Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uravugal... Pirivugal... Kanavugal!
Uravugal... Pirivugal... Kanavugal!
Uravugal... Pirivugal... Kanavugal!
Ebook249 pages1 hour

Uravugal... Pirivugal... Kanavugal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கல்யாணங்கறது ஒரு அற்புதம்! ஆயிரம் காலத்துப் பயிர்னு பெரியவங்க சொல்லியிருப்பது உண்மை. இந்த உண்மையின் அர்த்தம் தெரியாததால்தான் என்னவோ? கற்பகம் தன்னுடைய கணவனை விட்டு தனியாக வாழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மனைவியை பிரிந்து, அவளின் நினைவாகவே வாழ்கிறான் மோகன். இருவரும் இணைந்தார்களா? இந்த வாழ்க்கை எத்தனை விசித்திரமானது? இதில்தான் எத்தனை வண்ணங்கள்! எத்தனை திருப்பங்கள்...! வாருங்கள் வாசிப்போம்...!

Languageதமிழ்
Release dateMay 11, 2024
ISBN6580100710695
Uravugal... Pirivugal... Kanavugal!

Read more from Indira Soundarajan

Related to Uravugal... Pirivugal... Kanavugal!

Related ebooks

Reviews for Uravugal... Pirivugal... Kanavugal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uravugal... Pirivugal... Kanavugal! - Indira Soundarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    உறவுகள்... பிரிவுகள்... கனவுகள்!

    Uravugal... Pirivugal... Kanavugal!

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    கிணிங்!

    கற்பகத்தின் செல்போனில் இருந்துதான் சப்தம் கேட்டது...

    அவளும்கூட சமையல் கட்டில் கத்தரிக்காயை வாணலியில் வதக்கிக் கொண்டிருந்தாள். சப்தம் கேட்டு கரண்டிக் கையோடு சார்ஜ் ஏறிக்கொண்டு இருந்த தன் செல்போனின் திரையை பக்கவாட்டில் அமுக்கி ஒளிரச் செய்து பார்த்தாள். பென்ஷன் தொகை அவள் வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆகிவிட்டதற்கான செய்திதான் கிணிங் சப்தத்துடன் வந்திருந்தது.

    விரித்துப் பார்த்தாள்... மாதாமாதம் வந்து சேரும் அந்த 34,760 ரூபாய் பென்ஷன் தொகை அப்போதும் அவள் கண்ணில் பட்டு அவளுக்குள் மெல்லிசான தெம்பை அளித்தது.

    அதற்குள்ளேயே கத்தரிக்காயிடம் ‘வ்வ்வ்’ என்று ஒரு மாதிரி வெந்து கருகிடும் சப்தம். ஓடிவந்து திரும்பக் கிளறிவிட்டு அதன் வாசனையை சற்று அனுபவித்தவளாக ஸ்டவ்வின் ஜ்வாலையை அணைத்தாள்.

    அது வெந்துவிட்டிருந்தது! பக்கத்திலேயே ஈயச் செம்பில் மிளகு ரசம் கொதித்து அடங்கி தலைமேல் வறுபட்ட கடுகுகள் மிதக்கக் கிடந்தது.

    அதற்கும் பக்கத்தில் ஒரு லிட்டர் குக்கர் என்கிற மறு சிறிய குக்கருக்குள் சரிபாதி அளவிற்கு ஒண்ணரை தம்ளர் அரிசி போட்டு அவள் சமைத்திருந்த சாதம் பொலபொலவென்று சன்ன மல்லி கணக்காய் ஆவிப்பசை கமழ்ந்திட தயாராக இருந்தது.

    இடையே பஸ்ஸர் ஒலி!

    மெல்ல நடந்துபோய் தன் அபார்ட்மென்டின் வாசல் கதவைத் திறந்தாள். கேபிள்காரன் கையில் மஞ்சள் அட்டையுடன் ரெடிமேட் சிரிப்பில் அவளைப் பார்த்தான். அவனைப் பார்க்கவும் உள்ளே சென்று பீரோவைத் திறந்து வட்டமாய், அவளுக்கு கல்யாணச் சீராக வந்திருந்த வெள்ளித்தட்டில் கிடந்த ரூபாய் நோட்டுகளில் மூன்று நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து வந்து அவன்முன் நீட்டினாள்.

    சில்ர இல்லக்கா... வழக்கம்போல நீங்கதான் மொத போணி.

    நீயும் வழக்கம்போல எல்லா ஃப்ளாட்லயும் வசூலை முடிச்சிட்டு போகும்போது மீதியை கொடுத்துட்டு போ! என்றாள் கற்பகம். அவனும் மஞ்சள் அட்டையில் பேனாவால் வரவு வைத்துக்கொண்டே விலகிப் போனான்.

    கற்பகமும் திரும்பி கதவைத் தாழிட முற்படுகையில், எதிர் ஃப்ளாட் கதவு திறந்துகொள்ள அந்த ஃப்ளாட்டில் வசிக்கும் கஸ்தூரி தெரிந்தாள்.

    என்ன கற்பகம்... சமையல் ஆச்சா? அவள் பேசினாள்.

    ஆச்சு கஸ்தூரி... நீயும் முடிச்சிட்டிட்டியா?

    இல்ல... இன்னிக்கு உடம்பே சரியில்ல! அவரும் டெபுடேஷன்ல சென்னைக்கு போயிட்டார். அதனால ‘ஸ்விக்கி’யில ஆர்டர் பண்ணிக்கலாம்னு சமையல் கட்டுக்கு லீவ் போட்டுட்டேன்... என்றாள் சற்று ரசனையாக.

    ஜமாய்...! என்று லேசாக சிரித்தபடியே கதவைத் தாழிட்டாள். தொடர்ந்து அவளோடு பேச ஏதுமில்லை என்பது அதற்கான பொருள்.

    சிறிய சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட்! அறுநூறு சதுர அடிக்குள்ளே ஹால், பெட்ரூம், கிச்சன், பாத்ரூம் என்கிற நான்கையும் கொண்ட அந்த ஃப்ளாட்டில் அவளுக்கு ஒரே துணையாக கூடவே இருப்பது ‘நிம்மி’ என்கிற ஒரு பூனைக்குட்டிதான்! பால்கனி மூலையில் அதன் பெட்ரூம். பக்கத்தில் இருக்கும் கிண்ணம்தான் அதன் டைனிங்!

    மூக்கைச் சொரிந்தபடி கண்களை இடுக்கிக்கொண்டு அது ‘ம்யாவ்’ என்பதே தனி அழகு! முன்பெல்லாம்... அதாவது, நிம்மி வந்து அடைக்கலமாவதற்கு முன்வரை இரண்டு அரை லிட்டர் பாக்கெட் பாலே கற்பகத்துக்கு போதுமானதாக இருந்தது. நிம்மி வரவும் ஒரு பாக்கெட் கூடிவிட்டது.

    ம்யாவ்...

    தெரியும் தெரியும்... இரு வரேன்...

    ம்யா...

    இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை.

    செல்லமாய் சிணுங்கியபடியே சமையல் கட்டுக்குள் சென்று காய்ச்சி ஆறவைத்திருந்த பாலை எடுத்து வந்து அதன் கிண்ணத்தில் முக்கால் பாகத்திற்கு விட்டாள். அதுவும் எழுந்து உடம்பை உதறி சோம்பலெல்லாம் முறித்துவிட்டு ‘ப்சக் ப்சக்... ப்சக்’ என்கிற ஒரு ரிதமான சப்தத்துடன் பாலைக் குடித்தது. கடிகாரத்தைப் பார்த்தாள். மணி காலை 11.30.

    ஒரு மணிக்கு சாப்பிட்டால் போதும்! ‘அதுவரை?’ என்ற கேள்விக்கு பதிலாய் டி.வி-யை ஆன் செய்தாள். வழக்கமாய் பார்த்துவரும் ஒரு சீரியல் ஓட ஆரம்பித்தது. அதில் ஒரு கல்யாண ரிசப்ஷன் காட்சி...! ஒரு வாரமாய் அந்த ரிசப்ஷன் காட்சி மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறது. கல்யாண மாப்பிள்ளையை மணம் முடிக்க விரும்பி, அது முடியாமல் போன வருத்தத்தில் மாப்பிள்ளையின் தூரத்து உறவுக்காரப் பெண் கல்யாண கிஃப்ட்டுக்குள்ளே டைம் பாமை செட் செய்து வைத்து எடுத்து வந்து தந்திருந்தாள். அதன் பக்கத்திலேயே மாப்பிள்ளை - பெண் சிரித்தபடியே நின்று வாழ்த்த வருபவர்களை சந்தித்துக் கொண்டிருந்தனர். அது வெடித்தால் அவ்வளவுதான்! ஆனால், வரும் வெள்ளிக்கிழமை வரை அது வெடிக்காது என்று கற்பகத்துக்கும் தெரியும். ஆழமான கதை இல்லாததால் அல்பமான சம்பவங்களை மட்டுமே நம்பி அந்தத் தொடர் ஓடிக்கொண்டிருந்தது.

    ‘எந்தக் கடையில டைம் பாம்லாம் விக்கறான்? ஏதோ கடைக்கு போய் ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கிட்டு வந்த மாதிரி, இவளும் வாங்கிட்டு வந்து வெச்சிருக்கா! பக்கத்துலயே வேற அது எப்படி வெடிக்கும்னு பாக்க உக்கார்ந்துக்கிட்டே வேற இருக்கா... அது வெடிச்சா இவளுக்கு எதுவும் ஆகாதுன்னு நினைப்பா இவளுக்கு? லூசு முண்டம்...’ கற்பகம் மனதுக்குள் அந்தக் காட்சி பேய் மாதிரி அவளை சிந்திக்கச் செய்தது. தொடர்ந்து பார்க்கவும் பிடிக்கவில்லை.

    ‘சீரியல் பாக்கற அவ்வளவு பேரும் மடச்சாம்பிராணிங்கற நினைப்புலதான் இப்படியெல்லாம் எடுக்கறாங்க...’ என்று மனதுக்குள் முணங்கியபடியே சேனலை மாற்றி நல்ல திரைப்படம் ஏதாவது தென்படுகிறதா என்று பார்த்தாள். எல்லாமே பார்த்த படங்கள்!

    ச்சை... என்று சலித்துக் கொண்டே டிவியை அணைத்தவள், ஜன்னல் அருகில் போய் நின்று வெளியே பார்க்கலானாள். இதுதான் அவளின் அன்றாடம்!

    புறத்தில் அவள் அபார்ட்மெண்ட் இருக்கும் தெரு தெரிந்தது. மரத்தடியில் சலவைக்கார சண்முகம் தன் இஸ்திரி வண்டியில் சலவை செய்தபடி இருந்தான். பக்கவாட்டில் கைக்கு அடக்கமான ஒரு ட்ரான்சிஸ்டரில் லோக்கல் எஃப்.எம்-ன் தொணதொணப்பு குரல் ஒலித்தபடி இருந்தது. அதில் பாட்டைவிட பேச்சு அதிகம்! அதுவும் மூச்சுவிடாமல் பேசவேண்டும். அது தன் ஆர்.ஜேக்கள் எனப்படும் ரேடியோ ஜாக்கிகளின் இன்றைய தகுதி என்றாகிவிட்டது.

    கற்பகம் காதிலும் எல்லாம் கேட்டது.

    ஹாய் மச்சான்ஸ்... நான் இப்ப ஒரு பழைய பாட்டை உங்களுக்காகப் போடப் போறேன். இந்தப் பாட்டை மறைஞ்ச நம்ம எஸ்.பி.பி. சார் சும்மா குழையக் குழைய பாடியிருப்பார். பதிலுக்கு சுசீலாம்மாவும் குழைஞ்சிருப்பாங்க பாருங்க... எல்லாமே வேற லெவல்! நீங்க எபௌவ் சிக்ஸ்ட்டியா இருந்தா உங்களுக்குத்தாங்க இந்தப் பாட்டு. ‘அய்யோ கொல்றீங்களே’னு ட்வென்டீசும், தர்ட்டீசும் முணு முணுக்கறது என் காதுல நல்லா கேக்குது. கவலைப்படாதீங்க உங்களுக்காக நம்ம ‘தல’ படத்து பாட்டு அடுத்து வரப் போகுது. சித் ஸ்ரீராம் உருகிப்போய் பாடியிருப்பாரு... அதுவும் வேற லெவல் பாட்டுத்தாங்க... இப்ப நாம இதைக் கேட்போமா? என்கிற ஆர்.ஜேவின் கேள்வியின் முடிவில், ‘நிலவே நீ சாட்சி...’ என்கிற பாடல் ஒலிபரப்பாகத் தொடங்கியது.

    ‘நிலவே நீ சாட்சி... மனநிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி.’ என்று முதலில் சுசீலாவின் குரல் ஒலித்தது.

    கற்பகம் அப்படியே உறையத் தொடங்கினாள். இந்தத் திரைப்படம்தான் அவள் திருமணமாகி கணவன் மோகனுடன் பார்த்த முதல் திரைப்படம்! அன்று இருட்டில் மோகன் மெல்ல சில்மிஷமெல்லாமும் செய்யத் தொடங்கி விட்டிருந்தான்! பின் தோள் வழியாக கையை போட்டவன், மெல்ல மார்பு பக்கம் கைவிரல்களை கீழிறக்கிவிட்ட நிலையில் பட்டென்று தட்டிவிட்டாள் கற்பகம். பின்னர் வேகமாய் எழுந்து அந்த இருளில் தட்டுத் தடுமாறிக் கொண்டு வெளியேயும் செல்லத் தொடங்கிவிட்டாள். மோகனுக்கும் அது சற்று அதிர்ச்சிதான்... எழுந்து அவனும் பின்னாலேயே சென்றான்.

    வெளியே வியர்த்து விறுவிறுக்க நின்று கொண்டிருந்தாள் கற்பகம்.

    என்ன கற்பகம்... நான் இப்ப என்ன பண்ணிட்டேன்னு இப்படி வெளிய வந்து நிக்கறே?

    நோ... நோ... நீங்க அப்படி எல்லாம் என்மேல் கை போட்டுருக்கக் கூடாது. தட்ஸ் ரிடிக்குலஸ்! என்று நெற்றி வியர்வையை ஒத்திக்கொண்டே பேசினாள்.

    நான் உன் புருஷன் கற்பகம். யாரோ ஒரு மூணாம் மனுஷன்கிட்ட பேசற மாதிரி பேசறே?

    அஃப்கோர்ஸ்... ஆனா, எனக்கு பிடிக்கல! அருவருப்பா இருக்கு...

    அருவருப்பாவா? வாட் டூ யூ மீன்?

    ஐ மீன்... ப்ளீஸ் கீப் டிஸ்டன்ஸ் ஃப்ரம் மீ...

    கற்பகம் நான் உன் புருஷன்...

    அதனாலதான் உங்க கன்னத்துல அறையாம பேசிக்கிட்டிருக்கேன்...

    அந்த பதில் அவனை அதிர்ச்சியில் மூழ்கச் செய்துவிட்டது. முதல் இரவின் போதுகூட அவன் தீண்ட கற்பகம் அனுமதிக்கவேயில்லை. ஒரு இனம்புரியாத பயம்! அப்பொழுதே அப்பொழுதுதான் அறிமுகமாகி, அதிலும்கூட முழுமையாக 24 மணிநேரம்கூட முடிந்திடாத நிலையில் அவன்முன் தன்னை நிர்வாணப்படுத்திக் கொள்ளுதல் என்பதை எதனாலோ அவளால் சிந்தித்துக்கூட பார்க்க முடியவில்லை. மோகனுக்கும் அவள் உணர்ச்சி புரிந்ததால் அவள் போக்குக்கே போக விட்டான்.

    தியேட்டரில் இப்போது நடந்திருப்பது இரண்டாவது அனுபவம்! மோகனுக்கும் அப்போது பெரும் குழப்பம்தான் ஏற்பட்டது. இவள் ஏன் இப்படி நடக்கிறாள்? ஆண் - பெண் உறவு இவளுக்கு மட்டும் எதனால் இப்படி நெருடலாக முள்ளாக இருக்கிறது என்பது அவனுக்கு அப்போது புரியவேயில்லை. யாரிடம் இதைப்பற்றி சொல்லி நியாயம் கேட்பது என்பதிலும் குழப்பம்... போகப்போக சரியாகி விடும் என்றுதான் முதலில் நம்பினான். அதனால் சரி சரி என்று அவள் போக்கினுக்கே போனான். ஆனால், அதெல்லாம் எதுவுமே பயனைத் தரவில்லை. இறுதியாக விவாகரத்து வரை போனதுதான் மிச்சம்! அதற்குள் ஆறுமாதங்கள் வரை ஓடிவிட்டிருந்தது. சாதுர்யமாக ஒரு சைக்கியாட்ரிஸ்டிடம் கூட்டிக்கொண்டு போய் காட்டியதில் அவர் மூலமாக மோகனை அவளுக்குப் பிடிக்கவில்லை என்கிற இறுதி முடிவுக்கே வரவேண்டியிருந்தது.

    அவருக்கு ஒழுங்கா தலைகூட வாரத் தெரியல டாக்டர். சாப்பிட்டா தட்ட அவர் கழுவ மாட்டாராம். நான்தான் கழுவணுமாம். இது பக்கா மேல்சாவனிஷமில்ல? இப்படித்தான் கற்பகம் டாக்டரிடம் தொடங்கியிருந்தாள்.

    இதைவிட கொடுமை... இவர் அம்மாவுக்கு வயசாயிடிச்சாம்! அதனால அவங்க புடவை துணியை எல்லாம் நான்தான் துவைச்சுப் போடணுமாம். எங்கம்மாக்கு கூடதான் வயசாயிடிச்சு... ஆனா, அவங்களேதான் தன் துணிமணிகளை தோச்சுக்கறாங்க. எனக்கு நான் குடும்பம் நடத்த வந்திருக்கேனா, இல்லை... இவங்க வீட்டுக்கு வேலை பார்க்க வந்திருக்கேனானு குழப்பமா இருக்கு டாக்டர்...!

    இது அவளது அடுத்த பிராது.

    சிறிய வீடு... கசகசவென்று இருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரர்களும் சரியில்லை. போனால் வந்தால் முறைத்துப் பார்க்கிறார்கள். காலை 6 மணிக்கு எழுந்து பால் வாங்கி வந்து, ஃபில்டரில் டிகாக்ஷன் போட்டு காபி போட வேண்டுமாம்...

    இப்படி தனக்கு பிடிக்காதவைகளை அடுக்கிக்கொண்டே போய்... இறுதியாக, அவரை எனக்கு சுத்தமா பிடிக்கல டாக்டர். அவர் கிட்ட வந்தாலே ஒரே வியர்வை நாற்றம். எனக்கு ஒரு மாட்டு தொழுவத்துல அதுங்ககூட இருக்கற மாதிரியே இருக்குது... என்று சொன்னதை எல்லாம் கேட்ட டாக்டர், அதன்பின் மோகனிடம் சற்று விரிவாகவே பேசினார்.

    "மிஸ்டர் மோகன். இவங்க அப்பா-அம்மாவுக்கு ஒரே பெண். அதனால செல்லமான வளர்ப்பு காரணமா பல அன்றாட விஷயங்கள் எதுவுமே தெரியல. ரொம்ப சென்சிடிவாவும் இருக்காங்க!

    பொதுவா ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான ஈர்ப்பே செக்ஸும் அது சார்ந்த ஊடல்களும்தான்... மற்றபடி இதோட பர்சன்டேஜ்தான் எல்லார்கிட்டயும் கூடக்குறைய இருக்கும். ஆனா, இது இல்லாம ஆண்-பெண் கிடையாது. விதிவிலக்கா சிலர் இருப்பாங்க... இவங்க அந்த விதிவிலக்குல இருக்காங்க!

    அடுத்து ஒரு கம்பீரமான ஸ்கூல் டீச்சரா வேலை பார்த்து கைநிறைய சம்பாதிக்கிறதால எவர் தயவும் தேவையில்லைன்னும் நினைக்கறாங்க. வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதிக்கற பல பெண்கள் மனசுல இப்ப இப்படியொரு எண்ணம் வலிமையா இருக்கு. அதனால, ஒரு ஆண்துணை இல்லேன்னா என்னாகும்கற கேள்விக்கோ அதுதொடர்பான பயங்களுக்கோ இவங்க வரையில இடமேயில்லை.

    சுருக்கமா சொல்லப்போனா, மருந்து மாத்திரைகளே இவங்களுக்கு தேவையில்லை. காலத்தால இவங்க அனுபவப்பட்டு புரிஞ்சுக்கிட்டாதான் உண்டு..."

    காலத்தாலன்னா... எவ்வளவு காலம் டாக்டர்?

    அதைச் சொல்ல முடியாது... ஆனா மினிமம் பத்து வருஷத்துல இருந்து இருபது வருஷம்னு தாராளமா சொல்ல முடியும். வரலாம்... வராமலும் போகலாம்...

    அப்ப இதுக்கு என்னதான் முடிவு டாக்டர்?

    பேசாம அவங்க கேக்கற விவாகரத்தை சந்தோஷமா கொடுத்திட்டு ஒதுங்கிக்குங்க... வேற வழி உங்களுக்கு இப்போதைக்கில்ல...

    டாக்டர் சொன்னது போலவே கற்பகம் கேட்ட டைவர்ஸை கொடுத்த மோகன் அதன்பின் என்னவானான் என்றெல்லாம் கற்பகத்துக்கு தெரியாது.

    டைவர்ஸ் கொடுத்து 25 வருடங்களும் ஆகிவிட்டது. இந்த 25 வருடங்களில் அப்பா அம்மா என்று இருவரும் விண்ணேகி விட்டனர். ஒரு தம்பி மட்டும் இருக்கிறான். அவனுக்கும் ஒரு கட்டத்தில் கற்பகம் சுமையாகிவிடவே, அது ஒரு வாக்குவாதத்தில் முடிந்ததில் கற்பகம் தனி வீடு பார்த்துக்கொண்டு போய் தனியே வாழவேண்டிய ஒரு நிலை உருவாகிவிட்டது.

    58 வயது முடியவும் வேலை பார்த்த பள்ளிக்கூடமும் மாலை போட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டது. உடம்பிலும் சக்கரை, ஆஸ்த்மா என்கிற நிரந்தர தொல்லைகள்... இப்படி ஒரு நிலையில் குடும்பம், குழந்தைக் குட்டிகள் என்று அபார்ட்மெண்ட்டுக்குள் பாகம் பாகமாய் வசிப்பவர்களை பார்க்கும்போதுதான், தான் அறியாமையோடும் திமிரோடும் நடந்துகொண்டு விட்டதும் புரிய வந்திருக்கிறது.

    அந்தப் புரிதலை ‘நிலவே நீ சாட்சி’ பாடல் அதிகப்படுத்தி அவள் கண்களிலும் கண்ணீரின் திவலைகள்! அடுத்த பாட்டாக, கண்ணானக் கண்ணே... கண்ணானக் கண்ணே... என்மீது சாய வா... என்கிற சித் ஸ்ரீராம் குரல் அவள் வரையில் அவளை மோகன் அழைத்து பாடுவது போலவே உணரச் செய்து விசும்பி விசும்பி அழத் தொடங்கினாள்.

    இப்படி அவள் நடந்தவற்றை நினைத்து அழுவது அவள் வரையில் அன்றாடமாகி விட்டது என்றே சொல்ல வேண்டும். இதனால் அவளுக்கு அவளையே பிடிக்காமல் போய்விட்டதுதான் கொடுமை. இப்படியே போனால் மன நோயாளியாக மாறிடும் வாய்ப்புகள் மிக அதிகம்.

    கற்பகம் அச்சப்படத் தோதாக ஒரு சம்பவமும் அந்த அபார்ட்மெண்ட்டில் நடந்து முடிந்திருந்தது. கற்பகத்தைப் போலவே தனிமரமாய் ஒரு பெண்மணி. கணவர் இறந்து விட்டார். இரண்டு பிள்ளைகள். இருவரையும் நன்றாக படிக்க வைத்ததுதான் அவள் செய்த தவறு. அதனால் அவர்கள் மேல்நாட்டுக்கு வேலை கிடைத்து சென்றுவிட்டனர்.

    இரண்டு வருடத்திற்கு ஒருமுறை அம்மாவைப் பார்க்க வந்து செல்வார்கள்.

    Enjoying the preview?
    Page 1 of 1