Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

மனம் விரும்புதே உன்னை...
மனம் விரும்புதே உன்னை...
மனம் விரும்புதே உன்னை...
Ebook93 pages33 minutes

மனம் விரும்புதே உன்னை...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தெருவிளக்குகள் எரிய ஆரம்பித்திருந்தன.
பூரணி ஹாலின் மூலையில் செருப்பை கழற்றி வைக்கப் போன போதுதான் கவனித்தாள் அங்கு இன்னொரு ஜோடி செருப்பிருந்தது.
பூரணி கண்கள் சுருக்கி யோசனையோடு உள்ளே நுழைந்தபோது தெரிந்து போனது.
விஜயலட்சுமி வந்திருந்தாள். சிவக்குமாரின் அம்மா!
விசாலாட்சி எதையோ சொல்லி சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தாள். விமலா அவர்கள் முன் தட்டில் சாப்பிட போண்டாவும் காபியும் கொண்டு வந்து வைத்தாள். முதலில் விஜயலட்சுமிதான் பூரணியைப் பார்த்தாள்.
“வாம்மா... பூரணி!” என்று வாஞ்சையோடு அழைத்தாள்.
பூரணி தலைகுனிந்தபடி ஏதும் பேசாமல் அவர்களைத் தாண்டி செல்ல முற்பட்டபோது விஜயலட்சுமி அவள் கையைப் பற்றினாள்.
“உக்காரு பூரணி!” வேறு வழியின்றி அமர்ந்தாள்.
“உன்னைப் பார்க்கறதுக்காக... ஒரு மணி நேரமா காத்துக்கிட்டிருக்காங்க உங்க அத்தை! ஏம்மா லேட்டு?” என்றாள் விசாலாட்சி.
அம்மாவை ஒரு கணம் முறைத்தவள் விஜயலட்சுமி பக்கம் பார்வையைத் திருப்பினாள்.
“என்ன விஷயம்?” பூரணி பளிச்சென்று கேட்கவும் அந்தம்மாள் கொஞ்சம் தடுமாறித்தான் போனாள்.
“ஒண்ணுமில்லேம்மா! உன்னைப் பார்க்கறதுக்கு ஏதாவது காரணத்தை தூக்கிட்டு வரணுமா? உன்னைப் பார்க்கணும் போல இருந்துச்சு! அதோட... சிவக்குமார். வேலை விஷயமா கேரளா போய் வந்தான். உனக்குநேந்திரங்காய் சிப்ஸ் பிடிக்கும்னு உங்கண்ணன் மூலமா தெரிஞ்சு வச்சிக்கிட்டு... உனக்காக வாங்கிட்டு வந்தான். இந்தா பூரணி” என்றபடி ஒரு கிலோ பாக்கெட்டை அவளிடம் நீட்டினாள்.
பூரணி அதை வாங்காமல் வெறித்துப் பார்த்தாள்.
“வாங்கிக்க பூரணி!” என்றாள் விசாலாட்சி.
மௌனமாய் வாங்கிக் கொண்டாள்.
“எங்க வீட்டுக்கு நீ சீக்கிரம் வரணும் பூரணி எனக்கு சிவக்குமார் ஒரே பையன்தான்! அவனும் ஆபீஸ்க்கு போயிடறான் நான் தனியா வீட்லே இருக்க வேண்டியிருக்கு. நீ வந்த பிறகு தான் அந்த வீடு கலகலன்னு இருக்கும்!”
‘இருக்கும்... இருக்கும்.’ என்றெண்ணிக் கொண்டாள் பூரணி.
“சம்பந்தியம்மா... முதல்ல போண்டா சாப்பிடுங்க. ஆறிப் போகுது!” என்றாள் விசாலாட்சி.
“பூரணி... நீயும் சேர்ந்து சாப்பிடேன்!”
“இல்லே... வேண்டாம். ஆபீஸ் கேன்ட்டீன்ல சாப்பிட்டுட்டுதான் வந்தேன் நான் முகம் கழுவணும்!” என்றபடி எழுந்து விட்டாள்.
“கேன்ட்டீன்ல சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காதே பூரணி” விஜயலட்சுமி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கிருந்து சென்று விட்டாள்.
விசாலாட்சிக்கே என்னமோப் போலாகி விட்டது.
“தப்பா நினைச்சுக்காதீங்க! அவ குழந்தை மாதிரி. அவ யதார்த்தமாதான்...”
“அடடா... எதுக்கு பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு? நான் தப்பா நினைச்சுக்கலியே நானும் பொண்ணுதானே? அவமனசை என்னால் புரிஞ்சுக்க முடியுது. பள்ளமாகிப்போன இதயத்துல அன்பால பூசி மெழுகிடுவேன். அந்த நம்பிக்கை எனக்கிருக்கு. அவ புரிஞ்சுக்கறதுக்கு பழகிக்கறதுக்கு கொஞ்ச நாளாகும்அது எல்லா பொண்ணுங்களுக்கும் உள்ள ஆரம்ப பிரச்சனைதானே? நீங்க இந்த விஷயத்தை பெரிசுபடுத்தறதுதான் எனக்குப் பிடிக்கலே!”
விசாலாட்சியின் கண்கள் கண்ணீரில் தளும்பின.
“என் பொண்ணை இப்படி நடுக்கடல்ல தள்ளிவிட்டுட்டியேன்னு கடவுளை தினந்தோறும் பழி சொல்லி சண்டை போட்டுக்கிட்டிருந்தேன். ஆனா, அந்த கடவுளே இப்ப உங்க ரூபத்துலே வந்திருக்கு. என் பொண்ணை கடவுள் கைவிடலே! அவ செஞ்ச புண்ணியம் நீங்க அவளுக்கு மாமியாரா கிடைச்சிருக்கீங்க!”
“சேச்சே... என்னைப் போய் கடவுள், கடவுள்னு. விமலா! போண்டா நீயா செஞ்சே? அருமையா மெது மெதுன்னு இருக்கு. இன்னொன்னு சாப்பிடணும்ணு ஆசையா தான் இருக்கு. ஆனா, என் பேரப்பிள்ளைகளையெல்லாம் கொஞ்சறதுக்கு கடவுள் எனக்கு ஆயுளைத் தரணும். இதை அதிகமா சாப்பிட்டா எனக்கு மூச்சிரைக்கும்!” சிரித்தபடி சொன்னாள்.
“ஏம்மா அப்படி சொல்றீங்க? உங்க பேரப்பிள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணி அதுங்களும் குழந்தைங்க பெத்துக்கறதையும் பார்க்கத்தான் போறீங்க!” என்றாள் விமலா.
“என்னம்மா... நல்லாருக்கீங்களா?” என்ற குரல் கேட்டு மூவரும் வாசல் பக்கம் திரும்பினர்.
அன்னம்மாள் நின்றிருந்தாள்.
அந்த நேரத்தில் அந்த இடத்தில் அவளை எதிர்பார்க்கவில்லை விசாலாட்சி.
“வா... வாங்க” என்றாள்.
“பூரணி எங்கே? ஆபீஸ்லேர்ந்து வந்துட்டாளா?” அன்னம்மாளின் கண்கள் பூரணியைத் தேடியது.
விஜயலட்சுமி புருவம் சுருக்கி வந்த பெண்மணியைப் பார்த்தாள்.
விசாலாட்சி மரியாதை நிமித்தமாக அவர்களை அறிமுகப்படுத்தியாக வேண்டிய கட்டாயம்.
“இவங்க... பூரணியோட மாமியார்!” என்றாள் விஜயலட்சுமியிடம்.
“வணக்கம்மா!” என்று கைகூப்பினாள்வணக்கம்! நீங்க?” என்றாள் அன்னம்மாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
மனம் விரும்புதே உன்னை...

Read more from ஆர்.மணிமாலா

Related to மனம் விரும்புதே உன்னை...

Related ebooks

Reviews for மனம் விரும்புதே உன்னை...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    மனம் விரும்புதே உன்னை... - ஆர்.மணிமாலா

    1

    சூரியன் மேற்கு பள்ளத்தில் அமிழ... ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த அந்தி நேரம்.

    மணி ஐந்தை கடந்து பத்து நிமிடங்கள் ஆகிவிட்டது. பூரணி ஃபைல்களை சரிபார்த்து மேஜை டிராயரில் வைத்துப் பூட்டி சாவியை தன் ஹேண்ட் பேகில் பத்திரப்படுத்திக் கொண்டாள்.

    நேரமாச்சு கிளம்பலாமா பூரணி? சுதா புடவையை சரி பண்ணியபடி அருகில் வந்தாள்.

    கிளம்பியாச்சு. தலைய வலிக்கிறாப்போல இருக்கு. கேன்டீன் போய் காபி சாப்பிடலாமா?

    ம்... வா

    கேன்டீனில் நுழைந்தார்கள்.

    பஜ்ஜி சாப்பிடலாமா பூரணி? சூடா போட்டிருக்கான்!

    நீ சாப்பிடு... எனக்கு வேண்டாம். காபி மட்டும் போதும்!

    நான் மட்டும் தனியே எப்படி சாப்பிடறது? எனக்கும் காபியே போதும்... இரு வாங்கிட்டு வந்திடுறேன் என்ற சுதா நிமிடத்தில் காபியோடு வந்தாள்.

    காபியை பருகியபடி பூரணியை கண்களால் அளந்தாள் சுதா!

    பளீரென்ற மஞ்சள் கலந்த வெண்மை நிறம்! அழகான வட்டமுகம். சுருட்டை முடியை இறுக்கி பின்னலிட்டிருந்தாலும் முகத்திற்கு தனி அழகைத் தந்தது. ஒன்றை செயின். சின்னதாய் முத்து பதித்த கம்மல். நெற்றியில் மிளகு சைஸில் சின்னதாய் ஸ்டிக்கர் பொட்டு. வெள்ளை நிறத்தில் மஞ்சள் பூக்கள் சிதறிய சேலை! பூரணி பெரும்பாலும் வெள்ளையில் கண்ணை உறுத்தாத வண்ணப் பூக்கள் கலந்த புடவையை தான் உடுத்துவாள்.

    பணிபுரிவது தனியார் நிறுவனமென்றாலும் புகழ் பெற்ற நிறுவனம். அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிகிறாள். கை நிறைய சம்பளம். ஆண்டவன் எதிலும் குறைவைக்கவில்லை... ஒரே ஒரு விஷயத்தைத் தவிர!

    மூன்று வருடங்களுக்கு முன் மகேஷை காதலித்து மணந்தாள் பூரணி. வேறுவேறு ஜாதி எனினும் அவர்கள் காதலுக்கு தடை எழவில்லை. எழக்கூடிய அளவில் இருபக்கமும் குறை ஏதுமில்லை என்பது தான் சரி! மகேஷ் நல்ல குடும்பத்தை சேர்ந்தவன்.

    பூரணியிடமும் குறையேதும் சொல்ல முடியாது என்பதால் பெரியோர்களின் சம்மதத்தோடு, விமரிசையாய் திருமணம் நடைபெற்றது. இது அந்த ஆண்டவனுக்கே பொறுக்கவில்லையோ என்னவோ, சரியாய் ஆறே மாதத்தில்... பூரணியின் கழுத்திலிருந்த தாலி இறங்கிவிட்டது. அலுவலக விஷயமாய் கல்கத்தா சென்ற மகேஷ் விமான விபத்தில் மரணமடைந்து விட்டான்.

    இடிந்துப்போய் விட்டாள் பூரணி! காதல் கணவனை இழந்த துக்கம் அவளை தற்கொலைக்கும் தூண்டியது. மகேஷின் அம்மாதான் பார்த்து பதறி உத்திரத்தில் தொங்கவிருந்தவளைக் காப்பாற்றினாள்.

    மகேஷின் அம்மா மற்ற மாமியாரைப் போலில்லை. அன்னம்மாள் நல்லவள். தன் மகனைப் போலவே மருமகள் மீது மட்டற்ற பாசத்தை வைத்திருந்தாள். மகேஷ் நேசித்த ஒவ்வொரு பொருளையும் அவன் நினைவாக போற்றி பாதுகாத்தாள். தன் உயிரினும் மேலாக நேசித்த பூரணியை மட்டும் கட்டாயத்துக்கு விட்டுவிடுவாளா என்ன?

    மருமகளைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

    "பாவி... என்ன காரியம் பண்ண இருந்தே? மகேஷ் நம்மை விட்டுப் போய்ட்டான்தான். அதுக்காக... நீயும் போய்டணும்னு முடிவுக்கு வந்திட்டியே பூரணி உன் மூலமா நான் என் பிள்ளையை பார்க்கறேன்டி! உன் மேல எவ்வளவு ஆசை வைச்சிருந்தான்? இப்ப மட்டும் உன்னை விட்டு எங்கேயோ போய்ட்டான்னா நினைக்கிறே? இல்லேம்மா... அவன் உன் கூடவே... உன்னையே சுத்தி சுத்தி வந்துக்கிட்டிருக்கான் இந்த வீட்லே காத்தோட காத்தா கலந்திருக்கான். நீ இருக்கிற இடத்திலே எல்லாம் மகேஷ் இருப்பான். என் பிள்ளைய பார்க்கத்தான் முடியாது. நான் சுவாசிக்கிற காத்துலேயாவது இருக்கிறான்ங்கற ஆறுதலாவது உன் மூலமா எனக்கு கிடைக்கணும் பூரணி... இங்கே பார்! என் ராஜாத்தி... இனி, இந்த மாதிரி முடிவுக்கு வரமாட்டேன்னு மகேஷ் போட்டோ முன்னாடி எனக்கு சத்தியம் பண்ணிக்குடு. அதுமட்டுமில்லே... அவனுக்கு நீ... துடைச்சு வைச்ச குத்து விளக்கா இருக்கறதை பார்க்க பிடிக்குமா? தினமும் உனக்கு பூ வாங்கி வருவானே... எதுக்காக? இந்த கோலத்தில் பார்க்கவா?

    பாருடி... நான் உன் மாமியார் இல்லே. அம்மா நான் சொல்றதைக் கேள் எங்க வீட்டுக்கு வந்த மகாலட்சுமி எப்பவும் மகாலட்சுமி மாதிரியேதான் இருக்கணும். பொட்டு வச்சுக்க... பூ வச்சுக்க... ஊர் உலகம் என்ன சொல்லுமோன்னு பயப்படாதே! பயந்துக்கிட்டு ஓடறவங்களைதான் நாய் கூட துரத்தும். திரும்பி நின்னு முறைச்சுப்பார். ஒரு கல்லை எறிஞ்சுப்பார்! உனக்கு பயந்துக்கிட்டு ஓடும். அதுதான் கண்ணு உலகம்! இது உன்வீடு! அட்சயா மகேஷோட தங்கச்சி இல்லே! இனி உன்னோட தங்கச்சி! கடைசிவரைக்கும்... உன்னை தூசி தும்பு படாம நாங்க பார்த்துக்கறோம் பூரணி மனசை மட்டும் தளர விடாதேம்மா! அப்புறம்... எங்களையும் நீ உயிரோட பார்க்க மாட்டே..." என்று கதறினாள் அன்னம்மாள்.

    மாமியார் மடியில் முகம் புதைத்து தன் வேதனையை எல்லாம் கண்ணீராய் கொட்டினாள் பூரணி

    மனதை கொஞ்சம் கொஞ்சமாய் தேற்றி அலுவலகம் சென்றாள். மூன்று மாதம் போயிருக்கும்.

    விசாலாட்சி என்ன நினைத்தாளோ, ஏது நினைத்தாளோ, மகளை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்தாள்.

    அன்னம்மாவினால் தடுக்க முடியவில்லை, ஆனால் பூரணி எங்கே தன் தாயோடு போய் விடுவாளோ

    Enjoying the preview?
    Page 1 of 1