Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பூவே... உன்னை நேசிப்பேன்...!
பூவே... உன்னை நேசிப்பேன்...!
பூவே... உன்னை நேசிப்பேன்...!
Ebook97 pages34 minutes

பூவே... உன்னை நேசிப்பேன்...!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சமைத்து வைத்தவற்றை கொண்டு வந்து டைனிங் டேபிளில் பரப்பி வைத்தாள்.
வாசுகி... எல்லோருக்கும் பரிமாறினாள்.
மாலினி ஒரு ஓரமாய் நின்று கொண்டாள். ராகவன் அவளை ஏதேச்சையாய் பார்ப்பதுப் போல் பார்த்து வேதனைப்பட்டார்.
‘பாவம்... இங்கே வந்த பிறகு ரொம்ப இளைத்து விட்டாள்.’
அன்னம் கணவரின் முகபாவத்தை கவனிக்க தவறவில்லை. வாசுகியை பார்த்து கண்களால் அவளை அப்புறப்படுத்த சொன்னாள்.
“இங்கே ஏன் நிக்கறே?” என்று கேட்டாள் வாசுகி.
“ஏதாவது தேவைப்படும்னா...”
“தேவைப்பட்டா, கூப்பிடறேன். அப்ப வந்தாப் போதும். காலையிலே பவுடர் போட்டு ஊறவச்ச துணி! இன்னும் துவைக்கலே. சாயம் போகறதுக்குள்ளே... அந்த வேலையாவது உருப்படியா முடி... போ”
“ச... சரிங்க...” என்று போய்விட்டாள் மாலினி. ராகவன் பரிதாபமாய் அவளைப் பார்த்தார்.
“ம்...ம்... வேடிக்கை பார்க்காம சாப்பிடுங்க.” என்றாள் அன்னம். ஆனால், அவருக்கு சாப்பாடு இறங்கவில்லை.
“நீ என்னடி... எண்ணி... எண்ணி சாப்பிடறே?”
“பிடிக்கலேம்மா...”
“பிடிச்சதா சாப்பிடு...!”
“எனக்கு எதுவுமே பிடிக்கலே... எதுவுமே நல்லாயில்லே...” என்று சிணுங்கினாள் லாவண்யா.எதுவுமே நல்லாயில்லேன்னு நமக்குத் தெரியுது. உங்கப்பாவுக்கு தெரியலியே! காசை வீசியெறிஞ்சா... எத்தனையோ சமையல்காரங்க கிடைப்பாங்க! ஹூம்... சொன்னா கேட்டாதானே? நம்ம தலையெழுத்து... அந்த சண்டாளி சமைக்கிறதை நாம சாப்பிட்டுதான் தீரணும்!”
“ஏண்டி... எதையாவது குறை சொல்லிட்டேயிருக்கே? சமையல் நல்லாதானே இருக்கு?”
“இருக்கும்... இருக்கும்... உங்களுக்கு அவ சமைச்சா... தேவாமிர்தமாதான் இருக்கும். பாவி... வந்தாளே என் வீட்டுக்கு... வயித்தெரிச்சலை கொட்டிக்கறதுக்கு?”
“எனக்குப் போதும்!” என்றபடி பாதி சாப்பாட்டில் எழுந்து கொண்டாள் லாவண்யா...
மகளை கவலையாய் பார்த்தாள் அன்னம்.
களைத்துப் போனாள் மாலினி. துணிகளை அலசி காயப்போட்டு க்ளிப் போட்டாள்.
அந்த வீட்டில் வாஷிங்மெஷின் இருக்கிறது. ஆறு மாதத்திற்கு முன்பு வரை இயங்கிக் கொண்டிருந்த மிஷின் இவள் வந்த உடனே... என்ன காரணத்தினாலோ இயங்குவதை நிறுத்திக் கொண்டது.
மைனர் ப்ராப்ளம்தான். ஆனாலும் அந்த ரிப்பேரை சரிப்பண்ண யாரும் முன்வரவில்லை. மாலினி என்கிற மெஷின் அந்த வீட்டிற்கு வந்தபிறகு... வாஷிங்மெஷினுக்கு அவசியமில்லாமல் போய்விட்டது.
சுவிட்ச் போட்டதுப் போல், சமையல்காரியும், வேலைக்காரியும் காணாமல் போனார்கள்.
மாலினி வருத்தப்படவில்லை.
அவளுக்கு... இதைவிட பாதுகாப்பான கூரை வேறு எங்கும் கிடைக்கப் போவதில்லை.
யாரிடமோ சிக்கி சின்னாபின்னமாவதைவிட, இந்த வீட்டில் உள்ளவர்களுக்காக உழைத்து சிரமப்படுவது எவ்வளவோ மேல்!
கொல்லைப்புற சிமெண்ட் கல்லின் மீது ஆயாசமாய் அமர்ந்து கொண்டாள்.
கல்லை ஒட்டிய கொய்யா மரத்தின் மீது அமர்ந்து இருந்த அணியில் இவளைப் பார்த்து வேறு கிளைக்கு தாவி ஓடியதில்... சின்ன கொய்யா ஒன்று அவள் மடியில் விழுந்தது

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
பூவே... உன்னை நேசிப்பேன்...!

Read more from ஆர்.மணிமாலா

Related to பூவே... உன்னை நேசிப்பேன்...!

Related ebooks

Reviews for பூவே... உன்னை நேசிப்பேன்...!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பூவே... உன்னை நேசிப்பேன்...! - ஆர்.மணிமாலா

    1

    அந்த ஒலி மாலினிக்கு ரொம்பவே பிடிக்கும். கீச்... கீச் சென்று சிட்டுக் குருவிகள் இப்படியும், அப்படியுமாய் தலையை திருப்பி... வால் தூக்கி... அழகாய் வாய்திறந்து வெளிப்படுத்தும் குரல்.

    சமையலறையை ஒட்டிய ஜன்னல் கதவின் மேல் அமர்ந்து இவளையேப் பார்த்து கத்திக் கொண்டிருந்த சிட்டுக் குருவியைப் பார்த்து சிரித்தாள்.

    ஏய்... குருவி... சிட்டுக்குருவி... உன் ஜோடி எங்கே அதை கூட்டிக்கிட்டு... வீட்டுக்குள்ளே வந்து கூடு கட்டு...

    ராகமாய்... அதேசமயம் தனக்கு மட்டுமே கேட்கும் விதம் சன்னமாய் பாடினாள் மாலினி.

    விடாமல் கத்திக் கொண்டிருந்தது குருவி.

    வேணாம்... வேணாம் நான் ஒரு பேச்சுக்கு சொன்னேன். சீரியஸா எடுத்துக்கிட்டு நீ பாட்டுக்கு உள்ளே வந்து கூடு கட்டிடாதே! நானே இங்கே நிரந்தரமில்லாதவ... குருவியிடம் பேசினாள்.

    பால் பாத்திரத்தின் விளிம்பை மீறி பொங்கி வழிய... அச்சச்சோ... என்றபடி அவசர அவசரமாய் பாத்திரத்தை இறக்கி வைத்தாள்.

    ச்சூ... போ... எல்லாம் உன்னாலதான்! என்று குருவியை விரட்டினாள்.

    காபி ரெடியா? கணீரென்ற குரல் முன்வர... கம்பீரமாய் உள்ளே நுழைந்தாள் வாசுகி.

    அந்த வீட்டின் மருமகள்.

    இதோ... இதோ... ரெடியாய்டுச்சி அண்ணி!

    ஏய்... உன்கிட்டே எத்தனைவாட்டி சொல்லி இருக்கேன்? என்னை அண்ணின்னு கூப்பிடாதேன்னு இடுப்பில் கைவைத்து முறைத்தாள் வாசுகி.

    ம... மன்னிச்சுடுங்க... தெரியாம வாய் தவறி...

    சரி... சரி... இதென்ன பால் பொங்கி வழிஞ்சிருக்கு?

    தெரியாம வழிஞ்சிட்டுது. துடைச்சிடறேங்க...

    பொங்கி வழியறதுக் கூட தெரியாம... கவனம் எங்கே போகுது? ஆமா... ஏதோ பேச்சு சத்தம் கேட்டதே... யாரோட பேசிட்டிருந்தே...?

    வந்து... இல்லையே... நான் பேசலையே... இந்த குருவி வந்து கத்திட்டிருந்துச்சு. ‘போ’ன்னு விரட்டினேன் மென்று விழுங்கினாள்.

    அவளை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டு, சரி... சரி... சீக்கிரம் காபியை எடுத்துட்டு வா! அவர் குளிக்கப் போகணும்!

    இதோ... கொண்டு வர்றேங்க! வாசுகி... போய்விட்டாள்.

    ஃபில்டரிலிருந்து டிகாக்ஷனை எடுத்து பாலில் கலந்தாள். அளவாய் சர்க்கரை போட்டு ஐந்து கப்பில் ஊற்றி ட்ரேயில் வைத்துக் கொண்டாள்.

    முதலில் வாசுகி இருந்த அறைக்குச் சென்றாள். ஜெயராமனின் மடியில் படுத்துக் கிடந்த வாசுகியின் முகத்தில் விரல்களால் கோலம் போட்டுக் கொண்டிருந்தான்.

    இவள் வருவதுத் தெரிந்தும் சங்கடப்படாமல் நிதானமாய் எழுந்தாள் வாசுகி.

    ஆடி அசைஞ்சு எடுத்துக்கிட்டு வர்றதுக்குள்ளே... ஆறிப்போய்டும்... என்று சலித்தபடி இரண்டு கப் எடுத்து ஒன்றை கணவனிடம் நீட்டினாள்.

    ஒன்றும் பேசாமல் திரும்பி நடந்தாள். ஏய்... கொஞ்சம் நில்லு! என்றான் ஜெயராமன்.

    என்னண்ணா? என்று வாய்வரை வந்துவிட்ட வார்த்தையை... நல்லவேளை உச்சரிக்கவில்லை.

    "டெலிபோன் பில் கட்டணும். இன்னைக்குத்தான் லாஸ்ட் டேட்! வாங்கிட்டுப் போய் கட்டிட்டு வா!’

    ‘எப்படி முடியும்? ரேஷன் கடைக்கு வேற போகணும். துணியை வேற தண்ணில நனைச்சு வச்சிருக்கேன். சமைக்கணும். எல்லாம் முடிச்சிட்டு டெலிபோன் பில் கட்ட எப்ப போறது?’

    என்ன... பேசாம இருக்கே? நான் சொன்னது காதுல விழுந்ததா? முகச்சுளிப்புடன் வெளிப்பட்டன வார்த்தைகள்.

    ஓ... போறேனே... கட்டிட்டு வந்திடறேனே... என்றாள் அவசர அவசரமாய்.

    சரி... போ! அறையை விட்டு வெளியேறினாள்.

    ‘ஜெயராமன் வேலை செய்யும் பாரி கம்பெனியிலிருந்து வெகு பக்கம்தான்... டெலிபோன் பில் கட்டும் இடமும். அவனே கட்டிவிட்டு வரலாம்தான்! வீட்டில் இத்தனை வேலையை வச்சுக்கிட்டு எப்படி... எப்படி முடிப்பேன்?’ யோசனையாய் மாடிப் படியேறினாள்.

    மாடியில்தான் ராகவன் அன்னம் தம்பதியரின் அறை இருந்தது. இந்த வீட்டின் குடும்பத் தலைவர். அறைக்கதவு சார்த்தப்பட்டிருந்ததே தவிர தாழிடப்படவில்லை என்பது சற்றே விலகியிருந்த கதவு சொன்னது.

    ஒற்றை விரலால் தட்டி ஒலியெழுப்பினாள்.

    ம்... வா... என்ற குரல் வந்தது ராகவனிடமிருந்து. அவர் பக்கத்தில் சோபாவில் அமர்ந்திருந்த அன்னம் இவளைப் பார்த்ததும் தலையை திருப்பிக் கொண்டாள்.

    மாலினி ராகவனைப் பார்த்து பன்னகைத்தாள். அவரோ பார்த்தும் பார்க்காதவர் போல் காபியை எடுத்துக் கொண்டு இன்னொரு கப்பை எடுத்து மனைவியிடம் கொடுத்தார்.

    மாலினிக்கு கஷ்டமாகிவிட்டது.

    பதிலுக்கு ஒரு சின்ன முறுவல்!? அதனால் என்ன குறைந்துவிடப் போகிறார்?

    இன்னும் என்ன? கொடுத்தாச்சு இல்லே? கப்பை அப்புறம் வந்து எடுத்துக்க! என்றார் எரிச்சலுடன் ராகவன்.

    ‘சரி’யென தலையாட்டிக் கொண்டு அடுத்த அறைக்குச் சென்றாள். லாவண்யா இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள்.

    பெயருக்கு நைட்டி அணிந்திருந்தாளே ஒழிய அவள் உடலின் முக்கால் பாகத்தை மூடாமலே வெளிக்காட்டிக் கொண்டிருந்தது.

    ஜிப் பாதிவரை இறங்கியிருந்தது. முட்டிக்கு மேல் ஏறியிருந்தது. இந்த அழகில் ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட போஸில் கை, கால்களை விரித்துப் படுத்திருந்தாள்.

    மாலினிக்கே பார்க்க கண்கள் கூசியது. அவளை எழுப்ப வேண்டும். ஆனால், என்ன சொல்லி எழுப்புவது?

    இந்த வீட்டில் யாரையும், முறை வைத்தோ, பெயர் சொல்லியோ அழைக்கக் கூடாது. அப்படியொரு கட்டுப்பாடு.

    லாவண்யா இவளைவிட இரண்டு வயது சின்னவள்தான். ஆனால் பெயர் சொல்லி அழைத்தால்

    Enjoying the preview?
    Page 1 of 1