்க பெரியப்பா வலிக்குது" எல்லாரும் சிரிக்கிறார்கள். 

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 28, 2023
ISBN9798223235682
காத்திருப்பேன் நான் உனக்காக...

Read more from Parimala Rajendran

Related to காத்திருப்பேன் நான் உனக்காக...

Related ebooks

Reviews for காத்திருப்பேன் நான் உனக்காக...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    காத்திருப்பேன் நான் உனக்காக... - Parimala Rajendran

    1

    கொடைகானல் மலையை ஒட்டிய அழகான கிராமம். பசுமை மாறாத வயல்வெளிகள். இந்தக் கிராமத்தை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்கும் ஏரி. ஏரிக்கரையை ஒட்டி, வளர்ந்திருக்கும் நிழல் தரும் மரங்கள்.

    பெரிதாக எந்த எதிர்பார்ப்பும், ஆசையும் இல்லாமல் இயல்பாக வாழ்க்கை நடத்தும் கிராமத்து மக்கள். மொத்தமே இருநூறு குடும்பங்கள் மட்டுமே இருக்கும் அந்த கிராமத்தில் நடுநாயகமாக விளங்கியது அந்த பங்களா.

    பங்களா என்று தான் சொல்ல வேண்டும். அந்தக் காலத்துக் கட்டிடம். தேக்கை இழைத்து செய்யப்பட்ட கதவுகள், தூண்கள். அந்த வீட்டை கிராமத்து மக்கள் பங்களா வீடு என்று தான் சொல்வார்கள்.

    இந்த பூஞ்சோலை கிராமத்தில் நடக்கும் நல்லது அல்லது கெட்டது எல்லாவற்றிலும், அந்த பங்களா வீட்டில் இருப்பவரின் பங்களிப்பு கட்டாயம் இருக்கும்.

    பெரிய ஐயா என்று எல்லோராலும் அழைக்கப்படும் தியாகராசனுக்கு கடல் போல் இருக்கும் அவ்வளவு சொத்துக்கும் வாரிசாக அரவிந்தன் இருந்தான். ஒரே மகன்.

    மகனை மேற்படிப்பிற்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்து, இன்னும் இரண்டு மாதத்தில் வரப்போகும் மகனுக்காக தியாகராசனும், அவன் மனைவி காந்திமதியும் ஆவலுடன் காத்திருந்தார்கள்.

    வாசலில் கார் வந்து நிற்க, மகளுடன் உள்ளே வந்தார் சிவராமன்.

    சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்த தியாகராசன், காந்திமதியின் தங்கை விமலாவின் கணவரும் அவர் மகள் நந்தினியும் வருவதைப் பார்த்து,

    வாப்பா, சிவா நல்லாயிருக்கியா... நந்தினி எப்படிம்மா இருக்கே

    அன்புடன் விசாரிக்க, அங்கே வந்த காந்திமதி, தங்கை மகளை அன்போடு தழுவிக் கொண்டாள்.

    என்னம்மா நந்தினி அம்மாவையும் அழைச்சுட்டு வந்திருக்கலாமே.

    பெரியம்மா அம்மாவுக்கு உடம்புக்கு முடியலை... வரலை நீங்க போய் பார்த்துட்டு வாங்கன்னு சொன்னாங்க... நாங்களும் இங்கே வத்தலகுண்டுவில் அப்பா ப்ரெண்டை பார்க்க வந்தோம். அப்படியே உங்களையும் பார்த்துட்டு, போகலாம்னு வந்தோம்.

    சரி, இருங்க மட்டன் எடுத்து சமையல் செய்ய சொல்றேன். இப்ப காபி கொண்டு வரச் சொல்லட்டுமா.

    வேண்டாம் அண்ணி, இப்ப தான் டிபன் சாப்பிட்டோம். உட்காருங்க பேசிட்டு இருப்போம். அரவிந்த் எப்ப வர்றான்.

    அந்த நாளுக்குதான் நாங்களும் காத்திருக்கோம். இன்னும் இரண்டு மாசமிருக்கு.

    பதில் சொல்லுகிறார் தியாகராசன்.

    வெளிநாட்டில் படிப்பு. அங்கேயே வேலை பார்த்துட்டு அண்ணன் செட்டில் ஆகப் போறாரு

    நந்தினி சிரிப்போடு சொல்ல,

    அப்படியெல்லாம் எங்க பிள்ளையை விட்டுட மாட்டோம். நந்தினி நாங்க படிக்காத படிப்பெல்லாம் என் மகன் படிக்கணும் அதுக்கு ஆசைப்பட்டு தான் அனுப்பி வச்சோம். அவனும் நல்லமுறையில் படிப்பு முடிச்சு வரப் போறான். அவனுக்கு பிடிச்ச மாதிரி இந்தப் பக்கம் வேலை தேடிக்கட்டும். இல்லை பிஸினஸ் பண்ணட்டும். தேவையான சொத்து சுகம் அவனுக்கு இருக்கு. இதெல்லாம் பரம்பரை சொத்து, எல்லாம் அவனுக்குத்தான்.

    பெருமை பொங்க சொல்கிறார் தியாகராசன்.

    அப்ப உங்க பிள்ளை தங்கமான பிள்ளை. உங்க பேச்சை தட்ட மாட்டாருன்னு சொல்லுங்க.

    குறும்போடு நந்தினி சொல்ல,

    உன்னை என்ன செய்யறேன் பாரு

    அவள் காதை பிடித்து செல்லமாக கிள்ள,

    விடுங்க பெரியப்பா வலிக்குது எல்லாரும் சிரிக்கிறார்கள்.

    மதியம் தடபுடலாக விருந்து சாப்பாடு முடிய,

    பெரியம்மா, நம்ம தோப்பு பக்கம் போய்ட்டு வருவோமா... மாங்காய் காய்ச்சிருக்கா பெரியம்மா

    எல்லாம் பிஞ்சாக இருக்கும்மா. பெரிசாகட்டும், ஆள் போட்டு திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைக்கிறேன்.

    சரி வாங்க தோப்புக்கு போய் பார்ப்போம்.

    நான் கொஞ்சம் தலை சாய்க்கிறேன். நீ வேணும்னா, பின்பக்கம் கோசலை வேலை பார்க்கிறா... அவளை கூட்டிட்டு போய்ட்டு வாம்மா... சமர்த்து இல்லையா.

    சரி பெரியம்மா. உங்களுக்கு வயசாயிடுச்சு, நீங்க சரிவர மாட்டீங்க. நான் கிளம்பறேன்.

    தென்னை மரங்களும், மாமரங்களும், கொய்யா, வாழை என்று எல்லாம் பசுமையாக காட்சியளிக்க, நிழல் போர்த்திய அந்த இடம் சோலைவனமாக காட்சியளித்தது.

    அங்கேயே தங்கி தோட்டத்தைப் பராமரிக்கும் வேலன், தன் ஓட்டு வீட்டின் வாசல் திண்ணையில் உட்கார்ந்திருக்க, நந்தினி வருவதை அவன் மகள் மஞ்சரி தான் கவனித்தாள்.

    அப்பா, முதலாளியம்மா தங்கச்சி மகள் நந்தினி வர்றாங்க பாருங்க.

    வாங்கம்மா. நல்லாயிருக்கீங்களா. ஊரிலிருந்து எப்ப வந்தீங்க... இளநீ, காய் ஏதும் வேணும்னு சொல்லியிருந்தா நானே எடுத்துட்டு வந்திருப்பேனே... இவ்வளவு தூரம் தனியாகவா வந்தீங்க.

    காரில் வந்தேன் வேலன். எப்படியிருக்கே... எப்படி பராமரிக்கிறேன்னு பார்த்துட்டு போகலாம்னு வந்தேன். இந்த வருஷம் காய்ப்பு அதிகமா. மரத்தில் மாபிஞ்சுகள் தெரியுது.

    நிமிர்ந்து பார்த்தபடி சொல்ல,

    நந்தினியம்மா வந்தால் தேவையில்லாமல் உன்கிட்டே கோபப்படுது. இந்த பணக்காரங்களை புரிஞ்சுக்கவே முடியலை. அரவிந்த தம்பி எவ்வளவு தன்மையாக பேசுவாரு.

    அப்பா சொல்ல,

    அரவிந்தனின் அழகான முகம் அவள் கண்முன் வருகிறது.

    மஞ்சரி இப்படி பேசாமல் அமைதியா இருந்தால் எப்படி உன்னைப் பார்க்க தானே, நீ படிக்கும் இந்த ஊருக்கு தேடி வந்திருக்கேன்.

    அரவிந்த் இப்ப தப்பு பண்ணிட்டேனோன்னு மனசு பயமுறுத்துது. நான் அழகானவளாக இருக்கலாம், படிச்சவளாக இருக்கலாம். இருந்தாலும் நாங்க ஏழை ஜாதி. நம்ம கிராமத்திலேயே பெரும் பணக்காரர் உங்கப்பா... நம்ப காதலை ஏத்துப்பாங்களா.

    பைத்தியம் எந்தக் காலத்தில் இருக்கே. எனக்கு உன்னை பிடிச்சுருக்கு, சின்ன வயசிலிருந்தே உன்னைத் தெரியும். ஒரு வயசுக்கு பிறகு என் மனசு உன்னை விரும்ப ஆரம்பிச்சுது. நீயும் அதை ஏத்துக்கிட்டே... என் படிப்பு முடிஞ்சதும், என் காதலை வீட்டில் சொல்லி, உன் கழுத்தில் தாலி கட்டுவேன். தைரியமா இரு

    உங்களை மேற்படிப்பிற்காக வெளிநாட்டிற்கு அனுப்ப போறதாக சொல்றாங்க...

    2

    சிவராமன் மகளுடன் கிளம்ப, தங்கைக்காக ஸ்வீட், முறுக்கு என வேலையாள் வைத்து செய்து கொடுக்கிறாள் காந்திமதி.

    அடுத்த தடவை வரும் போது இப்படி பறந்துகிட்டு ஒரு நாளில் வந்துட்டு போகாமல் விமலாவை கூட்டிகிட்டு நாலு நாள் இருந்துட்டு போற மாதிரி வாங்க.

    சொல்லும் பெரியம்மாவின் கையை அன்போடு பிடித்தவள், நீங்களும் பெரியப்பாவும் வாங்களேன். எங்க வீட்டில் இருந்துட்டு போகலாம். உங்க தங்கச்சியும் சந்தோஷப்படுவாங்க.

    வர்றோம், வர்றோம் சீக்கிரம் நந்தினிக்கு மாப்பிள்ளை பாருங்க. அரவிந்த் கல்யாணத்துக்கு முன்னால அவ கல்யாணம் நடக்கணும்.

    தியாராசன் நந்தினியை புன்னகையுடன் பார்த்தபடி சொல்கிறார்.

    "அப்புறம் பெரியம்மா... நம்ப தோப்பு மாங்காய் மறக்காமல் அனுப்பி வை. அதுதான் டேஸ்டா நல்லா

    Enjoying the preview?
    Page 1 of 1