Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

இரை தேடும் பறவைகள்
இரை தேடும் பறவைகள்
இரை தேடும் பறவைகள்
Ebook91 pages32 minutes

இரை தேடும் பறவைகள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook


அதுவரை பல்லை கடித்து பொறுமையோடிருந்த மாலதி முதல் ஆளாய் வகுப்பை விட்டு வெளியில் வந்தாள். பகலிலிருந்தே அவளுக்கு நல்ல வயிற்றுவலி. அதனாலேயே கொண்டு வந்திருந்த சாப்பாட்டைக் கூட சாப்பிடவில்லை.
“ஏய்... மாலு!” வினோலியா கூப்பிட்டாள்.
நடந்துக் கொண்டிருந்த மாலதி நின்று திரும்பினாள்.
“ம்... என்ன?”
“என்னை விட்டுட்டு நீ பாட்டுக்கு ஓடறே?”
“ஸாரி வினோ! ஸ்டமக்பெய்ன்... தாங்க முடியலே! என்னால பஸ்ல வர முடியாது. நான் வீட்டுக்கு ஆட்டோவுல போய்டலாம்னு இருக்கேன். இன்னைக்கு ஒருநாள் நீ தனியா போய்டு... வேறு வழியில்லே!”
மாலதியும், வினோலியாவும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். ஒரே பஸ்ஸில் பயணம் செய்பவர்கள். ஒரே பஸ் என்றாலும் வினோலியாவின் வீடு... நங்கநல்லூரில் இருந்தது. மாலதியின் வீடு பள்ளியிலிருந்து சற்று தூரத்தில்தான் இருந்தது.
வினோலியா தோழியை கவலையுடன் பார்த்தாள்.
“ரொம்ப முடியலியா மாலு! நானும் உன்கூட துணைக்கு வரட்டுமா?”
“சேச்சே... வேணாம்பா... உனக்கேன் கஷ்டம்? நானே போய்க்கறேன்!’’
“பார்த்து... ஜாக்கிரதையா போ... என்ன?”
“சரி!” என்று வலியுடன் அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டுச் சென்றாள் மாலதிஎதிர்வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறிக் கொண்டாள்.
எதேச்சையாக வாசலுக்கு வந்த அம்பிகா.
எதிர்வீட்டின் வாசலில் வந்து நின்ற ஆட்டோவை பார்த்தாள்.
ஆட்டோவிலிருந்து மாலதி வயிற்றை பிடித்துக் கொண்டு முகம் சுருக்கியபடி இறங்கினாள். ஆட்டோ ஒரு வட்டம் போட்டு திரும்பியது.
அம்பிகா அருகில் வந்தாள்.
“என்ன மாலதி? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?”
“வயிறு வலிக்குது ஆன்ட்டி!”
“அப்படியா?” என்றபடி ஆச்சர்யமாய் பார்த்தவள் விபரம் புரிந்து முகம் மலர்ந்தாள்,
“வீட்டுக்குள்ளே போய் ஒரு ஓரமா உக்காரு! உங்கம்மாவுக்கு ஒரு போன் பண்ணிட்டு வந்திடறேன்” என்று பக்கத்தில் இருந்த மளிகை கடையை நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள்.
சிரத்தையுடன் வேலையில் மூழ்கி இருந்தாள் சரஸ்வதி. அவள் கையில் ஃபைல் இருந்தது. டேபிள் மீதிருந்த காபி ஆறிப்போய் ஆடைக் கட்டி இருந்தது.
சரஸ்வதி கார்ப்பரேஷன் ரெவின்யூ ஆபிஸில் சீனியர் அக்கவுண்டன்டாக பணிபுரிகிறாள்.
டேபிள் மீதிருந்த போன் அலறுகிறது.
சரஸ்வதி எடுத்தாள்.
“ஹலோ... சரஸ்வதி ஸ்பீக்கிங்!”
“ஹலோ... நான்தான் அம்பிகா பேசறேன்”
“என்ன, ஆச்சர்யமாயிருக்கு? நீங்களா பேசுவது?” வியப்பாய் கேட்டாள்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
இரை தேடும் பறவைகள்

Read more from ஆர்.மணிமாலா

Related to இரை தேடும் பறவைகள்

Related ebooks

Reviews for இரை தேடும் பறவைகள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    இரை தேடும் பறவைகள் - ஆர்.மணிமாலா

    1

    கிழக்கில் ஆதவன் முகம் காட்டினதுதான் தாமதம்... பறவைகள் அரக்க பரக்க ஜோலிக்கு கிளம்பின.

    இடம். மொட்டைமாடி!

    குளித்து முடித்து ஈர உடம்பில் வேட்டி கட்டி, கண்மூடி கரம் குவித்து சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார் சந்தானம்.

    சற்று தள்ளி அவரது மகன் விஷ்ணு எக்ஸர்சைஸ் செய்துகொண்டிருந்தான். உடல் முழுக்க வியர்வை கொப்புளங்கள், கதிரவன் ஒளி பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தன. விஷ்ணு எம்.காம் முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கிறான்.

    சந்தானத்தின் உதடுகள் இறைவனிடம் வேண்டி எதையோ முணுமுணுத்தன.

    இந்த நாடு நல்லாயிருக்கணும். என் வீடும் நல்லாயிருக்கணும். நான் எல்லோருக்கும் நல்லவனாயிருக்கணும். எல்லோருக்கும் நல்லதே செய்யணும். நாலு பேருக்கு உதவற அளவுக்கு எனக்கு நல்ல மனசையும், பொருளையும் தா! பகவானே... உன் திருவடிபோற்றி...! என்றபடி கண்களை திறந்தார்.

    குட்மார்னிங் டாடி என்றான் விஷ்ணு.

    குட்மார்னிங்... நீ எப்ப மேலே வந்தே?...

    ஜஸ்ட் நவ் டாடி!

    இன்னைக்கு ஜிம்முக்கு போகலியா?

    இல்லேப்பா. செமினார் நெருங்குது. அதனால் ஒரு வாரத்துக்கு ஜிம்முக்கு போக வேண்டாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.

    தட்ஸ் குட்! பாடியை எப்ப வேணும்னாலும் கண்ட்ரோல் பண்ணலாம். படிப்பை மனசுக்குள்ளே கண்ட்ரோல் பண்றதுக்கு குறிப்பிட்ட காலம்தான் இருக்கு. நானே சொல்லணும்னு நினைச்சேன். நீயே முடிவெடுத்திட்டே! வெரிகுட்... பெஸ்ட் ஆஃப் லக்! மகனின் முதுகை பெருமிதத்துடன் தட்டி கொடுத்தார் சந்தானம்.

    தாங்க்ஸ் டாடி!

    இருவரும் மாடியைவிட்டு கீழிறங்கி வந்தனர்.

    டேப்பில் அபிராமி அந்தாதி கசிய... பூஜை அறையில் விளக்கை ஏற்றினாள் சந்தானத்தின் மனைவி சரஸ்வதி.

    பூஜையறையிலிருந்து சமையலறைக்கு ஓடினாள். குக்கரில் பருப்பை வேகப் போட்டாள். காய்கறிகளை நறுக்கிக் கொண்டே கூடவே பாடிக் கொண்டிருந்தாள். களையான முகம் கொண்ட சரஸ்வதியின் வயது நாற்பது.

    சரசு... காபி கிடைக்குமா? என்று கேட்டுக் கொண்டே அவளருகே வந்தார் சந்தானம்.

    வந்துட்டீங்களா? இதோ தர்றேங்க... விஷ்ணு உனக்கும் வேணுமா?

    வேண்டாம்மா!

    சரஸ்வதி கணவரிடம் காபியை நீட்டுகிறாள்.

    ஏங்க, ஒரு ஹெல்ப் பண்றீங்களா?

    என்ன சரசு... சொல்லு?!

    இன்னைக்கு மாலதி வெண்டைக்காய் பொரியல் பண்ணச் சொல்லியிருந்தா... ஃப்ரிட்ஜ்ல பார்த்தா வெண்டைக்காய் இல்லே...!

    இப்ப என்ன? வெண்டைக்காய் வாங்கிட்டு வரணும். அவ்வளவு தானே? பேக் எடு... போய்ட்டு வர்றேன்.

    டாடி உங்களுக்கேன் சிரமம்? நான் போய் வாங்கிட்டு வர்றேனே. என்று முன்வந்தான் விஷ்ணு.

    வேணாம் விஷ்ணு. இதிலே எனக்கென்ன சிரமம்? நான் குளிச்சாச்சு. பூஜையும் முடிச்சாச்சு. நீ குளிச்சிட்டு காலேஜுக்கு கிளம்பணும். உனக்கேன் இந்த வேண்டாத வேலையெல்லாம்? நேரமாகுது. நீ போய் குளி! வெண்டைக்காய் போதுமா? வேற ஏதாவது வாங்கணுமா?

    உங்களுக்கு உருளைக்கிழங்கு பொடிமாஸ்னா ரொம்ப பிடிக்குமே... கூட அதையும் வாங்கிட்டு வாங்க... என்றாள் சிரித்தபடி.

    சந்தானம் மனைவியின் கன்னத்தை செல்லமாய் கிள்ளினார்.

    என் மனசறிஞ்சு நடந்துக்க உன்னால் மட்டும்தான் முடியும் செல்லம்.

    ஸ்... ஸ்... கையை எடுங்க... பிள்ளைங்க பார்த்துடப் போறாங்க... என்னமோ நேத்துதான் கல்யாணம் ஆன மாதிரி...

    "ஆம்பளை எப்பவும் புதுமாப்பிள்ளைதான்!’’

    நாளைக்கே விஷ்ணுவுக்கு கல்யாணமாகி ஒரு குழந்தையும் பிறந்துட்டா. அப்புறம் நீங்க புதுதாத்தாவாய்டுவீங்க.

    பாவி... பாவி... நாப்பத்தஞ்சு வயசுலேயே என்னை கிழவனாக்கப் பார்க்கிறீயே... அவனவன் அம்பது வயசுலேகூட குழந்தை பெத்துக்கறான். என்று பொய்யாய் அங்கலாய்த்தார்.

    ஓஹோ... ஐயாவுக்கு அப்படியொரு ஆசை வேற இருக்கா?

    ஏன் இருக்கக்கூடாதா? பாவம் மாலதி. கடைக்குட்டியா பொறந்து அவஸ்தைப்படறா. விஷ்ணுவுக்கு ரெண்டு தங்கை இருக்கு. நந்தினிக்கு ஒரு தங்கை இருக்கு. பாவம், மாலதிக்குதான் ஒரு தங்கையோ, தம்பியோ இல்லே. அந்த குறை அவளுக்கு எதுக்கு? என்ன சரஸ்? சந்தானம் மனைவியைப் பார்த்து குறும்புடன் கண்ணடித்து கேட்டார்.

    கடவுளே... காலங்கார்த்தால இதென்ன பேச்சு?

    பொண்டாட்டி கிட்டே பேச எதுக்கு நேரங்காலம்? எல்லாம் நம்ம மாலதியோட நன்மைக்குத்தானே? என்றார் குழைந்தபடி.

    அதே நேரம்... அவர்களை நோக்கி மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தாள் பதிமூன்று வயது மாலதி.

    அப்பா!

    திடுக்கிட்டு திரும்பினார்.

    நான் எப்ப உங்ககிட்டே தம்பி பாப்பா வேணும், தங்கச்சி பாப்பா வேணும்னு கேட்டேன்? அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நான்தான் இந்த வீட்லே கடைசி பெண்ணா செல்ல பெண்ணா இருக்கணும். சொல்லிட்டேன்.

    ரொம்ப விவரம்! காரியத்தை கெடுத்திட்டியேம்மா! போ... போய் குளிச்சிட்டு ஸ்கூலுக்கு கிளம்பு!

    கணவனின் முகத்தில் லிட்டர் லிட்டராய் வழிந்த அசடைப் பார்த்து எழுந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள் சரஸ்வதி.

    நந்தினியக்கா குளிக்கப் போய் ஒருமணி நேரமாகுது- இன்னும் வெளியே வரலே. நான் எப்ப குளிச்சி... எப்ப ஸ்கூலுக்குப் போய். அலுத்துக் கொண்டாள் மாலதி.

    என்னடி, என்னை பத்தி என்ன பேசிட்டிருக்கே? தலையை துவட்டியபடி

    Enjoying the preview?
    Page 1 of 1