Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

யார் அந்த தேவதை..!
யார் அந்த தேவதை..!
யார் அந்த தேவதை..!
Ebook116 pages37 minutes

யார் அந்த தேவதை..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"ரொம்ப நேரம் தண்ணீரிலே ஊறாதே பிருந்தா! சட்டுபுட்டுன்னு குளிச்சிட்டு வெளியே வா!"
 "கொஞ்ச நாளா நீ என்னை ரொம்ப பாடாப் படுத்துறேம்மா! குளிக்கப் போய் இருபது நிமிசம் தானே ஆச்சு? நான் அரை மணி நேரம் குறையாம வெளியே வந்திருக்கேனா? நான் என்ன சின்னக் குழந்தையா? வெயில் காலம் வேறு. தண்ணீரிலேயே நின்னுக்கிட்டு இருக்கணும் போலிருக்கும்மா! தயவு செஞ்சு தொந்தரவு பண்ணாதே" குளியலறையிலிருந்து குரல் கொடுத்தாள், பிருந்தா.
 "சவர்லேயா குளிக்கிறே? வேண்டாம்மா... உனக்குத் தலைவலி வந்திடும்" பதறினாள், குணவதி.
 அதன் பிறகு பிருந்தாவிடமிருந்து பதிலே வரவில்லை. சுகமாய் குளித்து முடித்து மேலும் பதினைந்து நிமிடம் கழிந்த பிறகே கதவைத் திறந்து வெளியில் வந்தாள்.
 வாளிப்பான மஞ்சள் நிற உடலில் இன்னமும் அங்கிங்கு ஒட்டிக் கொண்டிருந்த நீர்த்திவலைகள் தாழம்பூ மடடைல முத்தமிட்டுக்கொண்டிருக்கும் பனித்துளி போலிருந்தன.
 குத்தீட்டிகளாய் படர்ந்திருந்த கறுத்த இமைகள், அதன் நடுவே பாதுகாப்பாய் நீண்டிருந்த மான்விழிகள், செவ்விதழ், செல்லமாய்க் கொஞ்சத் தூண்டும் மோவாய், நீண்ட நாசி என்று சகலவிதமான அழகுடன் அம்சமான செப்புச்சிலையாய் வந்து நின்றாள், பிருந்தா.
 தலையின் உச்சியில் தேங்காய்ப்பூ துண்டால் ஈரமுடியை வளைத்து கொண்டைப் போட்டிருந்தாள்.
 "ஏன்டி இவ்வளவு நேரமா தண்ணியிலே ஊறுவே? பாரேன்... சரியாகக்கூட தலை துவட்டலே... வரவர சின்னக் குழந்தை மாதிரி அடம்பிடிக்கத் தொடங்கிட்டே... சொல்ற பேச்சே கேட்கமாட்டேங்கிறே!" பதறியபடி தன் சேலைத் தலைப்பால் அவள் முகத்தைத் துடைத்தாள், குணவதி.
 பிருந்தா, அம்மாவை ஆச்சரியமாய்ப் பார்த்தாள்இப்பெல்லாம் சின்னச் சின்ன விசயத்துக்கே ரொம்ப படபடப்பாகிறே! என்னம்மா ஆச்சு உனக்கு? நான் கல்லூரியில் படிக்கிற இருபது வயசுப் பொண்ணு! நினைவிருக்கா... என் செல்ல அம்மாவே!" அம்மாவின் கன்னத்தை இரு கைகளால் பிடித்து ஆட்டி அவள் நெற்றியில் முட்டினாள்.
 "என்னைப் பொறுத்தவரை நீ சின்னக் குழந்தைதான்! பச்சைத் தண்ணியிலே இவ்வளவு நேரம் ஊறினா உடம்புக்கு ஏதாவது ஆகிவிடாதா?"
 "என்ன ஆகிடும்? செத்தாப்போயிடுவேன்?"
 அவள் சாதாரணமாகத்தான் சொன்னாள். ஆனால், அந்த வார்த்தை குணவதியின் இதயத்தைப் பதம்பார்க்க, துடிதுடித்துப்போனாள்.
 "வெள்ளிக்கிழமையும் அதுவுமா, காலையிலே என்ன வார்த்தை பேசுறா பாருங்க இவ..."
 சொன்ன தாயின் கண்களில் கண்ணீர் கரைகட்டி நின்றது.
 பிருந்தா திகைத்துப்போனாள்.
 விஸ்வநாதன், அருகில் வந்தார்.
 "அம்மா... நான் என்ன சொல்லிட்டேன்னு கண்கலங்குறே?"
 "குணா... என்ன இது?" என்று அதட்டியவர், மனைவிக்கு மட்டும் கேட்கும்படி முணுமுணுத்தார். "நீயே காட்டிக் கொடுத்திடுவே போலிருக்கே. போ... போய் வேலையைக் கவனி!"
 "பாருங்கப்பா... நான் என்ன சொல்லிட்டேன்னு அம்மா அழுறாங்க? நான் எதையாவது தப்பா சொல்லிட்டேனா?"
 "விடும்மா! உங்கம்மாவைப் பற்றித் தெரியாதா? சாப்பிடுறதுக்குக்கூட அஷ்டமி, நவமின்னு நாள் கிழமை பார்க்கிற பஞ்சாங்கவதி. வெள்ளிக்கிழமையும் அதுவுமா அபசகுனமா பேசிட்டே... தாங்குவாளா? சரி... சரி... சும்மா கண்ணைக் கசக்கிட்டிருக்காதே... பிருந்தா கல்லூரிக்குக் கிளம்பணுமில்லையா?" என்றவர், "நீ போய் சாப்பாடு எடுத்து வை" என்று மனைவியை வலுக்கட்டாயமாய் அங்கிருந்து அகற்றினார்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateDec 20, 2023
ISBN9798223267843
யார் அந்த தேவதை..!

Read more from Geeye Publications

Related to யார் அந்த தேவதை..!

Related ebooks

Reviews for யார் அந்த தேவதை..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    யார் அந்த தேவதை..! - Geeye Publications

    1

    சாம்பிராணி மணமும், புகையும் வீடு முழுக்கப் பரவியிருந்தது. கதம்ப சரத்துடன் சாமி படங்கள் வரிசையாய் அருள் பாலித்துக்கொண்டிருக்க... கற்பூரம் ஏற்றிவிட்டு கண்மூடி நின்றாள், குணவதி.

    அவள் உதடுகள் மட்டும் முணுமுணுத்துக்கொண்டிருக்க... மூடிய விழிகளையும் மீறி, கன்னத்தில் கண்ணீர் கோடு போட்டது.

    சற்று நேரத்திற்குப் பிறகு கண்களைத் திறந்தவள், பெருமூச்சொன்றை வெளியிட்டாள். கற்பூரத் தட்டை எடுத்துக்கொண்டு முன்னறைக்கு வந்தாள்.

    சோபாவில் அமர்ந்து தினத்தந்தி படித்துக் கொண்டிருந்தார், விஸ்வநாதன்.

    அதை மடித்து வைத்துவிட்டு தன் முன் நீட்டிய கற்பூரத் தட்டைத் தொட்டு வணங்கினார்.

    குணா... காப்பி வேணும்!

    இதோ... அஞ்சு நிமிசத்திலே என்றவள், விரைந்து நகர்ந்தாள்.

    விஸ்வநாதன், மத்திய அரசு அதிகாரி. ரொம்ப என்றில்லாவிட்டாலும், ஓரளவு பணக்காரர்.

    மூன்று கிரவுண்டு நிலத்தில் சுற்றிலும் தோட்டத்துடன்- நடுவில் கட்டப்பட்ட ரம்மியமான வீடு. மின்விசிறி தேவையின்றி சிலுசிலுவென்று காற்று வஞ்சனையின்றி உட்புகுந்து வீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருந்தது.

    வெளிச்சத்திற்காகவும், காற்றிற்காகவும் தாராளமாய் ஜன்னல்கள் வைத்திருந்தார், விஸ்வநாதன்.

    எங்கு நின்று பார்த்தாலும் பச்சைப்பசேலென்று தோட்டமும், விதவிதமாய் சிரிக்கும் பூக்களும் மனதை இலேசாக்கும். ஆனாலும், எல்லாவற்றையும் மீறி அந்த வீட்டில் ஒரு வேதனை இருந்தது... வீட்டார் மனதில் பெரும் பாரம் இருந்தது.

    இந்தாங்க காப்பி என்ற மனைவியின் குரலுக்கு நிமிர்ந்தவர், அவசரமாய் காப்பியை வாங்கிக்கொண்டார்.

    காலையில் பொங்கல், வடை, சாம்பார்தான் பண்றேன். வேறெதாவது வேணுமா?

    ஆசைதீர சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு குணா கண்கள் சுவரை வெறிக்க... குரலில். அசுவாரசியம் இருந்தது.

    அப்போது தொலைபேசி கிணுகிணுத்தது.

    விஸ்வநாதன் எடுத்தார்.

    அலோ...

    அலோ... அப்பா... நான்தான் பிரியா பேசுறேன்!

    சட்டென விஸ்வநாதனின் முகம் மகிழ்ச்சியைப் பூசிக் கொண்டது.

    பிரியா... எப்படிம்மா இருக்கே?

    குணவதியின் முகத்தில் ஆச்சரியம்.

    பிரியாவா பேசுறா? நீங்க பேசி முடிச்சதும் என்கிட்டே கொடுங்க!

    ‘சரி’ என்று சைகையிலே கையமர்த்திவிட்டு மகளிடம் பேசினார்.

    நான் நல்லா இருக்கேன்ப்பா.

    உன் சித்தி, சித்தப்பா?

    எல்லோரும் நல்லா இருக்காங்க. நீங்க எப்படி இருக்கீங்க? அம்மாவும், பிருந்தாவும் எப்படி. இருக்காங்க?

    எங்களுக்கென்னம்மா... நாங்க நல்லாதான் இருக்கோம்! பிருந்தாவை நினைச்சாதான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு பிரியா...

    விசயம் கேள்விப்பட்டதிலேருந்து எனக்கும் சரியா தூக்கமே வர்றதில்லே. ஆனா, இந்தக் காலத்திலே, அதுவும் மருத்துவ சாதனைகள் விண்ணைத் தொடுகிற அளவுக்கு வளர்ந்திருக்கும்போது... பிருந்தாவை முழுக்க குணப்படுத்துறது பெரிய விசயமேயில்லே. இங்கே கனடாவிலே ஏகப்பட்ட மருத்துவ வசதிகள், டாக்டர்கள் இருக்கிறாங்க. பேசாம பிருந்தாவை இங்கே அனுப்புங்களேன்ப்பா. சீக்கிரமா குணப்படுத்திடலாம்.

    தனக்கு இப்படியொரு நோய் இருக்கிறது இன்னும் அவளுக்கே தெரியாதேம்மா! சாதாரண புழு பூச்சிக்குக்கூட பயப்படுறவ, தனக்கு இப்படின்னு தெரிஞ்சா தாங்கிக்குவாளா? எந்த அதிர்ச்சியையும் தாங்கிக்கிற சக்தி அவளுக்கு இல்லையே பிரியா!

    இதுக்கு என்ன தான் முடிவு?

    தெரியலேம்மா... ஒண்ணுமே பிடிபடமாட்டேங்குது... சொல்லியாகணும். ஆனா, சொல்லவும் பயமாயிருக்கு! கொஞ்சம் இரும்மா... அம்மாகிட்டே பேசு என்றபடி ரிசீவரை குணவதியிடம் கொடுத்தார்.

    எப்படி இருக்கே பிரியா?

    நல்லாயிருக்கேம்மா.

    உன்னைப் பார்க்கணும் போல் ஆசையா இருக்குடி. உன்னைப் பார்த்து மூணு ஆண்டாயிடுச்சு!

    எனக்கும்தான் ஆசையாயிருக்கு! அடுத்த ஆண்டு விடுமுறையில் வர்றேம்மா!

    ஊகூம்... என் பொண்ணைப் பார்க்கிறதுக்குகூட ஆண்டு கணக்கிலே காத்திருக்க வேண்டியதாயிருக்கு. ரெண்டு பொண்ணுங்களை லட்டு மாதிரி பெத்தேன். உன்னை என் தங்கைக்குத் தத்து கொடுத்தேன். ஏன் கொடுத்தோம்னு இப்ப வருத்தப்படுறேன்.

    இங்கே நான் மகிழ்ச்சியாத்தானேம்மா இருக்கிறேன்? சித்தி என்னை ரொம்ப நல்லா கவனிச்சுக்கிறாங்க. நீ ஏம்மா வருத்தப்படுறே?

    என் தங்கை பாமா உன்னை நல்லா கவனிச்சுப்பாங்கிறதிலே எந்த சந்தேகமும் இல்லே. உங்க அக்காவுக்கு இதயத்திலே ஓட்டை இருக்குன்னு தெரிஞ்சதிலேருந்து உன்னையும் என் பக்கத்திலே வச்சுப் பார்த்துக்கணும்னு பெத்த மனசு தவிக்குது.

    புரியுதும்மா... எல்லாம் நல்லபடி நடக்கும். கவலைப்படாதே என்று பேசிவிட்டு வைத்தாள், பிரியா.

    பாமா குணவதியின் தங்கை. திருமணமாகி நான்கு ஆண்டாகியும் குழந்தை பிறக்கவில்லை. இனி பிறக்க வாய்ப்பேயில்லை என்று மருத்துவர்களும் உறுதிப்படுத்த, அக்காவை வற்புறுத்தி ஒரு வயதுக் குழந்தை பிரியாவைத் தத்தெடுத்துக்கொண்டாள்.

    பாமாவின் கணவர் சக்கரவர்த்திக்கு கனடாவில் நல்ல வேலை. குழந்தையோடு அங்கே போய் 18 ஆண்டு ஓடிப் போய்விட்டது.

    பிருந்தா இன்னும் எந்திரிக்கலையா? என்று கேட்டார், விஸ்வநாதன்.

    இன்னும் இல்லைங்க! எழுப்பிவிட்டா, கூடமாட ஒத்தாசையா வேலை செய்யத் தொடங்கிடுவா! அதனால்தான் எழுப்பலே!

    வேண்டாம்... வேண்டாம்... தூங்கட்டும்!

    எந்த அதிர்ச்சியான விசயத்தையும் அவள்கிட்டே சொல்லக்கூடாது. அதைத் தாங்கிக்கிற அளவுக்கு அவ மனசுக்கும், உடம்புக்கும் பலமில்லே. ஆனா, அவளுக்கு ஆபரேஷன் பண்ணணும். வீணா நாளைக் கடத்துறதால அவளுக்குத்தான் பிரச்சினை! என்ன பண்ணப் போறீங்க?

    புரியலே குணவதி! அவசரப்பட்டு சொல்லிடவும் முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விசயத்தைத் தெரியப்படுத்தணும். பார்ப்போம். கடவுள் நமக்கு ஒரு வழி காட்டுவார் என்றார், நம்பிக்கையுடன் விஸ்வநாதன்.

    2

    "ரொம்ப நேரம் தண்ணீரிலே ஊறாதே பிருந்தா! சட்டுபுட்டுன்னு குளிச்சிட்டு வெளியே வா!"

    கொஞ்ச நாளா நீ என்னை ரொம்ப பாடாப் படுத்துறேம்மா! குளிக்கப் போய் இருபது நிமிசம் தானே ஆச்சு? நான் அரை மணி நேரம் குறையாம வெளியே வந்திருக்கேனா? நான் என்ன சின்னக் குழந்தையா? வெயில் காலம் வேறு. தண்ணீரிலேயே நின்னுக்கிட்டு இருக்கணும் போலிருக்கும்மா! தயவு செஞ்சு தொந்தரவு பண்ணாதே குளியலறையிலிருந்து குரல்

    Enjoying the preview?
    Page 1 of 1