Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பூக்கள் பூக்கும் தருணம்!
பூக்கள் பூக்கும் தருணம்!
பூக்கள் பூக்கும் தருணம்!
Ebook115 pages42 minutes

பூக்கள் பூக்கும் தருணம்!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கேட்டருகில் நின்று வீட்டை நிமிர்ந்து பார்த்தாள் பாரதி. கணவனின் சம்பாத்தியத்தில் கட்டப்பட்ட வீடு. பாரதியும் ஸ்கூலில் டீச்சர் வேலை பார்த்ததால், மூன்று பிள்ளைகளுடன் குடும்பத்தையும் நிர்வகித்து, வீட்டிற்கு வாங்கிய லோனையும் கட்டமுடிந்தது. 

வீடு கட்டி குடி வரும் போது பெரியவன் முகுந்தனுக்கு பத்து வயது. அடுத்து செல்வம் எட்டு வயதிலும், சுகுணா ஐந்து வயதிலுமாக இருந்தார்கள். 

"பாரதி மூன்று பிள்ளைகளின் படிப்பு செலவு, குடும்ப செலவு எல்லாவற்றையும் சமாளித்து, வீட்டிற்கு வாங்கிய 'லோனை' மாதாமாதம் கட்ட முடியுமா" 

"எதுக்கு இப்படி அவநம்பிக்கையா யோசிக்கிறீங்க. முடியும்ங்க. நீங்களும் கம்பெனியில் மானேஜரா இருக்கீங்க... நானும் ஸ்கூல்ல வேலை பார்க்கிறேன். சிக்கனமாக குடும்பம் நடத்தி என்னால் சமாளிக்க முடியும். என்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு. வீட்டு லோன் கட்டுவது என் பொறுப்பு போதுமா" 

"உன்னுடைய தைரியம் தான் என்னை வாழ வச்சுட்டு இருக்கு பாரதி" 

புன்னகையோடு சொல்வார் ரத்தினம். 

பாரதியின் சாமர்த்தியத்தால் குடும்பம் நல்ல விதமாக நடந்தது. பிள்ளைகளும் வளர்ந்து பெரியவர்களாக, படிப்பு செலவு எல்லாவற்றையும் சமாளித்தார் பாரதி. 

பாரதியின் தங்கை சரோஜாதான் அக்காவை பார்த்து பொறாமைப்பட்டாள். அவள் கணவன் சரியான ஊதாரி. கவர்மெண்ட் வேலை பார்த்தாலும்... பாதி சம்பளத்தை குடிப்பதற்காக செலவு செய்து விடுவார். ஒரே மகன் என்பதால், அவளும் குடும்பத்தை ஓட்டினாள். அக்கா அளவுக்கு தனக்கு சாமர்த்தியம் போதாது என அலுத்துக் கொள்வாள். 

காலங்கள் ஓட, முகுந்தன், செல்வம், சுகுணா மூவரும் திருமணமாகி வாழ்க்கையில் செட்டில் ஆக, 

தன் கடமை முடிந்த திருப்தியில் பாரதியிடம் இரவு வெகு நேரம் சிரித்து பேசி படுத்தவர், தூக்கத்திலேயே உயிர் விட்டார் ரத்தினம். 

கணவனின் பிரிவை தாங்கிக் கொண்டவள், பிள்ளைகளுக்காக வாழ ஆரம்பித்தாள். 

அவர் இறந்த கையோடு முகுந்தனுக்கு தீபக் பிறக்க, தன் கணவனே பேரன் உருவில் வந்ததாக சந்தோஷப்பட்டாள், அவன் மீது அதிக அளவு பிரியத்தையும், பாசத்தையும் காட்டினாள். 

தீபக்கிற்கு இரண்டு வயதாகும் போது... சாதாரண காய்ச்சல் என்று படுத்த முகுந்தன்... குணமாகாமலேயே ஒரு மாதம் படுக்கையில் இருந்து இறக்க, 

பாரதியால் அந்த அதிர்ச்சியை தாங்க முடியவில்லை குடும்பமே அழுது தவித்தது. சித்ரா குழந்தையோடு தாய் வீட்டிற்கு போக... பேரனின் பிரிவை பாரதியால் ஏற்க முடியவில்லை. 

"அம்மா வாசலில் என்ன செய்யற, உள்ளே வாம்மா" செல்வத்தின் குரல் கேட்டு... 

எண்ண ஓட்டங்களிலிருந்து வெளியே வந்தவள், பெருமூச்சு வெளிப்பட வீட்டிற்கு வந்தாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 29, 2023
ISBN9798223946656
பூக்கள் பூக்கும் தருணம்!

Read more from Parimala Rajendran

Related to பூக்கள் பூக்கும் தருணம்!

Related ebooks

Related categories

Reviews for பூக்கள் பூக்கும் தருணம்!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பூக்கள் பூக்கும் தருணம்! - Parimala Rajendran

    1

    கேட்டருகில் நின்று வீட்டை நிமிர்ந்து பார்த்தாள் பாரதி. கணவனின் சம்பாத்தியத்தில் கட்டப்பட்ட வீடு. பாரதியும் ஸ்கூலில் டீச்சர் வேலை பார்த்ததால், மூன்று பிள்ளைகளுடன் குடும்பத்தையும் நிர்வகித்து, வீட்டிற்கு வாங்கிய லோனையும் கட்டமுடிந்தது.

    வீடு கட்டி குடி வரும் போது பெரியவன் முகுந்தனுக்கு பத்து வயது. அடுத்து செல்வம் எட்டு வயதிலும், சுகுணா ஐந்து வயதிலுமாக இருந்தார்கள்.

    பாரதி மூன்று பிள்ளைகளின் படிப்பு செலவு, குடும்ப செலவு எல்லாவற்றையும் சமாளித்து, வீட்டிற்கு வாங்கிய ‘லோனை’ மாதாமாதம் கட்ட முடியுமா

    எதுக்கு இப்படி அவநம்பிக்கையா யோசிக்கிறீங்க. முடியும்ங்க. நீங்களும் கம்பெனியில் மானேஜரா இருக்கீங்க... நானும் ஸ்கூல்ல வேலை பார்க்கிறேன். சிக்கனமாக குடும்பம் நடத்தி என்னால் சமாளிக்க முடியும். என்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு. வீட்டு லோன் கட்டுவது என் பொறுப்பு போதுமா

    உன்னுடைய தைரியம் தான் என்னை வாழ வச்சுட்டு இருக்கு பாரதி

    புன்னகையோடு சொல்வார் ரத்தினம்.

    பாரதியின் சாமர்த்தியத்தால் குடும்பம் நல்ல விதமாக நடந்தது. பிள்ளைகளும் வளர்ந்து பெரியவர்களாக, படிப்பு செலவு எல்லாவற்றையும் சமாளித்தார் பாரதி.

    பாரதியின் தங்கை சரோஜாதான் அக்காவை பார்த்து பொறாமைப்பட்டாள். அவள் கணவன் சரியான ஊதாரி. கவர்மெண்ட் வேலை பார்த்தாலும்... பாதி சம்பளத்தை குடிப்பதற்காக செலவு செய்து விடுவார். ஒரே மகன் என்பதால், அவளும் குடும்பத்தை ஓட்டினாள். அக்கா அளவுக்கு தனக்கு சாமர்த்தியம் போதாது என அலுத்துக் கொள்வாள்.

    காலங்கள் ஓட, முகுந்தன், செல்வம், சுகுணா மூவரும் திருமணமாகி வாழ்க்கையில் செட்டில் ஆக,

    தன் கடமை முடிந்த திருப்தியில் பாரதியிடம் இரவு வெகு நேரம் சிரித்து பேசி படுத்தவர், தூக்கத்திலேயே உயிர் விட்டார் ரத்தினம்.

    கணவனின் பிரிவை தாங்கிக் கொண்டவள், பிள்ளைகளுக்காக வாழ ஆரம்பித்தாள்.

    அவர் இறந்த கையோடு முகுந்தனுக்கு தீபக் பிறக்க, தன் கணவனே பேரன் உருவில் வந்ததாக சந்தோஷப்பட்டாள், அவன் மீது அதிக அளவு பிரியத்தையும், பாசத்தையும் காட்டினாள்.

    தீபக்கிற்கு இரண்டு வயதாகும் போது... சாதாரண காய்ச்சல் என்று படுத்த முகுந்தன்... குணமாகாமலேயே ஒரு மாதம் படுக்கையில் இருந்து இறக்க,

    பாரதியால் அந்த அதிர்ச்சியை தாங்க முடியவில்லை குடும்பமே அழுது தவித்தது. சித்ரா குழந்தையோடு தாய் வீட்டிற்கு போக... பேரனின் பிரிவை பாரதியால் ஏற்க முடியவில்லை.

    அம்மா வாசலில் என்ன செய்யற, உள்ளே வாம்மா செல்வத்தின் குரல் கேட்டு...

    எண்ண ஓட்டங்களிலிருந்து வெளியே வந்தவள், பெருமூச்சு வெளிப்பட வீட்டிற்கு வந்தாள்.

    "அத்தை காபி கொண்டு வரட்டுமா" செல்வத்தின் மனைவி ராஜி கேட்க,

    எடுத்துட்டு வாம்மா... சுகுணா போன் பண்ணினாளா... மாப்பிள்ளையும், அவளும் எப்ப வருவாங்க

    டிபன் சாப்பிட வந்துடுவாங்க

    செல்வம் அம்மாவின் அருகில் உட்கார்ந்தான்.

    என்னம்மா... வீட்டை விலை பேசியாச்சுன்னு வருத்தப் படறியா

    இல்லப்பா... எத்தனை நாளைக்கு நான் இருந்து ஆளப் போறேன். சம்பாத்தியம் பண்ணி வீட்டை கட்டினவரு போய் சேர்ந்துட்டாரு. முகுந்தனையும் பறி கொடுத்துட்டேன். வேலையிலிருந்து ரிடையர்ட் ஆகிட்டேன். இனி பிள்ளைங்க நீங்க சொல்ற படி வாழ்ந்துட்டு போறேன்

    அம்மாவின் கையை மென்மையாக பற்றுகிறான்.

    கவலைப்படாதேம்மா. நான் உன்னை நல்லபடியாக பார்த்துக்கிறேன். இவ்வளவு நாள் நான் வேலை பார்க்கிறேன்னு ஊரை விட்டு கிளம்பலை. இனி ஏன்ம்மா நீ தனியா இருக்கணும். நான் கோயமுத்தூரில் இருக்கேன். சுகுணா திருச்சியில்... நீ மட்டும் இனி தனியாக இருக்க வேண்டாம்மா... சுகுணா பேரப்பிள்ளைகளோடு இருக்கணும்னு நினைச்சாலும், ஒரு இரண்டு மாசம் போய் இருந்துட்டு வா... இனி இருக்கிற காலங்களில் பேரப் பிள்ளைகளோடு நிம்மதியா இரும்மா. ராஜி உன்னை நல்லாவே பார்த்துப்பா

    சரிப்பா... சாமான்கள் தேவையானதை பேக் பண்ணியாச்சு. சுகுணா கேட்டான்னு சிலவற்றை அவளுக்கு பார்சல் அனுப்ப எடுத்து வச்சாச்சு. மிச்சமிருப்பதை விலை பேசியாச்சுன்னு சொன்னே... எப்ப வந்து எடுத்துட்டு போவாங்க

    நாளைக்கு வருவாங்கம்மா... நாம் இரண்டு நாளில் கிளம்பலாம். அப்புறம் சுகுணா வரட்டும். சில விஷயங்களை இரண்டு பேர் கிட்டேயும் பேசணும்

    எதுவாக இருந்தாலும் நீ எடுக்கிற முடிவுதான்மா. நாங்க எந்த மறுப்பும் சொல்ல மாட்டோம். உன் நிம்மதி தான் எங்களுக்கு முக்கியம்

    சொல்லும் மகனை சிரிப்போடு பார்க்கிறாள்.

    சுகுணா பிள்ளைகளோடு, மாப்பிள்ளை மகேந்திரனுடன் வர வீடே கலகலப்பாக மாறியது.

    பாட்டி... தோட்டத்தில் மாங்காய் இல்லையா

    இப்ப சீசன் இல்ல ராஜா... உனக்கு மாங்காய் வேணும்னா... மார்க்கெட்டில் வாங்கிட்டு வரச் சொல்றேன்

    -சுகுணாவின் பெரிய மகன் அசோக் கேட்க, பதில் சொன்னாள்.

    சுகுணா முகுந்தனின் பிள்ளைகள் தோட்டத்தில் சப்தம் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

    மதியம் சாப்பாட்டிற்கு பிறகு, ஹாலில் பெரியவர்கள் கூட, அம்மா, சுகுணா வந்ததும், ஏதோ பேசணும்னு சொன்னியே சொல்லும்மா

    மருமகன் மகேந்திரன் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல, சோபாவில் உட்கார்ந்து செல்போனை பார்த்துக் கொண்டிருக்க, அம்மாவின் அருகில் உட்கார்ந்த சுகுணா,

    என்னம்மா விஷயம்

    நம்ம வீடு 90 லட்சத்திற்கு விலை போயிருக்குன்னு உனக்கு தெரியும் தானே

    ஆமாம்மா... அண்ணன் எல்லா விபரமும் சொல்லிடுச்சி. பணத்தை இரண்டு பேர் பேரிலும் டெபாசிட் பண்ணப் போறதாக சொன்னியாம். தேவை வரும் போது எடுத்துக்கலாம்னு அண்ணன் சொன்னாரு. இருந்தாலும் பங்கை சரி சமமாக பிரிக்க மாட்டேன்னு தெரியும். அண்ணனுக்கு எப்படியும் கொஞ்சம் கூட தான் கொடுக்கலாம்னு நினைச்சிருப்பே... அதானே அதைபத்தி தானே சொல்லப் போறே...

    நீ புத்திசாலி எதையும் உடனே புரிஞ்சிப்பே... அதை பத்தி தான் பேசப் போறேன்...

    அண்ணன் ஏற்கனவே சொல்லிடுச்சும்மா. இது அப்பா தன் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய வீடு. பூர்வீக சொத்து கிடையாது. அம்மா என்ன கொடுத்தாலும் திருப்தியாக வாங்கிக்கணும். அது மட்டுமில்லை. அவங்களை இனிமேல் நாம் இரண்டு பேரும் தான் நல்லபடியாக பார்த்துக்கணும்னு சொன்னாரு

    செல்வமும், ராஜியும் எதிரில் இருந்த சோபாவில் உட்கார்ந்திருக்க.

    மகேந்திரனும், மாமியார் என்னதான் சொல்லப் போகிறாள்... தங்கள் பங்கு எவ்வளவு கிடைக்கும் என்ற ஆவலுடன், செல்போனில் இருந்த கவனத்தை திருப்பி, அவர்களை பார்த்தான்.

    "வீடு விற்ற பணம் 90

    Enjoying the preview?
    Page 1 of 1