Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

விழியே கதை எழுது!
விழியே கதை எழுது!
விழியே கதை எழுது!
Ebook100 pages34 minutes

விழியே கதை எழுது!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முற்றம் வைத்துக் கட்டப்பட்ட அந்த பெரிய வீட்டின் முன்புறமுள்ள திண்ணையில் அமர்ந்திருந்த பரமன், உள் நோக்கி குரல் கொடுத்தான்.
 "ராசாத்தி... ராசாத்தி... இங்கே கொஞ்சம் வந்துட்டு போ."
 "இருங்க, அடுப்பில் பால் இருக்கு, இறக்கி வச்சுட்டு வரேன்."
 பின்கட்டிலிருந்து குரல் கொடுத்தாள்.
 "என்னங்க கூப்பிட்டிங்க...?"
 "நம்ம மகன் தீபக்கை ஆறாவது சேர்க்கணும்னு, வித்யாகிரி ஸ்கூலில் சேர்ப்போம்னு சொன்னியே. நம்ம ஞானசம்பந்தம் ஐயாகிட்டே கேட்டேன். நாளைக்கு ஸ்கூலுக்கு கூட்டிட்டு வா, அட்மிஷன் போட்டுடலாம்னு சொன்னாரு."
 "ரொம்ப நல்லதா போச்சு. அவனை நல்லா படிக்க வைக்கணும். கருவேப்பிலை கொத்து மாதிரி ஒண்ணே ஒண்ணு வச்சுருக்கோம். நாளைக்கு அவன்தானே நமக்குக் கஞ்சி ஊத்தணும்."
 சொன்னபடி எதிர் திண்ணையில் உட்காரும் ராசாத்தியை பார்க்கிறான்.
 இன்னும் இளமை குலையாமல் அன்று பார்த்தது போலவே, கட்டுடலுடன், புதிதாக மலர்ந்த ரோஜாப்பூ மாதிரி இருக்கிறாள்.
 "என்ன அப்படி பார்க்கிறீங்க?"
 "பத்து வருஷத்துக்கு முன்னால எப்படி இருந்தியோ, அதே அழகோடு மெருகு குறையாமல் இருக்கிற ராசாத்தி. இந்த அழகுதானே என்னை உன்கிட்டே ஈர்த்துச்சு.""இருந்தாலும், நான் கட்டினவள் இல்லையே. உங்களை நம்பி உங்களோடு வந்தவதானே. அதனாலதான் உங்க அண்ணன்கிட்டே பேச்சு கேட்க வேண்டியதாக போச்சு."
 "என்ன சொல்ற, அண்ணன் எப்ப வந்துச்சு?"
 "ஏதோ கல்யாணத்தில் கலந்துக்க இந்தப் பக்கம் வந்திருக்காங்க. வீட்டுக்கு வந்து சப்தம் போட்டுட்டு போனாங்க."
 மனதில் ஆத்திரம் மூள,
 "என்ன சொல்லிச்சு."
 "நீ இருக்கிற வீடு பொது சொத்து. இன்னும் சொத்து பிரிக்கலை. இதிலே எனக்கும் பங்கு இருக்கு. எங்கேயோ கிடந்த நீ, பத்து வருஷமா இந்த வீட்டில் ராஜாங்கம் பண்ணிட்டிருக்கே. இங்கே இருந்து வாழ வேண்டியவ, எங்கேயோ கண்காணாம போயிட்டா. நீயெல்லாம் நல்லா இருப்பியா. உன்னை இழுத்துட்டு வந்தானே அந்தப் பாவி அவன் வந்தா சொல்லு. கூடிய சீக்கிரமே வீட்டைக் காலி பண்ணனும். வித்து எடுத்து பங்கு பிரிக்கணும்னு சொன்னேன்னு சொல்லு, புரியுதா."
 "அப்படியா சொல்லிச்சு. இருந்தாலும் அண்ணனுக்கு வாய்க்கொழுப்பு ஜாஸ்தி. வீட்டை விற்கும்போது அவர் பங்கை தராமலா போயிடுவோம். இப்ப என்ன குறைச்சலா இருக்காரு. வீடு, வாசல்னு ஈரோட்டில் சுகபோகமாக வாழ்ந்துட்டுதானே இருக்காரு."
 "இருக்கட்டும். அவரு இந்த வீட்டில் பங்கு இருக்கிறதாலே பேசறாரு. நாம கேட்டுக்கதான் வேணும்."
 "சரி, எனக்கு வேலைக்கு நேரமாச்சு. இன்னைக்கு நிலை வைக்கிறாங்க. நான் முதலில் போயாகணும், வரட்டுமா. கதவை தாழ் போட்டுட்டு உள்ளே போ."
 "வா, பரமு. தச்சு செய்ய வேண்டிய நீ லேட்டா வர்றே."
 "பஸ் கிடைக்கலை... அதான் லேட்டு."
 "உன் பைக் என்னாச்சு?""வண்டியை வேலைக்கு விட்டிருக்கேன்."
 சொன்னவன்,
 தன்னுடன் வேலை செய்பவர்களை,
 "எல்லா நிலைக்கும் சந்தனம், குங்குமம் வச்சுட்டிங்களா?"
 பார்த்து கேட்டபடி, மேஸ்திரியிடம் வருகிறான்.
 "வீட்டுக்காரங்க வர்றதா சொல்லியிருக்காங்களா?"
 "இல்லப்பா. அவங்க வெளியூரில் இருக்கிறதாலே, பூஜை போட சொல்லிட்டாங்க. நீ தேங்காய், பழமெல்லாம் எடுத்து வை. நல்ல நேரம் வந்தாச்சு."
 அந்த வீட்டின் கார்பென்டரான பரமன், தன் வேலைகளை சுறுசுறுப்பாக பார்க்க ஆரம்பிக்கிறான்.
 தொழில் திறமை மிக்கவன் பரமன். அவனைத் தேடிவந்து வீட்டின் உரிமையாளர்களே தச்சு வேலைக்கு அவனை ஒப்பந்தம் செய்வார்கள்.
 கலைநயத்தோடு நிலைக் கதவு வேலைப்பாடுகள், பார்ப்பதற்கு தத்ரூபமாக இருக்கும்.
 பரமன், தனக்குக் கீழ் ஆசாரி நான்கு பேரை வைத்துக்கொண்டு, காண்ட்ராக்ட் எடுத்து கட்டிடங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
 பெண்டாட்டியை வச்சு வாழலைன்னாலும், குடும்பத்தில் அப்படி, இப்படி இருந்தாலும் பரமன் தொழில் சுத்தம். இரவில் தண்ணியடித்துவிட்டு தலைமாடு, கால்மாடு தெரியாமல் படுத்திருந்தாலும், விடிந்து எழுந்து குளித்தவன், வேலையில் கவனமாகிவிடுவான். இது அவனைப் பற்றிய மற்றவர்களின் கணிப்பு

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 17, 2023
ISBN9798223663454
விழியே கதை எழுது!

Read more from Parimala Rajendran

Related to விழியே கதை எழுது!

Related ebooks

Reviews for விழியே கதை எழுது!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    விழியே கதை எழுது! - Parimala Rajendran

    1

    பொழுது விடியும் நேரம். இன்னும் இருட்டு மிச்சமிருந்தது. ஆனந்தி எழுந்துக்கொண்டாள். அருகில் அருணா புடவை கால்களின் மேல் ஏறிக் கொண்டிருக்க, அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள்.

    எப்படி படுத்திருக்கா பாரு... புடவையை சரி செய்தவள், தூங்கும் தங்கையின் முகத்தைப் பார்த்தாள். கடவுளே இவளுக்காவது ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடு. மனம் வேண்டியது.

    காலை வேலைகள் மலை போல் காத்திருக்க, மளமளவென்று வேலையில் ஈடுபட்டாள்.

    பின்புறம் சென்று, தொட்டியில் இருந்த குளிர்ந்த நீரை ஊற்றிக் குளித்து, ஈரக் கூந்தலை முடிந்துகொண்டு, அடுப்பை பற்ற வைத்து, சாம்பாருக்கான பருப்பை குக்கரில் வைத்து, வடைக்கு உளுந்தை போட்டவள், வாசலுக்கு வரவும், பொழுது நன்றாக விடியவும் சரியாக இருந்தது. பனி விலகாத காலை வேளை, பார்ப்பதற்கே ரம்மியமாக இருந்தது. மலை சார்ந்த இந்த கிராமத்துக்கு வந்து, மொத்தமாக பத்து வருடங்கள் ஓடிவிட்டது.

    பச்சை பசேலென்று மரம், செடி, கொடிகள் பசுமைக் கம்பளம் விரித்தாற்போல வியாபித்திருக்க, வெளியில் இருந்த பைப்பில் தண்ணீர் பிடித்துத் தெளித்து, சின்னதாக ஒரு கோலம் போட்டு நிமிர,.

    அக்கா, எழுந்து குளிச்சாச்சா

    வா வள்ளி, இன்னைக்கு வழக்கமாக செய்யறதைவிட, முப்பது பேருக்கு டிபன் ஆர்டர் இருக்கு. எட்டு மணிக்குள் ரெடியாகணும். சரி, சரி நீ போய் உளுந்து ஊறவச்சதை கிரைண்டரில் போடு, ரொம்ப நேரம் ஊறினா எண்ணெய் குடிச்சுடும்.

    இவளுக்குமாக, பில்டரில் இருந்த டிகாஷனில் ராத்திரி பாலை ஊற்றி காபி போட்டவள்,

    இந்தா வள்ளி காபி குடிச்சுட்டு வேலையை பாரு சொன்னவள் தானும் குடிக்க ஆரம்பித்தாள்.

    சூடான காபி, தொண்டை வழியாக இறங்குவது, குளிருக்கு இதமாக இருந்தது.

    என்னக்கா, வடை, பொங்கல், இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி, இதுதானே...

    கொஞ்சம் காரசட்னியும் அரைக்கணும் வள்ளி.

    மணி எட்டை நெருங்க ஏறக்குறைய எல்லா வேலைகளும் முடிந்திருந்தது.

    வெளியே வீட்டை ஒட்டி வாசலில் சார்பு இறக்கப்பட்டு, பெஞ்சுகள் போடப்பட்டிருந்த இடத்தை மருது கூட்டி சுத்தம் பண்ணிக் கொண்டிருந்தான்.

    இன்னும் சிறிது நேரத்தில் வாடிக்கையாளர்கள் சாப்பிட வந்துவிடுவார்கள்.

    அருணா எழுந்திரு. மணி எட்டாச்சு. காலேஜ் லீவ் விட்டா, இப்படித்தான் தூங்கணுமா, எழுந்திரும்மா.

    தங்கையை எழுப்பிக் கொண்டிருக்கும் ஆனந்தியை பார்த்து வள்ளி,

    அக்கா, நீங்க அருணாவுக்கு ரொம்பதான் செல்லம் கொடுக்கறீங்க. முதலிலேயே எழுப்பியிருந்தா கூடமாட வேலை செய்து கொடுக்கும் இல்லையா?

    அவ சின்ன குழந்தைதான் வள்ளி. இன்னும் பொறுப்பு வரலை. தன்னால எல்லாம் கத்துப்பா. நான்தான் மனசு நிறைய கவலையை சுமந்துகிட்டு இருக்கேன். அவளாவது சந்தோஷமா இருக்கட்டும்."

    குரலில் பாசம் வழிந்தோடுகிறது.

    அக்கா, ஏன் என்னை எழுப்பறே. இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேனே... ப்ளீஸ்.

    மெல்லிய சிணுங்கலோடு கண்ணை திறக்காமலேயே சொல்ல,

    இல்லடா அருணா. நீ எழுந்திருச்சுதான் ஆகணும். இன்னும் கொஞ்ச நேரத்தில் கபாலி ஆட்டோ எடுத்துட்டு வந்துடுவான். பாலையூர் பண்ணையார் வீட்டில், டிபன் வகையறாக்களை சரிபார்த்து நீதான் கொடுத்துட்டு வரணும். அக்காவுக்கு வேலை இருக்கு. எழுந்திரு பார்ப்போம். என் செல்லம் இல்லையா...

    கெஞ்சி, கூத்தாடி தங்கையை படுக்கையை விட்டு எழுப்பி உட்கார வைக்கிறாள் ஆனந்தி.

    கபாலி அண்ணே, கொஞ்சம் மெதுவா போங்க. சாம்பார் தூக்கு அப்புறம் தளும்ப ஆரம்பிச்சுடும்."

    நான்தான் என்ன செய்யட்டும். நம்ம மலை ரோடு அப்படி இருக்கு. தூக்கு வாளியை ஆடாம கையிலே பிடிச்சுட்டு உட்காரு.

    அண்ணே, பண்ணையாரு வீட்டில் இன்னைக்கு என்ன விசேஷம், தெரியுமா?

    அவரு மகன் படிப்பை முடிச்சுட்டு அமெரிக்காவிலிருந்து வந்திருக்கானாம். சென்னைக்குப் போய் கூட்டிட்டு வந்திருக்காங்க. உறவு ஜனம் வந்திருக்கு. அதான் ஊருக்கு போறதுக்கு முன்னால, அக்காகிட்டே ஆர்டர் கொடுத்துட்டு போனாங்க.

    அப்படியா... சரி, சரி.

    வெளியே வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள் அருணா. வயது இருபதை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த வயதுக்குரிய இளமை மினுமினுப்புடன் அழகாக தெரிந்தாள். மாநிறமானாலும், நீண்ட விழிகளும், பவள உதடுகளும், மாம்பழக் கன்னங்களும், அவள் ஒரு அழகி என சொல்லாமல் சொல்லியது.

    பக்கத்திலிருக்கும் டவுன் காலேஜில் பி.எஸ்ஸி., ஐ.டி. படித்துக் கொண்டிருந்தாள்.

    ஆனந்திக்கு, தான் படிக்கவில்லை. தங்கையாவது படிக்கவேண்டும் என்ற ஆதங்கம் மனசு நிறைய இருந்தது.

    ஆட்டோவை பண்ணையார் வீட்டின் முன்பு நிறுத்தினான் கபாலி.

    வாசலில் நான்கைந்து பெரிய மனிதர்கள் நாற்காலியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

    அருணா இறங்கிக்கொள்ள, ஆட்டோவில் இருந்த பாத்திரங்களை ஒவ்வொன்றாக இறக்கினான்.

    வாசலுக்கு வந்த பண்ணையார் வைத்தியலிங்கம் ஆட்டோவை பார்த்துவிட்டு,

    டேய் சிவசு, டிபன் வந்திருச்சு பாரு. போய் எல்லாத்தையும் உள்ளாறக் கொண்டு வா

    குரல் கொடுக்க,

    வேலையாட்கள் இரண்டு பேர், எல்லாவற்றையும் வீட்டினுள் கொண்டு சென்றார்கள்.

    ஐயா, எல்லாம் சரியா இருக்கா பார்த்துட்டீங்களா?

    என்ன அருணா, இப்படி கேட்டுட்டே... ஆர்டர் கொடுத்தது யாருகிட்டே... உங்க அக்கா ஆனந்திக்கிட்டே. சரியா மட்டுமில்லை; ருசியாகவும் இருக்கும்

    சொல்லி

    Enjoying the preview?
    Page 1 of 1